கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருமான வரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Income Tax விழிப்புணர்வு பதிவு

 


Income Tax விழிப்புணர்வு பதிவு


அன்பார்ந்த நண்பர்களே,


வருமான வரி தாக்கல் (IT Return) செய்வதற்கு முன், உங்களிடம் உள்ள Form 16A மற்றும் Form 16B ஆகிய இரண்டிலும் மொத்த சம்பளத் தொகை (Gross Salary) ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை கட்டாயம் சரிபார்க்கவும்.


வரி (TDS) தொகை சரியாக இருந்தால் மட்டும் போதாது. மொத்த சம்பளத் தொகையும் சரியாகப் பதிவாகியிருக்க வேண்டும்.


சில நேரங்களில், "மொத்த சம்பளம் குறைவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை; ரீஃபண்ட் கிடைக்கும்" என்று கூறப்படலாம். ஆனால், மொத்த சம்பளத்தை விட குறைவாக வருமான வரி தாக்கல் செய்வது எதிர்காலத்தில் கடன் பெறுதல், வருமான வரித்துறை விசாரணை, வட்டி மற்றும் அபராதம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.


எனவே, Form 16A, Form 16B மற்றும் Income Tax Return (ITR) ஆகியவற்றில் மொத்த சம்பளத் தொகை ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


மேலும், சம்பளம் வழங்கும் அலுவலர்களும் சம்பள விவரங்களில் உள்ள பிழைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வருமான வரித்துறையிடமிருந்து விளக்கம் கோரும் நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது.


இது விழிப்புணர்விற்காக மட்டுமே பகிரப்படும் பதிவு.


Income Tax செலுத்துவோருக்கு சத்தமில்லாமல் ஒரு சலுகை பறிப்பு



 Income Tax செலுத்துவோருக்கு சத்தமில்லாமல் ஒரு சலுகை பறிப்பு




Dear LPG Consumer,


As per available Income-tax records, your (or a linked family member's) gross taxable income exceeds the prescribed limit of Rs.10 lakh.


If you wish to dispute this, please contact the toll-free number 1800-2333-555 or register your grievance on the portal of your respective Oil Marketing Company within seven days of receipt of this message.


If no response is received within the stipulated period, the LPG subsidy may be discontinued thereafter.


Link :

 https://cx.indianoil.in/EPICIOCL/faces/GrievanceMainPage.jspx


INDANE


ஆண்டுக்கு 10 லட்சம் வருமானத்தை கொண்ட எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு இனி அரசின் மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு நிறுவனமான indane மூலம் மேற்கண்டவாறு குறுஞ்செய்திகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன


 எரிவாயு இணைப்பு கணக்குடன் KYC update என ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி கடந்த மாதங்களில் வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.


ஆதார் எண் அடிப்படையில் ஆண்டு வருமானத்தை கணக்கிட்டு இந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிகிறது. இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு இக்குறுஞ்செய்திகள் பெறப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அரசின் சிலிண்டர் மானியம் அதிகபட்சம் ரூபாய் 31 ரத்து செய்யப்படும் என தெரிய வருகிறது.


இந்தியா முழுமைக்கும் சத்தம் இல்லாமல் ஒரு சலுகை பறிப்பு



Press Information Bureau 

Government Of India 

Ministry of Petroleum & Natural Gas

(Dated: 28-December, 2015 16:06 IST ) 

Benefit of LPG subsidy will not be available if the consumer or his/her spouse had taxable income of more than Rs Ten lakh in previous financial year 

At present, there are 16.35 crore LPG consumers in the country. With the implementation of the PAHAL Scheme (DBTL), the subsidy is being transferred directly to the Bank Account of 14.78 crore LPG Consumers. The objective of the scheme was to ensure that the subsidy benefits go to the targeted group. The Government had also given a call to the well-to-do households for voluntarily giving up LPG subsidy. So far, 57.50 lakh LPG consumers have opted out of LPG subsidy voluntarily heeding the call given by the Prime Minister. The subsidy saved from the ‘GiveitUp’ campaign is being utilized for providing new connections to the BPL families under the ‘Giveback’ campaign. This enables provision of LPG, a clean fuel, to poor households by replacing the conventional fuels such as kerosene, coal, fuel wood, cow dung, etc. relieving the poor of the hardships and health hazards from such fuels. While many consumers have given up subsidy voluntarily, it is felt that consumers in the higher income bracket should get LPG cylinders at the market price. 

Therefore, the Government has decided that the benefit of the LPG subsidy will not be available for LPG consumers if the consumer or his/her spouse had taxable income of more than Rs 10,00,000/- during the previous financial year computed as per the Income Tax Act, 1961. In keeping with the approach of trusting the citizens, this will be given effect to initially on self-declaration basis while booking cylinders from January 2016 onwards.



New numbers for IT forms

 

 

ஏப்ரல் 1 முதல் வருமான வரி படிவங்களுக்கு புதிய எண்கள்


New numbers for income tax forms from April 1


ஏப்ரல் 1 முதல் வருமான வரி படிவங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த எண்களுக்கு பதில் புதிய எண்கள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது










March 2026 Pay roll IT & Cess deduction குறித்த தகவல்

 

 

March 2026 Pay roll Income Tax and Cess deduction குறித்த தகவல் 


நண்பர்களே வணக்கம் 🙏

March 2026 pay roll Completed

அதில் income tax and cess deduction செய்துள்ளது


பலருக்கு சந்தேகம் இது சரிதானா? 


மார்ச் மாதம் I.T காட்ட மாட்டோமே? 


1) ifhrms kalanjium auto deduction..


2) income tax விதிகளின் படி இது சரிதான்


3) 1/April/26 க்கு பிறகு தான் மார்ச் 2026 ஊதியம் கிடைக்கும்


4) எனவே மார்ச் 2026 மாத சம்பளம் ஆக இருந்தாலும் அது அடுத்த (2026-2027) நிதியாண்டு ஊதியம் தான்.


5) நீங்க *DDO IT e-filing 138 (24Q)* (2026-2027 - Q1) செய்யும் போது..

1) Apr I ( மார்ச் 26)

2) Apr II ( ஏப்ரல் 26)

3) May

4) June


என காண்பித்து e-filing செய்து கொள்ளலாம்... தவறேதும் இல்லை


6) இந்த பதிவின் நோக்கம்..

 *மார்ச் 26* Income Tax 

auto deduction ஐ 

 *edit செய்ய delete செய்ய* முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்...


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

20/3/26


வருமான வரி (Income Tax) குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் விளக்கம்



வருமான வரி குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் விளக்கம்


SMS From TN Treasury


Sir / Madam, 

As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury 


அடுத்த நிதியாண்டுக்கு வருமான வரி தேர்வு செய்யும் வசதி களஞ்சியம் செயலியில் தற்போது தரப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் OLD REGIME என தவறாக தேர்வு செய்தவர்கள் அடுத்த நிதியாண்டுக்கு சரியாக தேர்வு செய்யவும். கடைசி தேதி - 13/03/2026


* வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி6 முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும்.


* நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள். ஒருமுறை தேர்வு செய்யும் விருப்பமே (Old / New Regime) இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்


அதாவது பழைய வருமான வரி செலுத்தும் முறையை (Old Regime) தேர்வு செய்பவர்கள் மட்டும் அதற்கான விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு புதிய முறை தானாகவே தேர்வு செய்யப்பட்டு விடும்.


வருமான வரி செலுத்துவோர் அறிய வேண்டிய விழிப்புணர்வு தகவல்கள்

 

 

வருமான வரி செலுத்துவோர் அறிய வேண்டிய விழிப்புணர்வு தகவல்கள்


2025-26 நிதியாண்டு Income Tax கணக்கிடும்போது Marginal Relief மற்றும் Conveyance Allowance பற்றி விழிப்புடன் இருங்கள். 


இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் New Regimeக்கு மட்டுமே பொருந்தும்.


Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.


Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.


* Salary Income

12 மாத சம்பளம், DA Arrears, Bonus, EL Surrender மற்றும் இதர நிலுவைத்தொகை ஆகியவைகளின் கூட்டுத்தொகை என்பது Total Salary Income. 


* Standard Deduction

இதில் Standard Deduction 75000 கழிக்க வேண்டும்.  (Permanant Disabled ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் சம்பளத்தில் மாதா மாதம் பெறும் Conveyance Allowance ரூ.2500 மொத்தம் ரூ.30,000 கழிக்கலாம்).


* Taxable Income

இந்த இரண்டையும் கழித்துவிட்டு வரும் தொகை Taxable Income ஆகும். இந்த தொகைக்கு தான் வருமான வரி கணக்கிடப்படுகிறது.


* Income Tax Slab

Upto 4,00,000   - Nil Tax

4,00,001 to 8,00,000 – 5% tax (ie) Rs.20,000.

8,00,001 to 12,00,000 – 10% tax (ie) Rs.40,000.

12,00,001 to 16,00,000 – 15% tax (ie) Rs.60,000.

16,00,001 to 20,00,000 – 20% tax (ie) Rs.80,000.

20,00,001 to 24,00,000 – 25% tax (ie) Rs.1,00,000

Exeeding 24,00,000 – 30% tax 


 Tax Rebate U/s 87A

Taxable Income 12,00,000 இருப்பவர்கள் Income Tax Slab இன் படி வருமான வரி ரூ.60,000 வருமான வரி கட்ட வேண்டும். ஆனால் Taxable Income 12,00,000 இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி முழு வருமானவரி தொகையும் தள்ளுபடி செய்யப்படும். எனவே தான் Taxable Income 12,00,000 இருப்பவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.


* Marginal Relief

Taxable Income 12,00,001 முதல் 12,75,000 வரை இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் Marginal Relief என்ற சலுகை அளிக்கிறது.


* Example 1

உதாரணமாக Taxable Income 12,00,200 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது. 

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் இவருக்கு Marginal Relief சலுகை இவருக்கு கிடைக்கிறது. Marginal Relief Rs.59,830 கழித்துவிட்டு  இவர் வருமான வரி Rs.200ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.


இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, மிகப்பெரிய இழப்பாக அமையும்.


* Example 2

உதாரணமாக Taxable Income 12,50,00 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது. 

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் Marginal Relief சலுகை இவர்களுக்கு கிடைக்கிறது. இவர் Marginal Relief Rs.17,500 கழித்துவிட்டு வருமான வரி Rs.50,000ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.


இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.


* Conveyance Allowance

Disabled Persons தம் சம்பளத்தில் பெறும் Conveyance Allowance தொகை முழுதையும் Standard Deduction இல் கழித்துகொள்ளலாம். 


* Example 1

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,00,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.11,95,000. வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி இவருக்கு Nil Tax.


இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,25,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.25,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.


* Example 2

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,40,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.12,35,000. Marginal Relief ன் படி இவருக்கு Tax 35,000 + 4% CESS.


இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,65,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.65,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

.


* விழிப்புடன் இருக்கவே...

மீண்டும் சொல்கிறேன்.... Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.


Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.


விழிப்புடன் இருங்கள்...


வருமான வரி (IT) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)

 

நிதியாண்டு 2025-26 வருமான வரி (Income Tax) புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)


₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.



வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-2026):


₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).


₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).


₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை).


₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.


₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.



 விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன? 


வருமானம் ₹12,00,000-ஐ விடச் சிறிதளவு அதிகரிக்கும் போது, ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.



 முக்கிய விதிகள்:


நிவாரண வரம்பு: ₹12,70,580 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும்


அதிகபட்ச வருமானம்: ₹12,70,590 மற்றும் அதற்கு மேல் வருமானம் இருந்தால், விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது.



 வருமான வரி கணக்கீடு உதாரணங்கள் (Marginal Relief-உடன்):


₹12,00,100 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹100 மட்டுமே (₹59,915 நிவாரணம்).



>>> Income Tax Calculation Statement 2025-2026 (PDF)...



Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?

 

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.



Total Gross Income :


Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.


(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)



Net Taxable Income :


இந்த Total Gross Incomeல் இருந்து,


1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி

2. Standard Deduction Rs.75,000/- 


உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.



Tax Slab :


Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.


Rs.4,00,000 வரை                    - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல்           - 30%



Rebate :


Net Taxable Income  Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.


அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

முதல் 4,00,000 × 0% = 0

2வது  4,00,000 × 5% = 20,000

3வது  4,00,000 × 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.



Marginal Relief :


Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால்  Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.


இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.


இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.


இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,

Rs.4,00,000 =   0% = 0

Rs.4,00,000 =   5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590.   = 15% = 10,589

மொத்த வரி          = 70,589


எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.



Marginal Relief Formula :


12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.


Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income


இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,


Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500


12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000


ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500


ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Actual Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-



>>> Income Tax Calculation Statement 2025-2026 (PDF)...



>>> Best Dash Cam details...


Income Tax Calculation Statement 2025-2026

 

வருமான வரி கணக்கீட்டு அறிக்கை படிவம் 2025-2026 நிதியாண்டு (2026-2027 கணக்கீட்டு ஆண்டு)


IT Statement PDF Format 


 Income Tax Calculation Statement 2025-2026 FY (2026-2027 AY) PDF



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ்...


2025-26 FY New Tax Regime - Marginal Relief

 

வருமான வரி - நிதியாண்டு 2025-26 புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief):


Income Tax - 2025-2026 FY New Tax Regime - Marginal Relief


₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.



வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-26):

₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).


₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).


₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை).


₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.


₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.


 *விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன?* 


வருமானம் ₹12,00,000-ஐ விடச் சிறிதளவு அதிகரிக்கும் போது, ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.



 *முக்கிய விதிகள்:* 


நிவாரண வரம்பு: ₹12,70,580 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும்

.

அதிகபட்ச வருமானம்: ₹12,70,590 மற்றும் அதற்கு மேல் வருமானம் இருந்தால், விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது.



 *வருமான வரி கணக்கீடு உதாரணங்கள் (Marginal Relief-உடன்):* 


₹12,00,100 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹100 மட்டுமே (₹59,915 நிவாரணம்).


₹12,01,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹1,000 மட்டுமே (₹59,150 நிவாரணம்).


₹12,10,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹10,000 மட்டுமே (₹51,500 நிவாரணம்).


₹12,50,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹50,000 மட்டுமே (₹17,500 நிவாரணம்).


₹12,70,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,000 மட்டுமே (₹500 நிவாரணம்).


₹12,70,500 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,500 மட்டுமே (₹75 நிவாரணம்).


₹12,70,580 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,580 மட்டுமே (₹7 நிவாரணம்).



 *சுருக்கம்* :


₹12,00,000-க்கு மேல் வருமானம் செல்லும் போது, கூடுதல் வருமானத்திற்கு மட்டுமே வரியாகச் செலுத்த இந்த விளிம்புநிலை நிவாரணம் வழிவகை செய்கிறது.


உதாரணமாக, வருமானம் ₹100 அதிகரித்தால் (₹12,00,100), வரி ₹100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ்...


2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

 

 2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு


KIND ATTENTION TAXPAYERS!

The due date for filing of Income Tax Returns (ITRs) for AY 2025-26, originally due on 31st July 2025, was extended to 15th September 2025.


The Central Board of Direct Taxes has decided to further extend the due date for filing these ITRs for AY 2025-26 from 15th September, 2025 to 16th September, 2025.


To enable changes in the utilities, the e- filing portal will remain in maintenance mode from 12:00 AM  to 02:30AM on 16th September 2025.
Press Release issued:


வரி செலுத்துவோர் கவனத்திற்கு! 

2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி வருமானங்களை (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, முதலில் ஜூலை 31, 2025லிருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. 

மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த வருமான வரி வருமானங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 15, 2025 முதல் செப்டம்பர் 16, 2025 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. 

பயன்பாடுகளில் மாற்றங்களைச் செயல்படுத்த, மின்னணு தாக்கல் போர்டல் செப்டம்பர் 16, 2025 அன்று அதிகாலை 12:00 மணி முதல் அதிகாலை 02:30 மணி வரை பராமரிப்பு முறையில் இருக்கும். 

செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது:


2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 16) கடைசி நாள்.


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று ஒரு நாள் நீட்டித்துள்ளது வருமான வரித் துறை.


வருமான வரி மின்னணு தாக்கல் போர்ட்டலை (e-Filing Portal) அணுகுவதில் சிரமம் உள்ளதா? - செய்ய வேண்டியவை குறித்த தகவல்

 

 

வருமான வரி மின்னணு தாக்கல் போர்ட்டலை  (e-Filing Portal) அணுகுவதில் சிரமம் உள்ளதா? - செய்ய வேண்டியவை குறித்த தகவல் 


KIND ATTENTION TAXPAYERS!


Having difficulty accessing the Income Tax e-Filing Portal?

Sometimes, access difficulties with the Income Tax e-Filing Portal may arise due to local system/browser settings. These simple steps often help resolve such issues:

▶️Delete temporary files → Press Win + R → type temp and %temp% → delete all files.


▶️Clear browser cache & cookies → Go to Browser Settings → Clear browsing data (cache + cookies)


▶️Use a different/ supported browser → Latest version of Chrome or Edge.


▶️Open in Incognito/ Private Mode → Shortcut: Ctrl+Shift+N  OR  Ctrl+Shift+P (Firefox)


▶️Disable browser extensions → Especially ad-blockers or privacy tools.


▶️Update your browser → Ensure you are on the latest version.


▶️Try a different network → Switch to another Wi-Fi or mobile hotspot.


Following these checks usually resolves most local access-related difficulties. For further support, please connect with us through our official helpdesk/contact channels.

வரி செலுத்துவோர் கவனத்திற்கு! வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலை அணுகுவதில் சிரமம் உள்ளதா? 

சில நேரங்களில், உள்ளூர் அமைப்பு/உலாவி அமைப்புகள் காரணமாக வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலை அணுகுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். 

இந்த எளிய வழிமுறைகள் பெரும்பாலும் இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க உதவும்: 

▶️தற்காலிக கோப்புகளை நீக்கு → Win + R ஐ அழுத்தவும் → temp என தட்டச்சு செய்து %temp% → அனைத்து கோப்புகளையும் நீக்கவும். 

▶️உலாவி கேச் & குக்கீகளை அழி → உலாவி அமைப்புகளுக்குச் செல்லவும் → உலாவல் தரவை அழி (கேச் + குக்கீகள்) 

▶️வேறு/ஆதரவு உலாவியைப் பயன்படுத்தவும் → Chrome அல்லது Edge இன் சமீபத்திய பதிப்பு. 

▶️மறைநிலை/தனியார் பயன்முறையில் திற → குறுக்குவழி: Ctrl+Shift+N அல்லது Ctrl+Shift+P (Firefox) 

▶️உலாவி நீட்டிப்புகளை முடக்கு → குறிப்பாக விளம்பரத் தடுப்பான்கள் அல்லது தனியுரிமை கருவிகள். 

▶️உங்கள் உலாவியைப் புதுப்பிக்கவும் → நீங்கள் சமீபத்திய பதிப்பில் இருப்பதை உறுதிசெய்யவும். 

▶️வேறு நெட்வொர்க்கை முயற்சிக்கவும் → மற்றொரு Wi-Fi அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட்டிற்கு மாறவும். 

இந்தச் சரிபார்ப்புகளைப் பின்பற்றுவது பொதுவாக பெரும்பாலான உள்ளூர் அணுகல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கிறது. மேலும் ஆதரவுக்கு, எங்கள் அதிகாரப்பூர்வ உதவி மையம்/தொடர்பு சேனல்கள் மூலம் எங்களுடன் இணையுங்கள்.



வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே (30.09.2025) கடைசி நாள் - வருமான வரித்துறை தகவல்


வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே (30.09.2025) கடைசி நாள் - வருமான வரித்துறை தகவல்


வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு என பரவும் செய்தி போலியானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.


A fake news is in circulation stating that the due of filing ITRs (originally due on 31.07.2025, and extended to 15.09.2025) has been further extended to 30.09.2025.


✅ The due date for filing ITRs remains 15.09.2025. 


Taxpayers are advised to rely only on official @IncomeTaxIndia updates. 


To assist taxpayers for ITR filing, tax payment and other related services, our helpdesk is functioning on a 24x7 basis, and we are providing support through calls, live chats, WebEx sessions & Twitter/X.



7 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் - வருமான வரித்துறை செய்தி வெளியீடு

 7 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் - வருமான வரித்துறை செய்தி வெளியீடு 


More than 7 crore ITRs have been filed so far and still counting (15th September) !


We extend our gratitude to taxpayers and tax professionals for helping us reach this milestone, and urge all those who haven't filed ITR for AY 2025-26, to file their ITR.


To assist taxpayers for ITR filing, tax payment and other related services, our helpdesk is functioning on a 24x7 basis, and we are providing support through calls, live chats, WebEx sessions & Twitter/X.


இதுவரை 7 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இன்னும் கணக்கிடப்பட்டு வருகின்றன (செப்டம்பர் 15)! 


இந்த மைல்கல்லை அடைய எங்களுக்கு உதவிய வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் AY 2025-26க்கான வருமான வரி தாக்கல் செய்யாத அனைவரும் தங்கள் வருமான வரி தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


வருமான வரி தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளுக்கு வரி செலுத்துவோருக்கு உதவ, எங்கள் உதவி மையம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது, மேலும் அழைப்புகள், நேரடி அரட்டைகள், WebEx அமர்வுகள் மற்றும் Twitter/X மூலம் நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்.



செப்டம்பர் 15க்குள் I.T Return e-File : ஏன்? எதற்கு? யாருக்கு?

 

செப்டம்பர் 15க்குள் I.T Return e-File : ஏன்? எதற்கு? யாருக்கு?


தனிநபர்களின் வங்கி / அஞ்சலக வரவுகள், சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பணப்புழக்கத்தையும் அவர்களது PAN வழியே கண்காணிக்கும் வருமானவரித் துறையின் பணி தற்போது 100% கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட PAN தொடர்புடைய அனைத்து வரவுகள் & செலுத்தப்பட்ட வரிகள் அவரது கணக்கில் நிதியாண்டு வாரியாகத் தானாகவே  சேர்த்துக்கொள்ளப்படும்.


மேலும், மாத வருமானம் வழங்கும் நிறுவனம் / அலுவலகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் TDSன் நிறைவுக் கட்டமான Form16 பணி முடிவடைந்ததும் ஊழியர்களின் ஆண்டு வருமானம் & பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி உள்ளிட்ட விபரங்கள் யாவும் PAN கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிடும்.


மேற்கண்ட நடைமுறைகளின் வாயிலாக சேர்க்கப்பட்ட விபரங்களைச் சார்ந்த PAN உரிமையாளர் சரிபார்த்து, கூடுதலாக வரி செலுத்த வேண்டுமெனில் அதையும் செலுத்தி ஒரு நிதியாண்டிற்கான தனது வருமானம் & வரி செலுத்திய விபரங்களை வருமானa வரித்துறையிடம் Onlineல் சமர்ப்பிக்கும் முறைதான் (ITR / I.T Return) Income Tax Return e-File என்று பெயர். 


ஒவ்வொரு முடிவடைந்த நிதியாண்டிற்கும்,  ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமானவரித் துறையின் இணையப் பக்கத்தில் PAN எண் மூலம் Login செய்து I.T Return பணியை நிறைவு செய்ய வேண்டும். 2024-25 நிதியாண்டிற்கான I.T Return செய்ய செப்டம்பர் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.



* யாரெல்லாம் I.T Return செய்ய வேண்டும்?


PAN வைத்துள்ள அனைவரும். மற்றவர்களுக்கு எப்படியோ, Tax வந்தாலும் வராவிட்டாலும் அரசு & தனியார் நிறுவன மாத ஊதியதாரர்கள் அனைவரும் கட்டாயம் I.T Return e-file செய்தாக வேண்டும்.



* I.T Returnக்கும் அலுவலகங்களுக்கும் தொடர்பு உண்டா?


100% இல்லை. I.T Return செய்து தருவதற்கும் அலுவலகங்களுக்கும் எவ்விதத் தொடர்போ கட்டாயமோ இல்லை. இப்பணி 100% தனி நபரைச் சார்ந்ததே. I.T Return செய்யவில்லை எனில், தனிநபர்தான் பொறுப்பேற்றாக வேண்டும்.



* 'இதுவரை I.T Return செஞ்சதேயில்ல' என்போரெல்லாம், இப்ப மட்டும் ஏன் செய்யனும்?


வருமானவரித் துறை தற்போது முழுமையாகக் கணினிமயமாகிவிட்டதால் இனி அனைத்து PANகளும் I.T Return செய்யப்பட்டுவிட்டதா என்பது 100% கண்காணிக்கப்படும்.



* I.T Return செய்யலேனா என்ன இப்ப?


2024-25 நிதியாண்டிற்கு 15.09.2025ற்குள் I.T Return செய்யவில்லை எனில், 5 லட்சத்திற்குக் கீழ் நிகர வருமானமுள்ளோருக்கு (Taxable Income) ரூ.1,000/-மும் அதற்கு மேலுள்ளோருக்கு ரூ.5,000/-ம் U/S.234Fன் படி தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படும்.


அதே போன்று தாமதமாக ITR செய்யும் நேர்வுகளில் ஊதியமற்ற கூடுதல் வருமானத்திற்கு வருமான வரியும் கூடுதலாகக் கட்ட வேண்டியதாக இருந்தால், வரியில் 1%ஐ வட்டியாக, தாமதமான ஒவ்வொரு மாதத்திற்கும் U/S.234Aன் படி செலுத்தியாக வேண்டும்.



* I.T Return செய்வது எப்படி?


https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login என்ற இணைப்பில் Login செய்து,


--> e-File

--> Income Tax Returns

--> File Income Tax Return' link 

--> Assessment Year [2025-26]

--> Select Mode of Filing [Online]

--> Continue

--> Start New Filing

--> Individual

--> Continue

--> ITR Form [மாத ஊதியதாரருக்கு ITR - 1]

--> Proceed with ITR - 1

--> OK

--> Let’s get Started

--> Taxable income is more than basic exemption limit / Others 

--> Continue

--> OK

என்ற வரிசையில் தேர்வு செய்து அடுத்து வரும் Return summaryல்

* Personal Information (சுய விபரங்கள், வங்கி விபரம்)

* Gross Total Income

* Total Deductions

* Tax Paid

* Verify your tax liability details

உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து தேர்வு செய்து இறுதியாக ஆதார் OTP மூலம் e-verification செய்து I.T Returnன் e-File பணியை 5 - 10 நிமிடங்களில் நிறைவு செய்துவிடலாம்.



* I.T Return செய்வதற்கான USED ID / Password என்ன?


உங்களது PAN எண் தான் User ID. முதன் முதலாகச் செய்பவர் முதலில் அந்த எண்ணையும், வங்கி விபரங்களையும் Register செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் PAN இணைக்கப்பட வேண்டும். இவற்றிற்கான Link அந்த வலைப்பக்கத்திலேயே இருக்கும்.


முன்னதாக I.T Return செய்யப்பட்டிருப்பின் User ID அளித்து Continue செய்தபின் Password அளித்து Login செய்யலாம். தேவையான போது தொடர்பு எண் & மின்னஞ்சல் முகவரிகளை மாற்றிக் கொள்ளலாம். IT & ITR குறித்த தகவல்கள் இதன் வழியாக நமக்கு அனுப்பப்படும்.



* Password மறந்துவிட்டால் என்ன செய்வது?


Forget password கொடுத்து ஆதார் OTP மூலம் புதிய Passwordஐ உருவாக்கிக் கொள்ளலாம் & தேவையான போது மாற்றியும் கொள்ளலாம்.



* I.T Return செய்யத் தேவையான ஆவணங்கள் என்னென்ன?


Form16 அல்லது I.T Form அல்லது 26AS உள்ளிட்டவையே போதுமானது. தனிநபரது வருமானம் & கழிவுகளைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் தனிப்பட்ட சரிபார்ப்பிற்காகத் தேவைப்படலாம். மற்றபடி எந்தவொரு ஆவணத்தையும் பதிவேற்ற வேண்டிய தேவை இல்லை.



* I.T Return செய்ய பணம் செலுத்த வேண்டுமா?


I.T Return என்பது 100% கட்டணமற்ற நடைமுறையாகும். இப்பணியை செல்லிடபேசியிலேயே தனிநபர் தானாகச் செய்துவிட முடியும். தனிநபர் தங்களால் செய்ய இயலாமல், இதனையே தொழிலாகச் செய்துவருவோரை நாடினால் அவர்கள் நிர்ணயிக்கும் தொகையைச் செலுத்தியாகத்தான் வேண்டும்.



* I.T Returnன் போது மீண்டும் வரி கட்டும்படி கூறுகிறதே ஏன்?


Form16ல் உள்ள மாத வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்தி இருப்போம். இது நீங்களான இதர வருமானங்களையும் (சேமிப்பு / முதலீடு / காப்பீட்டிற்கான வட்டி / முதிர்வுத் தொகை) நமது PAN பயன்பாட்டின் மூலம் Income from other sources என நமது கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றை நமது வருமானத்துடன் சேர்த்து கூடுதல் தொகைக்கு வரி செலுத்தும்படி காட்டும்.



* கூடுதல் வரியை எப்படிச் செலுத்த வேண்டும்?


I.T Return செய்யும் போதே 5 Summaryகளை முடித்து அடுத்த படிநிலைக்குச் செல்லும் போதே அதற்கான வசதி இருக்கும். Debit Card, UPI போன்றவற்றின் மூலம் வரியைச் செலுத்தி அதற்கான இரசீதினைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.



* ஒட்டுமொத்த வருமானத்தை விடக் கூடுதலாகக் கட்டிய வரி எப்போது கிடைக்கும்?


PAN மூலம் எப்படி வருமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதேபோன்று PAN பயன்படுத்தி வேறு வகைகளில் வரி செலுத்தி இருப்பின் அவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, I.T Return e-file செய்து முடித்த ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரித்தொகை இத்தளத்தில் Validation செய்திருந்த வங்கிக் கணக்கில் வரவாக்கப்பட்டுவிடும்.



* I.T Return செய்தபின் பெங்களூரு I.T அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமா?


ஆதார் OTP மூலம் e-verification முடித்துவிட்டால் பெங்களூருவிற்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை.



* ஆதார் இல்லாமல் e-verification செய்ய முடியுமா?


முன்னதாக வங்கிக் கணக்கை இத்தளத்தில் Validation செய்திருந்தால், வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்லிடபேசிக்கு OTP அனுப்பி e-verificationஐ முடிக்கலாம்.



* கட்டுன வரிய திருப்பி வாங்கித் தருவதாக சொல்கிறார்களே?


வருமான வரிச் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுதான் உங்களது அலுவலகத்தில் வரிப்பிடித்தம் செய்யப்பட்டு Form16 வழங்கப்பட்டிருக்கும். அதனை விடுத்து சட்டத்திலுள்ள வழிமுறைகளைத் தவறாகக் கையாண்டு Refund பெற்றுத் தருவதாகக் கூறுவதை நம்ப வேண்டாம். Form16ல் இல்லாத கழிவுகளை I.T Return e-fileல் மேற்கொள்வது என்பது வருமான வரித்துறையின் நேரடியான & கடுமையான கண்காணிப்பிற்கு உட்பட்டது. சுருக்கமா சொல்லனும்னா உன்ன எப்புடி ஏமாத்துறேன் பார்த்தியானு ஏமாந்தவரை Tag பண்ணி இன்டாகிராமில் லைவ் ரீல் போடுவதைப் போன்றது. கவனம்.


I.T Return e-file தொடர்பாக இப்பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் பார்ப்பதற்கு வேண்டுமானால் குழப்பமாகவோ / மலைப்பாகவோ இருக்கலாம். இது சார்ந்த காணொளிகள் பல Onlineல் உள்ளன. அதை ஒருமுறை பார்வையிட்டாலே போதும், இது ஒரு பெரிய வேலையாகத் தெரியாது.


நமது வரிகளால் தேசத்தைத் தாங்கும் நாம், நாம் செலுத்திய (/விலக்கு அளிக்கப்பட்ட) வரி & வருமான விபரங்களையும் ஆவணப்படுத்தி வருமான வரிச் சட்டம் சார்ந்த நமது பொறுப்பை முழுமைப்படுத்துவோம்.


ஆகஸ்ட் 2025 மாத வருமானவரி பிடித்தம் அறிய

 

 ஆகஸ்ட் 2025 மாத வருமானவரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு

        

 *KALANJIYAM WEBSITE*

                      ⬇️

                 *LOGIN*

                       ⬇️

             *e service (HR & pin)*

                       ⬇️

           *EMPLOYEE SELF SERVICE*

                        ⬇️

                   *REPORT*

                        ⬇️

*INCOME TAX PROJECTIONS  REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON* 

                        ⬇️

*Write month name* (Aug-2025) & *CLICK Continue button*

                         ⬇️

               *CLICK  Submit*

                         ⬇️

        (new screen)  *OK* 

                          ⬇️

*CLICK MONITORING REQUEST STATUS*

                          ⬇️

        *CLICK VIEW OUTPUT* 

                          ⬇️

                    *DOWNLOAD*


வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?


வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?


 புதிய வரி விதிப்பில் ஒரு ட்விஸ்ட்: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது; ஏன்?


2025-26 பட்ஜெட்டில், புதிய வரி முறையில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானம் (ரூ.75,000 நிலையான விலக்குடன் ரூ.12.75 லட்சம்) முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்ததன் மூலம் வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், ஆனால் 'வரி விலக்கு' என்ற இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு பெரிய சிக்கல் மறைந்துள்ளது - மேலும் இந்த சிக்கல் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.


உண்மையில், இந்த விலக்கு அனைத்து வகையான வருமானங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, உங்கள் வருமானத்தில் மூலதன ஆதாயம் இருந்தால், விஷயங்கள் மாறும்.


பிரிவு 87A என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?


பிரிவு 87A இன் கீழ், வரி விதிக்கக்கூடிய வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை இருந்தால் முழு வரியும் தள்ளுபடி செய்யப்படுகிறது.


பழைய வரி முறையில்: ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.12,500 வரை வரிச் சலுகை கிடைக்கும்.


புதிய வரி முறையில் (நிதியாண்டு 2025-26 முதல்): ரூ.12.75 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பு வருமானம் உள்ளவர்கள் ரூ.60,000 வரை வரிச் சலுகையைப் பெறலாம், இதனால் அவர்களின் வரி பூஜ்ஜியமாகக் குறையும்.


புதிய வரி முறையில் 87A விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது - முதலில் அது ரூ. 5 லட்சம், பின்னர் ரூ. 7 லட்சம், மற்றும் 2025 பட்ஜெட்டில், அது ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டது (நிலையான விலக்குடன் ரூ. 12.75 லட்சம்).


ஆனால் மூலதன ஆதாயங்களின் விளையாட்டு வேறுபட்டது


2025 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிவு 87A இன் விலக்கு என்பது குறுகிய கால மூலதன ஆதாயம் (STCG) போன்ற 'சிறப்பு வருமானத்திற்கு' பொருந்தாது என்று தெளிவுபடுத்தினார்.


அதாவது, உங்கள் ஆண்டு சம்பளம் ரூ. 12 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஆனால் அதில் பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது பிற சொத்துக்களிலிருந்து குறுகிய கால மூலதன ஆதாயம் அடங்கும் என்றால், அந்த மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படாது.


உதாரணமாக:


உங்கள் சம்பளம் ரூ. 11.5 லட்சமாகவும், குறுகிய கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சமாகவும் இருந்தால்.


உங்கள் மொத்த வருமானம் ரூ.12.5 லட்சமாக மாறும்.


சம்பளப் பகுதிக்கு 87A விலக்கு அளிக்கப்படலாம், ஆனால் குறுகிய கால மூலதன ஆதாயமான ரூ.1 லட்சத்திற்கு 15% வரி செலுத்த வேண்டும்.


அதாவது, ரூ.12 லட்சத்தின் மொத்த வருமானம் மூலதன ஆதாயம் போன்ற சிறப்பு வருமானப் பகுதி இல்லாவிட்டால் மட்டுமே 'வரி இல்லாதது'.


நிலையான விலக்கிலும் வரைவுப் பிழை ஏற்பட்டது


பட்ஜெட் 2025 இல், புதிய வரி முறையில் நிலையான விலக்கை ரூ.50,000 இலிருந்து ரூ.75,000 ஆக அரசாங்கம் உயர்த்தியது, இதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை சம்பள வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படாது.


ஆனால், 1961 வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAC(1A) இன் பிரிவு (iii) இல் உள்ள வரைவுப் பிழை காரணமாக, இந்த அதிகரிப்பு காகிதத்தில் ரூ.50,000 ஆகவே இருந்தது.


இந்தத் தவறு ஆகஸ்ட் 2025 இல் திருத்தம் மூலம் சரி செய்யப்பட்டது, இப்போது ரூ.75,000 நிலையான விலக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. 


"புதிய வருமான வரி முறையில் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு ரூ.75,000 நிலையான விலக்கு அமல்படுத்தப்படுவது குறித்து தெளிவு அளிக்கப்படுகிறது," என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 13, 2025 அன்று மக்களவையில் கூறினார்.


சுருக்கமாக


புதிய வரி முறையில் ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானம் (சம்பளம் + ரூ.75,000 நிலையான விலக்கு) வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானங்கள் 87A விலக்குக்கு தகுதியற்றவை, அதாவது அந்த வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.


பழைய வரி முறையில், ரூ.5 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு 87A விலக்கு ரூ.12,500 வரை மட்டுமே இருந்தது.


புதிய வரி முறையில், 87A விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக கடுமையாக அதிகரித்துள்ளது, ஆனால் நிபந்தனைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

Income Tax TDS Rate Chart for FY 2025-26


2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி TDS விகித அட்டவணை


Income Tax TDS Rate Chart for Financial Year 2025-26 


(Changes in TDS have been highlighted in Red Colour)



>>> Click Here to Download 



ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றம் : வருமான வரித்துறைக்கு தெரிவிக்க உத்தரவு



ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றம் : வருமான வரித்துறைக்கு தெரிவிக்க உத்தரவு


 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய உத்தரவு.


ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடைபெறும் பத்திரப் பதிவு குறித்த விபரங்களை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.


உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு.


2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?

 


What Is the Last Date to File ITR for FY 2024-25?


2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?


வருமான வரிப் படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2025-ல் இருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 









இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்