கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு - உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு...

 முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு - உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு...


முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


யார் யார்க்கு என்ன துறைகள்?



 * உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி,  உயர்கல்வி  , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு.



* நிதி,  உணவு, மருத்துவம்,  போக்குவரத்து,  நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு.



* வருவாய்,  சட்டம்,  முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு.



* சமூகநலன்,  கால்நடை,  சுற்றுச்சூழல்,  சுற்றுலா,  MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு.


முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான முழுமையான துறைகள் ஒதுக்கீடு குறித்து அறிய...

>>> Click here to Download Chief Minister Office Order No.01, Dated: 10-05-2021...



முதல்வருக்கு நியமிக்கப்பட்டுள்ள 4 தனிச் செயலாளர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


உதயச்சந்திரன் ஐஏஎஸ் (முதல்வரின் முதன்மைச் செயலாளர் - 1)


1. பொது (ஐஏஎஸ் உள்ளிட்ட அனைத்தும்)

2. லஞ்ச ஒழிப்பு ஆணையம்

3. தகவல் தொழில்நுட்பம்

4. உள்துறை (ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்தும்)

5. கலால் துறை

6. உயர் கல்வித்துறை

7. பள்ளிக் கல்வித்துறை

8. சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை

9. தொழில்துறை

10. திட்டம் மற்றும் வளர்ச்சி

11. அறநிலையத்துறை.


உமாநாத் ஐஏஎஸ் (தனிச் செயலாளர் - 2)


1. ஆற்றல்

2. உணவு

3. சிறப்பு முயற்சி

4. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை

5. போக்குவரத்து

6. வணிகவரி மற்றும் பதிவுத்துறை

7. உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகம்

8. பொதுப்பணி (கட்டிடம்)

9. நெடுஞ்சாலை மற்றும் துறைமுகம்

10. நீர் வளம்

11. நிதி


சண்முகம் ஐஏஎஸ் (தனிச் செயலாளர் - 3)


1. மனிதவளம்

2. கூட்டுறவு

3. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

4. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

5. சட்டப்பேரவை

6. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

7. தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்

8. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு

9. விவசாயம் - உழவர் நலத்துறை

10. சட்டம்

11. முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்ட நிர்வாகம்.


அனு ஜார்ஜ் ஐஏஎஸ் (தனிச் செயலாளர்- 4)


1. சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் காடுகள்

2. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்

3. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

4. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

6. சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு

7. கால்நடைத்துறை, பால் வளத்துறை, மீன்வளத்துறை - மீனவர்கள் நலன்

8. கைத்தறி, கைவினைப் பொருட்கள், டெக்ஸ்டைல், காதி

9. சுற்றுலா - கலாச்சாரம்

10. சமூகச் சீர்திருத்தம்

11. மாற்றுத்திறனாளிகள் நலன்

12. முதல்வர் அலுவல்கள் (அரசியல் அல்லாத)/ சுற்றுப் பயணங்களை நிர்வகித்தல்/அரசு நெறிமுறைகளை நிர்வகித்தல்".


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...