கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இளம்பெண்ணின் மனிதநேயம் - நேரில் வரவழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

 மனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண்: சேலம் சென்ற மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு...


சேலத்தை சேர்ந்த மூதாட்டி சுசிலா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மூதாட்டியை அவரது மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டியை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

 


இந்த நிலையில் அதன் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் தூக்கி வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும் மூதாட்டி உயிரிழந்தார்.



இந்த நிலையில் இளம்பெண்ணின் மனிதநேய செயலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்திற்கு அவரை வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். 


இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது: வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது.





>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...