கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App-ல் விடுப்பு விவரங்களை பதிவு செய்தல் படிவம் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விடுப்புப் பதிவு வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டது (Form for entry of Leave Details in TNSED Schools App - Prepared as per Leave Entry Guidelines issued by the Department of School Education)...

 


>>> TNSED Schools App-ல் விடுப்பு விவரங்களை பதிவு செய்தல் படிவம் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விடுப்புப் பதிவு வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டது (Form for entry of Leave Details in TNSED Schools App - Prepared as per Leave Entry Guidelines issued by the Department of School Education)...



>>> TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை -  தமிழில்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


TNSED Schools Appல் விடுப்பு விவரங்கள் பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செயலியில் பதிவு செய்து சரிபார்த்தபின்பே இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. ஏதேனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்.


*Yearly Leaves*


*_1. Casual Leave_* - இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்கள்


*_2. Restricted Holiday_* - இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்கள்


*_3. Compensatory Leave -_* ஏதேனும் இருந்தால் அதன் எண்ணிக்கையை பதிவு செய்யலாம்

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html


*Service Leaves*


_*1. Earned Leave*_ - தங்கள் பணிப்பதிவேட்டில் இருப்பில் உள்ள நாட்களின் எண்ணிக்கை (31-05-2022ன் படி) 


_*2. Unearned Leave on Medical Certificate - (ML)* - தங்கள் பணிக்காலத்திற்கு ஏற்ப மீதம் இருப்பில் உள்ள நாட்கள்


5 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்


5+ முதல் 10 வரை 180 நாள்கள்


10+ முதல் 15 வரை 270 நாள்கள்


15+ முதல் 20 வரை 360 நாள்கள்


20 ஆண்டுகளுக்கு மேல் 540 நாள்கள்.


துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html

*_3. EOL on Loss of pay without medical certificate:_*


அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் 180 நாள்கள்; அதற்குமேல் எனில் 360 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


_*4. EOL on Loss of pay with medical certificate*_

அதிகபட்ச வரையறை ஏதும் இல்லை. துய்த்த நாள்களை மட்டும் பதிவேற்ற வேண்டும்.


_*5. Unearned Leave on Private Affairs (அரைச்சம்பள விடுப்பு) :*_


அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்; அதற்குமேல் எனில் 180 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலும் B.Ed., கற்பித்தல் பயிற்சிக்கு இவ்விடுப்பைப் பயன்படுத்தியிருப்பர்.


*_6. Special Casual Leave :_*


10 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


_*7. Special Disability Leave :*_

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html

விபத்தின் நிமித்தம் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படும்போது பயன்படுத்தப்படும் விடுப்பு. அதிகபட்சம் 730  நாள்கள். (Appல் 720 நாட்கள் மட்டுமே பதிவாகிறது) துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.




*_Maternity Leave :_*


பெண்ணாசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு 2 குழந்தைகளுக்கு மட்டுமே. ஒரு குழந்தைக்கு அரசாணை 84 நாள்.23.08.21-ன்படி இன்றைய தேதியில் 365 நாள்கள் வீதம் 2 குழந்தைகளுக்கு மொத்தம் 730 நாள்கள். புதிய அரசாணை வருவதற்கு முன்னரே 2 குந்தைகளுக்கும் மகப்பேறு விடுப்பு துய்த்திருப்பின் (அது 730 நாள்களுக்குக் குறைவாகவே இருப்பினும்) தற்போதைய நிலுவை '0' ஆகும். முன்னர் ஒரு குழந்தைக்கு மட்டும் விடுப்பு துய்த்திருப்பின் தற்போதைய நிலுவை 365 நாள்கள்.


*_Adoption Leave :_*

பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 270 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html

*_Abortion Leave :_*

பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 42 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*_Leave on Still Born Child birth :_*

கருவுற்ற 28 வாரங்களுக்குப்பின் / பிரசவத்தின் போது குழந்தை இறக்க நேரிட்டால் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. (அதிகபட்சம் 90 நாட்கள்)



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...