கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை - முழுமையான விளக்கம் - தமிழில் (Method of Registration of Leave Details of Teachers in TNSED Schools App - Explanation in Tamil)...

 



>>> TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை - முழுமையான விளக்கம் - தமிழில் (Method of Registration of Leave Details of Teachers in TNSED Schools App -  Explanation in Tamil)...


 

>>> TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை -  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் (Leave Management System - Manual for Leave Module Version 1.0 (Revised) - Method of Registration of Leave Details of Teachers in TNSED Schools App - Tamil Nadu Department of Education Explanation)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


TNSED APP-ல் பதிவேற்றப்படும் 11 வகையான பணிக்கால விடுப்புகள் பற்றிய விவரம்


*Earned Leave (EL) :

தற்போதைய தேதியில் இருப்பில் உள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*Unearned Leave with Medical Certificate (ML) :

பணிக்காலத்தைப் பொறுத்தது.

5 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்

5+ முதல் 10 வரை 180 நாள்கள்

10+ முதல் 15 வரை 270 நாள்கள்

15+ முதல் 20 வரை 360 நாள்கள்

20 ஆண்டுகளுக்கு மேல் 540 நாள்கள்.

துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*Maternity Leave :

பெண்ணாசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு 2 குழந்தைகளுக்கு மட்டுமே. ஒரு குழந்தைக்கு அரசாணை 84 நாள்.23.08.21-ன்படி இன்றைய தேதியில் 365 நாள்கள் வீதம் 2 குழந்தைகளுக்கு மொத்தம் 730 நாள்கள். புதிய அரசாணை வருவதற்கு முன்னரே 2 குந்தைகளுக்கும் மகப்பேறு விடுப்பு துய்த்திருப்பின் (அது 730 நாள்களுக்குக் குறைவாகவே இருப்பினும்) தற்போதைய நிலுவை '0' ஆகும். முன்னர் ஒரு குழந்தைக்கு மட்டும் விடுப்பு துய்த்திருப்பின் தற்போதைய நிலுவை 365 நாள்கள்.


*Adoption Leave :

பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 270 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*Abortion Leave :

பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 42 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*Extraordinary Leave without Medical Certificate (Loss of Pay without MC) :

அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் 180 நாள்கள்; அதற்குமேல் எனில் 360 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*Extraordinary Leave WITH Medical Certificate (Loss of Pay with MC) :

அதிகபட்ச வரையறை ஏதும் இல்லை. துய்த்த நாள்களை மட்டும் பதிவேற்ற வேண்டும்.


*Unearned Leave on Private Affairs (அரைச்சம்பள விடுப்பு) :

அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்; அதற்குமேல் எனில் 180 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலும் B.Ed., கற்பித்தல் பயிற்சிக்கு இவ்விடுப்பைப் பயன்படுத்தியிருப்பர்.


*Special Casual Leave :

10 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*Special Disability Leave :

விபத்தின் நிமித்தம் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படும்போது பயன்படுத்தப்படும் விடுப்பு. அதிகபட்சம் 730 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*Leave on Still Born Child birth :

கருவுற்ற 28 வாரங்களுக்குப்பின் / பிரசவத்தின் போது குழந்தை இறக்க நேரிட்டால் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...