கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு


அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு


பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்​பிய சுற்றறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது:


​கமிழ்நாட்டில் அரசுப் பள்​ளி​களில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி​யாளர்  நிர்ணயம் செய்​யப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நில​வரப்​படி பள்​ளி​களில் உள்ள மாணவர் எண்​ணிக்​கைக்​கேற்ப  முதுநிலை ஆசிரியர் பணி இடங்​கள் நிர்ணயம் செய்​யப்பட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.


அதன்​படி தமிழ் மற்​றும் ஆங்​கில பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்​துக்கு 28 பாட​வேளைகளும் குறைந்​த​பட்​சம் வரு​மாறு பணியாளர் நிர்​ண​யம் செய்​யப்​படு​கிறது. 11, 12ஆம் வகுப்​புக்கு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்​தைப் பின்​பற்ற வேண்​டும். மேல்​நிலைப் பள்ளி அமைந்​துள்ள பகுதி மாநக​ராட்​சி, நகராட்​சி​யாக இருப்​பின் 30 மாணவர்​களும், ஊரகப் பகு​தி​யாக இருந்​தால் மாணவர் எண்​ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்​சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


ஒரு​முறை பணிநிர​வல் செய்த ஆசிரியர்களை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்​யக்​கூ​டாது. அதே​நேரம், பணிநிர​வல் நடவடிக்​கைக்கு உள்​ளான ஆசிரியர் இந்த ஆண்​டும் விருப்​பம் தெரிவித்தால் அவரை தற்​போதைய பணியாளர் நிர்​ண​யித்​தின்​போது உபரி​யாகக் காண்​பிக்​கலாம்.


இந்த வழி​முறை​களைப் பின்​பற்றி முது​நிலை ஆசிரியர்​களை பணி நிர்​ண​யம் செய்​து, அதன் விவரங்​களை இயக்​குநரகத்​துக்கு அனுப்பி வைக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.



>>> இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள் ர...