கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனமழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

   


கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 25-10-2024 due to heavy rain) விவரம்...


கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி. ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2024) மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவித்துள்ளார்கள்.



கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  

 

 

கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


திருப்பூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது 


 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தா.கிறிஸ்துராஜ் இ.ஆ. ப அவர்கள் தகவல்




 மழை- பெங்களூருவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

 

கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 22-10-2024 due to heavy rain) விவரம்...


நாமக்கல் மாவட்டத்தில் - பள்ளிபாளையம்,  குமாரப்பாளையம் பகுதி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்


தொடர் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 




சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து நாளை காலை முடிவு...

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? நாளை காலை முடிவு...


சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து இரவு பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து நாளை காலை முடிவு...




கனமழை காரணமாக 16-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

கனமழை காரணமாக 16-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை -  ( 16.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 


சென்னை, 


திருவள்ளூர், 


காஞ்சிபுரம், 


செங்கல்பட்டு,


ராணிப்பேட்டை


புதுச்சேரி & காரைக்கால் 


கனமழை -  (16.10.2024) பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 


திருவண்ணாமலை


கிருஷ்ணகிரி,


தர்மபுரி,


கள்ளக்குறிச்சி,


விழுப்புரம்,


கடலூர்


சேலம்









தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு...



ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...


கனமழை - 4 மாவட்டங்களில் நாளை (16-10-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...


சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவரகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?


 கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவரகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன? 👇


▪️  வரும் 18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்


▪️ தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


▪️ வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.


▪️ மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.


▪️ பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.


▪️ உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


▪️ தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

▪️ முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும்.

▪️ நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

▪️ ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

▪️ மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

▪️ அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

▪️ மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

▪️ முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய் - கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.

▪️ மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

▪️ பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


▪️ மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் JCB இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


▪️ தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.


▪️ பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


பொதுமக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்


▪️ விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள்   தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

▪️ தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

▪️ முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

▪️ கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.

▪️ அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

▪️ கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.  அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.


மழை முன்னெச்சரிக்கையாக இன்று (அக்டோபர் 15) பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...



  மழை முன்னெச்சரிக்கையாக இன்று (அக்டோபர் 15) பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை; பிற்பகல் வரை பள்ளிகள் இயங்கும் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...






கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும், கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 15) விடுமுறை விடப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...



Madras University & Chidambaram Annamalai University announce holiday on 15.10.2024...



சென்னை பல்கலைக்கழகம் & சிதம்பரம் அண்ணாமலை  பல்கலைக்கழகத்திற்கு 15.10.2024 அன்று விடுமுறை என அறிவிப்பு...


Madras University & Chidambaram Annamalai University announce holiday on 15.10.2024...


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து....


கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக் கழகத்துக்கு 15.10.2024 அன்று விடுமுறை என அறிவிப்பு...


 கடலூர்: கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை  பல்கலைக்கழகத்திற்கு  15.10.2024 அன்று விடுமுறை.


நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைப்பு.


ஒத்திவைக்கப்படும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலைக்கழக பதிவாளர்.


கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை - 4 மாவட்டங்களில் நாளை (15-10-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...


சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை - நாளை ( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 


விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்),


கடலூர்,


சென்னை, 


திருவள்ளூர், 


காஞ்சிபுரம், 


செங்கல்பட்டு,


புதுச்சேரி & காரைக்கால் 


 அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை





கனமழை காரணமாக 16-07-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 

 

கனமழை காரணமாக 16-07-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-06-2024 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) விடுமுறை...



கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு...

 கனமழை காரணமாக நீலகிரி: கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை...


கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு...





கனமழை காரணமாக 08-01-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை காரணமாக 08-01-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 08-01-2024 due to heavy rain) விவரம்...


*அரியலூர்* (பள்ளிகள்) 

*இராணிப்பேட்டை* (பள்ளிகள்) 

*வேலூர்* (பள்ளிகள்) 

*திருவண்ணாமலை* (பள்ளிகள்) 

*திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*நாகப்பட்டினம்* கீழ் வேளூர், நாகை வட்டம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 



🌧️ *விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

😳 *காஞ்சிபுரம்

கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-12-2023 due to heavy rain) விவரம்...


தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு


வெள்ளநீர் முழுமையாக வடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு...



#நெல்லை  பள்ளிகளுக்கு விடுமுறை


நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை...


வெள்ள பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


பாதிப்பு அதிகம் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் முழுமையாக விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம்.

 - ஆட்சியர்.




கனமழை பாதிப்பு காரணமாக 21-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை பாதிப்பு காரணமாக 21-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 21-12-2023 due to heavy rain) விவரம்...


திருநெல்வேலி : பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை; வெள்ள முகாம்கள் நடைபெறாத கல்லூரிகள் மட்டும் செயல்படும்-மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்


தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் (டிச.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸப் எண்கள் அறிமுகம்


மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸப் எண்கள் அறிமுகம்


Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற  X  தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தல்

கனமழை பாதிப்பு காரணமாக 20-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை பாதிப்பு காரணமாக 20-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 20-12-2023 due to heavy rain) விவரம்...


கனமழை பாதிப்பு  காரணமாக நாளை (20.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

⭕ *தூத்துக்குடி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


⭕ *திருநெல்வேலி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)



⭕ *தென்காசி* (பள்ளிகள் மட்டும்)


தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...


தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு காரணமாக பிற மாவட்டங்களில் இருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தூத்துக்குடிக்கு செல்ல அறிவுறுத்தல்.


10 குழுக்கள் தூத்துக்குடியில் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்.


திருநெல்வேலி மாவட்டத்தில்  (20.12.2023) பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.


- மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி

கனமழை காரணமாக 19-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை காரணமாக 19-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 19-12-2023 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக நாளை (19.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*தூத்துக்குடி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
*திருநெல்வேலி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


கனமழை காரணமாக 18-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

 

கனமழை காரணமாக 18-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 18-12-2023 due to heavy rain) விவரம்...

🌧️ கனமழை காரணமாக (18.12.2023) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :




8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு...



அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...

 அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...



கனமழை காரணமாக 04-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 04-12-2023 due to heavy rain) விவரம்...

 

 

கனமழை காரணமாக 04-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 04-12-2023 due to heavy rain) விவரம்...


🌧️ கனமழை காரணமாக நாளை (04.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


💥 செய்யாறு வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.



🌧️ விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

😳 வேலூர்


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (04.12.2023) திங்கட்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். சி.பழனி இ.ஆ.ப.  அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...