கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள வேண்டும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு...



*🎯15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் RT-PCR பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு...


*🎯பள்ளி மாணவர்களுக்கு பரவும் கொரோனா...


*🎯கண்காணிப்பு பணிகளை வேகப்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ்நாடு அரசு உத்தரவு...!


*🎯மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை RT-PCR சோதனை மேற்கொள்ளவும் உத்தரவு...


>>> அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக  Covid - 19 SWAB TEST மேற்கொள்ள வேண்டும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு...


கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ICMR-ன் முக்கிய அறிவுறுத்தல்...



 கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 102 நாட்களுக்கு RT-PCR- ஆன்டிஜன்  பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.



கொரோனாவின் சில இறந்த துகள்கள் உடலுக்குள் சில காலம் நீடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இவை நோயை பரப்ப முடியாது என்றாலும்,உண்மைக்கு மாறான பாஸிட்டிவ் முடிவை பரிசோதனையில் காட்டக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.




அதே போன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த நபரிடம் அவசர நிலை இல்லாவிட்டால் ஆறுமாதம் கழித்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...

கொரோனா பாதிப்பினை வீட்டிலேயே அறிந்து கொள்ளும் புதிய சாதனத்திற்கு ICMR அனுமதி...

 கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை வீட்டிலேயே கண்டறிந்துக் கொள்ளும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சாதனம் ஒன்றிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியிருக்கிறது. மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொலுஷன்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தொற்றினை வீட்டிலேயே அறிந்துகொள்ளும் ஆண்டிஜன் சோதனை சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 




இதனையடுத்து சாதனத்தை யார் பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என்றும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் ICMR தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. CoviSelfTM என பெயரிடப்பட்டுள்ள இதன் மூலம், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று ICMR அறிவுறுத்தியிருக்கிறது. இந்த சோதனையில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்தால் அவருக்கு RT - PCR சோதனை தேவையில்லை எனவும் ஆனால் முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் உடனடியாக RT - PCR சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





இந்த சாதனத்தின் மூலம் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்வது எப்படி என்பது பற்றி செயலியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்துவோர் செயலி ஒன்றினை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ICMR அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை இந்த செயலி மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.



RTPCR பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்...




 கொரோனா பரிசோதனை மையங்கள் மீதான அழுதத்தை குறைக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை குறைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

இதன்படி


1. ஏற்கனவே ரேபிட் ஆட்டிஜென் சோதனை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானால் அவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய தேவை இல்லை. 


2. ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் கொரோனா உறுதியானால் அவர்கள் மீண்டும் சோதனை செய்ய வேண்டியது கிடையாது.


3. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் கடைசி 3 நாட்களில் காய்ச்சல் இல்லையென்றால் சோதனை செய்ய வேண்டாம். 


4. கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து திரும்புபவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


5. ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்கிறார்கள். இது  முழுவதுமாக நீக்கப்படலாம்.


நாட்டில் தற்போது மொத்தம் 2506 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருக்கின்றன. கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய பரிசோதனைகள் வருவதால் உடனடியாக சோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. 




இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதாவது:  தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக, கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மிகுந்த சவாலை எதிர்கொண்டுள்ளன. அசாதாரண பரிசோதனை எண்ணிக்கை காரணமாக ஆய்வகங்கள் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. மேலும் ஆய்வகத்தில் பணிபுரியும் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆர்டிபிசிஆர் சோதனையை மேம்படுத்துவதும் ஒரே நேரத்தில் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பரிசோதனை கிடைப்பதை அதிகரிப்பதும் கட்டாயமாகும்.  அளவுக்கதிகமான பரிசோதனை எண்ணிக்கைகளால் சிக்கி தவிக்கும் ஆய்வகங்களுக்கு உதவும் வகையில், ரேபிட் ஆன்டிஜென் சோதனையை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் நகரங்கள், நகர்கள், பள்ளிகள், கல்லூரிகள் , அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜென் சோதனையை அனுமதிக்க வேண்டும்.




தனிநபர் ஒருவர் ஆன்டிஜென்ட் சோதனையில் தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்ட பின்னரும் தொடர்ந்து கொரோனா அறிகுறிகளால் கண்டறியப்பட்டால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் பரிசோதனை செய்யப்படுவோரின் படிவத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் வகுப்பில் பங்கேற்ற ஆசிரியை கொரோனாவால் இறப்பு - தேர்தல் வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை...

 திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு மார்ச், 18ல் சின்னாளப்பட்டி தனியார் பள்ளியில் நடந்தது.


2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.மார்ச், 26ல் இதே ஆசிரியர்களை பிரித்து, மாவட்டத்தின் மற்ற, ஆறு தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இந்நிலையில், முதல் கட்ட வகுப்பில் பங்கேற்ற, 53 வயதுடைய, உதவி பெறும் பள்ளி ஆசிரியை ஒருவர், கொரோனா பாதிப்பால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவருடன் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, சான்று சமர்ப்பிக்கும்படி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலியான ஆசிரியை மார்ச், 5ல் பெங்களூரு சென்று வந்துள்ளார். 'மார்ச், 11ல் அரசு மருத்துவமனை பரிசோதனையில், 'நெகட்டிவ்' என வந்ததால், தேர்தல் வகுப்பில் பங்கேற்றுள்ளார்.'பாதிப்பு தொடர்ந்ததால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மார்ச், 25ல் நடந்த சோதனையில் கொரோனா உறுதியானது' என்றார்.

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று - பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை...

திண்டுக்கல்: பழனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை...

பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக பள்ளி மூடல். 

 பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கும், 9 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்...

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 10 மாதங்களுக்கு பின் தமிழகம் முழுவதும் 10,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 30 நிமிடங்களில் கரோனா தொற்றை கண்டறியும் புதிய பரிசோதனை...



ஸ்மார்ட்போன் மூலம் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் சிறப்பு பரிசோதனை கருவி.

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி, நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. ஆய்வகங்களில் நடத்தப்படும் இந்த பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 4 முதல் 8 மணி நேரமாகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கரோனா தொற்றை துல்லியமாகக் கண்டறியும் புதிய சோதனை முறையை அமெரிக்காவின் யு.சி.பெர்கிலே மற்றும் கிளாட்ஸ்டோன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன்மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதுகுறித்து பெர்கிலே பயா இன்ஜினீயரிங் பேராசிரியர் டேனியல் கூறியதாவது:

சிஆர்ஐஎஸ்பிஆர் முறையில் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு கருவியை உருவாக்கி உள்ளோம். மூக்கில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை இந்த கருவியில் வைக்க வேண்டும். அந்த கருவியின் மேற்பரப்பில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும்.

சளி மாதிரியை ஆய்வு செய்யும் கருவி, கரோனா வைரஸ் கிருமிகளை ஒளிவில்லைகளாக மாற்றிக் காட்டும். ஸ்மார்ட்போன் கேமரா அந்த ஒளிவில்லைகளை பதிவு செய்யும்போது ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவாக கண்டறிய முடியும். அவருக்கு எந்த அளவுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

இந்த நடைமுறை மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் துல்லியமாக முடிவை அறிந்து கொள்ளலாம். எந்த வகையான ஸ்மார்ட்போனையும் பொருத்தும் வகையில் எங்களது கருவியை வடிவமைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்ற ஜெனிபரும் இந்த ஆராய்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளார். அவர் கூறும்போது, ‘‘எங்களது சோதனை நடைமுறை மூலம் விரைவாக, துல்லியமாக கரோனா தொற்று முடிவை அறிந்துகொள்ள முடியும். ஆய்வக வசதி குறைவாக உள்ள பகுதிகளில் எங்களது கருவி பயனுள்ளதாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...