கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிடித்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடித்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வருமான வரி - ஊதியத்தில் பிடித்தம் செய்தல் - Challan மூலம் செலுத்துதல் - குறித்த தகவல்கள்...

Challan மூலம் வருமான வரி செலுத்த உள்ளீர்கள் எனில், ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த நிதி ஆண்டில் நமக்கு தோராயமாக எவ்வளவு ஊதியம் வரும் என்பதை கணக்கிட்டு, அதற்கான தோராயமான வருமான வரியையும் கணக்கிட்டு, கீழ்க்கண்ட தேதிக்குள், குறிப்பிடப் பட்டுள்ள சதவீத வரித் தொகையை Advance Tax ஆக கட்ட வேண்டும்.

  • June 15 க்குள்- 15%
  • September 15க்குள் - 45%
  • December 15 க்குள்- 75 %
  • March 15 க்குள்- 100%

கட்டத் தவறினால், வருமான வரி சட்ட எண் 234 b & 234 c இன் படி, E-filing செய்யும் பொழுது, வருமான வரித் துறை இணைய தளம் வட்டியை கணக்கிட்டு காண்பிக்கும்.

இந்த வட்டியை தனியாக செலுத்திய பின்னரே, e-filing செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 உதாரணமாக ரூ.50000 வருமான வரியை பிப்ரவரி மாதம் Challan மூலம் செலுத்தியவர்களுக்கு தோராயமாக ரூ.2,500/- Penalty வருகிறது.

ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்பவர்களுக்கு E-filing செய்யும்பொழுது இந்த Penalty தொகை வருவதில்லை.

இதனை தவிர்க்க வருமான வரியை முன்கூட்டியே திட்டமிட்டு, மேற்கண்ட தேதிக்குள் வரியை ஊதியத்தில் பிடித்தம் செய்வது நல்லது.

இயன்ற வரை ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்யுங்கள். 

தற்போது வரை பிடித்தம் செய்யாதவர்கள், தோராயமாக கடந்த ஆண்டு வருமான வரி தொகையை 3ஆகப் பிரித்து இம்மாதம் முதல் பிடித்தம் செய்ய தொடங்கலாம். பிப்ரவரி மாதம் கணக்கீடு செய்தபின் பிடித்தம் செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...