கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
வாடகை சட்டங்களில் திருத்தம்; வாடகை மற்றும் குத்தகை முறையில் புதிய திருத்தங்கள் - மத்திய அரசு...
வாடகை சட்டங்களில் திருத்தம்; வாடகை மற்றும் குத்தகை முறையில் புதிய திருத்தங்கள் - மத்திய அரசு
வாடகை சட்டங்களில் திருத்தும் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி அவர்களது தலைமையில் நேற்று (ஜூன் 2) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் வாடகை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சட்டத்தின் 10 முக்கிய அம்சங்களை இப்பதிவில் காணலாம்.
வாடகை ஒப்பந்த சட்டம் 10 அம்சங்கள்:
1. காலியாக இருக்கும் வீடுகளை வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும்.
2. வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.
3. வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாணையம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
4. ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
5. புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
6. ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் நிவாரணம் கோரி இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது.
7. முந்தைய காலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.
8. வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் பாதுகாப்பு வைப்புத்தொகை (அட்வான்ஸ்) வாங்க முடியாது.
9. வாடகை ஒப்பந்த நகலை மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
10. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
NMMS 2024-2025 Final Answer Key
NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...