கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வீட்டுக் கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுக் கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply (Can Government Employees and Teachers get Income Tax deduction for home loan principal and interest paid by them in case of taking home loan without permission? - CM CELL Reply)...

 

 

>>> அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM SPECIAL CELL Reply (Can Government Employees and Teachers get Income Tax deduction for home loan principal and interest paid by them in case of taking home loan without permission? - CM CELL Reply)...


அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலாது என்பதற்கான அரசாணைகள் ஏதும் பெறப்படவில்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல்கள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


>>> பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம் (Home loan principal, interest and house rent can be deducted while calculating income tax - Clarification received through RTI)...

 

>>> வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம் (Home loan principal, interest and house rent can be deducted while calculating income tax - Clarification received through RTI)...


அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...



>>> அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற வீட்டுக் கடன்களை மாநில அரசு வழங்கும் கடன் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு (Migration) கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு...

 Housing and Urban Development Department,

Secretariat, Chennai-9.

Letter (Ms.) No.73 dated.11.O3.2O21.


  • Housing and Urban Development Department, Principal Secretary Letter (Ms.) No.73 dated.11.O3.2O21.

  • APPLICATION FORM FOR THE GRANT OF AN ADVANCE FOR MIGRATION OF LOAN FROM OTHER FINANCIAL INSTITUTIONS UNDER THE RULES REGULATING THE GRANT OF ADVANCES TO GOVERNMENT SERVANTS FOR BUTLDING ETC., OF HOUSES.

  • CHECK-SLIP FOR SCRUTINISING THE APPLICATION FOR SANCTION OF HOUSE BUILDING ADVANCE


>>> வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற வீட்டுக் கடன்களை மாநில அரசு வழங்கும் கடன் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு (Migration) கூடுதல் அறிவுரைகள் - அரசுக் கடிதம்  (Letter (Ms.) No.73 dated.11.O3.2O21) மற்றும் விண்ணப்பப் படிவங்கள்...


அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை...

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021...

அரசு கடிதத்தில் வீடு கட்டும் முன்பணம் கோரும் அரசு ஊழியர்கள் . வீடு கட்டும் மனை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பித்து வீடு கட்டும் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் , சொத்து அமைந்துள்ள இடத்தை தேவைப்படும் போது ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கோரும் அதிகாரம் முன்பணம் ஒப்பளிப்பு அளிக்கும் அதிகாரிக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு சிறப்பு காவல் - 8 ம் அணி , வான்தந்தி குழுமம் , திகார் சிறை வளாகம் , புதுதில்லியில் அவில்தாராக பணிபுரியும் திரு . எம் . மூவேந்தன் , ( 1463 ) , என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வீடு கட்ட உள்ளதாலும் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ளதாலும் , அவருக்கு வீடு முன் பணம் அனுமதிப்பது குறித்த தெளிவுரையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் வேறு மாவட்டங்களிலும் இருக்கலாம் என்பதால் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ள தமிழக அரசு ஊழியர்கள் , வீடு கட்டும் முன்பணம் பெற்று தமிழ்நாட்டில் வீடு கட்ட உத்தேசித்தால் , அவ்வூழியர்கள் எந்த மாவட்டத்தில் வீடு கட்ட உத்தேசித்துள்ளனரோ அந்த மாவட்ட ஆட்சித் தலைவரே வீடு கட்டும் முன்பணம் வழங்க ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

>>>  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வீட்டுக்கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்து கொள்ளலாமா - RTI மூலம் பெறப்பட்ட தகவல்...

 வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளலாமா என சென்னை வருமான வரித்துறை ஆணையர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டது.  வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் வருமான வரிச்சட்டம் பிரிவு 24 ம் மற்றும் பிரிவு 10(13A)ன் படி கழித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.



மேற்கண்ட HRA & Housing loan deduction ன் விளக்கம் - Loan வாங்கியிருக்கும் வீடு ஒரு ஊரிலும் தற்போது  வாடகையில் குடியிருக்கும் வீடு ஒரு ஊரிலும் இருக்கும் பட்சத்தில் வாடகை வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கான receipt with his PAN Number பெற்று சமர்பித்தால் மட்டுமே HRA & House loan இரண்டையும் கழித்துக் கொள்ள முடியும்.  Housing Loan பெற்ற வீட்டிலேயே  வசித்தால் இந்த பயனை பெற முடியாது.

வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை – வருமான வரித்துறை அறிவிப்பு...

 


ரூ.2 கோடி வரையிலான மதிப்பில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு சலுகை தொகுப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் உள்ளன. இத்தகைய வீடுகளை விற்பனை செய்ய ஏதுவாக மத்திய அரசு ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சலுகை தொகுப்பு திட்டங்கள் அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறையினரும், வீடு வாங்குவோரும் பயன்பெறும் வகையில் வருமான வரிச்சட்டம் பிரிவு 43 சிஏ மற்றும் வருமான வரிச்சட்டம் 56(2)(எக்ஸ்) ஆகியவற்றின் படி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ.2 கோடி வரையிலான மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனையை வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கு 20 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதித்து ரியல் எஸ்டேட் துறையினர், வீடு வாங்குவோர் வரிச்சலுகை பெறும்வகையில் வருமான வரி சட்ட விதிகள் தளர்த்தப்படுகின்றன.

அரசின் வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே ஏற்கனவே இருந்து வந்த 5 சதவீத வித்தியாசம் 10 சதவீத வித்தியாசமாக உயர்த்தப்பட்டு வரிச்சலுகை அனுமதிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ.2 கோடி வரை மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனைக்கு இந்த வித்தியாசம் 20 சதவீத அளவுக்கு தளர்த்தப்படுகிறது. இது  ஜூன் மாதம் 30-ம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

இதன்மூலம் வீடு வாங்குவோர் குறைவான வரி செலுத்தினால் போதும். இந்த சலுகை வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்துக்கு உதவும். இதற்காக வருமான வரி சட்டத்தில் உரிய நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன..?

 


கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா? 

7 வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு.

கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் எதில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும் என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அதாவது, பொதுத்துறை வங்கிகள்தான் எனப் பலரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில் சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்.

அது மட்டுமல்ல, கடந்த அத்தியாயத்தைப் படித்த மதுக்கூர் மணி என்பவர் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது...

கடன் வாங்கினேன், திரும்பக் கட்ட முடியவில்லை...

``நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது தனியார் வங்கியில் எனது பெயரில் சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்த பிணையும் வைக்காமல் தனிநபர் கடன் வாங்கினேன். தற்போது கொரோனாவின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதமாக வேலையின்றி இருக்கிறேன். இந்த நிலையில, கடன் தவணையைக் கட்ட வேண்டும் என்று வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்று கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்...

6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, கடன் தவணை தள்ளிவைப்பு (Loan Moratorium) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா பிரச்னையின் காரணமாக அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாத காலம் மாதத் தவணைகளை தள்ளி செலுத்தும் வசதியைக் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு சலுகையாக வழங்குகிறது. இது கொரோனா காலத்துக்கு முன்பு தாங்கள் கடனை ஒழுங்காக செலுத்தி இருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகள் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே நான் அவருக்கு அளிக்கும் பதில்.

ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவு வட்டி?

சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில் தனிநபர் கடன் ரூ.2 லட்சத்துக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம் 24% எனில் (தற்போதைய சூழ்நிலையில் தனிநபர் கடன் வட்டி விகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரை தரப்படுகிறது), நம்மில் பலர் மாதம் இரண்டு வட்டி என்ற முறையில் நம்மிடம் வட்டி பணம் வசூலிக்கிறது என்று நினைக்கிறார்கள்.

அதாவது, வருடத்துக்கு 24% வட்டி என்றால் மாதத்துக்கு 2% வட்டி என்று கணக்கிடுகிறார்கள். இது தவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்கு மூன்று வருடங்களுக்கு மாதாந்தரத் தவணை ரூ.7,847 என்று வரும். அப்படி மூன்று வருடங்களுக்குச் செலுத்தினால், மொத்த வட்டி செலுத்திய தொகை ரூ.82,476 என்று வரும்.

இதுவே நாம் நடைமுறையில் பேசும் இரண்டு வட்டி என்று கணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை மூன்று வருடங்களுக்கு ரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாத வட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்து நாம் சாதாரணமாக வட்டி கணக்கிடுவதற்கும் வங்கிகள் வட்டி கணக்கிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.

கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி

இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போது வேண்டுமானாலும் பகுதி பகுதியாகவோ, மொத்தமாகவோ செலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறு பகுதி பகுதியாகச் செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறு வட்டித் தொகை குறையும். இத்தகைய கடன் திட்டம் பெரும்பாலும் தங்க நகைக் கடன்களில் வழங்கப்படுகிறது.


ஒரே விதமான கடனுக்கு, வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு இடையே மாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல் வருமானம், சொத்து மதிப்பு, கடன் தகவல் அறிக்கையில் எந்த பாதகமான விஷயங்களும் இடம்பெறாதது ஆகியவற்றைக் கொண்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!

மேற்சொன்ன அம்சங்கள் மட்டுமல்லாமல், இப்போது வந்திருக்கும் ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் தங்களின் சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன் அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள், கடன் தேவையின் அவசரம் ஆகியவற்றைக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் அளவையும் வட்டி விகிதத்தையும் தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள் எந்த வங்கியிலோ, வங்கிசாரா நிதி நிறுவனத்திலோ கடன் வாங்குவதற்கு முன்னால், அந்த வட்டி விகிதம்தான் தங்களுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த வட்டி விகிதம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ் மூலம் கடன் தரும் நிறுவனங்களிலிருந்து முடிந்தவரை கடன் பெறாமலே இருப்பது நல்லது.

இப்போது மாதாந்தரத் தவணை கணக்கீட்டு முறையையும் வட்டி விகிதங்கள் பற்றியான தகவல்களையும் பற்றி ஓரளவுக்கு தெளிவடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: விகடன்

வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம்...

 SBI Privilege வீட்டுக் கடன் குறிப்பாக அரசு ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

எஸ்பிஐ அரசு ஊழியர்களுக்காக பிரத்யேகமாக எஸ்பிஐ சிறப்புரிமை வீட்டுக் கடனை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அல்லது மாநில அரசின் ஊழியர்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடிய பிற நபர்கள் இந்த வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன், வயது, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முன்மொழியப்பட்ட வீட்டின் விலை / பிளாட் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு கடன் தொகை தீர்மானிக்கப்படும்.

சிறப்பு அம்சங்கள்

  • குறைந்த வட்டி விகிதங்கள்
  • பூஜ்ஜிய செயலாக்க கட்டணம்
  • மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை
  • முன் கொடுப்பனவு அபராதம் இல்லை
  • தினசரி குறைப்பு இருப்பு மீதான வட்டி கட்டணங்கள்
  • 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்துதல்
  • பெண்கள் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை
  • காசோலை வழங்கப்பட்டால் வட்டி சலுகை


தகுதி

குடியுரிமை வகை:  இந்தியர்

குறைந்தபட்ச வயது: 18 வயது

அதிகபட்ச வயது: 75 வயது

கடன் காலம்: 30 ஆண்டுகள் வரை.

கடன் தொகை அளவு : இங்கே கிளிக் செய்க


வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

வட்டி விகிதங்களைக் காண இங்கே கிளிக் செய்க


கட்டணம்

செயலாக்க கட்டணம்- செயலாக்கக் கட்டணத்தின் முழு தள்ளுபடி. இருப்பினும், சட்டபூர்வமான கருத்துக்கான வக்கீல் கட்டணம், மதிப்பீட்டு அறிக்கைக்கான மதிப்பீட்டாளர் கட்டணம், செர்சாய் மற்றும் சிபில் கட்டணங்கள் போன்றவை போரோவிலிருந்து மீட்கப்படும்.

முன் அனுமதி **

சொத்து தேடல் மற்றும் தலைப்பு விசாரணை அறிக்கைக்கான வழக்கறிஞரின் கட்டணம்.

மதிப்பீட்டு அறிக்கைக்கான மதிப்பீட்டாளரின் கட்டணம்.

அனுமதிக்கு பிந்தைய கட்டணம்**

கடன் ஒப்பந்தம் மற்றும் அடமானத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரை வரி.

சொத்து காப்பீட்டு பிரீமியம்.

செர்சாய் பதிவு கட்டணம் ரூ .50 + ஜிஎஸ்டி ரூ .5 லட்சம் வரம்பு வரை; மற்றும் ரூ .5 லட்சத்திற்கு மேல் வரம்புகளுக்கு ரூ .100 + ஜிஎஸ்டி.

** உண்மையானவற்றில் செலுத்தப்பட வேண்டும்


தேவையான ஆவணங்கள்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் ஆவணங்கள் / ஆவணங்களின் பட்டியல்:

  1.  அடையாள அட்டை
  2. கடன் விண்ணப்பம்: பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்ப படிவம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது
  3. அடையாள சான்று (ஏதேனும் ஒன்று): பான் / பாஸ்போர்ட் / டிரைவர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை
  4. குடியிருப்பு / முகவரி சான்று (ஏதேனும் ஒன்று): தொலைபேசி பில் / மின்சார மசோதா / நீர் பில் / குழாய் எரிவாயு மசோதாவின் சமீபத்திய நகல் அல்லது பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / ஆதார் அட்டையின் நகல்

சொத்து ஆவணங்கள்:

  1. கட்டுமானத்திற்கான அனுமதி (பொருந்தும் இடத்தில்)
  2. விற்பனைக்கான பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் (மகாராஷ்டிராவுக்கு மட்டுமே) / ஒதுக்கீடு கடிதம் / விற்பனைக்கு முத்திரையிடப்பட்ட ஒப்பந்தம்
  3. ஆக்கிரமிப்பு சான்றிதழ் (சொத்தை நகர்த்த தயாராக இருந்தால்)
  4. பங்கு சான்றிதழ் (மகாராஷ்டிராவுக்கு மட்டுமே), பராமரிப்பு மசோதா, மின்சார மசோதா, சொத்து வரி ரசீது
  5. அங்கீகரிக்கப்பட்ட திட்ட நகல் (ஜெராக்ஸ் புளூபிரிண்ட்) மற்றும் பில்டரின் பதிவுசெய்யப்பட்ட மேம்பாட்டு ஒப்பந்தம், கன்வேயன்ஸ் டீட் (புதிய சொத்துக்காக)
  6. கட்டண ரசீதுகள் அல்லது பில்டர் / விற்பனையாளருக்கு செய்யப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் காட்டும் வங்கி ஏ / சி அறிக்கை

கணக்கு அறிக்கை:

  1. கடந்த 6 மாதங்கள் விண்ணப்பதாரர் / கள் வைத்திருக்கும் அனைத்து வங்கி கணக்குகளுக்கான வங்கி கணக்கு அறிக்கைகள்
  2. பிற வங்கிகள் / கடன் வழங்குநர்களிடமிருந்து முந்தைய கடன் ஏதேனும் இருந்தால், கடந்த 1 ஆண்டிற்கான கடன் ஏ / சி அறிக்கை
  3. சம்பள விண்ணப்பதாரர் / இணை விண்ணப்பதாரர் / உத்தரவாததாரருக்கான வருமான சான்று:
  4. கடந்த 3 மாதங்களின் சம்பள சீட்டு அல்லது சம்பள சான்றிதழ்
  5. கடந்த 2 ஆண்டுகளாக படிவம் 16 இன் நகல் அல்லது கடந்த 2 நிதியாண்டுகளுக்கான ஐடி வருமானத்தின் நகல், ஐடி துறையால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

சம்பளம் பெறாத இணை விண்ணப்பதாரர் / உத்தரவாததாரருக்கான வருமான சான்று:

  1. வணிக முகவரி ஆதாரம்
  2. கடந்த 3 ஆண்டுகளாக ஐ.டி.
  3. கடந்த 3 ஆண்டுகளாக இருப்புநிலை மற்றும் லாபம் மற்றும் இழப்பு A / c
  4. வணிக உரிம விவரங்கள் (அல்லது அதற்கு சமமானவை)
  5. டி.டி.எஸ் சான்றிதழ் (படிவம் 16 ஏ, பொருந்தினால்)
  6. தகுதி சான்றிதழ் (C.A./ மருத்துவர் மற்றும் பிற நிபுணர்களுக்கு)

வீட்டுக் கடன் வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI-ல் தத்தளிப்பவர்களுக்கு- சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்...


 வீட்டுக் கடன் வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMIல்  தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக்கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1)

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி...

(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வது மாதத்திலே முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.(பார்க்க : அட்டவணை 2)

(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய தவணையை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டு தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 3)



(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்

வீட்டுக் கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159-வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 4)

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!

🍁🍁🍁 வீட்டுக் கடன் - 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு...

மாதம் 10 ஆயிரம் சம்பாதித்தாலும் சரி, மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி, உங்களது ஆசை என்ன என்று கேட்டால், அந்த லிஸ்டில் சொந்த வீடு என்பது நிச்சயம் இல்லாமல் இருக்காது.

எப்படியேனும் கடன் வாங்கியாவது அவரவருக்கு ஏற்ப வீடுகட்டிவிட வேண்டும் என்பது பலரின் பெரும் கனவாகவே இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது நிச்சயம் கையில் பணத்தினை வைத்துக் கொண்டு செய்யும் காரியம் அல்ல. ஏனெனில் விற்கிற விலைவாசி அதுபோல. ஆனால் அப்படியானவர்களுக்கு வரனாக உள்ளது தான் வீட்டுக்கடன்.

15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு

அதிலும் தற்போது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைந்துள்ளது. ஆக இதன் மூலம் உங்களது கனவு வீட்டை நிஜத்திலும் உங்களால் சற்று குறைந்த வட்டியில் கட்ட முடிக்க முடியும். ஏற்கனவே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை குறைத்த நிலையில், இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினையும் குறைத்துள்ளன. அதோடு வங்கிகளும் விழாக்கால சலுகையாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு வட்டி சலுகை, செயல்பாட்டுக் கட்டணம் ரத்து என பல அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளன.

கட்டணங்களில் சலுகை

ஏற்கனவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ள நிலையில், வீடு கட்ட நினைப்போருக்கு நிச்சயம் இது வரபிரசாதம் தான். தற்போது எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்கும் என்பதால், சில வங்கிகள் மற்ற கட்டணங்களிலும் சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகள் உள்ளன.

டெவலப்பர்களும் சலுகை

இது தவிர கடந்த சில மாதங்களாக முடங்கிபோன டெவலப்பர்களின் வணிகத்தினை ஊக்குவிக்க, அவர்களும் இந்த நேரத்தில் பற்பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். ஆக இதெல்லாம் சேர்த்து உங்களது வீட்டுக்கனவை நிறைவேற்ற சரியான வாய்ப்பாக அமையும். சரி வாருங்கள் பார்க்கலாம் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மற்ற கட்டணங்கள் எவ்வளவு, என்னென்ன சலுகைகள், விவரங்கள் என்ன?

எஸ்பிஐ-யில் எவ்வளவு வட்டி?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் தற்போது விழாக்கால பருவத்திற்காக பற்பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. தற்போது 30 லட்சம் வரையிலான கடனுக்கு 6.90% வட்டி விகிதமும், இதே 30 லட்சம் ரூபாய்க்கு மேலான கடனுக்கு 7% வட்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் இந்த வீட்டுக்கடன்களுக்கு கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலும் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகளை வரை சலுகை பெற முடியும்.

விழாக்கால சலுகை காரணமாக வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகைகாக எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் செயலியான யோனோ மூலம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் போது தான், இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு மூன்று கோடி வரையிலாக வீட்டுக்கடனுக்கு 8 மெட்ரோ நகரங்களில், 10 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்கப்பட்டும் வந்தது. இதில் கூடுதலாக யோனோ ஆப் மூலம் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கோடக் மகேந்திரா வங்கியில் என்ன சலுகை?

கோடக் மகேந்திரா வங்கியினை பொறுத்த வரையில், வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 6.9% முதல் வட்டியினை பெறலாம். மற்ற வங்கியில் இருந்து கடன் தொகையை கோடக் வங்கிக்கு மாற்றினால், அவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கூட தொகையை சேமிக்க முடியும் என்கிறது இவ்வங்கி. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களுக்கு, கடனுக்கு சிறப்பு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம்?

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக்கடன் விகிதத்தில் 15 அடிப்படை புள்ளிகள் குறைத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்து இருந்தது. இது ஒவர்நைட் MCLR விகிதம் 6.65% ஆகவும், 1 மாதம் எம்சிஎல்ஆர் விகிதம், 7.10% ஆகவும், 3 மாதங்களுக்கு 7.25% ஆகவும், இதே 6 மாதங்களுக்கு 7.35% ஆகவும், 1 வருடத்திற்கு 7.50% ஆகவும் வழங்கப்படுகிறது.

யூனியன் வங்கியில் எவ்வளவு வட்டி?

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 30 லட்சம் மேலான வீட்டுக்கடனுக்கு 10 அடிப்படை புள்ளிகளை இவ்வங்கி குறைந்துள்ளது. இதில் பெண் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக, கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பு செய்யப்படும் எனவும் இவ்வங்கி அறிவித்துள்ளது. வீட்டுக் கடன்களுக்கு யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 7%ல் இருந்து ஆரம்பிக்கிறது. அதோடு செயலாக்க கட்டணம் என்பது டிசம்பர் 31 வரையில் கிடையாது எனவும் அறிவித்துள்ளது.

தனியார் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு?

ஆக்ஸிஸ் வங்கியினை பொறுத்த வரையில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 6.9%இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதே போல ஹெச்டிஎஃப்சியிலும் வாடிக்கையாளார்களுக்கு வருடத்திற்கு 6.9% வட்டி விகிதத்தில் இருந்து கிடைக்கும். இவ்வங்கி கடன் தொகையில் 0.5% செயலாக்க கட்டணமாக வசூலிக்கிறது. இந்த கட்டணம் ரூ.3,000 வரை இருக்கலாம். இதே போல ஐசிஐசிஐ வங்கியிலும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.95% முதல் ஆரம்பிக்கிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...