கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Gemini லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Gemini லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Google Gemini AIல் HLB Map உருவாக்க Prompt



 Google Gemini AIல் HLB Map உருவாக்க Prompt 


In Google Gemini AI 


HLB Map upload செய்துவிட்டு கீழே உள்ள Promptஐ, Copy & Paste செய்யவும்.


Based on this photo, Create a clear visual HLB area map for building enumeration / census work.


 Rules: 


- Start from the north - west corner. Movement direction should continue towards South - East. Show every house clearly in separate boxes.  Number all houses sequentially. - Clearly mark streets, lanes, roads, and entry points. - The enumeration path must be continuous and easy to follow. No house should overlap with another.  - Add a North direction arrow. -Create the map in a professional census. -  Style HLB format  - Make all roads and lanes clearly visible. - The final map should be clean, organised and easy to read.



பதிவேற்றம் செய்யும் புகைப்படம் தெளிவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் 


Googlebook குறித்த தகவல்கள்

 


Googlebook குறித்த தகவல்கள் 


கூகுள்புக். இது ஒரு லேப்டாப். பெயரிலிருந்தே கூகுளின் தயாரிப்பு என்று அறிந்துகொண்டிருப்பீர்கள். 


அண்மையில் ஆண்ட்ராய்ட் விழா ஒன்றை கூகுள் நடத்தியது. ஆண்ட்ராய்டில் வரவிருக்கும் புதிய வசதிகளைப் பட்டியலிட்டது. 


ஐஃபோன்காரர்களின் கூடுதல் சாபத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது ஆண்ட்ராய்ட் ஈக்கோசிஸ்டத்தில் இருக்கும் வசதிகள் ஐஃபோனுக்கு வந்து சேரவே பல்லாண்டுகள் ஆகும். 


இவ்விழாவை ஒட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் கூகுள்புக். 'கூகுள் புக்ஸ்' அல்ல. 


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிளவுட் தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தது. அப்போது கூகுள் 'குரோம்புக்' என்று ஒரு கருவியை அறிமுகப்படுத்தியது. குரோம் பிரவுசர் தான் இதில் மூலவர். மற்றவை அனைத்துமே 'மேகமாய் வந்து போகிறாய்' என்று கிளவுட் மயம். 


இப்போதும் கிளவுட் உள்ளது. ஆனால் அதைவிடப் பரபரப்பாகப் பேசப்படுவது ஏஐ. செய்யறிவு. இந்த ஏஐயுகத்தில் அவதரிக்கும் கூகுளின் புதிய லேப்டாப் கூகுள்புக். 


இதில் அனைத்துமே ஜெமினி மயம். இப்போது 'ஜெமினி இன்டெலிஜென்ஸ்' என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் நினைவுக்கு வரலாம். அதிலேயே இப்போது ஜெமினி தான் உள்ளது என்றறிக. 


ஒரு காலத்தில் ஏஐ சாட் பாட்டாக இருந்தது. பின்னர் ஏஜென்ட் என்று உருமாறியது. இப்போது ஆபரேட்டிங் சிஸ்டமே ஏஐ. கூடாரம்-ஒட்டகம் என்றொரு கதை படித்திருப்பீர்கள். இங்கு கூடாரம் டிஜிட்டல் உலகம். ஒட்டகம் ஏஐ. 


இதுவரை நாம் பணியாற்றிவந்த விதமே மாறவிருக்கிறது என்கிறது கூகுள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்னும் நிலைகூட மாறலாம். என்ன வேண்டுமோ ஏஐயிடம் கேட்டுப்பாருங்கள். அது இல்லை என்று சொல்லுவதில்லை. 


ஆண்ட்ராய்ட், குரோம், ஜெமினி என அனைத்தையும் சரியான விகிதத்தில் மிக்ஸ் செய்துள்ளது கூகுள். 


மேஜிக் கர்சர் - கூகுள்புக்கில் அறிமுகமாகவிருக்கும் அதிமுக்கிய அம்சம். அதாவது கர்சர் இருக்குமிடமெல்லாம் ஏஐ. 


மவுஸ் பாயிண்ட்டர் என்பது யூஸர் இண்டர்ஃபேஸ் வரலாற்றில் மிக முக்கியக் கண்டுபிடிப்பு. அதில் நவீனம் என்று எதுவுமே வரவில்லை. 


கடைசியாக 'ரைட் கிளிக்' என்று ஒன்று வந்தது. அதை வைத்து நம் விண்டோஸ்காரர்கள் 'ரெஃப்ரெஷ்' செய்து செய்து புளகாங்கிதம் அடைந்தனர். இதைத் தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை பாருங்கள். 



கூகுள் இதை மாற்றவிருக்கிறது. மவுஸ் பாயிண்ட்டர் எங்குள்ளதோ அதுவே காண்டெக்ஸ்ட். ஓர் உதாரணம். ஒரு  அறையின் படம். இன்னொன்றில் ஒரு சோஃபா. இரண்டையும் இணைக்கவேண்டும் என்றால் மேஜிக் பாயிண்ட்டரே போதும். 


நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ளும். மவுஸ் பாயிண்ட்டரை நகர்த்தியே நமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். 


அதாவது தனித்தனியாகப் ப்ராம்ப்ட்கள் எழுதத் தேவையில்லை. 


'குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினில் யாது கொடுத்தும் கொளல்'. 

இந்த வரி புரியலயே என்றால் திருவள்ளுவரைத் தான் கேட்க வேண்டும். 


நாம் விரும்புவதை வெளிப்படையாகச் சொல்லாமலேயே  புரிந்துகொள்பவரை எந்த விலை கொடுத்தும் உடன் வைத்துக்கொள் என்கிறார். 

மேஜிக் பாயிண்ட்டர் கூட வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்புணர்கிறது.


இந்த லேப்டாப் மிகச் சிறந்த ஹார்ட்வேர்களுடன் வரவிருக்கிறது. இன்டெல் நிறுவனமும் இதில் இணைகிறது. அவர்களுக்கும் இது மறுவாழ்வு தரும் என்று நம்புவோம். 


இக்கருவியைச் செய்வதற்காக அஸுஸ், டெல், ஹெச்பி, லெனோவா என்றொரு பெரிய கூட்டணியை அமைக்கிறது கூகுள். 


கூகுள்புக்கின் சில படங்களை  வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.



லேப்டாப்பைப் பார்த்தவுடனேயே இது கூகுள்புக் என்று தெரிந்துவிடும். இதற்கென glowbar என்னும் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றனர். இது வெறுமனே ஜிகுனா வேலைமட்டும் அல்ல. பயனாளர்களுக்குப் பலவகைகளிலும் உதவும். 


லுக் ஒகே. செயல்திறனும் நன்றாக இருந்தால் கூகுள்புக் மிகப் பெரிய வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 


அண்மையில் 'நியோ' என்றொரு மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் பலராலும் ஏளனம் செய்யப்பட்டது. ஆனால் இன்று மார்க்கெட்டில் பரபரப்பாக விற்கும் லேப்டாப் மேக்புக் நியோ தான்.  


கூகுள்புக் நியோவை முந்திச்செல்லுமா? காத்திருப்போம்.


கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prompt

 


கீறல்கள், மடிப்புகள், கறைகள், நிறமாற்றம் அடைந்த பழைய புகைப்படத்தை, துல்லியமான மறுகட்டமைப்புடன் புதிதாய் மீட்டுக் கொடுக்கும் Gemini AI Prompt 


Old Image Restoration Vivid Colourful ✨


Use Google Gemini AI 📸 


Prompt ⤵️ 


Restore and enhance this photograph to professional portrait quality comparable to a Canon EOS R5 capture. Repair all scratches, folds, stains, discoloration, and missing details with high-precision reconstruction while preserving the subject's natural Filipino facial features, skin texture, and lighting. Vivid Colourful.




>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும...