கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IIT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
IIT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் இலவச AI படிப்பு ; சென்னை IIT வழங்கும் வாய்ப்பு



ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் இலவச AI படிப்பு ; சென்னை ஐஐடி வழங்கும் வாய்ப்பு


தற்கால நவீன தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு என்பதை தவிர்க்க முடியாது. கல்வி, மருத்துவம், தொழில் என பல துறைகளில் ஏஐ பயன்பாடு வந்துவிட்டது. எதிர்கால தேவைக்கு ஏற்ப, மாணவர்களுக்கான கற்பித்தல் முறையில் ஏஐ பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏஐ பயன்பாட்டு பயிற்சியை சென்னை ஐஐடி இலவசமாக வழங்குகிறது. 


மத்திய கல்வித்துறையின் கீழ் ஸ்வயம் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியான கல்வி வழங்கப்படுகிறது. இதில் சென்னை ஐஐடி பல்வேறு விதமான படிப்புகள் வழங்கி வருகிறது. இதில் சென்னை ஐஐடி-யின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மூலம் ஏற்கனவே 5 விதமான ஏஐ படிப்புகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான புதிய “AI for Educators” என்ற படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.


செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி என்பது வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக கல்வியில் இதன் பயன்பாடு முக்கியமானதாக உள்ளது. விரைவாக தேடுதல், பதில்களை முறையாக வகுத்தல், வீட்டு பாடம் செய்ய உதவுதல் உள்ளிட்ட சிறிய பணி முதல் பெரியளவிலான பணி வரை ஏஐ மூலம் செய்ய முடிகிறது. 


இதனைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஏஐ என்ற திட்டத்தை சென்னை ஐஐடி செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறையின் ஸ்வயம் 2.0 கீழ், பைத்தானில் ஏஐ, கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் ஏஐ, இயற்பியலில் ஏஐ, வேதியியலில் ஏஐ, கணக்கியலில் ஏஐ ஆகிய 5 ஏஐ படிப்புகளை சென்னை ஐஐடி இலவசமாக வழங்குகிறது. தற்போது இதற்கான இரண்டாம் சுற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.


பல்வேறு துறைகளில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட தொடங்கிய நிலையில், கற்பிக்கும் முறையிலும் இதன் தேவை அவசியமாக உள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவை கற்பித்தலில் முறையாக எப்படி பயன்படுத்துவது என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு சென்னை ஐஐடி ”AI for Educators” என புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் குறுகியக் கால படிப்புகள் ஆகும். ஆன்லைன் வழியாக இலவசமாக படிக்கலாம்.


ஆசிரியர் பணியை செய்பவர்கள், ஆசிரியராக விரும்புகிறவர்கள் இந்த படிப்பின் மூலம் பயன்பெறலாம். செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதல், கருவிகள் மற்றும் செயல்முறை திறன் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல், மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏஐ பயன்பாடு குறித்து கற்பிக்கப்படும். மாணவர்கள் சார்ந்த கற்கும் முறையின் அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் குறித்த தெளிவை இந்த படிப்பு ஏற்படுத்தி தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நர்சரி வகுப்பு ஆசிரியர்கள் முதல் 12-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை இதில் கலந்துகொள்ளலாம்.


ஆங்கில மொழியில் அதிகபடியாக 40 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம் சென்னை ஐஐடி நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கிரெட்டி வழங்கப்படும். முழுமையாக முடித்து தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


நன்மைகள் என்னென்ன?


விரும்பிய நேரத்தில் வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் வழியாக படிக்கலாம்.

நடைமுறை பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

வார மதிப்பீடு தேர்வுகள், நோட்ஸ் வழங்கப்படும்.

வீடியோ வடிவில் வகுப்புகளை பார்க்கலாம்.

குறைந்த கட்டணத்தில் தேர்வு நடத்தப்படும்.

தேர்வை நேரடியாக ஒதுக்கப்பட்ட மையத்தில் சென்று எழுத வேண்டும்.

தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


ஆசிரியர்களுக்கான ஏஐ மட்டுமின்றி, சென்னை ஐஐடி மூலம் வழங்கப்படும் இதர ஏஐ படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தில் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு, வகுப்பு ஆகியவை இலவசமாகும். சான்றிதழ் பெற தேர்விற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் இந்த படிப்பு மூலம் பயன்பெறலாம்.


ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30



 ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30


1. ஐஐடி மெட்ராஸ், அதன் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மூலம், ஸ்வயம் பிளஸ் தளம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் AI படிப்புகளை வழங்குகிறது.  

2. 25 முதல் 45 மணிநேரம் வரையிலான இந்தப் படிப்புகள், கற்பித்தல், மதிப்பீடு மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு அத்தியாவசிய AI அறிவு மற்றும் நடைமுறைக் கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  

3. இந்தப் படிப்புகள் இலவசம் என்றாலும், சான்றிதழ் பெற விரும்பும் ஆசிரியர்கள் தேர்வெழுதி, ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதைப் பெறலாம்.  

4. ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அக்டோபர் 10 ஆம் தேதி வரை https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses இல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் .


குருகுலத்தில் பாரம்பரியக் கல்வி பயின்றோர் IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஒன்றிய அரசு புதிய திட்டம்


 குருகுலத்தில் பாரம்பரியக் கல்வி பயின்றோர் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஒன்றிய அரசு புதிய திட்டம்


* குருகுலத்தில் பாரம்பரியக் கல்வி பயின்றோருக்கு ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஒன்றிய அரசு புதிய திட்டம்


* குருகுலம் டூ IIT - ஒன்றிய அரசு புதிய திட்டம்


*▪️. முறையான பட்டப் படிப்பு இல்லையென்றாலும், பாரம்பரிய குருகுலங்களில் படித்தவர்கள் IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் புதிய திட்டம்


*▪️ 'சேதுபந்த வித்வான் யோஜனா' என்ற பெயரிலான இத்திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாதம் ரூ.65,000 வரை உதவித்தொகை கிடைக்கும்.


*மேலும் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை ஆய்வு உதவித் தொகையும் வழங்கப்படும் எனத் தகவல்


India's Ministry of Education launched Setubandha Vidwan Yojana in late July 2025. It allows gurukul scholars (5+ years training, no formal degree, age ≤32) to pursue PG/PhD research at IITs in 18 fields, with fellowships up to ₹65,000/month and grants to ₹2 lakh. Confirmed via Times of India, NDTV, Economic Times. No evidence of hoax.


இந்திய கல்வி அமைச்சகம் ஜூலை 2025 இன் பிற்பகுதியில் சேதுபந்த வித்வான் யோஜனாவை அறிமுகப்படுத்தியது. இது குருகுல அறிஞர்கள் (5+ ஆண்டுகள் பயிற்சி, முறையான பட்டம் இல்லை, வயது ≤32) ஐஐடிகளில் 18 துறைகளில் முதுகலை/முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர அனுமதிக்கிறது, மாதம் ₹65,000 வரை பெல்லோஷிப்களும் ₹2 லட்சம் வரை மானியங்களும் வழங்கப்படுகின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி, எகனாமிக் டைம்ஸ் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 



சென்னை IITயில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்படுவதை உறுதி செய்யுமாறு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம்(Letter from the Minister of Higher Education Thiru.Ponmudy to ensure that "Tamilthai Vazhthu" is sung at all events including the Graduation Ceremony at IIT Chennai from now on)...

 சென்னை IITயில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் அனுப்பியுள்ளார்.



தமிழகத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை...

 ஐஐடி சென்னையில் பயிலும் மாணவர்களுக்குக் கரோனா தொற்று  பரவியுள்ளதைக் கண்டறிந்ததால், மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும் எனச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இன்று (17-ம் தேதி) சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு தொண்டைப் பிரிவு, பிரசவ வார்டு, கேன்டீன்களில் ஆய்வு செய்தார்.

கேன்டீனில் மக்கள் கூட்டமாகவும், முகக்கவசம் அணியாமல் இருந்ததையும் பார்வையிட்ட ராதாகிருஷ்ணன், அனைவரும் முகக்கவசம் அணியவும், கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

''கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் குறித்து மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. தினமும் 75 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில், கரோனா தொற்று  எண்ணிக்கை ஆயிரத்து 100 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளது.

2 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்வதில், பத்து முதல் 20 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதியாகிறது. சேலத்தில் இதுவரை 767 பேருக்குக் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளித்துவந்த நிலையில், தற்போது, 83 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்று  உயிரிழப்பு ஒரு சதவீதமாக உள்ளது. கரோனா பாதிப்பு இரண்டு சதவீதமாக உள்ளது. இதனைப் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விடுதிகள், கேன்டீன்கள், மேன்ஷன்கள், மெஸ்களில் மாணவ, மாணவியர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

மூடிய அறையில் 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது. முகக்கவசம் அணிவதைக் கைவிடக்கூடாது. தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வரும்வரை களப்பணியாளர்கள் உள்பட அனைவரும் கரோனா தொற்று  விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்குக் கரோனா தொற்று  கண்டறியப்பட்டதை அடுத்து, இரண்டு பிளாக்கில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவ, மாணவியர்கள் கல்லூரிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே, மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும். அதனால், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. பல கல்லூரிகளில் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதனை மாணவர்கள் பின்பற்றலாம்.

கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளவர்களுக்கு மனநல பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்தால், உடனடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''

இவ்வாறு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த ஆய்வுப் பணியில் டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் தனபால், சேலம் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன இயக்குனர் பூங்கொடி மற்றும் மருத்துவக் கல்லூரித் துறைத் தலைவர்கள் சுமதி, சுரேஷ்கண்ணா, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

 


ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐ.ஐ.டி./ஜே.இ.இ. போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் நெக்ஸ்ட்ஜென் வித்யா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரவ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும் உடன் இருந்தனர்.

இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப கல்வியை சேர்ந்த ஐ.ஐ.டி./ ஜே.இ.இ. உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தனியாக லாக்-இன் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். இதற்கான பதிவு வருகிற 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், பயிற்சி வகுப்புகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கும். 

http://play.google.com/store/apps/details?id=com.vidhyaeducation.android

என்ற முகவரியில் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...