கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Legislative Assembly லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Legislative Assembly லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18-11-2023 காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அவர்கள் (Tamil Nadu Special Assembly Meeting on 18-11-2023 at 10 AM - Speaker Appavu)...


18-11-2023 காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அவர்கள் (Tamil Nadu Special Assembly Meeting on 18-11-2023 at 10 AM - Speaker Appavu)...


வரும் சனிக்கிழமை 18-11-2023 காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அப்பாவு.


ஆளுநர் திருப்பிய அனுப்பிய 10 மசோதாக்களும் திருத்தமின்றி மீண்டும் நிறைவேற்றப்படும்.


சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆனது. இறையாண்மை உள்ளது. மக்களின் கருத்துக்களை தான் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம் - சபாநாயகர் அப்பாவு.


தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் - மாவட்டஙகள் வாரியாக (TamilNadu Legislative Assembly Constituencies - District wise)...


 தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் - மாவட்டஙகள் வாரியாக (TamilNadu Legislative Assembly Constituencies - District wise)...


_1.திருவள்ளூர் மாவட்டம்_

    🏛கும்மிடிப்பூண்டி

    🏛பொன்னேரி

    🏛திருத்தணி

    🏛திருவள்ளூர்

    🏛பூந்தமல்லி

    🏛ஆவடி


_2.சென்னை மாநகரம்_

    🏛மதுரவாயல்

    🏛அம்பத்தூர்

    🏛மாதவரம்

    🏛திருவொற்றியூர்

    🏛ராதாகிருஷ்ணன் நகர்

    🏛பெரம்பூர்

    🏛கொளத்தூர்

    🏛வில்லிவாக்கம்

    🏛திரு. வி. க நகர்

    🏛எழும்பூர்

    🏛ராயபுரம்

    🏛துறைமுகம்

    🏛சேப்பாக்கம்

    🏛ஆயிரம் விளக்கு

    🏛அண்ணா நகர்

    🏛விருகம்பாக்கம்

    🏛சைதாப்பேட்டை

    🏛தி நகர்

    🏛மயிலாப்பூர்

    🏛வேளச்சேரி

    🏛ஆலந்தூர்


_3.செங்கல்பட்டு மாவட்டம்_

    🏛சோழிங்கநல்லூர்

    🏛பல்லாவரம்

    🏛தாம்பரம்

    🏛செங்கல்பட்டு

    🏛திருப்போரூர்

    🏛செய்யூர்

    🏛மதுராந்தகம்


_4.காஞ்சிபுரம் மாவட்டம்_

    🏛திருப்பெரும்புதூர்

    🏛உத்திரமேரூர்

    🏛காஞ்சிபுரம்


_5.ராணிப்பேட்டை மாவட்டம்_

    🏛அரக்கோணம்

    🏛சோளிங்கர்

    🏛ராணிப்பேட்டை

    🏛ஆற்காடு


_6.வேலூர் மாவட்டம்_

    🏛காட்பாடி

    🏛வேலூர்

    🏛அணைக்கட்டு

    🏛கீழ்வைத்தியணான்குப்பம்

    🏛குடியாத்தம்


_7.திருப்பத்தூர் மாவட்டம்_

    🏛வாணியம்பாடி

    🏛ஆம்பூர்

    🏛ஜோலார்பேட்டை

    🏛திருப்பத்தூர்


_8.கிருஷ்ணகிரி மாவட்டம்_

    🏛ஊத்தங்கரை

    🏛பர்கூர்

    🏛கிருஷ்ணகிரி

    🏛வேப்பனஹள்ளி

    🏛ஓசூர்

    🏛தளி


_9.தர்மபுரி மாவட்டம்_

    🏛பாலக்கோடு

    🏛பென்னாகரம்

    🏛தர்மபுரி

    🏛பாப்பிரெட்டிப்பட்டி

    🏛அரூர்


_10.திருவண்ணாமலை மாவட்டம்_

    🏛செங்கம்

    🏛திருவண்ணாமலை

    🏛கீழ்பென்னாத்தூர்

    🏛கலசபாக்கம்

    🏛போளூர்

    🏛ஆரணி

    🏛செய்யாறு

    🏛வந்தவாசி


_11.விழுப்புரம் மாவட்டம்_

    🏛செஞ்சி

    🏛மயிலம்

    🏛திண்டிவனம்

    🏛வானூர்

    🏛விழுப்புரம்

    🏛விக்கிரவாண்டி


_12.கள்ளக்குறிச்சி மாவட்டம்_

    🏛திருக்கோயிலூர்

    🏛உளுந்தூர்பேட்டை

    🏛ரிஷிவந்தியம்

    🏛சங்கராபுரம்

    🏛கள்ளக்குறிச்சி


_13.சேலம் மாவட்டம்_

    🏛கங்கவள்ளி

    🏛ஆத்தூர்

    🏛ஏற்காடு

    🏛ஓமலூர்

    🏛மேட்டூர்

    🏛எடப்பாடி

    🏛சங்ககிரி

    🏛மேற்கு சேலம்

    🏛வடக்கு சேலம்

    🏛தெற்கு சேலம்

    🏛வீரபாண்டி


_14.நாமக்கல் மாவட்டம்_

    🏛ராசிபுரம்

    🏛சேந்தமங்கலம்

    🏛நாமக்கல்

    🏛பரமத்தி வேலூர்

    🏛திருச்செங்கோடு

    🏛குமாரபாளையம்


_15.ஈரோடு மாவட்டம்_

    🏛கிழக்கு ஈரோடு

    🏛மேற்கு ஈரோடு

    🏛மொடக்குறிச்சி

    🏛பெருந்துறை

    🏛பவானி

    🏛அந்தியூர்

    🏛கோபிசெட்டிபாளையம்

    🏛பவானிசாகர்


_16.திருப்பூர் மாவட்டம்_

    🏛தாராபுரம்

    🏛காங்கேயம்

    🏛அவிநாசி

    🏛வடக்கு திருப்பூர்

    🏛தெற்கு திருப்பூர்

    🏛பல்லடம்

    🏛உடுமலைப்பேட்டை

    🏛மடத்துக்குளம்


_17.நீலகிரி மாவட்டம்_

    🏛உதகமண்டலம்

    🏛கூடலூர்

    🏛குன்னூர்


_18.கோயம்புத்தூர் மாவட்டம்_

    🏛மேட்டுப்பாளையம்

    🏛சூலூர்

    🏛கவுண்டம்பாளையம்

    🏛வடக்கு கோயம்புத்தூர்

    🏛தொண்டாமுத்தூர்

    🏛தெற்கு கோயம்புத்தூர்

    🏛சிங்காநல்லூர்

    🏛கிணத்துக்கடவு

    🏛பொள்ளாச்சி

    🏛வால்பாறை


_19.திண்டுக்கல் மாவட்டம்_

    🏛பழநி

    🏛ஒட்டன்சத்திரம்

    🏛ஆத்தூர்

    🏛நிலக்கோட்டை

    🏛நத்தம்

    🏛திண்டுக்கல்

    🏛வேடசந்தூர்


_20.கரூர் மாவட்டம்_

    🏛அரவக்குறிச்சி

    🏛கரூர்

    🏛கிருஷ்ணராயபுரம்

    🏛குளித்தலை


_21.திருச்சிராப்பள்ளி மாவட்டம்_

    🏛மணப்பாறை

    🏛ஸ்ரீரங்கம்

    🏛மேற்கு திருச்சி

    🏛கிழக்கு திருச்சி

    🏛திருவெறும்பூர்

    🏛லால்குடி

    🏛மண்ணச்சநல்லூர்

    🏛முசிறி

    🏛துறையூர்


_22.பெரம்பலூர் மாவட்டம்_

    🏛பெரம்பலூர்

    🏛குன்னம்


_23.அரியலூர் மாவட்டம்_

    🏛அரியலூர்

    🏛ஜெயங்கொண்டம்


_24.கடலூர் மாவட்டம்_

    🏛திட்டக்குடி

    🏛விருத்தாசலம்

    🏛நெய்வேலி

    🏛பண்ருட்டி

    🏛கடலூர்

    🏛குறிஞ்சிப்பாடி

    🏛புவனகிரி

    🏛சிதம்பரம்

    🏛காட்டுமன்னார்கோயில்

    

_25.நாகப்பட்டினம் மாவட்டம்_

    🏛சீர்காழி

    🏛மயிலாடுதுறை

    🏛பூம்புகார்

    🏛நாகப்பட்டினம்

    🏛கீழ்வேளூர்

    🏛வேதாரண்யம்

    

_26.திருவாரூர் மாவட்டம்_

    🏛திருத்துறைப்பூண்டி

    🏛மன்னார்குடி

    🏛திருவாரூர்

    🏛நன்னிலம்

    

_27.தஞ்சாவூர் மாவட்டம்_

    🏛திருவிடைமருதூர்

    🏛கும்பகோணம்

    🏛பாபநாசம்

    🏛திருவையாறு

    🏛தஞ்சாவூர்

    🏛ஒரத்தநாடு

    🏛பட்டுக்கோட்டை

    🏛பேராவூரணி


_28.புதுக்கோட்டை மாவட்டம்_

    🏛கந்தர்வகோட்டை

    🏛விராலிமலை

    🏛புதுக்கோட்டை

    🏛திருமயம்

    🏛ஆலங்குடி

    🏛அறந்தாங்கி


_29.சிவகங்கை மாவட்டம்_

    🏛காரைக்குடி

    🏛திருப்பத்தூர்

    🏛சிவகங்கை

    🏛மானாமதுரை


_30.மதுரை மாவட்டம்_

    🏛மேலூர்

    🏛கிழக்கு மதுரை

    🏛சோழவந்தான்

    🏛வடக்கு மதுரை

    🏛தெற்கு மதுரை

    🏛மத்திய மதுரை

    🏛மேற்கு மதுரை

    🏛திருப்பரங்குன்றம்

    🏛திருமங்கலம்

    🏛உசிலம்பட்டி

    

_31.தேனி மாவட்டம்_

    🏛ஆண்டிபட்டி

    🏛பெரியகுளம்

    🏛போடிநாயக்கனூர்

    🏛கம்பம்


_32.விருதுநகர் மாவட்டம்_

    🏛ராஜபாளையம்

    🏛திருவில்லிபுத்தூர்

    🏛சாத்தூர்

    🏛சிவகாசி

    🏛விருதுநகர்

    🏛அருப்புக்கோட்டை

    🏛திருச்சுழி


_33.ராமநாதபுரம் மாவட்டம்_

    🏛பரமக்குடி

    🏛திருவாடானை

    🏛ராமநாதபுரம்

    🏛முதுகுளத்தூர்


_34.தூத்துக்குடி மாவட்டம்_

    🏛விளாத்திகுளம்

    🏛தூத்துக்குடி

    🏛திருச்செந்தூர்

    🏛ஸ்ரீவைகுண்டம்

    🏛ஒட்டப்பிடாரம்

    🏛கோவில்பட்டி


_35.தென்காசி மாவட்டம்_

    🏛சங்கரன்கோவில்

    🏛வாசுதேவநல்லூர்

    🏛கடையநல்லூர்

    🏛தென்காசி

    🏛ஆலங்குளம்


_36.திருநெல்வேலி மாவட்டம்_

    🏛திருநெல்வேலி

    🏛அம்பாசமுத்திரம்

    🏛பாளையங்கோட்டை

    🏛நாங்குநேரி

    🏛ராதாபுரம்


_37.கன்னியாகுமரி மாவட்டம்_

    🏛கன்னியாகுமரி

    🏛நாகர்கோவில்

    🏛குளச்சல்

    🏛பத்மநாபபுரம்

    🏛விளவங்கோடு

    🏛கிள்ளியூர்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை கூட்டத் தொடர் 13-08-2021முதல் 21-09-2021 வரை நடைபெறுகிறது...



 தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடக்கம்...


தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை கூட்டத் தொடர் 13-08-2021முதல் 21-09-2021 வரை நடைபெறுகிறது...


💥 உயர் கல்வித் துறை& பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை - 27-8-2021 (வெள்ளிக்கிழமை)...


>>> சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் - மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம்...



தமிழ்நாடு 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் -ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையின் முழு விவரம்...

 


தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.


சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.


முன்னதாக பேரவைக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர்.



இதன் பிறகு தமிழில் பேசி தமது உரையை ஆளுநர் புரோஹித் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார்.


அப்போது அவர் பேசியதாவது, தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கை வாழுங்கள். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.


தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டுவரப்படும். அதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படும்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்


தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்


கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 


கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். 



மாவட்டம் தோறும் பணிபுரியும் மகளிருக்காக விடுதிகள் அமைக்கப்படும்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை திட்டம் மீண்டும் உருவாக்கப்படும். தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.


மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும்.



தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவோம்.


மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை  மாநகராட்யின் எல்லை விரிவாக்கப்படும்.


தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து ஜூலை  மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்-ஆளுநர். 

100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்-ஆளுநர்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

விவசாயிகள் நலனை பாதுகாக்க,  வேளாண் உற்பத்தியை பெருக்க,   ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்; மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரியவரும்.




ரூ2.10 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ4,000 வழங்கப்பட்டுள்ளது.

கிங் ஆராய்ச்சி வளாகத்தில் ரூ250 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை.

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மீதான புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் வழங்குவோம்.

கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு.

தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை- ஆளுநர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் 63,500 மனுக்கள் மீது தீர்வு.

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்- ஆளுநர் பன்வாரிலால்.
சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த 'சிங்கார சென்னை 2.0' திட்டம் கொண்டுவரப்படும்-ஆளுநர் உரை.

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.



தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்;  அதை இந்த அரசு உறுதி செய்யும்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை.

காவிரி- குண்டாறு உள்ளிட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்துவோம்.

அரசின் மேற்ப்பார்வையில் கிராமப்புற சந்தைகள், வாகனங்களில் காய்கறி விற்பனை செய்தல் விரிவாக்கம் செய்யப்படும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்-ஆளுநர் பன்வாரிலால்புரோகித்.


கொரோனா தொற்று தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-ஆளுநர் உரை.

மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்.

திருநங்கைகளின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும்  ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.






புதிய ரேசன் அட்டை விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

மதுரையில் ரூ70 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க அரசு உறுதியாக உள்ளது.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பெரிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- ஆளுநர் பன்வாரிலால்.



பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஆளுநரை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர். ஆளுநா் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தது வருகிறார். அதன் பிறகு, அதனை தமிழில் பேரவைத் தலைவா் அப்பாவு வாசிப்பாா்.



கூட்டத் தொடா்: ஆளுநா் உரை நிறைவடைந்ததும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்கள் இறுதி செய்யப்படும். செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) வரை கூட்டத் தொடா் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.



இந்த கூட்டத் தொடரில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது பேரவை உறுப்பினா்கள் உரையாற்றுவா். பேரவையில் உள்ள கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்று, அவையில் உறுப்பினா்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.



16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் என்பதால், கேள்வி நேரம் நடைபெற வாய்ப்பில்லை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். உறுப்பினா்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதனை துறைகளுக்கு அனுப்பி பதில்களைப் பெற காலம் தேவைப்படுவதால், கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என அவா் கூறியிருந்தாா். எனவே, தினமும் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியதுமே ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களே நடைபெறும்.


முக்கிய பிரச்னைகளில் தீா்மானம்: 

தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடா்பாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சி, நீட் தோ்வு, ஏழு போ் விடுதலை, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசால் தீா்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்தத் தீா்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளன.





>>> தமிழ்நாடு 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் - ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையின் முழு விவரம்...


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது...


🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

ஆளுநர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் - சபாநாயகர்...

 சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சபாநாயகர் அப்பாவு.

எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து சட்டமன்ற கூட்டம் நடைபெறும்.

சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் அறிவிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு...









16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிப்பு...

 தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மே 11-ல் தொடங்குகிறது.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.


மே 11-ந் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.


மே 12-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் நடைபெறும்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...