கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

துறை தேர்வுக்கான முடிவுகள் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது...



 2021 - ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு...



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை- II , தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018 , பணிக்கான நேர்முகத் தேர்வு , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது . மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் . 



> அறிவிக்கை எண் 18/2019 , நாள் 29.05.2019 - இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் , 2008-2019 , 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் ( மின்சாரம் ) ( பொதுப் பணித் துறை ) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு ( Counselling ) தேதியும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் . 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் , மே -2021 தள்ளி வைக்கப்படுகிறது , மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும்.



விண்ணப்பதாரர்களின் நலன் கருதி , துறைத் தேர்வுகள் , மே - 2021 - க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது , இத்தேர்வானது ஆகஸ்டு 2021 ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணைய செய்தி வெளியீடு எண்: 20/ 2021, நாள்: 29-05-2021...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்

  இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ள...