கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியக் குழுவின் அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை : முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு

 



ஓய்வூதியக் குழுவின் அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை : முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு - நாளிதழ் செய்தி 


ஓய்​வூ​தியக் குழு​வின் இடைக்​கால அறிக்கை தொடர்பாக அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, அன்​பில் மகேஸ் ஆகியோர் முக்கிய ஆலோ​சனை நடத்​தினர் என கூறப்படுகிறது.


பழைய ஓய்​வூ​தி​யம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யம், ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யம் ஆகிய 3 விதமான ஓய்​வூ​தி​யத் திட்​டங்கள் குறித்து விரிவாக ஆராய ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு கடந்த பிப்​ர​வரி​யில் ஒரு குழு அமைத்​தது.


அரசு ஊழியர், ஆசிரியர் சங்​கங்​களின் நிர்வாகி​களை சந்​தித்து அவர்​களது கருத்துகள், ஆலோ​சனை​களைப் பெற்ற இந்த குழு, கடந்த செப்டம்பர் ​30ஆம் தேதி இடைக்கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்​கையை டிசம்​பர் இறு​திக்​குள் சமர்ப்பிக்க குழு​வுக்கு கூடு​தல் அவகாசம் தரப்​பட்​டுள்​ளது.


இதற்​கிடையே, அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ, திமுக​வின் பிர​தான தேர்தல் வாக்குறுதி​யான பழைய ஓய்​வூ​தி​யத் திட்ட கோரிக்​கையை நிறைவேற்​றக் கோரி ஜனவரி 6 முதல் கால​வரையற்ற வேலை நிறுத்தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக அறிவித்துள்​ளது.


இந்தச் சூழலில், ககன்​தீப் சிங் பேடி குழு​வின் இடைக்​கால அறிக்கை பரிந்​துரைகள் தொடர்பாக அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, அன்​பில் மகேஸ் ஆகியோர் நேற்று முன்தினம் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். இதில் பல சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரி​கிறது. எனவே, ஓய்வூதிய திட்​டம் தொடர்​பாக விரை​வில் முக்கிய அறி​விப்பு வெளி​யாகலாம் என எதிர்பார்க்​கப்​படுகிறது.


Sweatshirts for Men | Unisex Hoodie | Hoodie |Available in Plus Size 


https://amzn.to/4oYLwPn





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...