கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அன்புக் கரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புக் கரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு "அன்புக் கரங்கள் திட்டம்" செயல்படுத்துதல் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 3 அரசாணைகள் வெளியீடு



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு "அன்புக் கரங்கள் திட்டம்" செயல்படுத்துதல் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 3 அரசாணைகள் வெளியீடு


1. அரசாணை (நிலை) எண்: 78, நாள் : 17-07-2025


2. அரசாணை (நிலை) எண்: 91, நாள் : 09-09-2025


3. அரசாணை (ப) எண்: 218, நாள் : 09-09-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அன்புக் கரங்கள் திட்டம் - வழிகாட்டி புத்தகம் வெளியீடு



அன்புக் கரங்கள் திட்டம் - வழிகாட்டி புத்தகம் வெளியீடு



Anbu Karangal Scheme Guide



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் - முதலமைச்சர் நாளை (15.09.2025) தொடங்கி வைக்கிறார் - தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் பட்டியல்

 


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக் கரங்கள்” திட்டம் - முதலமைச்சர் நாளை (15.09.2025) தொடங்கி வைக்கிறார் - தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் பட்டியல்


பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் “Anbu Karangal” Scheme - முதலமைச்சர் நாளை (15.09.2025) தொடங்கி வைக்கிறார்


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வணக்கம் 


முதன்மைக் கல்வி அலுவலக செய்தி 


நாளை 15/09/2025 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டுள்ள தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் துவங்கி வைக்க உள்ளதால் தங்கள் வட்டாரங்களின் தொடக்க  மற்றும் நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு மாணவர்களை பாதுகாப்பாக  பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் துணைக் கொண்டு  அழைத்து வந்து கலந்து கொள்ள அறிவுறுத்த அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


நன்றி


 முதன்மைக் கல்வி அலுவலர் , தஞ்சாவூர்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



>>> தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் பட்டியல் - குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கடிதம்


"அன்பு கரங்கள்" : ரூ.2000 நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை : முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள்


Monthly allowance of Rs. 2000 for children who have lost their parents : Chief Minister's "Anbu Karangal" financial support scheme - Application procedure & required documents


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" திட்டம் - செய்தி வெளியீடு 


 இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்  என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம்


அன்புக்கரங்கள் திட்டம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி பெறலாம். அதற்கு விண்ணப்பிப்பது எப்படி, என்ன ஆவணங்கள் தேவை


அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி ஆதரவுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


 மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர், மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின்  பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை  மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். 


அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டம்

இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.


இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:       


1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).


2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)


3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்


4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)


5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)


கீழ்க்காணும் ஆவணங்களுடன்,  “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்


1. குடும்ப அட்டையின் நகல்


2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்


3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)


4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.


5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். 

உள்ளிட்டவற்றை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...