கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதிவு செய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு செய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...



 வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...


 2014, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது...


>>> அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021...


2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு? (Chance to Renew Employment Office Registration ) - அமைச்சர் அறிவிப்பு...



 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ஆம் ஆண்டு ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கியும் தந்தார் எனவும், அந்த பதிவை புதுப்பித்துக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுளளது எனவும் தெதெரிவித்தார்‌.


மேலும் 2014, 2015 ,2016 ஆம் ஆண்டு களுக்கும் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறியுள்ளார்கள் என்றும் உறுப்பினரின் சேர்க்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.


NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை[New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)]...



 NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை...


New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)...



தங்கள் பள்ளிகள் கட்டாயம் NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணைய முகப்பில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்..


இது தகுதியுடைய சிறுபான்மை மாணவ - மாணவிகளுக்கு படிப்புதவித் தொகையை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பி அவர்களின் கல்வி தொடர ஊக்குவிக்கும்  அரசின் உன்னதமான திட்டமாகும்.. 


இதில் Pre-metric and Post-metric என தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிபடிப்பு வரை இதன் உதவிக்கரம் நீளுகிறது...


Online மூலமே அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது.. ஆகவே மிகுந்த கவனமுடன் இதனை கையாள வேண்டும்..


புதிதாக நம் பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை:


 நம் பள்ளியின் பெயரை NSP portal லில் புதிதாக பதிவு செய்வோர்  தலைமையாசிரியரை Head of the institution ஆகவும்; மூத்த உதவியாசிரியர் அல்லது விருப்பப்படும் உதவி ஆசிரியரை Nodal officer ஆகவும் அதற்குரிய முறையான படிவத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர்  நல அலுவலகத்திற்கு சென்று அவர்கள் கூறும் வழிமுறைகள்படி NSP Portal லில் நமது பள்ளியை பதிவு செய்ய வேண்டும்.. பதிவு செய்த பிறகு நம் பள்ளிக்குரிய Password Nodal officer அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்..


அதன்பிறகு Nodal officer தான் அப்பள்ளியின் Institute verifier Officer  ஆவார்.. இது சார்ந்த அனைத்து செயல்பாட்டிற்கும் HM + Nodal officer தான் முழுப்பொறுப்பு..


 ஒருமுறை இத்தளத்தில் நம் பள்ளியை பதிவு செய்துவிட்டால் போதுமானது.


 அதன்பிறகு, ஆண்டுதோறும் school profile லில் மட்டும் Update செய்தலே போதுமானது..


NSPல் முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியது:


முன்பே பதிவு செய்திருப்போர் NSP Portal லில் உள்நுழைந்து 2021-22 ஆண்டை தேர்வுசெய்து, Username என்ற இடத்தில் நமக்கு வழங்கப்பட்ட Institute Log in ID (Dise number) மற்றும் Password பயன்படுத்தி நம் பள்ளிக்குரிய Profile லில் கீழ்கண்டவற்றை பதிவு செய்து  Update செய்ய வேண்டும்.


1. Head of institution details update

2. Nodal officer Aadhar card details updated

    Aadhar number

    Name 

    DOB as per Aadhar card


3. Update, If needed..


Finally, Submit the profile form...


Then u got, *successfully updated your profile*


Thank you..




>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....





வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - அரசின் செய்தி வெளியீடு...

 வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...


>>> தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021...


>>> வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு - அரசாணை வெளியீடு...






ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேடுகளில் (S.R.) சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் (Information to be checked by teachers in their Service Register)...

 உங்களின் பணிப்பதிவேட்டில் (Service Register) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்...



நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.


பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.


💐பெயர்


💐புகைப்படம்


💐முகவரி


💐அங்க அடையாளங்கள்


💐இனம்


💐பிறந்த தேதி


💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண்


💐X std mark entry


💐X std genuineness entry


💐XII std mark entry


💐XII std genuineness entry


💐DTEd mark entry


💐DTEd genuineness entry


💐UG BA / BSC முன் அனுமதி


💐UG provisional entry


💐UG convocation entry


💐UG genuineness entry


💐BEd முன் அனுமதி entry


💐BEd கற்பித்தல் பயிற்சி entry


💐BEd provisional entry


💐BEd convocation entry


💐BEd genuineness entry


💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி


💐PG provisional entry


💐PG convocation entry


💐PG genuineness entry


💐Appointment ஊதிய நிர்ணயம்;


💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.


💐 SPF ENTRY


💐 FBF entry


💐 பணிவரன்முறை; (ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)


💐 தகுதி காண் பருவம்; (ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)


💐 மாறுதல்கள்; (பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.)


💐 பதவி உயர்வு; (அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)


💐 Special allowance entry


💐 Personal pay 750 entry


💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்; (அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)


💐 ஊக்க ஊதிய உயர்வு; (நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)


💐 மகப்பேறு விடுப்பு பதிவு


💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு


💐 ஆண்டு ஊதிய உயர்வு. ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.


💐 பணிகாலம் சரிபார்ப்பு; (பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)


💐 Pay commission; ( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)


💐 தேர்வு நிலை ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


💐 சிறப்பு நிலை பதிவு


💐 பணியேற்பிடைக் காலம் பதிவு


💐 Department exam pass entry


💐 EL வரவு  ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )


💐 ML பதிவு


💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு


💐 Details of family


💐 Nomination for Death cum Retirement Gratuity


💐 Form of nomination


💐SPF - cum gratuity scheme nomination



மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். 


>>> CLICK HERE TO DOWNLOAD THE S.R ENTRY DETAILS...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...