உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வராமலேயே 04.11.2024க்கு ஒத்திவைப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வராமலேயே 04.11.2024க்கு ஒத்திவைப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்குகளின் நிலவரம்...
Status of High School Headmaster Promotion Cases in Supreme Court...
* உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு (Pon. Selvaraj உள்ளிட்டோர் தொடர்ந்தது DIARY NO. - 39294/2023 PON SELVARAJ VS. THE STATE OF TAMIL NADU) 21.10.2024ல் விசாரணைக்கு வர இருந்த நிலையில் 25.10.2024க்கு ஒத்திவைப்பு...
* 17.10.2024 அன்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கின் நிலை (M.Krishnamoorthi உள்ளிட்டோர் தொடர்ந்தது) இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை...
>>> DIARY NO. - 48521/2023 M.KRISHNAMOORTHI VS. D. RAJAN தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 17.10.2024க்கு ஒத்திவைப்பு...
Adjournment of High School Headmaster promotion case to 17.10.2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
HIGH SCHOOL HM (1212) TO PG CONVERSION CASE:-
(இது TET பதவி உயர்வு வழக்கு அல்ல)
22-08-2024 (வியாழன்) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
புதியதாக வழக்கில் இணைந்தவர்களின் பெயர்களை, அதாவது அவர்களின் இடையீட்டு மனுவை ( Interlocutory application- IA ) MAIN CASE ல் இணைத்து வழக்கமாக விசாரித்து வந்த CHAMPER BENCH ல் இல்லாமல் REGULAR BENCH ல் இணைத்து விசாரிக்கும்படி ஒரு ஆணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள். மற்றபடி வேறு எந்த விசாரணையும் நடைபெறவில்லை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கும், வழக்கின் தன்மையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழக்கு மீண்டும் 9/9/2024 அன்று விசாரணைக்கு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 09.09.2024 அன்றைக்கு ஒத்திவைப்பு...
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கின் விசாரணை 05.07.2023க்கு ஒத்திவைப்பு (Adjournment to 05.07.2023 in the case of Teacher Elegibility Test being mandatory for Promotion)...
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - மலை சுழற்சி வழக்கு - ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு (Teacher Transfer Counselling - Hill Rotation Case - Postponed to April 29th)...
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மீது விரைவில் விசாரணை நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தின்படி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை தட்டிச் சென்றனர்.
ஒரு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக செல்கிறார். அந்த பதவியில் அவர் ஊதிய உயர்வு மற்றும் ஒரு வருடம் கழித்து தகுதிகாண் பருவம் பெற்றுக் கொள்கிறார்.
ஆனால், அவர் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள சீனியாரிட்டி பெற்றுக் கொண்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்கிறார்.
இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாமலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்காமலும் அவதியுறுகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஊக்க ஊதிய உயர்வு பெற்றுக்கொண்டு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதே ஊதியத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக மாறுகின்றனர்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஊதியமும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஊதியமும் ஒன்றே. ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே வகிக்கவேண்டும். ஒருவர் இரண்டு பதவியில் பணியாற்றக் கூடாது என்பது கோரிக்கை.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக சென்றால் அடுத்த பதவி உயர்வு நிலையான மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கே செல்ல வேண்டும்.
ஆனால் ஒரே ஊதியத்தில் இரண்டு பதவிகளை வகிப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டி மாநிலத் தலைவர் எஸ். பக்தவத்சலம் தலைமையில் 21 பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
விரைவில் இந்த வழக்கு நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
(வழக்கு WP NO: 8583/ 30.3.2021.)
சாமி
மாநில சட்ட செயலாளர்.
CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கல்ஸ் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு WP(MD) 3802/2012 நேற்று வெள்ளிக்கிழமை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர் திரு. லஜபதிராய் ஆஜராகி CPS வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும்
ஓய்வூதியம் என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய பலன்கள் எதுவுமே இல்லை என்று வாதம் செய்தார்.
வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதியரசர் தண்டபாணி அவர்கள் இறுதி விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து உரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 058284/என்1/2020, நாள்: 28-12-2020...
>>>பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...