கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

DEE Proceedings - Seeking explanation from the BEOs who conducted less School Visit & Annual Inspection, Dated : 09-10-2024...


 குறைவாக பள்ளிப் பார்வை & ஆண்டாய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள் : 09-10-2024...


தொடக்க கல்வி - வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளிகள் பார்வை மற்றும் ஆண்டாய்வு மேற்கொள்ளுதல் - தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாத வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...


Proceedings of the Director of Elementary Education seeking explanation from the Block Education Officers who conducted less School Visit & Annual Inspection, Dated : 09-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆய்வக உதவியாளர்களுக்கு கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு, நாள் : 07-10-2024...


Pudukottai District Chief Education Officer has asked for an explanation from the Headmasters who did not provide the laboratory time table to the laboratory assistants...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு (மருத்துவ விடுப்பு - Medical Leave) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995 (Un Earned Leave - Clarifications Copy of Govt.Lr.No.64435 / FRV / 94-5, dated 27.03.1995 from Thiru M.B. Pranesh, I.A.S., Secretary to Government, Personnel and Administrative Reforms (FR.V) Department, Fort St.George, Madras - 9 addressed to AH Heads of Department - Fundamental Rules - Prefixing and / or Suffixing Of holidays to Earned Leave Clarifications Issued Further clarifications)...



>>> மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு (மருத்துவ விடுப்பு - Medical Leave) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995 (Un Earned Leave - Clarifications Copy of Govt.Lr.No.64435 / FRV / 94-5, dated 27.03.1995 from Thiru M.B.  Pranesh, I.A.S., Secretary to Government, Personnel and Administrative  Reforms (FR.V) Department, Fort St.George, Madras - 9 addressed to AH  Heads of Department - Fundamental Rules - Prefixing and / or Suffixing Of  holidays to Earned Leave Clarifications Issued Further clarifications)...






VRS weightage அரசாணை எண்: 53, நாள்: 08-06-2022 ஏன்? எதற்கு?



VRS weightage அரசாணை எண்: 53, நாள்: 08-06-2022 ஏன்? எதற்கு?


விருப்ப ஓய்வூதியர் வெயிட்டேஜ் தொடர்பாக, தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை (FR-II)-ன்  அரசாணை நிலை எண் 53 (நாள் 8.6.2022) சில தினங்களுக்குமுன் வெளிவந்தது. இது தொடர்பான பல்வேறு செய்திகளும் ஊகங்களும் ஊடகங்களில் வெளிவந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அது சார்ந்த தெளிவை அரசு ஊழியர் & ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இப்பதிவு.


முதலில் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அச்சு - காட்சி - மின்னணு செய்தி ஊடகத்தினரில் 99.9% பேருக்கு நமது துறைசார் நடைமுறைகள் 100% புரியவும் செய்யாது தெரியவும் செய்யாது. அவ்வப்போது வருவதை இயன்றவரை Highlight ஆக்கி வெளியிட்டுவிடுவர். அவ்வளவே.


சரி விசயத்த்திற்கு வருவோம்.


50 வயதிற்கு மேற்பட்ட / 20 வருடங்கள் பணி நிறைவு செய்த அரசு ஊழியர் தனது ஓய்வுக் காலத்திற்கு முன்பே தனது சொந்த விருப்பத்தின்பேரில் பணி  ஓய்வு  (Voluntary Retirement in Service) பெற விண்ணப்பிக்கலாம்.


வழக்கமான பணி மூப்பால் ஓய்வு பெறும் ஊழியரின் ஓய்வூதியம் என்பது அவரது இறுதி மாத அடிப்படை ஊதியத்தில் அதிகபட்சம் 50% என்ற அளவில் இருக்கும். அதற்கான கணக்கீடு,

Last month Basic Pay X (Years of service ÷ 66).


அதேபோன்று விருப்ப ஓய்வு பெறுவோருக்கான ஓய்வூதியக் கணக்கீட்டிற்கு, அவரது எஞ்சிய பணிக்காலத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை அவரது Years of service-ல் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்குப் பெயர்தான் அந்த VRS Weightage. இது மிகப் பழைய வழக்கமான நடைமுறையே.


அந்த 5 ஆண்டுகளைக் கூட்டுவதால் அவரின் வயது 58-ஐத் தாண்டிவிடக்கூடாது / அவரது பணிக்காலம் 33 ஆண்டுகளைத் தாண்டிவிடக்கூடாது. அதாவது 55 வயதில் ஒருவர் VRS கோரினால் கூடுதலாக 3 ஆண்டுகளை மட்டுமே அவரது Pension Calculation-ல் சேர்த்து கணக்கிடலாம். அதேபோல் 32 வருடங்கள் பணிபுரிந்தவருக்கு கூடுதலாக 1 ஆண்டு மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும். அந்த Weightage-ற்கான மாதிரி அட்டவணை,


பணிக்காலத்தைப் பொறுத்து,

28 + 5 (= 33)

29 + 4 (= 33)

30 + 3 (= 33)

31 + 2 (= 33)

32 + 1 (= 33)


வயதைப் பொறுத்து எனில்,

53 + 5 (= 58)

54 + 4 (= 58)

55 + 3 (= 58)

56 + 2 (= 58)

57 + 1 (= 58)


இந்த Weightage 1997 முதல் நடைமுறையில் உள்ளது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளின் 56-ஆம் விதியான ஓய்வூதிய விதிகளில் 3-வது பிரிவான விருப்ப ஓய்வூதியப் பிரிவில் வரிசை எண் D-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


சரி. . . அதென்ன 58 வயது. . .? வேறொன்னுமில்ல அப்ப பணி ஓய்வு வயது 58. ஆனால் இப்ப பணி ஓய்வு வயது. . . .? 59-ஆகி 60 -ல வந்து நிக்குது.


பணிசார் அடிப்படை விதிகள் சார்ந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் முதலில் துறைசார் அரசாணையாகப் பிறப்பிக்கப்பட்டாலும், அதன்பின் பணிசார் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கான 'திருத்தத் தீர்மான அரசாணை' கூடுதலாகப் பிறப்பிக்கப்படும்.


அதன்படியே, 07.5.2020 முதல் ஓய்வு வயதை 59-ஆக்கியதற்கு  பின்வரும் திருத்தமும்,


54 + 5 (= 59)

55 + 4 (= 59)

56 + 3 (= 59)

57 + 2 (= 59)

58 + 1 (= 59)


பின்னர் 25.2.2021 முதல் 60-ஆக்கியதற்கு மேற்படி திருத்தத்தை மீண்டும் பின்வமாறு திருத்தியும்


55 + 5 (= 60)

56 + 4 (= 60)

57 + 3 (= 60)

58 + 2 (= 60)

59 + 1 (= 60)


புதிய ஓய்வு வயதிற்கான VRS Weightage பற்றிய 'திருத்தத் தீர்மான அரசாணை' தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


>>>  விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 08-06-2022 வெளியீடு (G.O.(Ms) No: 53, Dated: 08-06-2022 - Revision of Weightage with reference to age for Government Servants retiring Voluntarily)...






9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...




>>> 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...