கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Memo லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Memo லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அலுவலரிடம் வாக்குவாதம் - விளக்கம் அளிக்குமாறு ஆசிரியருக்கு குறிப்பாணை - CEO Proceedings

 

முதன்மைக் கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் - விளக்கம் அளிக்குமாறு ஆசிரியருக்கு  குறிப்பாணை - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



காஞ்சிபுரம் மாவட்டம் - தென்னேரி, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) திருமதி.P.சசிகலா என்பார் அலுவலரிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்தமைக்கு விளக்கம் கோருதல் - குறிப்பாணை வழங்குதல் சார்ந்து - காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி.P.சசிகலா என்பார், 08.08.2025 அன்று மாலை சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட சென்றார். அப்போது மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் பாடப்புத்தகம் அல்லாமல், தனியார் மூலம் தயாரிக்கப்பட்ட பாடக்குறிப்பு கையேடுகளை வைத்திருந்ததும், மாணவர்களிடம் முதன்மைக் கல்வி அலுவலர் இது குறித்து விசாரித்த போது தாங்கள் இதை மட்டுமே பின்பற்றி படித்து வருவதாக தெரிவித்தனர்.


மேலும், பள்ளி பாடவேளை நேரத்திலும், வகுப்பில் தனியர் மூலம் தயாரித்த கையேடு தான் பயன்படுத்த வேண்டுமென கூறி, இந்த கையேடு மட்டுமே ஆங்கில ஆசிரியரால் விற்கப்பட்டது, எனவே. நாங்கள் அனைவரும் இந்த கையேடு மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.


இது குறித்து ஆங்கிலப் பாட ஆசிரியரிடம் விசாரித்த போது, ஆசிரியர் உயர் அலுவலரிடம் முறையற்ற வார்த்தைகளையும், குரலை உயர்த்தி பேசியும் அவமதித்தார். மேலும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நான்கு பாடவேளையில் அரசால் வழங்கப்படும் பாடப்புத்தகத்தை முழுமையாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க இயலாது. 


எனவே தான். நான் தனியார் மூலம் தயாரித்த பாடக்குறிப்பு கையேடுகளை வைத்து கொண்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன் என்று கூறினார். இச்செயல், அரசின் பாடத்திட்டத்தையும், பள்ளியில் ஒதுக்கப்படும் பாடப்பிரிவு நேரத்தையும் அவமதிப்பதாக உள்ளது. இது முற்றிலும் அரசுக்கு எதிராக செயல்படும் நோக்கமாக கருதப்படுகிறது.


எனவே இதற்குண்டான விளக்கத்தினை 3 நாட்களுக்குள் அளிக்குமாறு தெரிவிக்கலாகிறது.


அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால் விளக்கம் அளிக்க ஏதும் இல்லை என கருதி தங்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின்படி துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


ஆய்வக உதவியாளர்களுக்கு கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு, நாள் : 07-10-2024...


Pudukottai District Chief Education Officer has asked for an explanation from the Headmasters who did not provide the laboratory time table to the laboratory assistants...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


350 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மெமோ - தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை...


 350 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மெமோ - தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை...


Memo to 350 Block Education Officers...



🔹🔸 *ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்!..*


➡️ 5 பள்ளிகள், 6 பள்ளிகளை ஆய்வு செய்த 350 வட்டார கல்வி அலுவலர்களுக்கு மெமோ


➡️ தொடக்கக் கல்வி துறையின் புதிய இயக்குனர் நரேஷ் நடவடிக்கை



✒️350 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மெமோ - தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ்  நடவடிக்கை...



*5 பள்ளிகள், 6 பள்ளிகளை ஆய்வு செய்த 350 வட்டார கல்வி அலுவலர்களுக்கு மெமோ வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் நடவடிக்கை.



 *ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்!


*பள்ளிகளை ஆய்வு செய்து மாணவர்களின் பிரச்சனைகளை அறிய அறிவுறுத்தல்.



*தமிழகம் முழுவதும் 57 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு.









எவ்வித கைப்பற்றுகையும் இல்லாமல் இருக்கும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அணித் தலைவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை...


 எவ்வித கைப்பற்றுகையும் இல்லாமல் இருக்கும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அணித் தலைவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை...


Election Flying Squad and Permanent Monitoring Committee, which remain without any seizure, have issued a memorandum to the Team Leader asking for an explanation...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Neral To Matheran Toy Train

 🚂 நெரால் டு மாதேரான் : மேகங்களுக்கு நடுவே செல்லும் பொம்மை ரயில் பயணம்! 🌧️🌲 Neral To Matheran Toy Train சுற்றிலும் அடர்ந்த பச்சைக்காடுகள்...