கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalvi Anjal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kalvi Anjal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சொர்க்கமும், நரகமும், நாமும்...

 


சொர்க்கமும், நரகமும், நாமும்...


வணக்கம்.

மிக அருமையான பதிவு. நேரம் கிடைக்கும் சமயம் படிக்கவும் . 👇🏻

*சொர்க்கமும்* 

             *நரகமும்* 

                   *நாமும்...* 


               🌸 🌸 🌸


 சொர்க்கத்தில் இடம்

   கிடைக்க வேண்டும்

     என்பதற்காக 


மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறான். 


          🟠🟠


சிலர் விரதம்

   இருக்கிறார்கள்,


 சிலர் தானம்   

       செய்கிறார்கள், 


சிலர் புனித யாத்திரை

     செல்கிறார்கள், 


சிலர் இறைவனிடம் 

   நேர்த்திக்கடன்   

     செய்கிறார்கள்...


                🔵🔵


புதிதாக கட்டப்பட்ட

ஒரு குடியிருப்பில் 

ஒரு சிறிய வீட்டைப் பெற புள்ளிகள் சேகரிப்பது போலவே சொர்க்கத்திற்கும் தகுதி பெற முயல்கிறோம்..


            🟢🟢


ஆனால் எனக்கு 

    ஒரு கேள்வி...


ஒருவேளை நாம் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ?


காலையில் விழித்தவுடன் சுற்றிலும் ஒரு முறை கவனமாகப் பாருங்கள்...


ஒரு சுவிட்சை அழுத்தினால் விளக்கு எரிகிறது. 


இன்னொரு சுவிட்சை அழுத்தினால் விசிறி சுழல்கிறது..


மற்றொன்றை அழுத்தினால் குளிர்சாதன வசதி இயங்குகிறது..


குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது.


அடுப்பை ஏற்றினால் சில நிமிடங்களில் உணவு தயாராகிவிடுகிறது..


கைப்பேசியை எடுத்தால் 

உலகின் தகவல்கள் அனைத்தும் நம்கைகளில்..


அமெரிக்காவில் இருக்கும் நண்பரின் முகத்தைக்கூட சில நொடிகளில் பார்த்துப் பேச முடிகிறது..


இவை அனைத்தையும் நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். 


              🟣🟣


இவை வாழ்க்கையின் அரிய வசதிகள் அல்ல;


நமக்குப் பிறப்புரிமை என்றே நினைக்கிறோம்.


               🟠🟠


இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னரை இன்று நம் வீட்டிற்கு அழைத்து வந்தால், அவர் மீண்டும் வெளியே செல்லவே விரும்ப மாட்டார்.


"இது என்ன?"  

     "சுடுநீர்."

"இது?" "      

    " குளிர்ந்தகாற்று."


"இது?" 

"உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் தகவல்கள்."


"இது?" — 

"பத்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சேரும் உணவு."


அப்போது 

  அந்த மன்னர்  

    சொல்லக்கூடும்:..


"நான் வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்தேன். 

போர் புரிந்து வெற்றி பெற்று உள்ளேன்.


 செல்வங்களைக்

      குவித்தேன். .


ஆனால் இத்தகைய வசதிகளை ஒருபோதும் அனுபவிக்கவில்லை."


           🔵🔵


உண்மையில், இன்றைய ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை, 

அக்கால மன்னர்களின் வாழ்க்கையை விடப் 

பல வகைகளில் வசதியானதாக உள்ளது..


ஆனால் விந்தை

   என்ன வென்றால்...


இவற்றில் எதையும் நாம் உணர்ந்து மகிழ்வதில்லை.


ஏனெனில் மனிதன் ஏற்கனவே பெற்றிருப்பதன் மதிப்பை அரிதாகவே உணர்கிறான்.


            🟣🟣


ஏசி ஓடிக்கொண்டிருக்கிறது; 

மகிழ்ச்சி இல்லை.


அது பழுதாகிவிட்டால்  

  மட்டும் வருத்தம்.


கைப்பேசி இருக்கிறது;  மகிழ்ச்சி இல்லை.


இணையம் செயலிழந்தால் உலகமே முடிந்து விட்டதுபோல் உணர்கிறோம்..


வீடு இருக்கிறது;

  மகிழ்ச்சி இல்லை.


அடுத்த வீட்டுக்காரரின் வீடு பெரியதாக இருக்கிறது என்பதால் வருத்தம்.


கார் இருக்கிறது;

மகிழ்ச்சி இல்லை.


மற்றொருவரிடம் இன்னும் பெரிய கார் இருப்பதால் மனக்குறை.


           🟢🟢


தன்னுடைய

   சொர்க்கத்தில்

      நின்றபடியே,


மற்றவரின் சொர்க்கத்துடன் ஒப்பிட்டு 

தன்னைத் தானே துன்பப்படுத்திக் கொள்கிறான் மனிதன்.


        🟣🟣


ஆனால் 

இதே பூமியில் இன்னொரு உண்மையும் இருக்கிறது.


இன்றும் கோடிக்கணக்கான மக்கள் குடிநீருக்காக வரிசையில் நிற்கிறார்கள்.


பலருக்கு நிரந்தரமான வீடு இல்லை.


இரு வேளை உணவு கிடைக்குமா என்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.


பல குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில்லை.


சிலருக்குப் போதுமான உடைகள் கூட இல்லை.


             🟠🟠


"நாம் சாதாரணம் என்று நினைப்பவை, பலரின் கனவுகள்."


"நாம் குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது.


அவர்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள்."


"நாம் ஏசி ரிமோட் கிடைக்கவில்லை என்று கோபப்படுகிறோம்.


அவர்கள் மர நிழலைத் தேடி அலைகிறார்கள்."


"நாம் உணவுக் கட்டுப்பாடு பற்றி யோசிக்கிறோம்.


அவர்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்று கவலைப்படுகிறார்கள்.   

      

            🟢🟢


அதனால் தான் எனக்குத் தோன்றுகிறது...



"சொர்க்கமும் நரகமும் மரணத்திற்குப் பிறகு இருக்கும் இடங்கள் அல்ல."


 "அவை இங்கேயே

          இருக்கின்றன.


அதே நகரத்தில்.

அதே கிராமத்தில்.

சில நேரங்களில் 

அதே தெருவில்கூட."


            🔵🔵


"ஒரு வீட்டில் புதிய கைப்பேசி மெதுவாக இயங்குகிறது என்று ஒரு சிறுவன் வருத்தப்படுகிறான்.


எதிர் வீட்டில், கைப்பேசி இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கூட கலந்து கொள்ள முடியாமல் இன்னொரு சிறுவன் தவிக்கிறான்."


ஒருவர் சுடுநீர் தாமதமாக வந்தது என்று கோபப்படுகிறார்.


மற்றொருவர் குளிக்கத் தண்ணீர் கிடைத்ததே பெரும் மகிழ்ச்சி என்று நினைக்கிறார்.


வித்தியாசம் சூழ்நிலைகளில் மட்டும் இல்லை..


பார்க்கும் பார்வையிலும் இருக்கிறது..


          🟠🟠


சிலர் நரகத்திலும் சிரித்துக் கொண்டே வாழ்கிறார்கள்.


சிலர் சொர்க்கத்திலேயே குறை கூறிக் கொண்டே வாழ்கிறார்கள்.


           🟢🟢


மனிதனுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு..


தன்னிடம் இல்லாதவற்றின் பட்டியலை தினமும் தயாரிக்கிறான்.


ஆனால் ஏற்கனவே இருப்பவற்றின் பட்டியலை ஒருபோதும் எழுதுவதில்லை..


               🟣🟣


ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்லும் முன் பின் வரும் ஐந்து விஷயங்களை மட்டும் எழுதினால்...


"இன்று நான்

 சுவாசிக்க முடிகிறது."


"இன்று எனக்குக்

  குடிநீர் கிடைத்தது".


"இன்று எனக்கு 

   உணவு கிடைத்தது."


"இன்று நான் பாதுகாப்பாகத் தூங்க ஒரு இடம் இருக்கிறது."



"இன்று என் அன்புக்குரியவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்."


என்று  இப்படி 

   எழுதிப் பாருங்கள்..


வாழ்க்கையைப் பார்க்கும் 

 நம் பார்வையே

     மாறிவிடலாம்...


           🟣🟣


நாம் சொர்க்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.


ஆனால் சொர்க்கம்

  என்பது ஒரு இடமல்ல


 அது ஒரு

     விழிப்புணர்வு.!


நரகமும் 

     ஒரு இடமல்ல.!


நமக்குக் கிடைத்திருப்பவற்றின் மதிப்பை மறந்துவிடும்

மனநிலையே நரகம்.!


           ☘️☘️


இருப்பதற்கு 

நன்றி கூறும் 

மனமே சொர்க்கம்..!


மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை யாரும் உறுதியாக அறியவில்லை..


ஆனால் 

  உயிருடன் இருக்கும் 

     இந்த நேரத்தில், 


வாழ ஓர் அழகான பூமி, சுவாசிக்க காற்று, குடிக்க தண்ணீர், உண்ண உணவு, அன்பு செலுத்தும் மனிதர்கள், ஒரு பொத்தானை அழுத்தினால் கிடைக்கும்

எண்ணற்ற வசதிகள்..


இவை அனைத்தும் இருந்தும் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம்..


           🟠🟠


ஒருவேளை கடவுள் மேலிருந்து புன்னகைத்தபடி சொல்லிக்கொண்டிருப்பார்:


"உன்னை சொர்க்கத்திற்கே அனுப்பினேன்...


அங்கேயும் நீ குறை கூறும் அலுவலகம் ஒன்றைத் தொடங்கிவிட்டாயே!"


             🙏🙏


இது நன்றியுணர்வு, திருப்தி மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை


ஆழமாக சிந்திக்க வைக்கும் 

அழகான கட்டுரை.


           🟢🟢 


வாழ்வின் மீதான

பார்வையை விழிப்புணர்வோடு

பார்க்கத் தொடங்குவோமே. வாழ்க சொர்க்கம்(இந்த உலகம்) நாம் வாழும் இந்த பூமியே சொர்க்கம்,நரகம்.🙏🙏🙏🙏🙏🙏


* படித்தேன்


*பகிர்ந்தேன்  


பிடித்திருந்தால் நீங்களும் பகிரலாம்



கல்வி அஞ்சல் 
Kalvi Anjal 

G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை ஊதியக் கணக்காக மாற்றுதல் & காப்பீடு சலுகைகள் - அரசாணை வெளியீடு

 


G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "ஊதியக்" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு


அரசாணை எண்.113 நிதி (கருவூலம் மற்றும் கணக்குகள் - III), நாள்:14.05.2025


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் பெறும் வங்கிக் சேமிப்பு கணக்கில் இருந்து சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.


அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் முன்னோடி வங்கிகளுடன் போடப்பட்டது.


தற்போது தமிழ்நாடு அரசின் ஊழியர்களின் சம்பளம் பெறும் வங்கி சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


G.O. Ms. No. 113, Dated 14.05.2025

Package for Salary Acount

Package Details

🟢அரசு ஊழியர் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ 1 கோடி ரூபாய் இழப்பீடு.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் ஒரு மகளுக்கு 5 லட்சமும் இரண்டு மகள்கள் இருந்தால் தலா ஐந்து லட்சமும் திருமண உதவித்தொகை.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் மகளின் உயர்கல்விக்கு 10 லட்ச ரூபாய் உதவித்தொகை.

🟢பணியின் போது அரசு ஊழியர் இயற்கை மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு.

🟢அரசு ஊழியர்கள் வாங்கும் தனிநபர் கடன் வீட்டுக் கடன் ஆகியவற்றில் வட்டி சலுகை.

2025-26 FY முதல்

இந்த சலுகைகள் 2025-26  நிதியாண்டு முதல் அமுலுக்கு வரும்.

வங்கிகள் பட்டியல்

1. SBI

2. Indian Bank

3. IOB

4. Axis Bank

5. Union Bank of India

6. Canara Bank

7. Bank of Baroda



 G.O. No. 113 - Finance - Changing Tamilnadu Government Employees Savings Bank Account to Salary Bank Account  - pdf



>>> Click Here to Download 



இந்த அரசாணை (G.O. (MS) No. 113, நாள்: 14-05-2025) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வங்கிச் சம்பளக் கணக்குக் பாக்கேஜ் (Salary Package) மற்றும் இலவசக் காப்பீட்டுச் சலுகைகள் பற்றியது.

# govt employees salary account accidental insurance GO.


அரசு ஊழியர் விபத்தில் இறந்தால், சம்பள உச்ச வரம்பின்றி (salary bond)  1 கோடி ரூபாய்  காப்பீடு:¡


📌 அரசாணையின் முதன்மை நோக்கம்


தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டு, இலவச ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் கூடுதல் நிதிச் சலுகைகளை வழங்க அனுமதி அளித்தல்.  


💡 முக்கியச் சலுகைகள் (வழங்கப்படும் வங்கிகள் மூலம்)


இலவச தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal Accident Insurance):


அரசு ஊழியர் விபத்தால் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ ₹1 கோடி வரை காப்பீட்டுத் தொகை.  


இயற்கை மரணத்திற்கான ஆயுள் காப்பீடு (Term Life Insurance):


பணிக்காலத்தில் இயற்கை எய்தினால் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் காப்பீடுத்துகை வழங்கப்படல்.  


மகள்களின் திருமண உதவி:


விபத்தில் இறந்த அரசு ஊழியரின் மகள்களுக்குத் திருமணச் செலவிற்காக ₹5 லட்சம் வீதம் (அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை) நிதி உதவி.  


உயர்கல்வி உதவித்தொகை:


விபத்தில் இறந்த அரசு ஊழியரின் மகள்கள் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி தொடர ₹10 லட்சம் வரை நிதி உதவி.  


கடன் வட்டிக் சலுகைகள்:


தனிநபர் கடன் (Personal Loan), வீட்டுக் கடன் (Housing Loan), மற்றும் கல்விக் கடன் (Education Loan) பெறும்போது வட்டிக் குறைப்புச் சலுகைகள் வழங்கப்படல்.  


🏦 சலுகை அளிக்கும் ஒப்பந்த வங்கிகள் (7 வங்கிகள்)


பின்வரும் 7 வங்கிகளில் சம்பளக் கணக்கு (Salary Account) வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு எந்தவிதக் கூடுதல் கட்டணமுமின்றி (Free of cost) இச்சலுகைகள் கிடைக்கும்:  


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)  


இந்தியன் வங்கி (Indian Bank)  


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)  


ஆக்சிஸ் வங்கி (Axis Bank)  


பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)  


யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)  


கனரா வங்கி (Canara Bank)  


குறிப்பு: இந்த காப்பீடு மற்றும் சலுகைகள் அனைத்தும் அரசு ஊழியரின் சம்பள வரம்பைப் (Salary Band) பொருட்படுத்தாமல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.


இந்த அரசாணை (G.O. (MS) No. 113, நாள்: 14.05.2025) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வங்கிச் சம்பளக் கணக்குக் பாக்கேஜ் (Salary Package) மற்றும் இலவசக் காப்பீட்டுச் சலுகைகள் பற்றியது.



கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 

Procedure for applying to Correct errors in TET certificate



ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழில் பிழைகள் இருப்பின்  திருத்தம் செய்ய விண்ணப்பிக்கும் வழிமுறை 


Procedure for applying for corrections if there are errors in the Teacher Eligibility Test (TET) certificate


 Special TET 2026 Correction 


நடைபெற்று முடிந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (Special TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழில் கீழ்க்கண்ட விவரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின், அவற்றைத் திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.


✅ திருத்தம் மேற்கொள்ளக்கூடிய விவரங்கள்:


- பாலினம் (Gender)

- பெயரின் தலைப்பெழுத்து (Initial)

- பெயரில் உள்ள எழுத்துப் பிழைகள் (Spelling Mistakes)

- சான்றிதழில் உள்ள பிற விவரப் பிழைகள்


📍 விண்ணப்பம் அளிக்க வேண்டிய இடம்:


ஆசிரியர் தேர்வு வாரிய சிறப்புக் குறைதீர்வு மையம்,


தரைத் தளம்,

டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டடம்,

(DR. MGR Centenary Building)

DPI வளாகம், சென்னை.


📑 விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:


1. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (10th Mark Sheet)

2. 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (12th Mark Sheet)

3. மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)

4. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket)

5. ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் (TET Certificate)

6. ஆதார் அட்டை (Aadhaar Card)


📝 விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட ஆவணங்களின் நகல்களுடன் சிறப்புக் குறைதீர்வு மையத்தை நேரில் அணுகி, அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.


📌 குறிப்பு:


சான்றிதழில் பிழைகள் உள்ள ஆசிரியர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தேவையான திருத்தங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


நன்றி! 🙏


கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 



தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 Group 1 அலுவலர்களுக்கு IAS பதவி உயர்வு


கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 


ஆண்டு வாரியாக ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆண்டு வாரியாக Group 1 அலுவலர்களுக்கு IAS பதவி வழங்கி மத்திய அரசு உத்தரவு


தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 குரூப்-1 அலுவலர்களுக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு: 


இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை  வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


ஒன்றிய அரசு அரசிதழ் வெளியீடு


மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் நேற்று வெளியான அரசிதழ் அறிவிப்பில், தமிழ்நாடு மாநில சிவில் சர்வீஸ் பிரிவில் இருந்து 11 பேர் ஐ.ஏ.எஸ். ஆக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான காலியிடத்தில் 6 பேரும், 2025ஆம் ஆண்டுக்கான காலியிடத்தில் 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


* 11 பேர் யார்?


ஆர்.பிரியா, எஸ்.பிரசன்னா ராமசாமி, எம்.இந்துமதி, ஆர்.ராஜகிருபாகரன், எஸ்.சங்கீதா, கே.பிரியா, எம்.மணிமேகலை, ஏ.மீனா பிரியதர்ஷினி, என்.காளிதாஸ், டி.செங்கோட்டையன், எஸ்.சாந்தி ஆகிய 11 பேரும் இனி தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அலுவலர்களாக பணியாற்றுவார்கள்.


 ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணியாற்றி வந்த எஸ்.பிரசன்னா ராமசாமி ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Time Table 2026-2027 | Elementary and Middle Schools | DEE Proceedings



தொடக்கக் கல்வி - 2026-27ஆம் கல்வியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கால அட்டவணை - பாடவேளை மற்றும் நேர ஒதுக்கீடு - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Time Table 2026-2027 | Elementary and Middle Schools | DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -06.


ந.க. எண். 021323 / ஜெ 4 / 2026, நாள் : 15.10.2026.


பொருள்:


தொடக்கக் கல்வி - 2026-27ஆம் கல்வியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கால அட்டவணை - பாடவேளை மற்றும் நேர ஒதுக்கீடு - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக


பார்வை:


சென்னை 06, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க. στσστ. 050138 / 1 / 1 / 2026, नं. 14.10.2026.


பார்வையில் காணும் செயல்முறைகளில் விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட திருத்திய கால அட்டவணையில் பள்ளியின் தேவைக்கு ஏற்ப தினசரி ஒரு பாடவேளையை "உடற்கல்வி பாடவேளை / இசை / கலை (ம) கைவினை / சமூக மனவெழுச்சி கற்றல் / பள்ளி இணைச் செயல்பாடுகள் / கூடுதல் இணைச் செயல்பாடுகள் பாடவேளை" ஒதுக்கீடு செய்து நடவடிக்கைள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.


நடுநிலைப் பள்ளிகள் செயல்படும் வளாகங்களில் 1-5ஆம் வகுப்பு கற்கும் மாணவர்களுக்கும் 6-8ஆம் வகுப்பு கற்கும் மாணவர்களுக்கும் ஒவ்வொரு பாடவேளை தொடங்கும் போது ஒலிக்கப்படும் மணியோசை அம்மாணவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஒரே வகையான கால இடைவெளியில் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக இணைப்பில் கண்டுள்ள மாதிரி கால அட்டவணை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பலாகிறது.


இக்கால அட்டவணையை பின்பற்றி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இணைப்பு : மாதிரி கால அட்டவணை


(i) வகுப்பு 1 & 2 

(ii) வகுப்பு 3-5 

(iii) வகுப்பு 6-8


தொடக்கக் கல்வி இயக்குநர்

15.10.2026


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)



பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் (Society Loan) உச்சவரம்பு ₹35 இலட்சங்களாக உயர்வு



பணியாளர் கூட்டுறவு வங்கிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் (Society Loan) உச்சவரம்பு ₹35 இலட்சங்களாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் , நாள் : 15-10-2026



The maximum limit for individual loans provided to members of employees' cooperative thrift societies has been increased to ₹35 lakhs



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 



Latest Laptop Models மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்



 வணக்கம்! இந்தியாவில் தற்போது கிடைக்கும் லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.


தற்போது சந்தையில் AI (Artificial Intelligence) அம்சங்கள் கொண்ட லேப்டாப்கள் மற்றும் சக்திவாய்ந்த புதிய தலைமுறை பிராசஸர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.


💻 சமீபத்திய லேப்டாப்களில் உள்ள முக்கிய அம்சங்கள் (Latest Key Features)

புதிய லேப்டாப்களில் இருக்கும் முக்கியமான சிறப்பம்சங்கள் இவை:

  • AI பிராசஸர்கள் (AI Processors): இன்டெல் கோர் அல்ட்ரா (Intel Core Ultra), AMD ரைசன் AI (AMD Ryzen AI) மற்றும் ஆப்பிள் M4 போன்ற புதிய தலைமுறை பிராசஸர்கள் NPU (Neural Processing Unit) உடன் வருகின்றன. இவை, AI அடிப்படையிலான வேலைகளை (உதாரணமாக, வீடியோ எடிட்டிங், லைவ் கேப்ஷன்கள், இமேஜ் ஜெனரேஷன்) லேப்டாப்பிலேயே வேகமாகச் செய்ய உதவுகின்றன.

  • OLED / QHD+ / 3K டிஸ்பிளேக்கள்: துல்லியமான வண்ணங்கள், ஆழமான கருப்பு நிறங்கள் மற்றும் மிருதுவான படங்களுக்காக OLED டிஸ்பிளேக்கள் மற்றும் உயர் ரெசொலூஷன் (High Resolution) கொண்ட QHD+ அல்லது 3K டிஸ்பிளேக்கள் வந்துள்ளன. அதிக ஹெர்ட்ஸ் (Hz) புதுப்பிப்பு வீதமும் (Refresh Rate) கேமிங் மற்றும் வீடியோ பார்ப்பதற்குச் சிறப்பாக உள்ளன.

  • அதிக பேட்டரி ஆயுள்: புதிய செயல்திறன் மிகுந்த பிராசஸர்கள் காரணமாக, ஒரு சில மாடல்களில் 20 மணிநேரம் முதல் 32 மணிநேரம் வரை கூட பேட்டரி ஆயுள் கிடைக்கிறது.

  • வேகமான ரேம் மற்றும் சேமிப்பகம் (RAM & Storage): அதிவேகமான DDR5 அல்லது LPDDR5X ரேம் மற்றும் PCIe Gen 4 SSD சேமிப்பகம் ஆகியவை லேப்டாப்பின் ஒட்டுமொத்த வேகத்தை மேம்படுத்துகின்றன.

  • AI கேமரா அம்சங்கள்: ஆட்டோ ஃபிரேமிங் (Auto Framing), போர்ட்ரெய்ட் ப்ளர் (Portrait Blur), மற்றும் கண்ணைத் தொடர்பு கொள்ள வைக்கும் (Eye Contact) போன்ற AI அடிப்படையிலான வீடியோ அழைப்பு அம்சங்கள்.

  • புதிய கிராபிக்ஸ் கார்டுகள்: NVIDIA GeForce RTX 5000 சீரிஸ் போன்ற லேட்டஸ்ட் கிராபிக்ஸ் கார்டுகள், உயர்நிலை கேமிங் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு வருகின்றன.


🌟 இந்தியாவில் கிடைக்கும் சில லேட்டஸ்ட் மாடல்கள் (Latest Models in India)

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் பிரபலமான சில லேப்டாப் மாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

மாடல் பெயர் (Model Name)முக்கிய அம்சங்கள் (Key Features) தோராய   விலை   (Approx.  Price)
Apple MacBook Air 13-inch (M4 Chip)புதிய Apple M4 Chip, சிறந்த செயல்திறன், மிக மெல்லிய வடிவமைப்பு, நீண்ட பேட்டரி ஆயுள், உயர் தரமான டிஸ்பிளே.

16GB Unified Memory+ 256 GB

https://amzn.to/44uSVhR

 ₹99,900  முதல்






Dell 14 Plus / 16 Plus (AI PC)

24GB Unified Memory+ 512 GB

https://amzn.to/3Maokjo




Intel Core Ultra பிராசஸர்கள் (AI திறன்களுடன்), Copilot+ AI ஆதரவு, QHD+ டிஸ்பிளே, அதிக பேட்டரி ஆயுள்.

https://amzn.to/3XhU6NX
 




  ₹96,899 முதல்

HP EliteBook X Flip G1i


Intel Core Ultra (சீரீஸ் 2) பிராசஸர், 48 TOPS NPU, 3K OLED டிஸ்பிளே, 360-டிகிரி கீல் (Flip), உயர்நிலை வணிகப் பயன்பாட்டிற்கு ஏற்றது.

https://amzn.to/485nME3
 ₹1,21,723 முதல்
Asus Vivobook 14 (Snapdragon X)

Qualcomm Snapdragon X ப்ராசஸர், 29 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள், 14-இன்ச் WUXGA LCD ஸ்க்ரீன், AI அம்சங்கள், மலிவு விலையில் AI PC.

https://amzn.to/3XTrxq9

 ₹65,990  முதல்
Lenovo Legion Pro 7 AI
Intel Core Ultra 9 பிராசஸர், சக்திவாய்ந்த NVIDIA RTX 5070Ti/5080 கிராபிக்ஸ், உயர்நிலை கேமிங்கிற்கு ஏற்றது.

https://amzn.to/3Ks2QOw
 ₹2,56,031 முதல்
Asus Vivobook 15 X1504VAP

Intel Core i5 பிராசஸர், 16GB RAM, 512GB SSD, அன்றாடப் பயன்பாட்டிற்குச் சிறந்தது.

https://amzn.to/4ao64gq


 ₹50,990 முதல்
Dell Inspiron 15 3530
Intel Core i3 (13th Gen), 8GB RAM, 512GB SSD, மாணவர்களுக்கு மற்றும் வீட்டு உபயோகத்திற்கு ஏற்ற மலிவான மாடல்.

https://amzn.to/49JFWN0
  ₹44,990 முதல்


(குறிப்பு: விலைகள் மற்றும் சலுகைகள் மாறுபடலாம். வாங்கும் முன் விற்பனை நிலையங்களில் அல்லது ஆன்லைனில் சரிபார்க்கவும்.)



🛠️ லேப்டாப் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை (Buying Guide)

உங்களுக்கு எந்த லேப்டாப் சிறந்தது என்பதைத் தீர்மானிக்க, பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்:

தேவை (Requirement)பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் (Recommended Features)
அன்றாடப் பயன்பாடு / மாணவர்கள்Intel Core i3 (12th Gen அல்லது அதற்கு மேல்) அல்லது AMD Ryzen 3, 8GB RAM, 512GB SSD.
அலுவலக வேலை / பொதுப் பயன்பாடு
Intel Core i5/i7 அல்லது AMD Ryzen 5/7, 16GB RAM, 512GB/1TB SSD, FHD அல்லது QHD டிஸ்பிளே.
கேமிங் / கிராஃபிக்ஸ் வடிவமைப்பு
Intel Core i7/i9 அல்லது AMD Ryzen 7/9, 16GB/32GB RAM, NVIDIA RTX கிராபிக்ஸ் (RTX 4050 அல்லது அதற்கு மேல்), 120Hz அல்லது 165Hz டிஸ்பிளே.
AI / கிரியேட்டிவ் வேலைகள்
Intel Core Ultra அல்லது AMD Ryzen AI பிராசஸர் (NPU உடன்), 32GB/64GB RAM, OLED டிஸ்பிளே.


உங்களுக்கு எந்த வகையான லேப்டாப் தேவை, அல்லது உங்களின் அதிகபட்ச பட்ஜெட் எவ்வளவு என்பதற்கு ஏற்ற சரியான மாடலைத் தேர்ந்தெடுக்கலாம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சொர்க்கமும், நரகமும், நாமும்...

  சொர்க்கமும், நரகமும், நாமும்... வணக்கம். மிக அருமையான பதிவு. நேரம் கிடைக்கும் சமயம் படிக்கவும் . 👇🏻 *சொர்க்கமும்*               *நரகமும்...