கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

MP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அஞ்சலக GDS நியமனங்கள் - தமிழ்நாடு தேர்வர்களின் தவிப்பிற்கு தீர்வு - நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்களிடம் அஞ்சல்துறை இயக்குனர் தொலைபேசியில் உறுதி (Post Office Gramin Dak Sevak Appointments - Tamil Nadu Candidates' Distress Resolved - Director of Posts confirmed to Member of Parliament Mr. Su.Venkatesan over phone)...


அஞ்சலக GDS நியமனங்கள் - தமிழ்நாடு தேர்வர்களின் தவிப்பிற்கு தீர்வு - நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்களிடம் அஞ்சல்துறை இயக்குனர் தொலைபேசியில் உறுதி (Post Office Gramin Dak Sevak Appointments - Tamil Nadu Candidates' Distress Resolved - Director of Posts confirmed to Member of Parliament Mr. Su.Venkatesan over phone)...


Garmin Dak Sevak (GDS) காலியிடங்களுக்கு ஜனவரி 27 முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும்  அதைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள். 


இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167. 


10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சினை இல்லை. 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் 6வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை. 


நான் அஞ்சல் துறை செயலாளர் திரு வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு இது குறித்து கடிதங்களை எழுதி இருந்தேன். 


இன்று என்னிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசி சர்மா அவர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6 வதாக உள்ள "தெரிவு மொழி" பகுதி தமிழ்நாடு தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும், விண்ணப்ப கடைசி தேதி மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 


அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.


தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன்.

- சு.வெங்கடேசன்...




பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும் - தமிழக அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் வேண்டுகோள்...



பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும் - தமிழக அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள்  வேண்டுகோள்...

------------------------------------------------

கடந்த 200 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் இருந்த இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு அதற்குப்பதிலாக ஆணையராக  ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்திருக்கிறது.  பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் இயக்குநர் பதவி பல விதங்களில் தமிழகக் கல்விச் சூழலுக்கு அவசியமானதாகும். எனவே அதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பொறுப்புக்கு ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலம் வந்துகொண்டிருந்தனர். மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், அதன் பின்னர் கல்வித்துறை இணை இயக்குநராகவும் பின்னர் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்று அத்துறையை நிர்வகித்து வந்தனர். இப்போது அந்தப் பதவி  ஒழிக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப் படுவதால் இதுவரை பள்ளிக்கல்வியை நன்கு அறிந்த ஒருவர் இயக்குநராக வருவதற்கு இருந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் பணிகளுக்கான தேர்வில் இட ஒதுக்கீடு இருக்கிற காரணத்தினால் இயக்குநர் பொறுப்புக்கு பதவி உயர்வின்மூலம்  எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வர வாய்ப்பு இருந்தது. அது சமூகநீதிக்கு உகந்ததாகவும் இருந்தது.


கடந்த அதிமுக ஆட்சியின்போதுதான் ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். பாஜக அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்தே அதிமுக அரசு அவ்வாறு செய்தது எனப் பலரும் அப்போது குற்றம் சாட்டினார்கள். ஆணையர் பதவி தேவையற்றது என்றும் கூறினார்கள். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஆணையர் பதவியை நீக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இயக்குநர் பதவி ஒழிக்கப்பட்டிருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. 


மத்திய அரசு இப்போது தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சனாதனக் கொள்கையைத் திணிக்க முற்படும் நேரத்தில் ஆசிரியர்களின் மத்தியிலிருந்து ஒருவர் இயக்குநராக வருவது தமிழக அரசுக்கு உதவியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக ஏற்கனவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கும்போது மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அவருக்கு கீழே நியமிப்பது தேவையா? என்பதையும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.


ஆசிரியர்களின் குரலுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் திமுக அரசு, இப்போதும் அந்த மரபைப் பின்பற்றி மீண்டும் இயக்குநர் பதவியை முன்பு இருந்தது போலவே உருவாக்கிடவேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறோம். 


இவண்:

தொல். திருமாவளவன்,

நாடாளுமன்ற உறுப்பினர்,

நிறுவனர்- தலைவர், விசிக.

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக, ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்...

 தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக, ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...