கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாலியல் துன்புறுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் துன்புறுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

போலி NCC Camp பாலியல் தொல்லை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அரசு தகவல்

 

 கிருஷ்ணகிரி போலி NCC Camp பாலியல் தொல்லை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அரசு தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. 4 பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம்? என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டனர். அப்போது, நான்கு பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மூன்று வழக்குகளிலும் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு பள்ளிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மூன்று பள்ளிகளுக்கும் ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


சிவராமன், அவரது அலுவலகத்தில் வைத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், மாணவிகளை மாமல்லபுரம், கொடைக்கானல் மற்றும் மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் தற்போது வரையிலான விசாரணையின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் விசாரணை இருக்கும் எனவும், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என கூறிய நீதிபதிகள், இந்த நான்கு பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம் என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டுமென தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவு...

 


DIPR - P.R. NO-1259-Hon'ble CM Press Release - Krishnagiri Dist NCC Training Incident - Date 21.08.2024....


கிருஷ்ணகிரி - பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு...


பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


வழக்கில் தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு.


>>> Click Here to Download - DIPR-P.R. NO-1259-Hon'ble CM Press Release - Krishnagiri Dist NCC Training Incident -Date 21.08.2024...





 சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் காவல்துறை தலைவர் பவானீஸ்வரி ஐ.பி.எஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து உரிய பரிந்துரைகள் அளித்திட, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் தலைமையில் பல்நோக்கு குழு ஒன்றும் அமைக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து, இனி இதுபோல நடைபெறாமல் தடுப்பது குறித்தும் இந்த பல்நோக்கு குழு பரிந்துரைகள் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி விவகாரத்தில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் விசாரணையை துரிதமாக மேற்கொள்ளவும், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி திட்டத்துக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.


இந்தச் சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என்சிசி பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேற்கூறிய போலியான என்சிசி பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் தலைமையில் பல்நோக்கு குழு ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.


இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா, சத்ய ராஜ். காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.


மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தரவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


"பாதுகாப்பான இடம் கல்லறை, தாயின் கருவறை... பள்ளி பாதுகாப்பானது அல்ல" - பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை ("Safe place grave, mother's womb ... School is not safe" Student commits suicide due to sexual harassment)...



 "பாதுகாப்பான இடம் கல்லறை, தாயின் கருவறை... பள்ளி பாதுகாப்பானது அல்ல" பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை...


“பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை...” School  Is Not Safety என எழுதி வைத்து சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மாங்காடு சக்தி நகரை சேர்ந்த 17 வயது மாணவி, பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக நந்தினி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


மேலும் இவர் எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அதில்,அதில், Stop sexual Harrasment.... இதுக்கு மேலே முடியாது. மனசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. அந்த கனவு வந்து தொல்லை பண்ணுது. படிக்க முடியல. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை. என்னோட கனவும் எல்லாம் போய்டுச்சி. எவ்வளவு வலி.  எனக்கு நியாயம் கிடைக்கும் என நினைகிறேன். உறவினர்கள்,  ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீங்க.. அம்மா போய்ட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு... பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை.. School is also not safety and ******* relatives and more.. Justice for me"  என எழுதப்பட்டுள்ளது.


இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் 1098 என்ற எண்ணை அழைக்கவும். அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும் - கரூர் மாவட்ட ஆட்சியர்(Girls who are victims of sexual harassment call 1098. Or send 'Hi' via Whatsapp to 8903331098 - Karur District Collector)...






 பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். 1098 என்ற எண்ணை அழைக்கவும். அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும். நாங்களே தொடர்பு கொள்வோம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

- கரூர் மாவட்ட ஆட்சியர்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...