கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு தீர்மானித்து விட்டதா?

 

ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை - இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை  என தமிழ்நாடு அரசு தீர்மானித்து விட்டதா?  - மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை 


2025ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. திசம்பர் மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய ஆண்டுத் திட்டத்தை 3 மாதங்கள் தாமதமாக இப்போது தான் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது என்றாலும் கூட, அது ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரை ஏமாற்றியிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டில் என்னென்ன பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறித்த விவரங்களை ஆசிரியர்  தேர்வு வாரியம் வெளியிடாததை குறை கூறி, கடந்த 5ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தான் ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டிருக்கிறது.


2025ஆம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. கல்லூரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிக்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தாலும், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தாலும் ஏற்கனவே அறிவிக்கை  செய்யப்பட்டவை.


1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் அறிவிக்கை செய்யப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களையும், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கை செய்யப்பட்ட 2768 இடைநிலை ஆசிரியர்களையும்  தேர்வு செய்யும் பணிகள் ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையவில்லை. இத்தகைய சூழலில்  புதிய ஆள்தேர்வு அறிவிப்புகள் திட்டமிட்டபடி செயல்வடிவம் பெறுமா? என்பதே பெரும் வினா தான்.


ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து அனைவரும் எதிர்பார்த்தது ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையைத் தான். தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், கடந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. 2025ஆம் ஆண்டிலாவது தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.


2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர்.  ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியவில்லை. அடுத்த சில மாதங்களில் நடப்பாண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்து லட்சக்கணக்கான மாணவர்கள்  ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பெற்றிருப்பார்கள். அவர்களும் தகுதித்தேர்வில் பங்கேற்கும் வகையில் ஜூன் மாதத்தில் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அதை தேர்வு வாரியம் செய்யவில்லை.


மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதில்லை. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் நலனில் தமிழக அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான். இது அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்.


தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை திமுக அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.


கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பு ஆட்சிக்காலத்தில் தான் கல்வித்துறை மிகவும் மோசமான சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களையே நியமிக்காமல் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? எனத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில்  ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களது தகவல்

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (28.03.2025) தொடக்கம் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு


தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 671, நாள் : 28-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



SSLC Exam 2025 Bell Timing

 


SSLC Exam 2025 Bell Timing 


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேர மேலாண்மை


10th Standard Public Examination Time Management



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்...💐💐💐💐


மூன்றாம் பருவ FA(b) மதிப்பீடு - TN EE MISSION அறிவிப்பு

 

எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவத்தில் செயலி வழியான EMIS தளத்தில் FA(b) மதிப்பீடு தேர்வு நடைபெறாது. 


அதற்கு பதிலாக பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can Do பகுதியினை முடித்து ஆசிரியர் திருத்தி வைத்திருந்தால் போதும் என TN EE MISSION அறிவிப்பு




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-03-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-03-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்:பண்புடைமை

குறள் எண்:1000

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று.

பொருள்:
தீயவன் பெற்ற பெரும் செல்வம். பால் அது வைக்கப்பட்ட பரத்திரத்தின் கெடுதியால் கெடுதல் போலாகும்.


பழமொழி :
Borrowing is sorrowing.

கடன் துன்பத்திற்கு வழி வகுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.


பொன்மொழி :

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.  ஏனென்றால்  பொய் வாழவிடாது, உண்மை சாகவிடாது. -- விவேகானந்தர்


பொது அறிவு :

   1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?           

விடை :  நாக்கு.   

2.உலகிலேயே மிக நீளமான பழமையான கால்வாய் எது ?

விடை : கிராண்ட் கால்வாய் (  சீனா )



English words & meanings :

Fever.       -       காய்ச்சல்,

Headache.   -     தலைவலி



வேளாண்மையும் வாழ்வும் :

பயன்பாட்டுக்குப் பின்னர் தண்ணீர்க் குழாய்களை நன்கு மூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.



மார்ச் 28

மாக்சிம் கார்க்கி  அவர்களின் பிறந்தநாள்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



நீதிக்கதை

முரசொலி

ஒரு நரி பசியினால் இரை

தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று

அது பயந்தது.

தன் பசி தீருமுன் தான்

பிறிதொரு மிருகத்தின் பசிக்கு விருந்தாகிவிடக் கூடுமோ என்று கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது.

நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது.

இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, 'பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட் டேன்!' என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.

நீதி: கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே நன்று.



இன்றைய செய்திகள்

28.03.2025

* ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு.

* மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.

* ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது.

* பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை.

* அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

* சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று   நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

* சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.


Today's Headlines

* The high court ordered to provide pension money benefits immediately to the Government Transport Corporation.

* A separate resolution in Tamil Nadu Legislative Assembly regarding the matter on Vagbu

*  In the Gulf of Mannar in Ramanathapuram, the  Ram Sethu sand dunes  which connects Sri Lanka and India  connecting  have also been found to be the largest reproductive site of the six rare seawater bird species.

* The Parliamentary Standing Committee recommends the immediate release of funds for the states who do not accept the BMSR scheme.

* The world countries have  retaliated  to the announcement of US President Donald Trump's announcement that the US imported vehicles and its major spare parts will be permanently charged.

* IPL in Chennai Metro trains will be operated till 1:00 pm, as the cricket match is being held today, Chennai Metro Rail Company said.

* The International Table Tennis Tournament started in Chennai yesterday.


Covai women ICT_போதிமரம்


உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 

 உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


incentive increment cannot be rejected on the ground that they have not obtained prior permission of the authorities for undergoing higher education and also regarding the M.Phil degree through distance mode / part time mode is not eligible for incentive increment - High Court Judgment



Higher Education Incentive Increment - High Court Judgments


உயர்கல்வி ஊக்க ஊதியம் உயர்வு - உயர்நீதிமன்ற தீர்ப்புகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்: 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

பொருள்:
எவருடனும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும் இருளாகும்.


பழமொழி :
The swine do not know what heaven is

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை


இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.


பொன்மொழி :

சதுரங்க விளையாட்டில் முன்யோசனை வெல்லுவதைப் போல ,வாழ்க்கையிலும் முன்யோசனை வெல்லுகிறது ! -- ஸெஸில்


பொது அறிவு :

1. எந்த தேசத்தில் அதிக அளவு ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.?

விடை: ஜாம்பியா. 80% சதவீத பூக்கள்

2. ஒவ்வொரு வினாடிக்கும் எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின?.

விடை : 205 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அனுப்பப்படுகிறது.


English words & meanings :

Exercise    -      உடற்பயிற்சி

Face mask     -     முகக்கவசம்


வேளாண்மையும் வாழ்வும் :

உங்களின் நீர் உபயோகங்களை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எங்கு, எப்படி தண்ணீர் வீணாகிறது எனக் கண்டறிந்து அதைத் தடுக்க முடியும்.


மார்ச் 27

உலக நாடக அரங்க நாள் 

 
உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.



யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.



நீதிக்கதை

ஆறும்‌ நீரும்‌

நல்ல வெயில்‌ காலம்‌. வழிப்போக்கர்‌ இருவர்‌ சாலை வழியாகச்‌ சென்று

கொண்டிருந்தார்கள்‌-

நடைக்‌ களைப்பும்‌ வெயில்‌ கொதிப்பும்‌ அவர்‌ களுக்குத்‌ தண்ணீர்த்‌ தவிப்பை உண்டு பண்ணின. சுற்றிலும்‌

ஒரே பொட்டல்‌. அருகில்‌ வீடு வாசல்‌ தோப்புத்‌ துரவு ஒன்றும்‌ கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல்‌ திகைத்தார்கள்‌.

திடீரென்று அவர்களில்‌ ஒருவர்‌ மகிழ்ச்சியோடு பேசினார்‌ “அண்ணா, இப்போதுதான்‌ நினைப்பு வருகிறது. வலதுகைப்‌ புறமாக கூப்பிடு தூரம் சென்றால்‌ அங்கே ஓர்‌ ஆறு இருக்கிறது. அங்கே சென்று தண்ணீர்‌ குடித்துக்‌  களைப்பாறியபின்‌ திரும்பலாம்‌”?  என்று அவர்‌ கூறிய செய்தி இன்பம்‌ தந்தது.

இருவரும்‌ சிறிது தூரம்‌ வலது  புறமாகத்‌ நடந்தபின்‌,ஆற்று

மணல்‌ பரந்து கிடப்பதைக்‌ கண்டார்கள்‌. ஆற்றைக்‌ கண்டுவிட்ட குதூகலத்துடன்‌ கொதிக்கும்‌ மணற்சூட்டையும்‌  பொருட்படுத்தாமல்‌ விரைந்து நடந்தார்கள்‌.

ஆனால்‌ என்ன ஏமாற்றம்‌ ! அந்த ஆறு வற்றி வறண்டுபோய்க்‌ கிடந்தது. இக்கரையிலிருந்து அக்‌ கரைவரை எங்கும்‌ ஒரே மணல்வெளிதான்‌ கண்‌ணுக்குத்‌ தெரிந்தது.  தூரத்தில்‌ கானல்தான்‌ தோன்றியது.

இருவரும்‌ மனமுடைந்து போனார்கள்‌. சிறிதுநேரத்தில்‌ தண்ணீர்‌ கிடைக்காவிட்டால்‌ மயங்கிச்‌சோர்ந்து விழ வேண்டியதுதான்,அவர்கள்‌ நம்பிக்கை இழந்து நின்றபோது ஆடு மேய்க்கும்‌ பையன்‌ ஒருவன்‌ அங்கே வந்தான்‌” ஆற்று மணலைத்‌ தோண்டினான்‌ இரண்டடி ஆழம்‌ தோண்டிய பின்‌ அடியிலிருந்து தண்ணீர்‌ ஊறி வந்தது.  இரு கைகளாலும்‌ அள்ளிக்‌ குடித்து சென்றான்‌. அதைப்‌ பார்த்த வழிப்போக்கர்கள் தாங்கள்‌ நின்ற  இடத்திலேயே மணலைத்‌ தோண்டினார்கள்‌.

அங்கேயும்‌ அடியில்‌ நீர்‌ ஊறியது, அவர்கள்‌ தூய்மையான அந்த நீரைப்‌ பருகித்‌ போற்றிப்‌ புகழ்ந்து சென்‌றார்கள்‌,

நீதி : ஆற்றைப் போல் நல்ல குடியில் பிறந்த பெரியோர்கள், தாங்கள் துன்பமடைந்த காலத்தும் தங்களை நாடி வந்தோருக்கு நன்மையே செய்வார்கள்.



இன்றைய செய்திகள்

27.03.2025

* அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

* கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.

* டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

* வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Minister Rajagannappan said in the legislative session that there is a great demand for Aavin ghee in the United States.

* Rural Development Minister E. Periyasamy has announced that community health complexes will be built in rural areas at an estimated cost of Rs 3150 crore.

* It was reported in the Lok Sabha that 83,668 whatsup numbers and 3,962 Skype accounts have been crippled in connection with digital arrests.

* The US has announced that 25 per cent additional tax will be imposed on countries that import oil and gas from Venezuela.

* Miami Open tennis: Improvement of American player Taylor Britz quarterfinals.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette  போளூர், செ...