கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

B.Ed., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - TRB க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 


பி.எட்., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஎட் முடிக்காமலேயே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி வழங்க உத்தரவிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன்.


பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. மேலும் தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜேஸ்வரி கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை" என்று வாதிட்டார்.


மனுதாரர் ராஜேஸ்வரி தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, '2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுவிட்டார்' என்று வாதிட்டார்.


அரசு தரப்பு , மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், "2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகவே, மனுதாரரை ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் கிடையாது.  எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டார்.


ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

 

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023...



>>> சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 19.08.2024

CORAM

THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH

W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023..


7. In the facts of the present case, there is no scope for interfering with the action taken by the respondents in transferring BRTEs to the post of B.T. Assistants for those who were all recruited between 2002 to 2010 and were selected to the respective post before 23.08.2010. The problem arises only in those cases where such appointment/promotion/transfer has been made after 29.07.2011. The learned Government Advocate appearing on behalf of the respondents relied upon the adhoc arrangement that was made under G.O.Ms.52 dated 30.03.2006. This adhoc arrangement that was made will not override the judgment of the Division Bench which categorically holds that any appointment made to the post of B.T.Assistant after 29.07.2011, whether by direct recruitment or promotion or by way of transfer, must necessarily pass TET. In view of the same, when a BRTE is interchanged and transferred as a B.T.Assistant after 29.07.2011, to hold the position of the B.T. Assistant, the concerned candidate must have passed TET.


8. Even though the post of BRTE and B.T.Assistant are interchangeable, it is not as if the same person will be holding a dual post. At any given point of time, the concerned person may be holding the post as BRTE or as B.T.Assistant. Therefore, when the person is adorning the role of BRTE and is intended to be changed as B.T.Assistant, it involves a transfer to the post of B.T.Assistant. Once that happens, automatically the mandate prescribed by the Division Bench will come into operation and for all those transfers made after 29.07.2011, for holding the post of B.T.Assistant, TET becomes mandatory.


9. The above clarification will suffice and the same is to be kept in mind by the official respondents when they undertake the exercise of interchangeability between BRTEs and B.T.Assistants.


10. This Writ Petition is disposed of with the above observation. There shall be no order as to costs. Consequently, the connected miscellaneous petitions are closed.


19.08.2024

பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...



பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...

 

பேருந்து படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கொளத்துரை சேர்ந்த ஒரு  மாணவர் டந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியமை காரணம் என்றும் 49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மாணவனின் குடும்பத்தினர்  சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அறிவுறுத்தியும்  கேட்காமல்,  ஜன்னல் கம்பியை பிடித்தவாறு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததே மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்று  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மாணவரின் கவனக் குறைவு தான் அவரின் உயிரிழப்பு காரணம் எனக் குறிப்பிட்டு, இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கோர முடியாது என்றும்  உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.



18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்...

 

 18 வயது கீழ் மகன், மகளுக்கு வாகனம் வாங்கித்தரும் அல்லது ஓட்ட தரும் பெற்றோர்களே இனி கவனமாக இருங்கள்..


 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு  இருசக்கரவாகனம், நான்கு சக்கர வாகனம் ஓட்ட அல்லது வாங்கிக்கொடுக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. இதோ நீதிமன்ற தீர்ப்பின் நகல். கவனம் தேவை பெற்றோர்களே...


18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்...



>>> நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


10-03-2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை 02.08.2024 அன்று தீர்ப்பு - இணைப்பு : தீர்ப்பு நகல்...


10-03-2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை 02.08.2024 அன்று தீர்ப்பு -  இணைப்பு : தீர்ப்பு நகல்...


10.03.2020 தேதிக்கு முன் உயர் கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வில் - 02.08.2024 அன்று -  10.3.2020 தேதிக்கு முன் உயர் கல்வி முடித்தவர்களில் -  974 ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்ட தீர்ப்பு நகல்  (JUDGE VICTORIA GOWRI - Madurai Bench)...


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

Reserved On : 13.06.2024

Delivered On : 02.08.2024

CORAM:

THE HONOURABLE MRS.JUSTICE L.VICTORIA GOWRI

W.P.(MD)Nos.27556, 28329, 28449, 28607, 28940, 29570, 30196, 30271, 30448, 31014, 31035 of 2023, 272, 105, 113, 722, 1857, 4471 of 2024, 

27347, 27456, 28269, 28171, 28514, 28910, 28762, 28608, 29604, 29127, 29439, 29549, 29904, 30272, 30560 of 2023, 

1458, 1624, 1625, 1628, 1629, 1630, 1631, 1633, 1634, 4472, 1635, 1632, 1636, 1626, 1627, 1907 of 2024, 2714 of 2021, 

2015, 2016, 2017, 2018, 2140, 2141, 2142, 2143, 2144, 2145, 2146, 2147, 2148, 2212, 2234, 2270, 2946, 3218, 3279, 3446, 3459, 3508, 3548, 3702, 4005, 4006, 4007, 4008, 5051, 5769 and 5770 of 2024

and

W.M.P.(MD)Nos.23671, 23672, 23673, 24393, 24394, 24497, 24499, 24669, 24670, 24671, 24980, 24981, 24982, 25530, 25531, 26023, 26024, 26025, 26077, 26078, 26079, 26213, 26214, 26215,26588, 26590, 26592, 26611, 26612 of 2023, 131 of 2024, 

132, 133 145, 146, 267, 268, 269, 728, 731, 1859, 1861, 1862, 4306, 4307, 4309, 4310 of 2024, 23486, 23487, 23488, 23583, 23585, 23586, 24331, 24332, 24333, 24265, 24266, 24267, 24564, 24566, 24568, 24795, 24796, 24767, 24937, 24938, 24939, 24672, 24674, 25547, 25548, 25549, 25174, 25175, 25177, 25423, 25425, 25426, 25507, 25508, 25509, 25783, 25784, 25785, 26080, 26081, 26082, 26277, 26278, 26279 of 2023, 1498, 1670, 1660, 1661, 1669, 1647, 1648, 1652, 1653, 1662, 1663, 1664, 1666, 1658, 1659, 1654, 1655, 1649, 1651, 1656, 1657, 1665, 1667, 1679, 1680, 1668, 1671, 1921 of 2024, 10862 of 2021, 2022, 2029, 2023, 2026, 2136, 2139, 2138, 2140, 2141, 2142, 2145, 2149, 2143, 2222, 2224, 2240, 2242, 2278, 2937, 3180, 3239, 3240, 3427, 3428, 3436, 3437, 3473, 3474, 3493, 3494, 3617, 3619, 3889, 3896, 3891, 3903, 5443 and 5447 of 2024



>>> தீர்ப்பு நகல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




10.4.Finally this Court is bound to issue the following directions:(i)The Teachers who have acquired higher educational qualification before 10.03.2020 and whose application for grant of incentive in the scale of pay are pending are entitled to sanction of eligible incentive increments, in terms of the relevant G.Os prior to G.O.Ms.No.37, Personnel and Administrative Reforms (FR-IV) Department, dated 10.03.2020.

(ii)The Teachers who have acquired higher educational qualification before 10.03.2020 and who have not made any application for grant of incentive increment in the scale of pay are entitled to sanction of eligible incentive increments, in terms of relevant G.Os prior to G.O.Ms.No.37, once an application is made in this regard and the same is automatic.

(iii)The shift in policy by introducing lump sum reward to employees acquiring higher educational qualification on or after 10.03.2020 vide G.O.Ms.No.120, Human Resource Management (FR-IV) Department, dated 01.11.2021 and G.O.Ms.No.95, Human Resource Management (FR-IV) Department, dated 26.10.2023 is upheld.

10.5.In view of the fact, that Clause 6(vi) of G.O.Ms.No.37, dated 10.03.2023 is quashed, the impugned circular dated 23.10.2020, in W.P. (MD)No.2714 of 2021, issued for the purpose of giving effect to Clause 6(vi) of G.O.Ms.No.37, dated 10.03.2023, becomes ineffective and accordingly, the same is also quashed and this Court hereby direct the respondents to sanction advance increment for the higher qualifications as per relevant G.Os. prior to G.O.Ms.No.37, dated 10.03.2020.

10.6.In fine, these Writ Petitions stand partly allowed. There shall be no order as to costs. Consequently, connected miscellaneous petitions are closed.


ஊக்க ஊதிய உயர்வு - அரசாணை எண்: 37, நாள்: 10-03-2020 பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வு உண்டு - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு நகல்...

 


ஊக்க ஊதிய உயர்வு - அரசாணை எண்: 37, நாள்: 10-03-2020 பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வு உண்டு - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு நகல்...


Incentive Pay Hike - Incentive Pay Hike in the old way for higher education qualification holders before issuance of Ordinance No: 37, Date: 10-03-2020 - High Court Madurai Branch judgment copy...


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 12.06.2024

CORAM

THE HON'BLE MR.JUSTICE R.SURESH KUMAR

AND

THE HON'BLE MR.JUSTICE G.ARUL MURUGAN

W.A(MD)No.975 of 2024

and

C.M.P.(MD)No.7055 of 2024


ஊக்க ஊதிய உயர்வு செய்தி...


 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு அருள் முருகன் மற்றும் சுரேஷ்குமார் அவர்களின்  அமர்வில் 

10.03.2020க்கு முன்பு  அனுமதி பெற்று உயர் கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

இது அரசு ஆப்பில் செய்த வழக்காகும் இந்த அப்பீல் வழக்கிலும் அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவே 

 10.03.2020க்கு முன்பு முடித்தவர்களுக்கு பழைய முறையில்   ஊக்க ஊதியம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

 அதற்கான தீர்ப்பு நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொண்டு covered ஜட்ஜ்மெண்ட் என்ற முறையில் நீதிமன்றத்தில் எளிதாக ஆணைபெற முடியும்.

  


>>> உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு நகல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கற்பிக்கும் பணியே முதன்மையானது - தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மற்ற வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...


 கற்பிக்கும் பணியே முதன்மையானது - தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மற்ற வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...




10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 10.07.2024

CORAM :

THE HONOURABLE MR.R.MAHADEVAN, ACTING CHIEF JUSTICE

and

THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ

Writ Petition Nos. 26084, 26133, 27571, 27807, 28291, 32081, 32218, 32698 and 35350 of 2023

and

Writ Miscellaneous Petition Nos. 35331 and 7354 of 2023



>>> உயர்நீதிமன்றத் தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சென்னை உயர்நீதிமன்றத்தில் TET  தேர்ச்சி பெற்று மீண்டும் பணியில் சேர TRB EXAM எழுத வேண்டும் என்ற தமிழக அரசு நிலைப்பாட்டை எதிர்த்து 410 பேர் வழக்கு தொடுத்தனர்.


அந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே சீனியாரிட்டி லிஸ்டில் உள்ளோம் மேலும் TET தேர்ச்சி பெற்றுள்ளோம் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கழக அரசு வந்தால் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்


ஆனால் தற்போது TRB EXAM பணி நியமனத்திற்கு வைக்கப்படுகிறது அதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் நேரடியாக TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.


 அந்த வழக்கின் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் வழக்கு தொடுத்த 400 பேருக்கு பணி நியமனம் செய்வதில் முன் உரிமை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது...


410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு...


10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.


இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


188 பக்க தீர்ப்பு நகல் TET தேர்ச்சி பெற்றோர்  Seniority இல் உள்ளோர் நீதிமன்றம் சென்ற நிலையில்  410  பேருக்கும் பணி வழங்க வேண்டும் வெயிட்டேஜ் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் நீதிமன்றம் தீர்ப்பு...


துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாளிதழ் செய்தி...

 

 துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாளிதழ் செய்தி...








தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1995ம் ஆண்டுக்குப் பின்னர் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 1988ஆம் ஆண்டுக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக் கோரி 1995ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆனால், மனுதாரர்கள் 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றவில்லை எனக் கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. 

இதை எதிர்த்து 1995ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு தலைமை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1988 முதல் 1995 வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும். இந்த காலவரம்பு இல்லாமல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று வாதிட்டார்.

அரசுத்தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 1995ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த காலவரம்புக்குப் பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. அதனால் 1995 ஆம் ஆண்டுக்கு பின் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

23.8.2010க்கு முன்னர் NCTE Norms 2001ன் படி பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET இல்லாமல் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு...


 23.8.2010க்கு முன்னர் NCTE Norms 2001ன் படி பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET - Teachers Eligibility Test இல்லாமல் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு Writ Petition No.12410 of 2024...



Telangana High Court Judgment Order to consider promotion without TET for Teachers appointed as per NCTE Norms 2001 prior to 23.8.2010...



>>> தீர்ப்பு நகல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மனைவிக்கும் தண்டனை வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

 

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மனைவிக்கும் தண்டனை வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மனைவிக்கும் தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...


 முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி தெய்வநாயகி மீது 6.77 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துகளைக் குவித்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1992ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்தபோது, 1996ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ​​சக்திவேல் இறந்தார். 


சக்திவேல் மீது 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது மனைவி தெய்வநாயகிக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. அந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தெய்வநாயகியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். சக்திவேல் விசாரணையின் போது இறந்துவிட்டதால், அவரது மனைவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றும் தனது கணவர் லஞ்சம் பெறுவதைத் தடுப்பது ஒரு அரசு ஊழியரின் மனைவியின் கடமை என்றும் நீதிபதி கூறினார்.


இந்த நாட்டில் கற்பனை செய்யமுடியாத அளவு ஊழல் பரவலாக உள்ளது. ஊழல் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. வீட்டில் உள்ளவர்களே ஊழலுக்கு ஒரு காரணமாக இருந்தால், ஊழலுக்கு முடிவே இருக்காது என்றும் நீதிபதி அறிவுரை கூறினார். தவறாக சம்பாதித்த பணத்தின் பலனாக தேவநாயகியும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பதால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள அவர் வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 


இதனை எடுத்து தெய்வநாயகி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. விசாரணை நீதிமன்ற நீதிபதி விதித்த தண்டனையில் தலையிட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.


ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (Justice.இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்...


ஊக்க ஊதிய வழக்கு சார்ந்து - 10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்றிருந்தாலும் -LUMPSUM தொகை  மட்டுமே பெற முடியும் என தமிழக அரசு  சார்பாக - நீதிமன்ற வாதம் & தீர்ப்புகளை சுட்டிக் காட்டி -  பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை...


Regarding the case of incentive pay - On behalf of the Government of Tamil Nadu that even if you have completed higher education before 10.3.2020 - you can get only LUMPSUM amount - Pointing out court arguments & judgments - School Education Department Clarification...


ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.023902/கே/இ1/2024, நாள்:11.05.2024 - இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (நீதியரசர். இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்...


Director of School Education Proceedings Rc. No. 023902/K/E1/2024, Dated: 11.05.2024, to take advantage of the decision of already dismissed cases for cases filed challenging the Government's stance of providing incentive pay hike as a lump sum (One Time Lump Sum Amount). - Attachment: Madras High Court (Justice. Ilanthiraiyan) Judgment Copies of Dismissed Cases...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் நியமனத்தை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - 4 வார காலத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் ஆணை...


18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் நியமனத்தை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - 4 வார காலத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் ஆணை...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS - Reserved on : 12.03.2024 - Pronounced on : 29.04.2024 - CORAM: THE HON'BLE Ms.JUSTICE R.N.MANJULA - W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021 and W.MP.Nos.24249 of 2020, 3880, 3884, 225, 3886, 233 of 2021 & WP.No.19622 of 2020...



>>> Click Here to Download Judgment...



4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட  அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு...


இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணிநியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...



>>> TNPSC மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பயிற்சி பெற 20 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை G.O.(3D)No.03, Dated: 13-07-2021...



>>> TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு நேரடியாக பணியமர்த்த தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் - தரவரிசை ஆணைப்படி (முன்னுரிமை சரி செய்யாமல்)...


தமிழ்நாட்டில் நீர்நிலைப் பகுதிகளில் 2000ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்துசெய்ய வேண்டும் - தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் பற்றிய விவரங்களை 6 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்...



தமிழ்நாட்டில் நீர்நிலைப் பகுதிகளில் 2000ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்துசெய்ய வேண்டும் - தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் பற்றிய விவரங்களை 6 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்...


WP(MD) Nos.31214 & 31221 of 2023 and WMP(MD)Nos.26742, 26743, 26745 & 26752 of 2023, 07.03.2024...


In Tamil Nadu, Pattas issued after January 1, 2000 in water bodies should be canceled - High Court Madurai Branch order to upload details of water bodies across Tamil Nadu on website within 6 months...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு...


 29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் Judgment...


W.P.Nos.693 & 695 of 2024

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 11.01.2024



29.07.2011க்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் ஆண்டு ஊதிய உயர்வு (increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive) தேர்வுநிலை ஊதிய உயர்வு (Selection Grade) ஆகியவை உடனே வழங்கிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



>>> Click Here to Download Judgment W.P.Nos.693 & 695 of 2024 - IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS - DATED : 11.01.2024...


NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்(NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unauthorized Hospitals - High Court Madurai Branch Order to Insurance Companies - Attachment : Judgment Copy)...

 



NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் -  காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்(NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unauthorized Hospitals - High Court Madurai Branch Order to Insurance Companies - Attachment : Judgment Copy)...


அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து, 2010ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றேன். அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளேன்.



இந்நிலையில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதற்கு ரூ.1.25 லட்சம் செலவானது.



இந்தத் தொகையைத் திரும்பக் கேட்டு காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இல்லை என்பதால், மருத்துவ செலவுத் தொகையை வழங்க முடியாது என்று கிராமப்புற மருத்துவ சேவைகள் இயக்குநர் உத்தரவிட்டார். எனவே, எனக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.




இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.




பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது: 


அரசு ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே, மருத்துவ செலவுத் தொகை திரும்ப வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருக்கக் கூடாது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.




இந்த வழக்கில் கிராமப்புற மருத்துவச் சேவைகள் இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 6 வாரங்களில் மருத்துவ செலவுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.



Friends,

I send herewith a copy of Judgement delivered on 05.12.2023 by the Hon'ble High Court of Madras for your kind information. The Hon'ble Court has directed the United India Insurance Corporation to reimburse the medical charges in FULL incurred in connection with a Surgery taken  in a Non-Network Hospital within SIX WEEKS.



>>> Click Here to Download Judgment W.P.(MD)No.25304 of 2018 & W.M.P(MD)No.22916 of 2018, Dated : 05.12.2023, BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT...


நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் (W.P.No.8211 of 2009) உயர்நீதிமன்றம் தீர்ப்பு, நாள்: 12-02-2021 (Judgment of the High Court in the case by Tamil Nadu Graduate Teachers Federation (W.P.No.8211 of 2009) for promotion of B.T. Assistants (Graduate Teachers) working in middle schools to Post Graduate Teachers, Dated: 12-02-2021)...


நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் (W.P.No.8211 of 2009) உயர்நீதிமன்றம் தீர்ப்பு, நாள்: 12-02-2021 (Judgement of the High Court in the case by Tamil Nadu Graduate Teachers Federation (W.P.No.8211 of 2009) for promotion of B.T. Assistants (Graduate Teachers) working in middle schools to Post Graduate Teachers, Dated: 12-02-2021)...


>>> Click Here to Download Judgment of the High Court (W.P.No.8211 of 2009)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எம்.பில்., (M.Phil.,) தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு - வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 (M.Phil., Incentive pay increase which was disallowed by audit objection should be given back - Madras High Court Judgment - Case No: W.A.No.2328/ 2018, Judgment Date 04-08-2023)...

 

 M.Phil., தணிக்கை தடை....


முன்பு கோவை மண்டல தணிக்கை துறை...

கிட்டத்தட்ட M.Phil என்றாலே (அதுவும் 2007க்குப் பிறகு எனில் கட்டாயம்) தணிக்கைத் தடை என்ற நிலை.


குறிப்பாக வழக்கு எண்: 42657/2016, தீர்ப்பு நாள்: 06/09/2018ஐ காரணம் காட்டி எல்லோருக்கும் தடை என்ற நிலை...


தற்போது மண்டல தணிக்கை துறை இல்லை....


ஆனாலும் சென்னை தணிக்கையிலும் 

தற்போது 2007க்கு பிறகு எனில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், அரசாணை 91, உயர் கல்வி துறை, நாள்: 03-04-2009 இன் படி M.Phil தணிக்கை தடை செய்யப்பட்டு வருகிறது...


இதற்கு மிகப் பெரிய தீர்வு கிடைத்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023...

 

 பத்தி 34 இல் அரசாணை 91 நியமனம் பற்றி மட்டுமே சொல்கிறது அது ஊக்க ஊதிய உயர்வு குறித்து சொல்லவில்லை என்று மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கியுள்ளது...


பத்தி 35ல்....


 06-09-2018 நாளிட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருபவர்கள் தொடரலாம்...


இந்த தீர்ப்பு காரணமாக 2007-2009 வரை தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும்...


இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட சிவன் சாருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் 💐💐💐💐💐....


தணிக்கை தடை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு இது மிகப் பெரிய நிம்மதியான தீர்ப்பு...


தீர்ப்பு நகல் (Judgment Copy) இணைக்கப்பட்டுள்ளது... 🤝🏻


>>> எம்.பில்., (M.Phil.,) தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு - வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 (M.Phil., Incentive pay increase which was disallowed by audit objection should be given back - Madras High Court Judgment - Case No: W.A.No.2328/ 2018, Judgment Date 04-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு (Judgment in contempt of court case - Cont.P(MD)No.374 of 2020 in W.P.(MD)No.10915 of 2019 - Dated: 01.08.2023)...

 

>>> நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு (Judgment in contempt of court case - Cont.P(MD)No.374 of 2020 in W.P.(MD)No.10915 of 2019 - Dated: 01.08.2023)...


தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வாசகங்கள்:

“Apology is an act of contrition. Unless apology is offered at the earliest opportunity and in good grace apology is shorn of penitence. If apology is offered at a time when the contemnor finds that the Court is going to impose punishment it ceases to be an apology and it becomes an act of a cringing coward. The High Court was right in not taking any notice of the appellants expression of apology “without any further word”. The High Court correctly said that acceptance of apology in the case would amount to allow the offender to go way with impunity after having committed gross contempt.”






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப. அவர்களுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (Former School Education Secretary Mr. Pradeep Yadav I.A.S., who did not fulfill the court order. They have been sentenced to 2 weeks in jail)...

 

>>> நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப. அவர்களுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (Former School Education Secretary Mr. Pradeep Yadav I.A.S., who did not fulfill the court order. They have been sentenced to 2 weeks in jail)...



>>> நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு...



கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த 2019-ல் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பள்ளிக் கல்வித் துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ( தற்போதைய நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர்  / கூடுதல் தலைமைச் செயலாளர்) பிரதீப் யாதவ்  IAS, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிச்சாமி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாபுலா ஆண்டோ ஆகியோருக்கு இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - வரும் 9ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சரணடைய உத்தரவு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...