கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2025

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்:நன்றி இச் செல்வம்

குறள் எண்:1002
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருவான்ஆம் மாணாப் பிறப்பு.

பொருள்:
அனைத்தும் பொருளால் ஆகும் என்று பிறர்க்கு கொடுக்காத கருமியின் மறுமையில் இழிபிறப்பு உண்டாகும்.


பழமொழி :
A cracked bell never sounds well

உடைந்த சங்கு ஒரு நாளும் பரியாது


இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன். 

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

வாய்மைக்கு மிகவும் நெருங்கிய நண்பன் அச்சமின்மையே! -- நேரு


பொது அறிவு :

1. அணுவின் மைய பாகத்தை உருவாக்குவது எது?

நியூட்ரான் மற்றும் புரோட்டான்

2. இளம் அன்னப் பறவையின் பெயர் என்ன?

சிக்னட் cygnet


English words & meanings :

Medicine.    -     மருந்து

Nausea.     -    குமட்டல்


வேளாண்மையும் வாழ்வும் :

பல் துலக்கும் போதும், முகச் சவரம் செய்யும் போதும் தண்ணீர்க் குழாயை திறந்து விட்டுச் செல்லாமல் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்.


ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.vநோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.



நீதிக்கதை

உங்க பேரைச் சொல்லி....

கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார்.அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.

"உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.

"இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்குகிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,'' என்றனர்.

அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும்என்று நினைத்தார் கந்தசாமி.

"அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.

"அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும் அதில் அவர் கலந்து கொள்வார்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

"இந்தச் செய்தி எனக்குப் போதும். நான் சொல்வது போலச்செய்யுங்கள். உங்கள் துன்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன்,'' என்றார் கந்தசாமி.

""நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என்றனர்.

"எனக்கு ஒரு சண்டைச் சேவலும், இருநூறு பணமும் தேவை,'' என்றார்.தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.

உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒரு சண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கந்தசாமி.

பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் இருந்தது.பண்ணையாரை வணங்கிய அவர்,"ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது.

""அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது.பரிசுப் பணமாக நூறு பணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன்,'' என்றார்.

பணத்தை அவரிடம் நீட்டினார்.பணத்தைப் பெற்றுக் கொண்டார் பண்ணையார்.

"உன் சண்டைச் சேவல் நன்றாக உள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்து கொள். மேலும், மேலும்   உனக்கு  வெற்றி கிடைக்கும்,'' என்று பாராட்டினார்.

அடுத்த வாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.அவருடன் அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேர் வந்திருந்தனர்.

பண்ணையாரை வணங்கிய அவர்,"உங்கள் பெயரைச் சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்,'' என்று தந்தார்.

அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம் வந்தார்.அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.இதை பார்த்த பண்ணையார்,"என்ன வெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே?'' என்று கேட்டார்.

"நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.

இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்,'' என்றார் கந்தசாமி.

"நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?''என்று கோபத்துடன் கத்தினார் பண்ணையார்.

"சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?

"வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு. தோல்வி அடைந்தால் இழப்பு எனக்கா? இது என்ன நியாயம்? நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்,'' என்றார் கந்தசாமி.

அப்போதுதான் பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டார்.

வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளைஅவர்களிடம் தந்தார். "பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே' என்று வருந்தினார் பண்ணையார்.

அந்தப் பொற்காசுகளை ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார் கந்தசாமி.

நீதி: பேராசை பெரும் நஷ்டம்


இன்றைய செய்திகள்

01.04.2025

* அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

* வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப்ரல் 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்க உள்ளது.

* மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி செர்பிய வீரர் மென்சிக் சாம்பியன்.

* கால்பந்து காட்சி போட்டி: இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி.


Today's Headlines

* To address the increasing electricity demand, the Tamil Nadu Electricity Board plans to implement a 660-megawatt expansion project for the Ennore Thermal Power Plant.

   * A "ChatGPT" training workshop for business owners and entrepreneurs will be held in Chennai on April 3rd.

   * The Armed Forces Special Powers Act has been extended for another six months in Manipur and other northeastern states.

   * The death toll from the earthquake in Myanmar has risen to 2,056.More than 3,900 people have been injured.270 people are still missing, according to the Myanmar military junta.

   * Serbian player Mensik defeated Djokovic to win the Miami Open tennis championship.

   * The Brazilian legends team defeated the India All-Stars team in a football friendly match.


Covai women ICT_போதிமரம்


2 & 3 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

ஏப்ரல் 2 & 3 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


 கோவை, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 2ஆம் தேதி கனமழை எச்சரிக்கை


கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வரும் 3ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு


ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


01-04-2025 முதல் அமலுக்கு வரும் 100 நாள் வேலை திட்ட ஊதிய உயர்வு



 01-04-2025 முதல் அமலுக்கு வரும் 100 நாள் வேலை திட்ட ஊதிய உயர்வு


100-day work scheme wage hike effective from 01-04-2025


ரூ.319 ஆக இருந்த ஊதியம் நாளை முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்கப்படும்


தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 17 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு


அதிகபட்சமாக ஹரியானாவில் ரூ.26 உயர்த்தப்பட்டு ரூ.400ஆக 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயம்


ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ரூ.7 உயர்த்தப்பட்டு 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயம்


ஏப்ரல் 2025 - பள்ளி நாட்காட்டி



 ஏப்ரல் 2025-ஆம் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி 


April 2025 - School Calendar 


05.04.2025 - சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் 


ஏப்ரல் - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்


14-04-2025 - திங்கள் - அம்பேத்கர் பிறந்தநாள்

17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்

20-04-2025 - ஞாயிறு - ஈஸ்டர்



ஏப்ரல் - அரசு விடுமுறை நாட்கள் 


மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன்

தமிழ் வருடப் பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி




தேர்வுகள் விவரம் 


1 - 3ஆம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)

(முற்பகல் 10.00 - 12.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்


08-04-2025 (செவ்வாய்) - விருப்பமொழி 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்



4 & 5ஆம் வகுப்புகள்  (திருத்தப்பட்டது)

(பிற்பகல் 2.00 - 4.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்


08-04-2025 (செவ்வாய்) - விருப்பமொழி 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்


15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்


17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல் 


18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம்



6-9ஆம் வகுப்பு தேர்வுகள்


08-04-2025 (செவ்வாய்) -- தமிழ் 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 


16-04-2025 (புதன்) - கணக்கு 


21-04-2025 (திங்கள்) - அறிவியல் 


22-04-2025 (செவ்வாய் ) -  உடற்கல்வி


23-04-2025 - (புதன்) - சமூக அறிவியல் (6,7)


24-04-2025 -(வியாழன்) - சமூக அறிவியல் (8)


📒 30.04.2025 புதன் - ஆசிரியர்களுக்கு இந்தக் கல்வியாண்டின் கடைசி வேலை நாள்.


01-04-2025 முதல் மக்களின் டிஜிட்டல் தொடர்புகள் கண்காணிப்பு - ஒன்றிய நிதியமைச்சர் தகவல்



01-04-2025 முதல் மக்களின் டிஜிட்டல் தொடர்புகள் கண்காணிப்பு - ஒன்றிய நிதியமைச்சர் தகவல்


ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி ஒன்றில், ‘வருகிற புதிய நிதியாண்டு (ஏப்ரல் 1, 2025) முதல் (01-04-2025), வருமான வரி (Income Tax) துறை அதிகாரிகள் பொதுமக்களின் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் போன்ற டிஜிட்டல் தொடர்பு தளங்களைக் கண்காணிப்பார்கள். வருமான வரிச் சட்டம் – 2025-இன் விதிகளின்படி, பொதுமக்களுக்குச் சொந்தமான இந்தத் தகவல் தொடர்பு தளங்களின் கணக்குகளை நிதியமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணிக்கும். சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும். புதிய வருமான வரிச் சட்டமானது, வருமான கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனுமதிக்கிறது.பழைய சட்டத்தின் பெரும்பாலான விதிகளும் புதிய சட்டத்தில் இருந்தாலும், புதிய சட்டத்தின் முக்கிய நோக்கம் கணக்குகளை எளிமைப்படுத்துவதாகும். வரி ஏய்ப்பை நிரூபிப்பதற்கான ஆதாரமாக டிஜிட்டல் கணக்குகளில் காணப்படும் ஆதாரங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், செல்போன்களில் ரகசிய குறியீடுகள் மூலம் ரூ. 200 கோடி கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்து கைப்பற்றினோம். வாட்ஸ்அப் செய்திகள் மூலம் கிரிப்டோ சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டன. கணக்கில் வராத ரூ.200 கோடி பணத்தை மீட்க வாட்ஸ்அப் தொடர்பு உதவியது. கூகுள் மேப்ஸ் உதவியுடன், கருப்புப் பணத்தை மறைக்க அடிக்கடி செல்லும் இடங்களை அடையாளம் காண முடிந்தது. பினாமி சொத்துக்களின் உரிமையாளரைத் தீர்மானிக்க டெலிகிராம் கணக்குகள் பகுப்பாய்வு செய்யப்படும்’ என்று கூறினர்.


Kind Attention Taxpayers, File Updated ITR for AY 2022-23, 2023-2024 & 2024-25 by March 31st, 2025

 


Kind Attention Taxpayers,  File Updated ITR for AY 2022-23, 2023-2024 & 2024-25 by March 31st, 2025


Kind Attention Taxpayers


Please file Updated ITR in ITR-U for AY 2022-23, 2023-2024 & 2024-25 by March 31st, 2025 (if applicable) to avail lower additional tax and interest.  


Don’t delay, file today!


பெங்களூரு - காமாக்யா அதிவேக விரைவு தொடர்வண்டி ஒடிசாவில் விபத்து - காணொளி

 


ஒடிசாவில் பெங்களூரு - காமாக்யா அதிவேக விரைவு தொடர்வண்டி  விபத்து - காணொளி


Cuttack, Odisha: One person died and 8 injured after 11 coaches of 12551 Bangalore-Kamakhya AC Superfast Express derailed near Nergundi Station in Cuttack - Nergundi Railway Section of Khurda Road Division of East Coast Railway at about 11:54 AM on 30-03-2025


(Drone visuals from the spot)



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி

தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி பெங்களூரு: Ok Credit என்ற நிற...