கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்



𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல் 


மாற்றங்கள் மலர்ந்தே தீரும்


* அது ஒரு தனியார் சர்வதேசப் பள்ளி, அங்கே 100க்கு 2 மதிப்பெண் குறைந்து போனதற்காக 10 வயது மாணவன் ஒருவன் மனமுடைந்து அழுகிறான்.அவனைச் சமாதானப்படுத்தப் பார்க்கிறார் ஆசிரியர். இயலவில்லை. தலைமை ஆசிரியர் வந்து பேசுகிறார். அப்படியும் பையனை சமாதானப்படுத்த முடியவில்லை. அதைப் பார்த்து தலைமையாசிரியர் வருந்தமடைகிறார். அம்மாணவனின் பெற்றோரிடம் பேசிப் பார்க்கிறார். ஆனால் பயனில்லை.


* பள்ளி நிர்வாகமும் பெற்றோரை மகிழ்விக்கவே பார்க்கிறது.


* இன்றைக்குப் பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகள் அனைத்தையும் கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதிலும் தங்கள் பிள்ளை மட்டுமே சிறந்தரவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், குழந்தைகளைத் தங்கள் விருப்பப்படி ஆட்டுவிக்கிறார்கள். தங்கக் கூண்டில் வளர்க்கப்படும் சர்க்கஸ் விலங்கைப் போல பிள்ளைகள் வளர்கிறார்கள். இதனால் அத்தகைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளும், பெற்றோரின் ஆசை மரங்களை உலுக்கிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொள்கிறார்கள்.


* குழந்தைகள் மீதான அழுத்தங்களை எவ்வளவு காலம் தான் பொறுப்பது? தலைமையாசிரியர் லூ வாய் ஹங் வருத்தம் அடைகிறார். தனது வேலையை ராஜினாமா செய்கிறார்.லூ வீட்டிலிருக்கும் போது ஒரு செய்தியைப் பார்க்கிறார். ஒரு கிராமத்தில் இருக்கும் மழலையர் பள்ளியைப் பற்றிய செய்தி அது.


* யுவென் லாங் என்ற கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி, ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பழமையானது. மூன்று வகுப்புகளையும் சேர்த்து ஐந்து குழந்தைகளே படிக்கிறார்கள். இந்தக் கல்வியாண்டில் ஒரு குழந்தை தேர்ச்சி பெற்று வேறு பள்ளிக்குப் போய்விடும். விதிமுறைகளின்படி ஐந்து பேருக்குக் குறைவாக இருந்தால் பள்ளியை மூட வேண்டும். கிராம சபையால் 4500 ஹாங்காங் டாலர் மட்டுமே மாதச் சம்பளம் தர முடியும். ஆகவே அங்கு ஆசிரியரும் இல்லை. அந்தப் பள்ளியை இப்போதே மூடிவிட்டால் என்ன?


* செய்தியைப் பார்த்ததும் லூ வருத்தமடைகிறார். மறுநாள் அந்தக் கிராமத்திற்குச் செல்கிறார். பள்ளியைப் பற்றிய செய்தி சமூக ஊடகங்களிலும் பரவியதால் பள்ளியை மூடிவிடுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள்.லூ அவர்களோடு பேசுகிறார். கிராமத் தலைவரைப் பார்க்கிறார்."மிக மிகக் குறைவான சம்பளம் என்றாலும் ஆசிரியராகப் பணியாற்ற விருப்பமாக இருக்கிறேன்" என்று சொல்கிறார்.


* ஆசிரியர் கிடைத்துவிட்டதால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி."ஐந்து குழந்தைகளுக்கு மூன்று வகுப்புப் பாடங்களை எப்படி நடத்த முடியும்? எப்படியும் பள்ளியை மூடிவிடலாம்" என்று ஊரார் சிலர் பேசுகிறார்கள்.


* குழந்தைகளுக்கு முழுமையான ஈடுபாட்டோடு லூ கற்பிக்கிறார். வயதிற்கேற்ற செயல்பாடுகள் வாயிலாகக் குழந்தைகள் கற்கிறார்கள். கற்றல் கொண்டாட்டமாக ஆகின்றது.


* லூ குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் பெற்றோர்களிடம் பேசுகிறார். இருக்கும் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதில் கவனம் செலுத்துகிறார். பெற்றோரின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறார். பெற்றோருக்கும் பள்ளிக்கும் உள்ள பிணைப்பு வலுவாகிறது.


* ஆசிரியர், பெற்றோரின் முயற்சியால் புதிய கல்வியாண்டில் இரண்டு குழந்தைகள் பள்ளியில் சேருகிறார்கள். ஆறு குழந்தைகள் படிப்பதால் பள்ளி காப்பாற்றப்படுகிறது.


* ஹாங்காங்கைச் சார்ந்த கிராமப் பள்ளியைப் பற்றிய உண்மைக் கதையே '𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫' என்ற திரைப்படமாக 2015ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து இப்பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது 60 குழந்தைகள் படிக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியோடு படம் நிறைவடைகிறது.


* குழந்தை நேயமான ஆசிரியர்களும் சமூகமும் இணையும்போது மாற்றங்கள் மலர்ந்தே தீரும்.


* 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫' திரைப்படத்தை https://youtu.be/3w2Pgtn_OIM?si=aZO0dPM96yihakcy யூடியுப் தளத்தில் காணலாம்.


தமிழ் கதை விளக்கம்

https://youtu.be/uq5drEsjKtA?si=C7a3xtdj1TeDk3Kj


* 𝐓𝐡𝐢𝐬 𝐀𝐫𝐭𝐢𝐜𝐥𝐞 𝐢𝐬 𝐨𝐛𝐭𝐚𝐢𝐧𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 *கனவு ஆசிரியர்* ஆசிரியர்களுக்கான மாத இதழ்.


* தமிழ்நாடு அரசு,                     *பள்ளிக் கல்வித் துறை*



ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் "Where is the Friend's House?" திரையிடுதல் - DSE Proceedings



ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் "Where is the Friend's House?" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள், செயல்முறைகள் வெளியீடு


Issuance of guidelines and Proceedings of the Director of School Education regarding the screening of the children's film "Where is the Friend's House?" for the month of July.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" திரையிடுதல் - இயக்குநரின் செயல்முறைகள்

 


ஜூன் 2026 மாத குழந்தைகள் திரைப்படம்


Proceedings of the Director of School Education regarding the screening of the children's film "The Little Princess" for the month of June.


ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்


படம் வெளியான ஆண்டு: 1935


இயக்கம்: Mr. Walter Lang


The Little Princess- தி லிட்டில் பிரின்ஸஸ்


இந்தக் கதை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை பின்னணியாகக் கொண்டது. சாரா கிரூவ் என்ற சிறுமி, தனது தந்தை கேப்டன் ரெஜினால்ட் கிரூவுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறாள். அவரது தந்தை பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக இந்தியாவில் பணியாற்றுகிறார். அன்பும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த சாரா, புத்திசாலித்தனம், கற்பனைத் திறன். கருணை போன்ற நற்குணங்களைக் கொண்டவள்.


சாராவின் தந்தை இரண்டாம் ஆங்கிலோ-போயர் போரில் பங்கேற்கத் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். சாரா, இங்கிலாந்தில் இருக்கும் மிஸ் மின்சின் நடத்தும் விடுதிப் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.


போரின் போது, சாராவின் தந்தை இறந்துவிட்டார், அவருக்குச் சொத்துகள் ஏதும் இல்லை என்றும் செய்தி வருகிறது. பள்ளியில் அனைவராலும் மதிக்கப்பட்டிருந்த சாராவைப் பணிப்பெண்ணாக ஆக்குகிறார்கள்.


அவமானங்கள், தனிமை ஆகியவற்றை எதிர்கொண்டாலும், சாரா தனது அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, மன உறுதி ஆகியவற்றை இழக்காமல் வாழ்கிறாள். தனது தந்தை உயிருடன் இருப்பதாக நம்பிக்கை கொள்கிறாள்.


சாராவின் நம்பிக்கை எவ்வாறு அனைவரின் மனதையும் மாற்றுகிறது என்பதே இப்படத்தின் கதை.


இந்தத் திரைப்படம் மாணவர்களிடம் அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, சமத்துவம் போன்ற மதிப்புகளை வளர்க்க உதவும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக அமைகிறது.



ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess"..


Movie Link

👇👇👇

https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard



February's Children's Film Ayali - Part 2 - DSE Proceedings



பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் அயலி - பாகம் 2 திரையிடுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Screening of February's Children's Film Ayali - Part 2 - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



ஜனவரி மாத சிறார் திரைப்படம் Ayali Download Link

 


ஜனவரி மாத சிறார் திரைப்படம் அயலி தரவிறக்கம் செய்வதற்கான வலைதள முகவரி இணைப்பு 


Website link to download January's children's movie Ayali


👇👇👇


https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard



📽️ ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடுவதற்க்கான வழிமுறைகள்:


▪️ பள்ளி EMIS உள்ளீட்டு தளத்தில், Clubs Option-இல் உள்ள Children Film பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


🔎 Movie Link

https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard


OR


🖇️ EMIS Website Link:

https://emis.tnschools.gov.in/dashboard


🪜 EMIS -> School Login -> School -> Clubs -> Children Film


▪️ Download செய்தும் காண்பிக்கலாம். அப்படியே Play செய்தும் காண்பிக்கலாம். 


நன்றி!



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


Kurangu Pedal - October 2025 Month Children's Film



 குரங்கு பெடல் - அக்டோபர் மாதம் சிறார் திரைப்படம் - தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை


Kurangu Pedal - October 2025 Month Children's Film - Tamilnadu Government School Education Department 



>>> காணொளியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


 


குரங்கு பெடல் திரைப்படத்தின் சிறப்புகள் : இயக்குநர் திரு. கமலக்கண்ணன் அவர்களின் பேட்டி

 


குரங்கு பெடல் திரைப்படத்தின் சிறப்புகள் : இயக்குநர் திரு. கமலக்கண்ணன் அவர்களின் பேட்டி


Highlights of the movie Kurangu Pedal: Interview with Director Mr. Kamalakannan



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படுவதன் நோக்கம் : குரங்கு பெடல் திரைப்பட இயக்குநர் திரு.கமலக்கண்ணன் அவர்களின் கருத்து


ஒவ்வொரு மாதமும் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படுவதன் நோக்கம் குறித்து குரங்கு பெடல் திரைப்பட இயக்குநர் திரு.கமலக்கண்ணன் அவர்களின் கருத்து


Kurangu Pedal film director Mr. Kamalakannan's opinion on the purpose of screening children's films in schools every month








அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - "Kurangu Pedal" - இயக்குநரின் செயல்முறைகள்



அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - "குரங்கு பெடல்" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்


Proceedings of the Director of School Education regarding the screening of the October 2025 Children's Film - "Kurangu Pedal"



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான இணைப்பு

 


📽️  ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான Youtube இணைப்பு



August 2025 Month Children Film " The White Balloon " திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான Youtube இணைப்பு



https://drive.google.com/drive/folders/1va4Jv1-2pCi1W8L3ZPukS35OjJmYUv1G



அன்புடன்.,

பெ. அலெக்ஸ் பாண்டியன்,

BRTE, BRC - சேடபட்டி,

99433 311042





>>> The White Balloon திரைப்படம் காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





>>> The White Balloon திரைப்படம் கதைச் சுருக்கம் காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




>>> The White Balloon திரைப்படம் தமிழ் விளக்கம் காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


August children's film "The White Balloon" - DSE Proceedings



ஆகஸ்ட் மாத சிறார் திரைப்படம் The White Balloon திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Screening of the August children's film "The White Balloon" - DSE Proceedings 


பள்ளிகளில் 2025 ஆகஸ்ட் மாதம் திரையிடப்பட வேண்டிய சிறார் திரைப்படம் திரையிடுதல் சார்ந்து வழிகாட்டுதல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


July month Movie Screening report 2025-2026



July month Movie Screening report 2025-2026



Ma'm/ Sir,

This year our children are back with their *TOP 10* micro movies.


*Details:*

*The movie link:* *TOP 10* are live on HMs & Teacher's EMIS module

*Download:* Please download & play the movie in *FULL SCREEN* mode



🚨 Please Do not play the movie on *Mobile phone* as it will take away important detailing in the movie.


Thank you.


*Links:*


*July month Movie Screening report 25-26* 🔗 

https://forms.gle/M2pZy9n6arNJYcwm7


*Movie screening report for viewing* 🔗 

https://docs.google.com/spreadsheets/d/1b_DdlWPFi-MKhvtmkglD1WqNiVagbBWgMkeuZFZ-sSo/edit?usp=sharing


July 2025 Children Movie TOP 10



 ஜூலை 2025 மாதம் குழந்தைகள் திரைப்படம் டாப் 10 : தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு


July 2025 month Children Movie TOP 10 : Tamilnadu School Education Department Released


July 2025 month Children Movie TOP 10


இயக்கம்: 6-9 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள்


வெளியான ஆண்டு: 2024-25

மொழி: தமிழ்


திரைப்படத்தின் காலம்: 45 நிமிடங்கள்





>>> YouTubeல் திரைப்படத்தைக் காண இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


"A Dream of Trees" Children Film Screening - January 2025 - Issuance of Guidelines - DSE Proceedings





ஜனவரி 2025 மாத சிறார் திரைப்படம் A Dream of Trees (மரங்களின் கனவு) திரையிடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


January 2025 Movie Screening Circular 2024-25 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


"A Dream of Trees" Children Film Screening - January 2025 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 08-01-2025 & Synopsis


பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "A Dream of Trees (மரங்களின் கனவு)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - ஜனவரி 2025 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் -  வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 08-01-2025 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "A Dream of Trees" Juvenile Film Screening - January 2025 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 08-01-2025 & Synopsis)...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 08-01-2025 & கதைச்சுருக்கம்...



ஜனவரி மாதம் சிறார் திரைப்படம் "மரங்களின் கனவு" Movie link

👇👇👇


https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard


"Beno Zephine" Children Film Screening - December 2024 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis




டிசம்பர் மாத சிறார் திரைப்படம் BENO ZEPHINE (பெனோ) திரையிடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


December Movie Screening Circular 2024-25 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



"Beno Zephine" Children Film Screening - December 2024 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis



பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பெனோ (Beno)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2024 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் -  வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 02-12-2024 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Beno Zephine" Children Film Screening - December 2024 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis)...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 02-12-2024 & கதைச்சுருக்கம்...


Screening of Juvenile Film (TOP 10) in November - DSE Proceedings



நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் - பின்பற்ற வேண்டிவை - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Screening of Children's Film (TOP 10) in November -  Proceedings of Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) movie download link

👇👇👇


https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard


பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பன்ட் (Bunt)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 06-12-2023 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Bunt" Children Film Screening - December 2023 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 06-12-2023 & Synopsis)...



டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பன்ட் (Bunt)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் -  வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 06-12-2023 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Bunt" Children Film Screening - December 2023 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 06-12-2023 & Synopsis)...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 06-12-2023 & கதைச்சுருக்கம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...