கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதிவுத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

G.O. (Ms) No.69 , Dated: 07.07.2026 | வருகையில்லா ஆவணப்பதிவு



17.08.2026 முதல் வருகையில்லா ஆவணப்பதிவு ( Presenceless Registration) நடைமுறைக்கு வருவதாக அரசாணை G.O. (Ms) No.69 , Dated: 07.07.2026 வெளியீடு



Anywhere Registration Registration Department Project STAR 3.0 Phase-I Mandating two deeds only through Presenceless Registration Administrative Sanction Accorded Orders Issued.


COMMERCIAL TAXES, REGISTRATION AND RELIGIOUS ENDOWMENTS (J2) DEPARTMENT


G.O. (Ms) No.69 , Dated: 07.07.2026


பராபவ, ஆனி 23, திருவள்ளுவர் ஆண்டு, 2057. Read:


1. G.O. (Ms.) No.130, Commercial Taxes and Registration (J2) Department, dated 12.09.2022.


2. G.O. (Ms.) No.131, Commercial Taxes and Registration


3. G.O. (Ms.) No.132, Commercial Taxes and Registration (J2) Department, dated 12.09.2022.


4. G.O. (Ms) No.73, Commercial Taxes and Registration (U2) Department, dated 12.07.2023.


5. Inspector General of Registration Circular No.9644/CS1/2025, dated 22.01.2026


6. From the Inspector General of Registration letter No.9644/CS1/2025, dated 29.06.2026.


ORDER:


The Inspector General of Registration in his letter sixth read above has stated that the Government of Tamil Nadu is a pioneer in digitization initiatives for the entire country starting with the implementation of STAR platform. In pursuit of continuous technological advancement, the Registration Department had developed STAR 2.0, a comprehensive web based software designed to serve as a turnkey solution for all registration related services.


2. The Inspector General of Registration has also stated that to further augment the transparency & efficiency of the registration process, it is essential to launch anywhere registration. Under this initiative, apart from the technical facilitation necessary administrative orders to mandate the presentation of the documents online will be made. In the Phase I of the Anywhere Registration, the deeds viz., First Sale of Plot with consecutive Deposit of Title Deed for Plot promoters and First Sale of Flat with consecutive Deposit of Title Deed for Builders may be mandated to be presented only by online under the Presenceless mode and thus dispensing the physical visit to Sub-Registrar offices. As per existing citizen charter, the mandate of same day approval and return allowed for the physically submitted documents shall be applicable for presenceless registration also and the Security measures have been ensured to make the process of Presenceless Registration safe and secure.


3. The Inspector General of Registration has further stated that the process of Presenceless Registration has been developed in accordance with the Registration (Tamil Nadu Amendment) Act, 2021 notified in the Government Order first read above and Online Registration Rules, notified in the Government Order second read above. The Online Registration rules have been framed by amending the Section tion 32, 52 and 69 of the Registration Act, 1908. As per the Rules, the document shall be submitted by appending the biometric thumb, capturing of digital fingerprint, capturing of digital photo through the software module and Aadhaar number of the executants and the attesting witnesses are mandatory. The captured finger print shall be compared with Aadhaar database for proving the identity of the executants and witnesses. The Registering Officer shall ensure that the document is in conformity with the provisions contained in the Act and Rules, Orders/Circulars issued thereunder and also that it conforms to the provisions contained in any other enactment which has bearing on registration of a document. This ensures the legal sanctity of the documents registered online. In the Government Order third read above, the list of 18 documents have been notified which may be presented through electronic means for online registration. In Government Order fourth read above, orders have been issued for administrative and financial sanction for implementation of STAR 3.0 and appointment of Consultants, so as to rejuvenate STAR 2.0 with an ambitious STAR 3.0 with innovative cutting edge technologies, considering various baselines including introduction of faceless Registration for all deeds by using latest technology. As a part of the said initiative, under project 3.0 as SPRINT 118 citizen centric services were launched on 22.1.2026 to ensure registration in a simplified and efficient manner. Based on the above Government Order the Inspector General of Registration in his circular fifth read above has instructed that Previously Registered Documents are not necessary for online Registration and the Citizens will complete the process of Registration hassle free without visiting to the Sub Registrar Offices, no physical touch points in registration of the 2 deeds and the documents can be submitted for registration from anywhere anytime (24*7*365).


4. The Inspector General of Registration has further stated that Capacity building for Stakeholders, Training sessions were conducted to all Stakeholders on 10.06.2026 and 12.06.2026 Including Bankers, NBFCs, Document Writers, Advocates and other Stakeholders including CREDAI, BAI, and etc. The suggestions and feedback from the stakeholders were incorporated in the software for seamless Paperless Registration Process. Apart from the above in order to help the stakeholders for seamless registration, an exclusive Call Centre by including Department officials and Technical team of M/s.TCS System Integrator of STAR 3.0 will be setup..


5. The Inspector General of Registration has therefore requested the Government to issue appropriate orders to mandate the presentation of deeds under 'Anywhere Registration' as per the e-Registration Rules as and when the necessary conditions essential for roll out such as software readiness, capacity building to stakeholders are fulfilled for considering the technical readiness and legal sanctity and the need to provide better services to the citizens and to permit the Inspector General of Registration to mandate the two deeds namely First Sale of Plot (Plot promoters), First Sale of Flat (Builders) with consecutive Deposit of Title Deeds only under the Presenceless Registration with effect from 17-08-2026 as part of Phase-I of 'Anywhere Registration'.


6. The Government, after careful examination of the proposal of the Inspector General of Registration hereby accord administrative sanction to mandate the presentation of deeds under anywhere as per the e-Registration Rules as and when the necessary conditions essential for roll out such as software readiness, capacity building to stakeholders are fulfilled and also permits the Inspector General of Registration to mandate the two deeds. namely First Sale of Plot (Plot promoters), First Sale of Flat (Builders) with consecutive Deposit of Title Deeds only under the Presenceless Registration with effect from 17-08-2026 as part of Phase-I of 'Anywhere Registration' and order accordingly.


(BY ORDER OF THE GOVERNOR)


J.KUMARAGURUBARAN 

SECRETARY TO GOVERNMENT


To

The Inspector General of Registration, Chennai-600028. 


Copy to:-

The Senior Personal Assistant to Hon'ble Minister (Commercial Taxes and Registration), Chennai-600009. 

The Senior Private Secretary to Secretary to Government, Commercial Taxes, Registration and Religious Endowments Department, Chennai-600009. Stock file/ Spare copy.


//FORWARDED BY ORDER//


SECTION OFFICER




>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




In-person-visit-free document registration becomes mandatory from 17.08.2026



பதிவுத் துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப் பதிவு 17.08.2026 முதல் கட்டாயம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Online, in-person-visit-free document registration in the Registration Department becomes mandatory from 17.08.2026 | Tamil Nadu Government Press Release


செய்தி வெளியீடு எண்: 348 , நாள்: 07.07.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



"பதிவுத்துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு"


மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்


திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தகவல்


மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (07.07.2026) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் அலுவலர்/தனித்துணை (5) தணிக்கை). ஆட்சியர் (முத்திரை) மாவட்ட மற்றும் வருவாய் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:


தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் புதிய ஆட்சி பொறுப்பேற்றபின் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அலுவலர்கள் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய இருக்கை வசதியை ஏற்படுத்தி, அவர்களுடைய குறைகளை கவனமாக விசாரித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்த்து, ஆவணப் பதிவுகளை உடனடியாக முடித்து, அன்றைய தினமே உரிய நபர்களிடம் பத்திரங்களை ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


பின்னர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:


மாண்புமிகு தமிழ்நாடு அவர்கள் முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்படும் என்பதை தெரிவித்தார். அதேபோல் அனைத்து துறைகளிலும் அதனை செயல்படுத்தும் விதமாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அறிவுரை வழங்கி வருகிறார். அந்த வகையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று எனது தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


தற்பொழுது அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே சார்பதிவாளர் நிலை அலுவலர்களுக்கு மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. 10.05.2026 முதல் நாளது வரை 259 சார்பதிவாளர்களைப் பொறுத்து மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 249 சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமல்லாமல், 10 நிர்வாக சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேற்கண்ட மாறுதல் ஆணைகள் அனைத்தும் பணியாளர்களின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டும், வெளிப்படைத் தன்மையுடனும் சார்பதிவாளர்களின் திறன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் அலுவலகங்கள் மற்றும் பெருமளவில் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும் அலுவலங்களில், நிரந்தர சார்பதிவாளர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் விதமாக இம்மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி மாறுதல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்தும், நிர்வாக நலனை முன்னிறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ள இம்மாறுதல் ஆணைகள் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்திட வழிவகுக்குகிறது.


மேலும், பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24 x 7 x 365) இணையவழி தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான"வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)" நடைமுறை 17-08-2026 முதல் கீழ்க்கண்ட ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப்படுகிறது.


அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)


ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)


புதிய நடைமுறை


1. பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை (Login) தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.


2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.


3. ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.


4. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.


5. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.


6. சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண இரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.


7. பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


8. பதிவுச்சட்டம், 1908-ல் விதி 32,52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு, இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


9. இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும்.


தொழில்நுட்ப தேவைகள்


1. இணைய இணைப்பு


2. ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல் 0 & எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப் படலம் கவரும் கருவி


3. புகைப்படக்கருவி (Webcam)


இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பத்திரப் பதிவுத்துறை தலைவர் திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப.. கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



பத்திரம் பதிவு செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்



பத்திரம் பதிவு செய்யும்  முன்பு கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க


சொத்துக்கள் வாங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டியவை

           

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரையப் பத்திரம் ஆகும்.


2. மேற்படி கிரையப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரையப் பத்திரபதிவு . இதன்படி பதியப்படுகிறதா என்று கவனிக்கவும்.


3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா , மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.


4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரையப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். 


இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.


5. கிரையம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இனிசியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் .


6. கிரையம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,


👉அவர் வேறு நபரிடம் கிரையம் வாங்கி இருக்கலாம்.


👉அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.


👉உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.


👉பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.


👉பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரையம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.


7. கிரையம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரையம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அனைத்து தொடர் ஆவணங்களையும் ( லிங்க் டாகுமென்ட் ) வரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிகச்சிறப்பானது ஆகும்.


8. கிரையம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். 

எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது என தெளிவாக குறிப்பிட வேண்டும்.


9. கிரையம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.


1. தானம்


2. அடமானம்


3. முன் கிரையம்


4. முன் அக்ரிமெண்ட்,


5. உயில்


6. செட்டில்மெண்ட்,


7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,


8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்


9. வாரிசு பின் தொடர்ச்சி,


1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.


11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,


12. சொத்து ஜப்தி,


13. சொத்து ஜாமீன்,


14. பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,


15.வங்கி கடன்கள்,


16. தனியார் கடன்கள்,


17. சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,


18. சிவில், கிரிமினல் வழக்குகள்,


19. சர்க்கார் நில ஆர்ஜிதம்,


20.நிலக்கட்டுப்பாடு ,


21. அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,


22. நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,


23. பத்திரப்பதிவு சட்டம் 47(அ) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை


24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.


10. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். 


எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதியளித்து இருக்கவேண்டும்.


11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், வருவாய் கிராமம் , மஜரா, புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கவேண்டும். 


தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். 


மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், 


நிலத்தின் பட்டா எண், 


புதிய சர்வே எண், 


பழைய சர்வே எண், 


பட்டாபடி சர்வே எண்


தெளிவாக எழுதியிருக்க வேண்டும்.


12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். 


மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .


13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாளப் படுத்த வேண்டும். 


நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.


14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். 


எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.


15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.


16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.



அக்டோபர் 24 மற்றும் 27 ஆம் தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்பு : கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

அக்டோபர் 24 மற்றும் 27 ஆம் தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்பு : கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு 


சுபமுகூர்த்த நாளான அக்டோபர் 24 மற்றும் 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு




பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை & பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை வெளியீடு

 

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை (நிலை) எண் : 77, நாள் : 29-03-2025 வெளியீடு - அரசாணை குறித்த தெளிவுரை தொடர்பாக பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை


G.O. (Ms) No : 77, Dated : 29-03-2025 - Reducing the registration fee by 1% to Houses, plots & agricultural lands worth up to ₹10 lakh registered in the name of women - Government Order & Circular issued by the Head of Registration Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Sub Registrar Offices will function on Saturdays - Head of Registration Department


சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் - பதிவுத் துறை தலைவர் 


Offices of the Sub Registrars will function on Saturdays - Head of Registration Department


 அரசின் வருவாயை பெருக்கும் வகையில். மாநிலம் முழுவதும் பதிவுத்துறையில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்து சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு



Document registration will be held tomorrow (February 11)


 தைப்பூசத்தை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாளை (பிப்ரவரி 11) ஆவணப் பதிவுகள் நடைபெறும் என பத்திரப் பதிவுத்துறை அறிவிப்பு


Department of Registration announced that document registration will be held tomorrow (February 11) despite the government holiday being declared on the occasion of Thai poosam



Today (02-02-2025) deed registration offices will be operational

 இன்று (02-02-2025) பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்


தமிழ்நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு.


மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் இன்று அலுவலகங்கள் இயங்கும்.


ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிக்கை.




அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்வதாக சார்பதிவாளர்கள் மீது புகார் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...

 அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்வதாக சார்பதிவாளர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட தணிக்கை பதிவாளர் தீவிரமாகக் கண்காணித்து அங்கீகாரம் இல்லா மனையைப் பதிவு செய்தால் உடனடி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு. அதன்பேரில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது கடும் நடவடிக்கை...



சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அனுமதிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் உத்தரவு...

 சார்பதிவாளர்கள் தங்களது அலுவலகங்களில் வேலை நிமித்தமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அனுமதிக்க கூடாது என்று பதிவுத்துறை  தலைவர் உத்தரவு...




பதிவுத்துறை - பொதுமக்களுக்கு வழங்கப்படும்‌ சேவைகள்‌ - குடிமக்கள் சாசனம்...


பதிவுத்துறை - பொதுமக்களுக்கு வழங்கப்படும்‌ சேவைகள்‌ - குடிமக்கள் சாசனம் - Registration Department - Services provided to the public - Charter of Citizens...


1. பதிவு பொதுமக்களுக்கு வழங்கப்படும்‌ சேவைகள்‌ 

2. ஆவணங்கள்‌ பதிவு செய்தல்‌ 

3. ஆவணத்தில்‌ தெரிவிக்கப்பட வேண்டிய விவரங்கள்‌ 

4. ஆவணம்‌ தாக்கல்‌ செய்ய தேவைப்படும்‌ விவரங்கள்‌ 

5. உயில்‌ பதிவு 

6. சான்றிடப்பட்ட நகல்கள்‌ 

7. திருமணங்கள்‌ பதிவு 

8. பிறப்பு இறப்பு சான்றிதழ்‌ 

9. சீட்டுகள்‌ 

10. சங்கங்கள்‌ 

11. கூட்டு வணிக நிறுவனங்கள்‌ 

12. குடிமக்களுக்கு தகவல்‌ அளித்தல்‌ 

13. சட்டப்பூர்வமான தீர்வுகள்‌ 

14. தகவல்கள்‌ 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புவியியல் ஆயங்களுடன் (Geo Co-ordinates) கூடிய புகைப்படமும் இணைக்கப்பட வேண்டும் - பதிவுத் துறையின் செய்தி வெளியீடு எண்: 1891, நாள்: 15-09-2023 (A photograph with Geo Co-ordinates of the properties should also be attached to the documents coming to the Deed Registry - Registration Department Press Release No: 1891, Dated: 15-09-2023)...

 

பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புவியியல் ஆயங்களுடன் (Geo Co-ordinates) கூடிய புகைப்படமும் இணைக்கப்பட வேண்டும் - பதிவுத் துறையின் செய்தி வெளியீடு எண்: 1891, நாள்: 15-09-2023 (A photograph with Geo Co-ordinates of the properties should also be attached to the documents coming to the Deed Registry - Registration Department Press Release No: 1891, Dated: 15-09-2023)...


>>> பதிவுத் துறையின் செய்தி வெளியீடு எண்: 1891, நாள்: 15-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த தினமான வரும் 21ம் தேதி (21-08-2023) அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பத்திரம் பதிவு செய்ய ஏற்பாடு (Arrangements will be made to register additional deed in all Sub-registrar offices on 21st of the auspicious day of Avani month)...


>>> ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த தினமான வரும் 21ம் தேதி (21-08-2023) அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பத்திரம் பதிவு செய்ய ஏற்பாடு (Arrangements will be made to register additional deed in all Sub-registrar offices on 21st of the auspicious day of Avani month)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01-01-1950 முதல் 31-12-1974 வரையிலான வில்லங்க சான்றுகள் மேலேற்றம் செய்தல் - நிதி ஒதுக்கீடு தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் செய்தி வெளியீடு எண்: 1485, நாள்: 26-07-2023 (01-01-1950 to 31-12-1974 Upload of Encumbrance Certificate - Commercial Taxes and Registration Department Government Secretary Press Release No: 1485, Dated: 26-07-2023)...



>>> 01-01-1950 முதல் 31-12-1974 வரையிலான வில்லங்க சான்றுகள் மேலேற்றம் செய்தல் - நிதி ஒதுக்கீடு தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் செய்தி வெளியீடு எண்: 1485, நாள்: 26-07-2023 (01-01-1950 to 31-12-1974 Upload of Encumbrance Certificate - Commercial Taxes and Registration Department Government Secretary Press Release No: 1485, Dated: 26-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவர அறிக்கையை ஜூலை 25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு (Order to file property statement of registration officers and all employees and their families by July 25)...



>>> பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவர அறிக்கையை ஜூலை 25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு (Order to file property statement of registration officers and all employees and their families by July 25)...


பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25-க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு!


சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க சுற்றறிக்கை ஆணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...



>>> பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...


இன்று முதல் அமலுக்கு வந்த பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு.. முழு விவரம் இதோ..!!👉


பத்திரப் பதிவுக் கட்டணம்..!!


📑 பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பதிவுக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


📑 புதிதாக அமலுக்கு வந்த பதிவுக் கட்டணம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!!


பதிவுக் கட்டணம்:


📑 தமிழ்நாட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் சொத்து வாங்குவது, விற்பது போன்ற சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


📑 இந்த பத்திரப் பதிவுகளுக்கு பதிவுக் கட்டணம் 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


📑 அதாவது, பதிவுச்சட்டம் 1908ன் பிரிவு 78இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.


📑 அந்த வகையில் ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும்,


📑 குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்,


📑 அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும்,


📑 தனி மனை பதிவு கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


📑 மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.10,000 என்பதை சொத்தின் சந்தை மதிப்புக்கு 1%எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பதிவுத் துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்வு - வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் செய்தி வெளியீடு (Fees for services rendered in registration department hiked after 20 years - Commercial Taxes and Registration Secretary press release)...



>>> பதிவுத் துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்வு - வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் செய்தி வெளியீடு (Fees for services rendered in registration department hiked after 20 years - Commercial Taxes and Registration Secretary press release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 

பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு:


பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1%ஆக உயர்கிறது.


ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு.


அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து ரூ.40,000ஆக உயர்கிறது.


தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது.


செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000ஆக உயர்வு.


அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10முதல் நடைமுறைக்கு வருகிறது - பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


நம்பிக்கை இணையம் (NI - Block Chain - Nambikkai Inayam) என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இனி திருத்த இயலாது - பதிவுத்துறை தலைவர் கடிதம் (It is no longer possible to edit registered documents using the modern technology of web of trust - Letter from Head of Registration)...

 


>>> நம்பிக்கை இணையம் (NI - Block Chain - Nambikkai Inayam) என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இனி திருத்த இயலாது -  பதிவுத்துறை தலைவர் கடிதம் (It is no longer possible to edit registered documents using the modern technology of web of trust - Letter from Head of Registration)...


தமிழ்நாடு பிளாக்செயின் முதுகெலும்பு – நம்பிக்கை இணையம்


தமிழ்நாடு பிளாக்செயின் முதுகெலும்பு

அனைத்து அரசு துறைகள் மற்றும் ஏஜென்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிறவற்றால் பயன்படுத்தக்கூடிய மாநில அளவிலான பிளாக்செயின் உள்கட்டமைப்பை அமைத்து பராமரிப்பதை TNeGA நோக்கமாகக் கொண்டுள்ளது.


வெளிப்படையான, திறமையான மற்றும் பாதுகாப்பான குடிமக்களை மையப்படுத்திய மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான பணிப்பாய்வுகளை உருவாக்க தகுதிபெறும் தரப்பினரால் இந்த பிளாக்செயின் பயன்படுத்தப்படும். இந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி நிறுவன தர G2G மற்றும் G2C தயாரிப்புகள் மற்றும் சேவைகள் செயல்படுத்தப்படும். மாறாத ஹாஷ்-மறைகுறியாக்கப்பட்ட லெட்ஜரை பூஜ்ஜிய டவுன்-டைமுடன் வழங்குவதன் மூலம் பாரம்பரிய தளங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் இது பயன்படுத்தப்படும். இது தற்போதுள்ள அரசாங்க பணிப்பாய்வுகளுக்கு செயல்முறைகள் மற்றும் தொகுதிகளை விரிவுபடுத்தும் மற்றும் அவற்றை மிகவும் பாதுகாப்பான, திறமையான மற்றும் வெளிப்படையானதாக மாற்றும். ஏற்கனவே உள்ள அரசாங்க செயல்முறைகளை முழுமையாக மாற்றியமைக்கவும், புதிய நம்பகமான மற்றும் பாதுகாப்பான பணிப்பாய்வுகளை உருவாக்கவும் இது பயன்படுத்தப்படலாம். மாநிலத்திற்குள் உள்ள அனைத்து துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பிளாக்செயின் பயன்பாடுகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இது ஒரே தளமாக இருக்கும்.


இந்த தளம் நம்பிக்கை இணையம் (NI) என்று அழைக்கப்படும்   , இது தமிழில் 'நம்பிக்கை இணைப்பு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தளம், தமிழக அரசாங்கத்திற்கு ஒரு நம்பகமான உண்மை ஆதாரத்தை நிறுவ உதவும், இது அரசாங்க செயல்முறைகளுக்கு திறமையான மோசடியை எதிர்க்கும் அமைப்பை உருவாக்க பயன்படும். இத்தகைய அமைப்பு தமிழ்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக பயனளிக்கும்.


ஒரு கலப்பின உள்கட்டமைப்பில் இயங்குதளம் வழங்கப்படும்  .  முனைகள் ஒரு தனிப்பட்ட கிளவுட் அல்லது மாநில SDC அல்லது வளாகத்தில் இருக்கலாம்.  NI இயங்குதளமானது , அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பிளாக்செயின் அஸ் ஏ சர்வீஸ் (BAAS) வழங்குநராகவும் செயல்படும்  . ஒரு முனையை ஹோஸ்ட் செய்வதன் காவலை அல்லது மேல்நிலையை விரும்பாத நிறுவனங்கள் API கேட்வே மூலம் பிளாக்செயினை அணுகலாம். பிளாக்செயின் கோர்கள், வணிக லாஜிக் லேயர் மற்றும் கிளையன்ட் ஏபிஐ நுழைவாயில்கள் ஆகியவற்றைக் கொண்ட பாதுகாப்பான உள்கட்டமைப்பை NI உள்ளடக்கும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2008 - இனி வரும் காலங்களில் பதிவு செய்யும் "தான செட்டில்மெண்ட் (Thana Settlement)" ஆவணங்களில் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மாத உதவி, மருத்துவ வசதி, இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் நிபந்தனைகளுடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் மற்றும் ஆவணப் பதிவு எழுத்தர்களுக்கும் - தீர்ப்பாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (RDO) சுற்றறிக்கை, நாள்: 24-03-2023 (TamilNadu Senior Citizens and Parental Care and Welfare Act 2008 - To all the Registrars and Deeds Registration Clerks to make registrations with the condition of maintaining the parents and fulfilling the conditions of monthly allowance, medical facility, accommodation facility in the "Donation Settlement" documents to be registered in future - Tribunal Officer and Revenue Divisional Officers' Circular Dated: 24-03-2023)...

 

>>> தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2008 - இனி வரும் காலங்களில் பதிவு செய்யும் "தான செட்டில்மெண்ட் (Thana Settlement)" ஆவணங்களில் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மாத உதவி, மருத்துவ வசதி, இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் நிபந்தனைகளுடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் மற்றும் ஆவணப் பதிவு எழுத்தர்களுக்கும் - தீர்ப்பாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சுற்றறிக்கை, நாள்: 24-03-2023 (TamilNadu Senior Citizens and Parental Care and Welfare Act 2008 - To all the Registrars and Deeds Registration Clerks to make registrations with the condition of maintaining the parents and fulfilling the conditions of monthly allowance, medical facility, accommodation facility in the "Donation Settlement" documents to be registered in future - Tribunal Officer and Revenue Divisional Officers' Circular Dated: 24-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நீதிமன்றம் செல்லத் தேவையில்லை - 10 விதமான மோசடிப் பத்திரப் பதிவுகளை மாவட்டப் பதிவாளர்கள் ரத்து செய்யலாம் - 90 நாட்களுக்குள் நடவடிக்கை - நாளிதழ் செய்தி (No need to go to court - District registrars can cancel 10 types of fraudulent deed registrations - Action within 90 days - Daily News)...

 நீதிமன்றம் செல்லத் தேவையில்லை - 10 விதமான மோசடிப் பத்திரப் பதிவுகளை மாவட்டப் பதிவாளர்கள் ரத்து செய்யலாம் - 90 நாட்களுக்குள் நடவடிக்கை - நாளிதழ் செய்தி (No need to go to court - District registrars can cancel 10 types of fraudulent deed registrations - Action within 90 days - Daily News)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை

 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 ...