கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reports லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Reports லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Ennum Ezhuthum – Student Report Card – Model…

 

எண்ணும் எழுத்தும் - மாணவர் தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டை - மாதிரி...


Ennum Ezhuthum – Student Report Card – Model…


எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டை - மாதிரி...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


எண்ணும் எழுத்தும் - பருவம் 1க்கான மாணவர் நிலை அறிக்கை EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை...0

 

எண்ணும் எழுத்தும் EnnumEzhuthum - பருவம் 1க்கான மாணவர் நிலை அறிக்கை EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை...



EE - Students level report for this term 1 is available for download in EMIS portal. Please find the steps...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Single Page PDF...



How to download student level report?


STEP 1

Go to ‘https://emis.tnschools.gov.in/', type User Name & Password and click 'Login'


STEP 2

Click the 'Menu Bar-三)


STEP 3

Click 'Ennum Ezhuthum'


STEP 4

Click ‘Ennum Ezhuthum 2024-2025 Term 1 Student....”

This report shows the EE student-wise Level Report of this particular year 2024-25


STEP 5

The file will be downloaded. Click 'Open' to access the file...



2022-ஆம் ஆண்டு கல்வி நிலை குறித்த ‘ஏசா் (ASER)’ ஆய்வறிக்கை (Annual Status of Education Report (Rural) 2022 )...



>>> 2022-ஆம் ஆண்டு கல்வி நிலை குறித்த ‘ஏசா் (ASER)’ ஆய்வறிக்கை (Annual Status of Education Report (Rural) 2022 )...


(தமிழ்நாடு குறித்த அறிக்கை பக்க எண்: 217-222)


தினமணி தலையங்கம்...


தேசிய அளவில் 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 3 முதல் 16 வரையிலான குழந்தைகளின் பள்ளிச் சோ்க்கை, படிக்கும் திறன், கணிதத் திறன் உள்ளிட்டவை மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து பல மாதங்கள் மூடிக்கிடந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பாதிப்பின் அளவைக் கணிக்கும் இந்த முதலாவது ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.


சமீபத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ அறிக்கை வெளிவந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகள் தடைபட்டிருந்த அந்த அறிக்கை, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது. கற்கும் திறனில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த அறிக்கை பதிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள 616 மாவட்டங்களில் உள்ள 19,000 கிராமங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களை ஆய்வு செய்து, கிராமப்புற கல்வி நிலை குறித்து 2022 ‘ஏசா்’ அறிக்கை பதிவு செய்திருக்கிறது. 2018-க்கும் 2022-க்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் பரவலாக அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. படிக்கும் திறனும், கணிதத் திறனும் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்திருக்கிறது.


மிஸோரம், ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் 6 முதல் 14 வரையிலான குழந்தைகளின் கிராமப்புற அரசுப் பள்ளி சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018 போலவே மிக அதிகமான அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது. 2018-இல் ஏழு மாநிலங்களில் மாணவா் சோ்க்கை 50 %-க்கும் குறைவாக இருந்தது. 2022-இல் மேகாலயம், மணிப்பூா் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அந்த நிலைமை. கேரளத்திலும், உத்தர பிரதேசத்திலும் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. தேசிய அளவில் 65.6 % (2018) இருந்த மாணவா் சோ்க்கை, 2022-இல் 72.9 %-ஆக அதிகரித்திருக்கிறது.


2018 வரை தொடா்ந்து அதிகரித்து வந்த தனியாா் பள்ளிகள் மீதான மோகம் திடீரெனக் குறைந்திருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2018-இல் 30.9 %-ஆக இருந்த கிராமப்புற தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு, 2022-இல் 25.1 %-ஆகக் குறைந்திருக்கிறது. மிஸோரம், ஜம்மு - காஷ்மீா், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறது 2022 ‘ஏசா்’ அறிக்கை.


2014 முதல் 2018 வரை கற்கும் திறன் அதிகரித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒரு வீழ்ச்சி தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தாலும்கூட, 3, 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் பரவலாகவே எல்லா மாநிலங்களிலும் குறைந்திருப்பதை சுட்டுக்காட்டுகிறது அறிக்கை.


2-ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடிந்த 3-ஆம் வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 24 மாநிலங்களில் குறைந்திருக்கிறது. அதேபோல, 5-ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்பு மாணவா்களில் 2-ஆம் வகுப்புப் பாடத்தை படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பது தெரிகிறது. படிக்கும் திறனுடன் ஒப்பிடும்போது, கணிதத் திறன் அந்த அளவுக்கு மோசமில்லை.


இன்னொரு குறைபாட்டையும் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களின் கற்கும் திறன் குறைந்திருப்பது போலவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தனியாக கட்டணம் செலுத்தி பயிற்சி எடுத்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. 22 மாநிலங்களில் தனிப் பயிற்சி ஆசிரியா்களும் (டியூஷன்), தனியாா் பயிற்சி நிலையங்களும் அதிகரித்திருப்பதை அறிக்கை கூறுகிறது. ஐந்து மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவா்கள் கட்டணம் செலுத்தி தனிப் பயிற்சி பெறுகிறாா்கள் என்றும், 73.9 % அரசுப் பள்ளி மாணவா்கள் மேற்கு வங்கத்தில் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறாா்கள் என்றும் தெரிவிக்கிறது அறிக்கை.


கிராமப்புறங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் இணையவழிக் கல்வி சென்றடைந்திருக்கிறது. சமநிலையிலான தொழில்நுட்ப வசதி ஆரம்பகட்டத்தில் இணையவழி கட்டமைப்புக்குத் தடையாக இருந்தது மாறி, அந்த வழிமுறை குக்கிராமங்கள் வரை பரவலாக இருப்பதாக தெரிவிக்கிறது அறிக்கை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு 36 % மட்டுமே குடும்பங்களில் இருந்த கைப்பேசிகளின் எண்ணிக்கை 2022-இல் 74 %-ஆக அதிகரித்திருக்கிறது. ‘ஏசா்’ ஆய்வாளா்கள் எடுத்த புள்ளிவிவரத்தின்படி, 10-இல் 9 குடும்பங்களில் கைப்பேசிகளும், இணைய இணைப்பும் காணப்பட்டதாக தெரிகிறது.


பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் பெரிய அளவில் மாணவா் சோ்க்கை குறைந்து, பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்கிற அச்சத்தைப் பொய்யாக்கி அரசுப் பள்ளிகளிலும், தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018-இல் 66 %-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் பங்கு, 73 %-ஆக அதிகரித்திருக்கிறது. 2022-இல் பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளின் விகிதம் இரண்டு சதவீதம் அளவில் மட்டுமே என்பது அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான தகவல்.


‘ஏசா்’ அறிக்கை நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மட்டுமல்லாமல், கற்பிக்கும் திறனும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மாணவா் சோ்க்கையால் வருங்காலத் தலைமுறை பயன் அடையும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது(The Government of Tamilnadu has released the report submitted by the AK Rajan Committee on the impact of NEET examination in Tamilnadu)...



 நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது(The Government of Tamilnadu has released the report submitted by the AK Rajan Committee on the impact of NEET examination in Tamilnadu)...


நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.



மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம்.



நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம்



நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்.


>>> நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை...


கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது - அன்புமணி இராமதாஸ்...


கொரோனா பரவல் ஓயவில்லை: பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது -  பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை .. 


தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் கூட, நோய்த்தடுப்பு கோணத்தில் இம்முடிவு சரியானதல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.


இந்தியாவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக  இருந்தது. கடந்த 9 மாதங்களாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,  காவல்துறையினர், பிற முன்களப்பணியாளர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பின் பயனாக தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது  தான் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது பாராட்டத்தக்கது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் கூட கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் இது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட  50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 13 நாட்களாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் இரண்டரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.


அண்டை மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், அங்கெல்லாம்   கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். கர்நாடகத்தில் கடந்த வாரம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குள்ளாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கு முன் ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது உண்மை. சென்னை உதாரணத்தை எடுத்துக் கொண்டால் ஐ.ஐ.டி விடுதியில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கு தப்பவில்லை.


இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது மருத்துவ ரீதியில் சரியான முடிவாகத் தோன்றவில்லை. ஒர் வகுப்பில் ஒரு நேரத்தில் 25 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, மாணவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் வரை நெருக்கமாக அமர்ந்து இருக்கும் போது கொரோனா தொற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கழிப்பறைகள் தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு முதன்மைக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவற்றைப் பயன்படுத்தும் போது கொரோனா பரவலுக்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன. இந்த ஆபத்துகளையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருக்கக் கூடாது.


பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது அவர்கள் மூலமாக  வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவக்கூடும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில்  தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுவதாலும் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை. கல்வியை விட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியமானதாகும்.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் பள்ளிகளைத் திறப்பது தான் சரியானதாக இருக்கும்  என்று ஒரு மருத்துவராக நான் கருதுகிறேன். எனவே, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சாலா சித்தி - முந்தைய வருடங்களின் பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...

 


சாலா சித்தி - முந்தைய 2016-2018, 2018-2019, 2019-2020 வருடங்களின் பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...

Shaala Siddhi - Previous Years - School Evaluation Reports Download - Website Link...

இதில் மாநிலம் (State), மாவட்டம் (District), வட்டாரம் (Block), குறுவள மையம் (Cluster), கிராமம் (Village), பள்ளியின் பெயர் (School), கல்வி ஆண்டு (Academic Year) போன்ற விவரங்களை தேர்வு செய்து பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

>>> Click here - Shaala Siddhi - School Evaluation Report Download Website...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...