கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BONUS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BONUS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு...



தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு...


அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றம் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் - முதலமைச்சர் அறிவிப்பு...


20% Diwali Bonus Announcement for Tamil Nadu Govt Employees... 


20 percent Diwali bonus for C and D category workers working in Govt Public Sector Undertakings - Chief Minister Announces...



>>> செய்தி வெளியீடு எண் 1639, நாள் : 10-10-2024...


11.71 lakh railway employees will be given 78 days salary as bonus - Central Government announced...



 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸ் ஆக வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் அரசு ஒப்புதல்...


11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு...


11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரெயில் மேலாளர்கள் (பாதுகாவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்மேன், மினிஸ்டரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் எக்ஸ்சி ஊழியர்கள் போன்ற பல்வேறு வகை ரெயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தகுதியுடைய ஒவ்வொரு பணியாளரும் 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 பெறுவார்கள் என்றார்.


ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தசரா மற்றும் தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக வழங்கப்படும். அமைச்சரவையின் இந்த முடிவுக்குப் பிறகு, சுமார் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன்களைப் பெறுவார்கள்.


+2 வேதியியல் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - பகுதி 1 கேள்வி எண் 5 அல்லது 9 கேள்வி எழுதியவர்களுக்கும், பகுதி 2 ல் கேள்வி எண் 29 எழுதியவர்களுக்கும் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் (Bonus marks for 2 questions in +2 Chemistry Examination will be given to those who have written Question No. 5 or 9 in Part 1 and those who have written Question No. 29 in Part 2 - Government Examinations Directorate)...

 +2 வேதியியல் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - பகுதி 1 கேள்வி எண் 5 அல்லது 9 கேள்வி எழுதியவர்களுக்கும், பகுதி 2 ல் கேள்வி எண் 29 எழுதியவர்களுக்கும் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் (Bonus marks for 2 questions in +2 Chemistry Examination will be given to those who have written Question No. 5 or 9 in Part 1 and those who have written Question No. 29 in Part 2 - Government Examinations Directorate)...





அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...



அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...


தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,


நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கோவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளன. இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைள், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.


திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.


இலாபம் ஈட்டியுள்ள / நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.


இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


>>> செய்தி வெளியீடு எண்: 930, நாள்: 23-10-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...