கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம் (NHIS)‌, அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள் (New Health Insurance Scheme for Pensioners and Family Pensioners, G.O.Ms.No.204, Finance (Medical Insurance) Department, Dated: 30-6-2022 - Some important details)‌...

 ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌, 2022 (01-07-2022 முதல்‌ 30-6-2026 வரை)-க்கான அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022 அரசால்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அந்த அரசாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்‌:


1. 01-07-2022 முதல்‌ 30-6-2026 வரைக்கான 4 ஆண்டு கால தொகுப்புக்கு ரூ. 5,00,000/-(ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது .


2. கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு கண்ணுக்கு ரூ.30,000/-அனுமதிக்கப்பட்டுள்ளது.


3. பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000/- அனுமதிக்கப்பட்டுள்ளது.


4. United India Insurance Company, சென்னை, இந்த திட்டத்தை செயல்படுத்தும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. இத்திட்டம்‌ ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கு கட்டாயமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. இத்திட்டத்திற்காக ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களின்‌ ஓய்வூதியத்தில்‌ 01-07-2022 முதல்‌ மாதா மாதம்‌ ரூ. 497/- பிடித்தம்‌ செய்யப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. குறிப்பிட்ட சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ பத்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது.


8. அரசாணையில்‌ தெரிவிக்கப்படாத மருத்துவமனைகளில்‌ (Non-Network Hospitals) அவசரமில்லாத சாதாரண சிகிச்சை மேற்கொண்டாலும்‌, நிர்ணமிக்கப்பட்ட தொகையில்‌ 75% திரும்பக்‌ கொடுப்பதாக (Reimbursement) தெரிவிக்கப்பட்டுள்ளது.


9. உள்‌ நோயாளியாக 24 மணி நேரம்‌ மருத்துவமனையில்‌ அவசியம்‌ சிகிச்சை பெற்று இருக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10. சிறுநீரக கோளாறு (Kidney Dialysis) மற்றும்‌ -கொரோனா நோய்‌ தொற்று-19 (Critical ICU Management) க்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ 10 இலட்சம்‌) வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11. இத்திட்டத்தில்‌ 203 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்‌ மற்றும்‌ அறுவை சிகிச்சை ( 89 Additional Procedures) சிகிச்சையினை 1,221 மருத்துவமனைகளில்‌ செய்து கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12. திருமணம்‌ ஆகாத மகன்‌ (25 வயது வரை மட்டும்‌), மன வளர்ச்சி குன்றிய மகன்‌/மகள்‌ 25 வயது முடிவுற்றிருந்தாலும்‌ அவர்களுக்கு திருமணம்‌ ஆகும்வரை இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது .


13. மாத வருமானம்‌ ரூ.7850/- க்குள்‌ வருமானம்‌ ஈட்டும்‌ திருமணம்‌ ஆகாத /விவாகரத்தான / விதவைமகள்கள்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


14. தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ வெளி மாநிலங்களில்‌ வசிப்பவர்கள்‌ அவர்களின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ இத்திட்டத்தில்‌ சேரலாம்‌ எனவும்‌, இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லாதவர்கள்‌ இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லை என விருப்பமனு அளிக்கலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


15. பல்‌ மருத்துவம்‌ மற்றும்‌ அது தொடர்பான அறுவை சிகிச்சை இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


16. ENT தொடர்பான மருத்துவம்‌ இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


17. அரசு மருத்துவமனைகளில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ சிகிச்சை பெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


18. புதியதாக ID Card 60 நாட்களுக்குள்‌ வழங்கப்படும்‌ எனவும்‌, அதுவரை பழைய ID Cardஐப் பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>>  ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022)...






 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...