கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Quarterly Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Quarterly Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6-9ஆம் வகுப்பு THIRAN காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் உள்ளீடு (Mark Entry) சார்ந்த வழிகாட்டுதல்கள்



 THIRAN இயக்கம் 2025 : 6-9ஆம் வகுப்பு THIRAN காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் உள்ளீடு (Mark Entry) சார்ந்த வழிகாட்டுதல்கள் 


திறன் இயக்கம் 2025

6 -  9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள்

👉 காலாண்டு தேர்வு மதிப்பெண்களை செப்டம்பர் மாதத்தின் மதிப்பீடாக கொண்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 வழக்கமான நடைமுறையின் படி திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 திறன் இயக்கத்தில் பயிற்றுவிக்கும் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 காலாண்டு தேர்வில் திறன் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 6 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 60க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 8 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 100 க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின்பு மாணவர்களின் Report Card ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

👉 மதிப்பெண்களை உள்ளீட்டை ( MARK ENTRY ) 22.09.2025 திங்கட்கிழமை முதல் 10.10.2025 வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ள வேண்டும்

திறன் மதிப்பெண் உள்ளீட்டு செய்வதற்கான வழிமுறைகள் Instructions Full Details தெளிவான விளக்கம்



>>> Instructions Poster தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



>>> Instructions Audio தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


6-9 வகுப்புகளில் பயிலும் THIRAN மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வழிகாட்டுதல்கள்

 


THIRAN இயக்கம் - 2025


✅ 6-9 வகுப்புகளில் பயிலும் THIRAN மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வழிகாட்டுதல்கள்


🙏🏻 அன்பார்ந்த ஆசிரியர்களே, உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி!



📮 *உங்கள் கருத்துகளையும் கள யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு, THIRAN மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகளுக்கு பின்வரும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.*


▪️ *THIRAN மாணவர்களுக்குத் தனி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*


ஆம்! THIRAN மாணவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அடிப்படை கற்றல் முடிவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட அலகுகளைக் கற்றிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு-THIRAN கையேட்டின் பகுதி ஒன்றில் இருந்து, அடிப்படைக் கற்றல் அடைவுகளைச் (BLO) சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.


▪️ *அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், THIRAN அலகுகள் இல்லாத பட்சத்தில், மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*


ஆம்! THIRAN மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும்.


10.09.2025 முதல் 12.09.2025 வரை exam.tnschools.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயிற்சி அளிக்கலாம்.


▪️ *THIRAN தேர்வுகள் எத்தனை மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்?*


காலாண்டு தேர்வு மதிப்பீட்டு முறைக்கு இணங்க, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கும், 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களுக்கும் வினாத்தாள்கள் வழங்கப்படும்.


▪️ *அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா? கேள்வித்தாள் பாட புத்தகத்தைச் சார்ந்து வருமா அல்லது பொதுவான கேள்விகளாக இருக்குமா?*


மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கற்றால், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்னும் கருத்தில் THIRAN இயக்கமானது தமிழ். ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டுமே கூடுதல் பயிற்சி அளிக்கும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. எனினும், மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியினை அளிக்க அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான பொதுவான BLO கேள்விகளாக இருக்கும்.


THIRAN மாணவர்கள் கேள்வித்தாளிலேயே விடையளிக்கும் படி சொல்ல வேண்டுமா?*


வழக்கமான காலாண்டுத் தேர்வு நடத்தும் முறையிலேயே இத்தேர்வும் நடத்தலாம்.


▪️ *THIRAN மாணவர்களுக்கு தனி நேரம் தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டுமா?*


தனியாக நேரம் ஒதுக்கி, தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வுகளை நடத்தவும். 



💥 *நடுநிலை பள்ளிகளுக்கு:*


THIRAN மற்றும் THIRAN அல்லாத மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


💥 *உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு:*


THIRAN மாணவர்களுக்கு மட்டும் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



📣 _*தேர்வுகளை சிறப்பாக நடத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி!*_


THIRAN - Quarterly exam - QP Download schedule

 


நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - திறன் - காலாண்டுத் தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை


Dear team, 


Please find the question paper and answer key download schedule for Middle, High and Hr. Sec schools. 


Kindly follow this schedule to download the QP from exam.tnschools.gov.in



Middle, High & Hr. Sec Schools - THIRAN - Quarterly exam - Question Paper Download schedule



>>> Question Paper Download schedule for Middle Schools - Click Here to Download



>>> For High & Hr.Sec. Schools Click Here to Download 


காலாண்டுத் தேர்வு - திறன் (THIRAN) திட்டத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் முடிவுகள் (BLOs) அடிப்படையிலான தனிப்பட்ட வினாத்தாள்கள்

 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை - காலாண்டுத் தேர்வு - திறன் (THIRAN) திட்டத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் முடிவுகள் (BLOs) அடிப்படையிலான தனிப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் - தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் - DSE & DEE இணைச் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


காலாண்டுத் தேர்வு 2025 : கால அட்டவணை

 

Quarterly Exam 2025: Timetable


காலாண்டுத் தேர்வு 2025 : கால அட்டவணை


6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு காலஅட்டவணை அனுப்புதல் - பள்ளிக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 25-08-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

 

காலாண்டுத் தேர்வு - திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


Quarterly Examination - Formation of Monitoring Committee to Scrutinize Revised Answer Sheets - District Collector Order - CEO Proceedings...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



காலாண்டுத் தேர்வு திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஆய்வு செய்யவேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்...


காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (காலாண்டுத் தேர்வுகள்) முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. 


தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. 


இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 7ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில் காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத் தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்;


 "காலாண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தங்கள் மேற்கொண்டு பள்ளிகள் திறப்பின் போது மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.


 தற்போது காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.


இந்த குழுவினர் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையை வழங்க வேண்டும். அதன் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Quarterly Examinations - Middle Schools - Class 6 - 8 - Question Papers & Answer Key Download Schedule...

 

 

தொடக்கக்கல்வித்துறை - முதல் பருவத் தேர்வு 2024-2025...


Quarterly Examinations - Middle Schools - Class 6 - 8 - Question Papers & Answer Key Download Schedule...


காலாண்டுத் தேர்வுகள் - நடுநிலைப் பள்ளிகள் - 6 - 8ஆம் வகுப்புகள் - வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் பதிவிறக்கக் கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Dear team, 


Tomorrow (20.09.2024) Tamil exam's question paper is available for download from today morning 9.00 am.


6th to 8th STD Quarterly exam QP download from today 9 am itself. please inform the schools immediately all GOVT  and aided middle schools...



Dear team,

*Important: Quarterly Exam Question Paper Download -Regarding*


As per the Directorate of Elementary Education circular, quarterly exam question papers for classes 6-8 in *government and aided middle schools will be available for download on exam.tnschools.gov.in*. 


Download schedule:

- Availability: 9:00 am (previous day) to 1:00 pm (exam day)

Please find the attached download schedule and instruct schools to:

1. Download question papers and answer keys within the specified timeframe.

Kindly Ensure timely download to facilitate smooth examination proceedings.


பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024...

 

 

பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024...


School Education - Academic Year 2024-2025 - Quarterly Examination Time Table for Class 6 to 12 Students - Proceedings of Director of School Education, Tamil Nadu, RC.No.048688/M1/E1/2024, dt. 09-09-2024...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6

ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து

அரசு / அரசு உதவி பெறும்‌/ தனியார்‌ பள்ளிகளுக்கு 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இணைப்பு: காலாண்டுத்‌ தேர்வுகால அட்டவணை 

பெறுநர்‌:

1. இயக்குநர்‌, தனியார்‌ பள்ளிகள்‌

2. அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌

3. அனைத்து மாவட்ட கல்விக்‌ அலுவலர்கள்‌ (இடைநிலை மற்றும்‌ தனியார்‌ )

நகல்‌:

1. தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ தகவலுக்காகக்‌ அனுப்பப்படுகிறது

2. இயக்குநர்‌, அரசு தேர்வுகள்‌ இயக்ககம்‌ தகவலுக்காகக்‌ அனுப்பப்படுகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் - இணைப்பு: 📌 தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 📌 காலாண்டு தேர்வு கால அட்டவணை ( Quarterly Exam TimeTable) 📌 வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Proceedings letter from the State Project Director for conducting the Quarterly Examination for Class 6 to Class 12 as Common Quarterly Exam for all districts... Attachments: 📌 Proceedings of Director of Elementary Education... 📌 Quarterly Exam Time Table... 📌 Procedure to Download Question Paper)...

 

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்...

இணைப்பு

📌 தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

📌  காலாண்டு தேர்வு கால அட்டவணை ( Quarterly Exam TimeTable)...

📌 வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்...


>>> Click Here to Download SPD Proceedings & Quarterly Exam Timetable & Procedure to Download Question Paper...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Neral To Matheran Toy Train

 🚂 நெரால் டு மாதேரான் : மேகங்களுக்கு நடுவே செல்லும் பொம்மை ரயில் பயணம்! 🌧️🌲 Neral To Matheran Toy Train சுற்றிலும் அடர்ந்த பச்சைக்காடுகள்...