முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தையர் தின சமூக வலைதளப் பதிவு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணக்குப் பாட வினாத்தாள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவு...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணக்குப் பாட வினாத்தாள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவு...
* A×B தந்தாய்
* அம்புக் குறி பாய்ச்சினாய்
* கூடுதல் காணச்சொல்லி மன மகிழ் கணமாக்கினாய்
* வகையான வர்க்கமூலம் காணச் செய்தாய்
* 7I2 காண வைத்து மாணவனை me too pass என உணரவைத்தாய்
* தேல்(ன்)ஸ் தேற்றம் தந்து தேன் சுவைக்க வைத்தாய்
* நாற்கரப் பரப்பு கேட்டு எங்கள் இதயப் பரப்பை அடைத்தாய்
* மையக் குத்துக்கோடு சமன்பாடு கேட்டு குத்தாட்டம் போட வைத்தாய்
* கப்பல் இடைப்பட்டத் தொலைவு கேட்டு மாணவனுக்கும் ஆசிரியருக்குமான இடைவெளி குறைத்தாய்
* இடைக்கண்ட கன அளவு கேட்டு பெருங்கண்டம் தொலைத்தாய்
* வெயிலுக்குக் கோன் ஐசாய் குளுமை தந்தாய்
* மாறுபாட்டுக் கெழு கேட்டு மாணவரின் ஈடுபாட்டுக்கு உரமிட்டாய்
* பகடை கணக்கு தந்து ஏணியில் ஏற்றிவிட்டாய்
* 7+77+777+... கேட்டு ஏழேழு ஜென்மமும் உமக்கும் எமக்கும் மாணவனை நன்றி சொல்ல வைத்தாய்!
* கேள்வியின் நாயகனே நீ வாழ்க...
SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?
SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?
- ராக குமார்-
----------------------------------------
"நீங்க எத்தனை மார்க் எழுதினீங்க?"
நான் 40 மார்க் எழுதினேன். நீங்க?
"நான் 70 மார்க் எழுதுனேன்"
"ஓ 70 மார்க்குக்கு சொன்னானா "
"அவன் எங்க சொன்னா, எல்லாமே நானாத்தான் எழுதினேன்".
ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்பட்ட இரு ஆசிரியர்களின் உரையாடல்தான் இது.
தன்னால் சுயமாக எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் SCRIBE பெற்று தேர்வு எழுதும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. முன்பு பாட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட மாட்டார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் மட்டுமே ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.
மாணவர் குறிப்பிடும் சில குறியீடுகள், வரைபடங்களை பிற பாட ஆசிரியர்களால் எழுத முடியாது என்பதனாலேயே இந்த ஏற்பாடு.
ஆனால் நம் ஆசிரியர்களோ ஸ்க்ரைப் என்பதை மறந்து தன்னையே தேர்வராக கருதிக் கொண்டு தெரிந்ததை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு மற்ற மாணவர்களை விட ஸ்க்ரைப் எழுதும் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்லாமல்.... முதல் மதிப்பெண் பெற்ற கொடுமையெல்லாம் அரங்கேறியது.
உடனே ஆசிரியர்களின் மன நிலையில் ஒரு மாற்றம்... ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கிற அளவுக்கா எழுதுறது? ஒரு 50, 60 மார்க் எடுக்கிற அளவுக்கு எழுதினா பத்தாதா? என்று ஒரு தரப்பினரும்
"அவ்ளோ மார்க் தேவையில்லைங்க... பாஸ் பண்ற அளவுக்கு எழுதினா போதும்" என்று இன்னொரு தரப்பினரும் பேச ஆரம்பித்திருக்கிறார்களே தவிர...
மாணவர் சொல்வதை மட்டும் எழுதினால் போதும் என்று யாருமே பேசுவதில்லை.
SCRIBE எழுதினாலே தேர்ச்சி பெற்று விடலாம் என்ற மோசமான கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இதன் காரணமாகவே கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் ஸ்க்ரைப் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது.
முன்பெல்லாம் பத்தாம் வகுப்பில் ஸ்க்ரைப் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர், பதினோராம் வகுப்பில் படிப்பதற்கு எளிதாக இருக்கும் கலை பிரிவைத்தான் தேர்ந்தெடுப்பார். ஆனால் இப்பொழுது அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இதற்குக் காரணம் காரணம் "தேர்வு எழுதுபவர் ஆசிரியர் தானே படிக்காமலேயே தேர்ச்சி அடைந்து விடலாம்" என்ற மாணவரின் நம்பிக்கையும்.... "பாவம் அவன் படிக்கலைனா என்ன.. நாம பாஸ் பண்ற அளவுக்கு எழுதி விடுவோம் "என்ற ஆசிரியரின் தாராள குணமும் மாணவருக்கு படிக்கத் தேவையில்லை என்ற தைரியத்தை கொடுத்திருக்கிறது.
மேலும் படிக்க திறன் இருக்கும் மாணவர்களுக்கு கூட படிப்பதற்கு அவசியமற்ற சூழ்நிலையை நாமளே உருவாக்கிக் கொடுக்கிறோம்.
இதற்காக நாம் எவ்வித குற்ற உணர்ச்சியும் கொள்வதில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறோம்.
இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஸ்க்ரைப் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து அனைத்து ஆசிரியர்களுமே ஸ்க்ரைப் எழுத வேண்டிய நிலை வரும்.
"சார், அவன் பெயில் ஆனா நம்மல கேள்வி கேட்க மாட்டாங்களா?" இது பெரும்பாலான ஆசிரியர்களின் கேள்வியாக இருக்கிறது.
இப்படித்தான் நாமளே உருவாக்கிக் கொண்ட கற்பனையான கேள்விகள் நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.
மாணவர் பெயிலானால் ஸ்க்ரைப் எழுதுபவரை எப்படி கேள்வி கேட்க முடியும்?மாணவர் சொல்வதை தவறில்லாமல் எழுதுவது தான் ஸ்க்ரைப்பின் முக்கிய பணியே தவிர, மாணவர் சொல்லாததை எல்லாம் எழுதி தேர்ச்சி அடைய வைக்க வேண்டிய தேவை இல்லை. இந்த தெளிவு ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பு வரை வாசிக்க, எழுதத் தெரியாத மற்றும் அடிப்படை கணிதம் தெரியாத மாணவரை 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் ஸ்கைரைப் மூலம் எழுதி தேர்ச்சி அடைய வைப்பதால்.... இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் சிறிதளவு நன்மையாவது இருக்குமா? ஆசிரிய சமுதாயம் சிந்திக்க வேண்டாமா?
ஏற்கனவே மிக மிக அதிக பாடப்பொருள், மாணவர்களின் கற்றல் ஆர்வ குறைபாடு, மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பயன்பாடு, பெற்றோர்களின் ஒத்துழைப்பின்மை, இவற்றுடன் 100% தேர்ச்சி, பாட சராசரியை அதிகரித்தல் போன்ற கல்வி அதிகாரிகளின் நெருக்கடிகள்...
இவற்றுக்கு மத்தியில் கூடுதலாக மாணவர் சொல்லாதவற்றையெல்லாம் எழுதி தேர்ச்சி அடையச் செய்வது, எதிர்காலத்தில் கணிக்க இயலாத பல புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்...
எனவே இனிமேலாவது ஸ்க்ரைப்பாக பணி புரியும் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் முன் நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்... 👇
நான் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?
இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்...
இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்..
மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன.
ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை.
புதிய விதிகளின்படி குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களுக்கு அரசு வகுத்த புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - ஒரு பார்வை...
யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வலைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - இதோ ஒரு பார்வை...
சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் என பெயரிட்டு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணையாக வெளியிட்டது.
அதன்படி ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகின்றன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபாச புகைப்படங்கள் குறித்து புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் அவற்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக 36 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரசோ, நீதிமன்றமோ தகவல்களை கேட்கும்போது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் வழக்கு...
மத்திய அரசின் இந்த புதிய ஒழுங்கு விதிமுறைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வளைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
இந்தப் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள சமூக வலைதளங்களுக்கு வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய விதிமுறைகள் தனிநபர் ரகசிய காப்பு உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் ஃபேஸ்புக் நிர்வாகமும் அரசின் சில விதிமுறைகளில் உடன்படுவதாகவும், ஆனால் சில விதிமுறைகளை ஏற்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...