கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's Thought லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Today's Thought லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிங்கமாக கனவு காண்கிறாயா? ஆனால் இன்னும் பூனையாக வாழ்கிறாயா?

 


இன்றைய சிந்தனை - Today's Thought


சிங்கமாக கனவு காண்கிறாயா —

ஆனால் இன்னும் பூனையாக வாழ்கிறாயா?

இந்த ஒரு வரி உன்னை உலுக்கும்! 🦁😨


யோசி ஒரு நிமிடம்...


நீ சொல்கிறாய் —


"நான் ஒரு நாள் பெரிய businessman ஆவேன்!"

ஆனால் தினமும் — Netflix பார்க்கிறாய்.


"நான் ஒரு நாள் fit-ஆக இருப்பேன்!"

ஆனால் தினமும் — junk food சாப்பிடுகிறாய்.


"நான் ஒரு நாள் financially free ஆவேன்!"

ஆனால் தினமும் — தேவையில்லாத பொருட்களுக்கு பணம் செலவிடுகிறாய்.


"நான் ஒரு நாள் படித்து முன்னேறுவேன்!"

ஆனால் தினமும் — social media scroll பண்றாய்.


கனவு சிங்கத்தினுடையது.

வாழ்க்கை பூனையினுடையது.


இந்த வித்தியாசமே உன்னை தொடர்ந்து தோல்வியில் வைக்கிறது! 😔 👇


🦁 ஆப்பிரிக்க பழமொழி சொல்கிறது —


"சிங்கமாக மாற கனவு காணும் பூனை —

எலிகளின் மீதான தன் பசியை இழக்க வேண்டும்."


இந்த வரிகள் வெறும் விலங்குகளைப் பற்றி பேசவில்லை.


இது உன் வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மை.


பூனை என்றால் என்ன? — இப்போதைய உன் சின்ன comfort zone.

சிங்கம் என்றால் என்ன? — நீ ஆக விரும்பும் பெரிய version.

எலி என்றால் என்ன? — உன்னை சின்னதாக வைக்கும் பழக்கங்கள், சோம்பல், distraction.


சிங்கம் ஆக வேண்டுமென்றால் —

எலியை விட வேண்டும்.


இது அவ்வளவு simple. இது அவ்வளவு கஷ்டம். 💡


🧠 ஏன் நாம் எலியை விட மறுக்கிறோம்?


உன் மூளை comfort-ஐ விரும்புகிறது.


Netflix பார்ப்பது — comfortable.

Junk food சாப்பிடுவது — comfortable.

Scroll பண்றது — comfortable.

தூங்குவது — comfortable.


இவை எல்லாம் எலிகள்.


சின்ன சின்ன இன்பங்கள்.

உடனடி satisfaction.

எந்த முயற்சியும் வேண்டாம்.


ஆனால் —


Gym போவது — uncomfortable.

படிப்பது — uncomfortable.

Business build பண்றது — uncomfortable.

தோல்வியை சந்திப்பது — uncomfortable.


இவை எல்லாம் சிங்கத்தின் உணவு.


பெரிய வலி — பெரிய வெற்றி.

சின்ன comfort — சின்ன வாழ்க்கை. 🎯


🐱 பூனை vs சிங்கம் — உன் தினசரி வாழ்க்கையில்:


காலை எழுந்திரிக்கும்போது —

🐱 பூனை: Alarm snooze பண்ணும். இன்னும் கொஞ்சம் தூங்கும்.

🦁 சிங்கம்: உடனே எழும். நாளை தொடங்கும்.


வேலையில் சவால் வரும்போது —

🐱 பூனை: "என்னால் முடியாது" என்று விட்டுவிடும்.

🦁 சிங்கம்: "எப்படி செய்வேன்?" என்று வழி தேடும்.


தோல்வி வரும்போது —

🐱 பூனை: ஓடி ஒளிந்துகொள்ளும். விட்டுவிடும்.

🦁 சிங்கம்: எழுந்திரிக்கும். மீண்டும் தாக்கும்.


Distraction வரும்போது —

🐱 பூனை: உடனே கவனம் திரும்பும். மணிக்கணக்ில் வீணாகும்.

🦁 சிங்கம்: Focus இழக்காது. இலக்கை நோக்கி நகரும்.


இரவு தூங்கும்போது —

🐱 பூனை: "நாளை செய்வேன்..." என்று தூங்கும்.

🦁 சிங்கம்: "இன்று கொஞ்சமாவது செய்தேன்" என்று தூங்கும்.


நீ இப்போது எது? 🤔


📖 சரித்திர சிங்கங்களை பார்:


🦁 Kobe Bryant —

எல்லோரும் தூங்கும்போது — அவன் practice செய்தான்.

எலி என்னவென்றால்? — தூக்கம், ஓய்வு, கொண்டாட்டம்.

அவன் எலியை விட்டான்.

NBA-வின் மிகப்பெரிய legend ஆனான்.


🦁 Elon Musk —

வாரம் 80-100 மணி நேரம் வேலை செய்கிறான்.

எலி என்னவென்றால்? — comfort, vacation, easy life.

அவன் எலியை விட்டான்.

உலகின் மிகப்பெரிய innovator ஆனான்.


🦁 Cristiano Ronaldo —

Team-mate-கள் rest எடுக்கும்போது — அவன் extra training செய்தான்.

எலி என்னவென்றால்? — enough என்று நினைப்பது.

அவன் எலியை விட்டான்.

Football-ன் கடவுளானான்.


எல்லா சிங்கங்களும் ஒரே வேலை செய்தார்கள் —

சின்ன comforts-ஐ விட்டு, பெரிய இலக்கை தேர்வு செய்தார்கள். 🏆


⚡ உன் "எலிகளை" கண்டுபிடி — இப்போதே:


உன் வாழ்க்கையில் உன்னை சின்னதாக வைக்கும் எலிகள் யாவை?


📱 Social media —

ஒரு நாளில் எத்தனை மணி நேரம் scroll பண்றாய்?

அந்த நேரம் உன் கனவிற்காக பயன்படுத்தினால்?


😴 தேவையற்ற தூக்கம் —

அதிகாலை 1 மணி நேரம் எழுந்திரித்தால்?

365 நாட்களில் 365 மணி நேரம் கூடுதலாக கிடைக்கும்.


🍕 Junk food, தேவையில்லாத சேலவுகள் —

அந்த பணம் உன் கனவிற்கு போகட்டுமா?


👥 Negative மனிதர்கள் —

உன்னை கீழே இழுப்பவர்களை விட —

உன்னை மேலே தள்ளுபவர்களை நாடு.


🎮 Time-killing habits —

Gaming, gossip, unnecessary TV —

இவை உன் சிங்கத்தை பூனையாக வைக்கின்றன.


இந்த எலிகளை விட தயாரா? 🦁


🔥 "எலியை விடுவது" என்றால் முழுவதும் தியாகமில்லை:


தவறான புரிதல் —

"சிங்கமாக மாற எல்லா சந்தோஷங்களையும் விட வேண்டுமா?"


இல்லை.


சரியான புரிதல் —

உன் கனவை நோக்கி போகும் பாதையில் —

உன்னை தடுக்கும் பழக்கங்களை மட்டும் விடு.


Rest எடுக்கலாம் — ஆனால் productive rest.

சந்தோஷப்படலாம் — ஆனால் deserve பண்ணி celebrate.

உறவுகளுடன் இருக்கலாம் — ஆனால் உன் நேரத்தை guard செய்.


சிங்கமும் ஓய்வு எடுக்கும் —

ஆனால் அது எலியை சாப்பிட்டுக்கொண்டு ஓய்வு எடுக்காது! 🦁


💎 மனசில் வையுங்கள்:


✅ சிங்கமாக கனவு காண்பது போதாது — சிங்கமாக செயல்பட வேண்டும்.

✅ உன் பழக்கங்கள் உன் கனவை confirm செய்கின்றனவா — அல்லது cancel செய்கின்றனவா?

✅ ஒவ்வொரு "எலி" உன்னிடம் கேட்கிறது — "நான் முக்கியமா, உன் கனவு முக்கியமா?"

✅ சின்ன comforts-ஐ விடும்போதே — பெரிய வாழ்க்கை தொடங்குகிறது.

✅ பூனையாக comfortable-ஆக இரு — இல்லை சிங்கமாக powerful-ஆக இரு. தேர்வு உன்னுடையது. 🦁


🌅 இன்றே ஒரு முடிவு எடு —


உன் வாழ்க்கையில் உள்ள ஒரே ஒரு எலியை இன்று விடு.


ஒரு மணி நேரம் குறைவாக scroll பண்ணு.

ஒரு நாள் junk food தவிர்.

ஒரு நாள் 30 நிமிடம் முன்பாக எழுந்திரி.


சின்ன தொடக்கம் — பெரிய மாற்றம்.

ஒரு எலியை விட்டால் — ஒரு சிங்கம் பிறக்கும். 🦁🔥



உண்மையான கல்வி என்பது என்ன? - இன்றைய சிந்தனை

 


உண்மையான கல்வி என்பது என்ன? - இன்றைய சிந்தனை


Co- Regulation

ஒரு தாத்தா கரடியும் குட்டிக்கரடியும் நடக்கப் புறப்பட்டார்கள். சற்று தூரம் நடந்திருப்பார்கள். ஓர் அருவியின் சத்தம் கேட்டது. 

"அருகே ஓர் அருவி இருக்கிறது. அப்படியானால் சிறிய ஆறு இருக்கும். வா உனக்கு நான் நீச்சல் கற்றுத்தருகிறேன்" என்றார் தாத்தா. 

"ஐயோ வேண்டாம் வேண்டாம். எனக்குத் தண்ணீர் என்றாலே பயம்" குட்டிக்கரடி சொன்னது. 

"ஓ... அப்படியா... சரி நீந்த வேண்டாம். வா அருவியைப் பார்த்து விட்டு வரலாம்" என்று நடக்கத் தொடங்கினார். குட்டிக்கரடியும் பின்னால் நடந்தது. 

"ஆகா... அருவி கொட்டுது பார்" தாத்தாக்கரடி சற்று தள்ளி நடந்தார். 

"பார் இங்கே தண்ணீர் மெதுவாக ஒழுகுது" என்றபடி ஒரு கையால் தண்ணீரைத் தொட்டார். "ஆகா ஜில்லென்று இருக்கிறது. வா வந்து சும்மா தொட்டுப் பார். அவ்வளவு நன்றாக இருக்கிறது" என்று குட்டிக்கரடியை அழைத்தார். 

சும்மா தொட்டுத்தான் பார்ப்போமே என்றபடி அந்த ஓடையின் அருகே வந்தது. கையால் ஓடும் நீரைத் தொட்டது. 

"ஆமா நல்லா ஜில்லென்று இதமாக இருக்கிறது" குட்டிக்கரடியும் சொன்னது. 

"என்னைப் பார். இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்" என்றபடி கையை அப்படியும் இப்படியும் ஆட்டினார். குட்டியும் அதுபோல் ஆட்டியது. "ஆகா நன்றாக இருக்கிறது" என்று உற்சாகத்தோடு தாத்தாகரடியைப் பார்த்துச் சொன்னது. 

அப்போது தாத்தாக் கரடி கரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் தண்ணீரில் தாழ்த்தி வைத்து முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டிருந்தது. முகத்திலோ அவ்வளவு மகிழ்ச்சி. 

நாமும் அதுபோல் செய்து பார்ப்போமே என்று கரையில் உட்கார்ந்து கால்களைத் தண்ணீரில் தாழ்த்தி முன்னும் பின்னும் ஆட்டியது. 

நானும் அதுபோல் செய்கிறேன் என்று சொல்வதற்காகத் திரும்பிப்பார்த்தால் தாத்தாக்கரடி தன்னை மறந்து கால்களை வேகம் வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தது. அதன் உடல் எல்லாம் நனைந்திருந்தது

குட்டிக்கரடியும் அதுபோல் வேகம் வேகமாக கால்களை ஆட்ட குட்டிக்கரடியின் உடலும் நனைந்திருந்தது. 

"நான் தண்ணீரில் இறங்கப்போகிறேன். இந்தக் குளிர்ந்த நீர் நம் உடலைத் தழுவிப் போவது அவ்வளவு சுகமாக இருக்கும். நீ நீந்த வேண்டாம். விருப்பம் இருந்தால் இறங்கி நின்றால் மட்டும் போதும்" என்றபடி தாத்தாக் கரடி நீரில் இறங்கியது. தயங்கித் தயங்கிக் குட்டிக்கரடியும் இறங்கியது. 

அப்படி கைகால்களை ஆட்ட குட்டிக்கரடி தண்ணீரில் நீந்தத் தொடங்கியிருந்தது. 

"ஆகா என்னாலும் நீந்த முடிகிறதே...நீந்துவது என்பது இதுதானா? நான் என்னவோ ஏதோவென்று நினைத்தேன்" குட்டிக்கரடி நீந்திக்கொண்டே சொன்னது. 

இந்தக் கதையைச் சொல்லி விட்டு Dr. Ammu Lukose என்பவர் இன்றைய ஒரு முக்கிய பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார். 

இந்தத் தாத்தா ஒருபோதும் குட்டிக்கரடியைக் கேலி செய்யவில்லை. "தண்ணீரைப் பார்த்துப் பயப்படும் நீயொரு பயந்தாங்ககொள்ளி. உனக்கு எல்லாமே பயம்தான். எப்பத்தான் உன் குணம் மாறுமோ?" என்றெல்லாம் திட்டவில்லை. மாறாக குழந்தையே அறியாமல் மெல்ல மெல்ல குழந்தையை நீந்த வைத்துவிட்டார். 

குழந்தைகள் கைபேசித் திரைக்குள் சிக்கிக்கொண்டுள்ள இக்காலத்தில் அருகே இருந்து இதுதான் நல்லது, இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது. நீ வேண்டாம் என்ற சொன்னதற்குள் இவ்வளவு சுகம் இருக்கிறது என்றெல்லாம் குழந்தைகள் அறியாமலே எடுத்துச் சொல்லவும் அவர்களை அனுபவிக்கச் செய்யவும் ஒருவர் இன்றைய சமூகச் சூழலில் இல்லை என்பதுதான் முக்கிய பிரச்சனை. 

குழந்தைளின் மூளை இன்னும் முதிர்ச்சியடைவில்லை. காலம் கடந்து கிடைக்கும் மகிழ்ச்சிக்காகக் காத்திருக்க அவர்களால் முடியாது. அதற்குப் பதில் உடனடியாக கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அதற்குக் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது. குறை சொல்லக் கூடாது என்கிறார். 

 இந்தக் கதை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.  துவக்கநிலை வகுப்பறைகளில் ஆசிரியர் பின்பற்ற வேண்டிய அருமையான கருத்துக்கு அருமையான எடுத்துக்காட்டு. 

அந்தக் கருத்து 

கற்கிறோம் என்று தெரியாமலே கற்பதுதான் உண்மையான கல்வி



நம் பயணம் மிகவும் குறுகியது - Today's thought

 

Our journey is too short - Today's thought


நம் பயணம் மிகவும் குறுகியது - இன்றைய சிந்தனை


ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.  அந்த நபர் அமைதியாக இருந்தபோது, "அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள்" என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.


 அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: "ஏனெனில்  எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால்.. முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்".


 இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 


 இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.


 யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா?  அமைதியாய் இருக்கவும். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது..


 யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப் படுத்தினார்களா? 

ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது.


 காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப் படுத்தினார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது.


 உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.  மன்னிக்கவும், மறக்கவும் பழகி கொள்ளுங்கள். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது..


 சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும், அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள். நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது..


 நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது.  நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது.  அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.


 நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு..


 நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம்.  அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும்.  மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது..


 உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள். எப்போதும் மறக்காதீர்கள்

 உங்கள் பயணம் மிகவும் குறுகியது..

 

நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..


இன்றைய சிந்தனை (17.12.2025)


இன்றைய சிந்தனை - Today's Thought (17.12.2025)


....................................................

*"திறமையும்...! வெற்றியும்,..!!"*

...................................................


ஒரு மனிதனின் வெற்றி. அவர் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்...


கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமை தான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது...


பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது...


பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்...


நம் ஊர்களில் குப்பைப் பொருள்களை திறமையாகப் பேசி, நம்மிடம் புகுத்தும் விற்பனை அலுவலர்களை நாம் அறிவோம்...


நம்மைப் பற்றி நம் பெற்றோர்கள் வருந்தும் போது கூறக்கூடிய வார்த்தை 'கொஞ்சம் கூட திறமை (சாமர்த்தியம்) போதாது இவனுக்கு" என்பது தான்...


இப்போது ஒரு சிறுகதை...


ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்குப் பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி...


'பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்து விட்டால் "எப்படி வெளியே வருவீர்கள்...?' என்பது தான்...


ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முயற்சித்து ஏறி விடுவேன் என்றார் மற்றொருவர். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை...


கடைசியில் ஒருவர் கேட்டார்..,


'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா...?'

'இல்லை' என்றனர் தேர்வுக் குழுவினர்...


'நான் விழுந்தது பகலிலா...? அல்லது இரவிலா...?'

'எதற்குக் கேட்கிறாய்...?'- என்றனர் தேர்வுக் குழுவினர்...


இவர் கூறியதாவது...


''பகலில் குழியில் விழ நானொன்றும் கண் பார்வையற்றவர் இல்லை. கவனக் குறைவானவரும் அல்ல...


அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் அல்ல...


அதனால்!, கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை என்றான்...


அவர் பதில் மனநிறைவு ஏற்படுத்தியது தேர்வுக் குழுவினர்க்கு. அவரது வாக்குத்திறமை அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது...


*ஆம் நண்பர்களே...!*


🟡 ஆளுமை என்பது ஒரு திறமை, அதுவே மிகை ஆற்றலாகும். திறமை என்பது மற்றவரை ஏமாற்றுவதோ, தன் செயலை சாதித்துக் கொள்வதோ இல்லை...!


🔴 திறமை என்பது பேச்சுத் திறமை, அறிவுக் கூர்மை, தெளிந்த சிந்தனை, நம்பிக்கை, சரியாக முடிவெடுக்கும் திறமை, முடிவெடுக்கும் திறன். எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்து விடுவதில்லை...!!


⚫ உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை.  தொடர்முயற்சி, கடினஉழைப்பு, புத்திக் கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் திறமை, இவையெல்லாம் தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும்...!!!



Smartivity My First Science Experiment Kit for Kids 6-8-10-12-14 Years I 50+ Amazing Science Experiments | Christmas/Birthday Gift for Boys&Girls | Educational Toy for Kids 6,7,8,9,10,11,12 Years Old


https://amzn.to/4pDMNMR




இந்த உலகம் நல்லதா இல்லை அல்லதா?



இந்த உலகம் நல்லதா இல்லை அல்லதா? - இன்றைய சிந்தனை


 ஒரு குருகுலத்தில் தலைமை குரு....


தன்  சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


 பாடத்தை நடத்தி முடித்த பின்


 நடத்திய பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்.....


 கேட்கலாம் என்றார் 


. ஒரு சீடன் எழுந்து 


நாம் காணும் இந்த உலகம்


 *நல்லதா* இல்லை *அல்லதா*? என்று கேட்டான் .


 குரு அந்த சீடனிடம் எதிர்க் கேள்வியாக....


 நீ பூனையை பார்த்திருக்கிறாயா ?


 அதன் பல்லால் நன்மையா.... தீமையா ?என்று கேட்டார்.



 தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்....


 குரு இப்படி எதையோ கேட்டு குழப்புகிறாரே என்று 


சீடன் குழம்பியவாறு  விழித்தான்.


 சீடன் தவிப்பதை புரிந்து கொண்ட குரு.....


 அதற்கு பதிலளித்தார். 


 தாய் பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம்...


 ஏனென்றால் குட்டி இளமையாக தாயை சார்ந்து இருக்கும்போது.....


 தன் பல்லாலேயே மென்மையாக குட்டியை கவ்வி....


 தாய் பூனை தூக்கிச் செல்லும்.


 அப்போது தாயின் பற்களால் குட்டிக்கு எந்த சேதமும் ஆகாது.


ஆனால் எலிக்கு அதன் பற்கள் விரோதி.


 இதுதான் உன் கேள்விக்கும் பதில் 


எதுவுமே *நல்லதுதான்* 


 *அதே நேரம் எதுவுமே கெட்டதுதான்*


 அவரவர் தன்மையைப்  பொறுத்து


 நன்றியும் தீமையும் மாறிக்கொண்டே இருக்கும்.



 அதுபோல *உலகம் என்பது நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து....* 


. *நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும்* என்றார்.



 சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது


 உலக நடப்பும் புரிந்தது.



உலகம் *நல்லதா இல்லை அல்லதா* என்பதை....


 நன்றாகவே புரிந்து கொண்டான் .

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

       ** 

        *அல்லதும்* 

👎👎👎👎👎👎👎

 ஒரு குருகுலத்தில் தலைமை குரு....


தன்  சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


 பாடத்தை நடத்தி முடித்த பின்


 நடத்திய பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்.....


 கேட்கலாம் என்றார் 


. ஒரு சீடன் எழுந்து 


நாம் காணும் இந்த உலகம்


 *நல்லதா* இல்லை *அல்லதா*? என்று கேட்டான் .


 குரு அந்த சீடனிடம் எதிர்க் கேள்வியாக....


 நீ பூனையை பார்த்திருக்கிறாயா ?


 அதன் பல்லால் நன்மையா.... தீமையா ?என்று கேட்டார்.



 தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்....


 குரு இப்படி எதையோ கேட்டு குழப்புகிறாரே என்று 


சீடன் குழம்பியவாறு  விழித்தான்.


 சீடன் தவிப்பதை புரிந்து கொண்ட குரு.....


 அதற்கு பதிலளித்தார். 


 தாய் பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம்...


 ஏனென்றால் குட்டி இளமையாக தாயை சார்ந்து இருக்கும்போது.....


 தன் பல்லாலேயே மென்மையாக குட்டியை கவ்வி....


 தாய் பூனை தூக்கிச் செல்லும்.


 அப்போது தாயின் பற்களால் குட்டிக்கு எந்த சேதமும் ஆகாது.


ஆனால் எலிக்கு அதன் பற்கள் விரோதி.


 இதுதான் உன் கேள்விக்கும் பதில் 


எதுவுமே *நல்லதுதான்* 


 *அதே நேரம் எதுவுமே கெட்டதுதான்*


 அவரவர் தன்மையைப்  பொறுத்து


 நன்றியும் தீமையும் மாறிக்கொண்டே இருக்கும்.



 அதுபோல *உலகம் என்பது நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து....* 


. *நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும்* என்றார்.



 சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது


 உலக நடப்பும் புரிந்தது.



உலகம் *நல்லதா இல்லை அல்லதா* என்பதை....


 நன்றாகவே புரிந்து கொண்டான் .

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼



   Pigeon by Stovekraft Amaze Plus Electric Kettle (14289) with Stainless Steel Body, 1.5 litre, used for boiling Water, making tea and coffee, instant noodles, soup etc. (Silver)




Actual Price: Rs. 1101

Offer Price : Rs. 579

Benefit : Rs. 522


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4nugs9F




Combo Offer 



https://amzn.to/4oJ9EpF


Actual Price: Rs. 1545

Offer Price : Rs. 689

Benefit : Rs. 856


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்


மகிழ்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள் - இன்றைய சிந்தனை



மகிழ்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள் - இன்றைய சிந்தனை

................................................


சிக்கல்களைத் தீர்க்க தொடர்ந்து போராடுவதால் மன அழுத்தம் தான் மிஞ்சும். நம்மைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலைகளை உருவாக்க முயன்றால் சிக்கல்கள் தானாக ஓடிப் போகும்..


ஆம்!, சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் முழுமையான மறைபொருள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி உறுதி...(மறைபொருள்- இரகசியம்)


வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு கூறு, மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி... (கூறு-அம்சம்)


ஆம்!, தெளிந்த நீரோடை போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது...


இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது...!


ஆம்!, வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் அது சாத்தியமில்லை...


காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பது தான் உண்மை...


நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக அழிக்கக் கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பது தான்...


மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக் கொள்வதே நிலையான மகிழ்ச்சி...


உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்...


ஒரு மலரை உங்களால் மலரச் செய்ய முடியாது. ஆனால்!,  அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும்...


மகிழ்வோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது நம்மிடமே உள்ளது...


மகிழ்ச்சி என்பது நம் கையில் தானே இருக்கிறது. மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்! மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது...


அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியம்...


ஆம்!, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடம் கொடுக்கட்டும் உங்கள் ஆசைகள். இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்...


வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர், தனித் தீவிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படி இருக்கும் அவருடைய மனநிலை...


அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும்...?


அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும் தானே...!?


இதற்கான பொருள், ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இவ்விரண்டும் மட்டும் போதும் என்பதில்லை...


உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்து விட்டால், மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்து கொண்டே போக வேண்டியது தான் இல்லையா...!?


அப்படி உணர்ந்து நம்மிடம்  உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்...


அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம்...


*ஆம் நண்பர்களே...!*


நல்ல வாழ்த்துகளைப் பெற்றுத் தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப் பெரும் வரம்...!


அதை அனுபவிக்கப் பழகி விட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடி விடும். வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவது தான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி...!!


நம் சிக்கல்களைத் தள்ளி நின்று பார்க்கும் போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகி விடும்...!!!


குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே...!


நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக் கொண்டே வரும் போது, மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழி நடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது...?


பெற்ற சிறிய வெற்றியையும் மனம் மகிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா...? அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே...!


இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டே இருப்பதாகத் தானே பொருளாகிறது...!!


சேகுவேரா சிந்தனைகள்



சேகுவேரா சிந்தனைகள்


மண்டியிட்டு வாழ்வதை விட, நிமிர்ந்து நின்று சாவதே மேல்.


விதைத்தவன் உறங்கினாலும், விதை உறங்குவதில்லை.


விதைத்துக் கொண்டே இரு.

முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.


எதிரிகள் இல்லாத

வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை

என்றே அர்த்தம்.


நீ ஊமையாய் இருக்கும் வரை, உலகம் செவிடாய்த் தான் இருக்கும்.


முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும்,

எழுந்து நடந்தால், எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.


புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.


ஒவ்வொரு அநீதியையும் கண்டு, ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீயும் எனது தோழனே.


- சேகுவேரா


அக்டோபர் 09 : சேகுவேரா நினைவு நாள்

நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை Today's Thought 


Hope is life - a short story today


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠


💠அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.


💠அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. 


💠ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.


💠பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 


💠அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.


💠அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். 


💠ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். 


💠திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.


💠அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.


💠ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.


💠உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.


💠அச்சமயத்தில் கொலம்பஸ் ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. 


💠அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது. தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.


💠கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவரின் பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.


*💠ஆம்,💠*


*💠மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம்.*


*💠வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.*


*💠ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..*


*💠நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.*


*💠எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.*

*உறுதியாய் நம்புங்கள்..உங்கள் கனவெல்லாம்* *பலிக்கும்., வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.....*


*💠 நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்*



முயற்சி திருவினை ஆக்கும் - இன்றைய சிந்தனை




முயற்சி திருவினை ஆக்கும் - இன்றைய சிந்தனை - Today's Thought 


ஓரிரு முறை தோல்வியை சந்தித்து விட்டால் பின் சிலர் துவண்டு போய் விடுகிறார்கள்.! தோல்வி நிரந்தரம் அல்ல, 


தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக் கொண்டு அதில் இருந்து மீண்டு முன்னேற வழியைப் பார்க்க வேண்டும்...!  . 


இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம் தான் வெற்றிக்கு நிச்சயமானவை".


தோல்விகள் கதவை மூடும் போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித் திறப்பது தான் வெற்றிக்கான சாவி.. 


இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணம் அடையும். எந்தச் செயலுமே ஆரம்பிக்கும் போது மலைப்பாகத் தான் தோன்றும். 


குழந்தைகள் கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்து தான் நடை பயிலுகின்றன. கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. 


விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பலர் தங்களின் சாதனைகளை நிகழ்த்தியிருக்க மாட்டார்கள்.."ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பது நமது பலவீனமே..


வெற்றிக்கான பாதையாக எடிசன் கூறுவது : "தேவையானது ஒரு சதவிகிதம் ஊக்கம் - 99 சதவிகிதம் விடாமுயற்சி"..


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூலிடிஸ் சொல்கிறார்,


"இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தைப் பெற்று விட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இவ்வளவு இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடைய வேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழி காட்டும் சர்வ வல்லமை படைத்தது" என்று.


பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியை அவரை உலக அறிஞராக்கியது. 


விடாமுயற்சிக்கு உதாரணங்களாக, மேடம் கியூரி – மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 


உலகில் சாதனையாளர்கள் 

எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது. அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள்; சாதனை படைத்தார்கள்; தொடர்ந்தும் வருகிறார்கள்..


அய்யன் வள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார், "முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று!


*ஆம்.,நண்பர்களே.*


நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. 

உள்ளத்தில் உறுதியும், தெளிவான திட்டமும், அதோடு

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். 


சிகரங்கள் காத்து இருக்கின்றன..

சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMISல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற இயக்குநர் உத்தரவு

EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...