கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மதுரை ஆசிரியர் POCSO சட்டத்தில் கைது



பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் POCSO சட்டத்தில் கைது


மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு


மதுரை மாவட்டம் விரகனூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் கைது செய்தனர். 


2025-26-ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 


தனியார் பள்ளி மாணவிகளுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

ரூ.1 லட்சம் லஞ்சம் | இணை ஆணையர் கைது



லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது


தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது.


அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் புதுப்பிக்கும் பணிக்கான ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை. 


லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பழகன் தலைமையில் தீவிர விசாரணை.


கோவில் திருப்பணி செய்யும், ஒப்பந்ததாரரிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிய, தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட அவரது தோழி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம், தீபாம்பாள்புரம் பகுதியில், மங்களாம்பிகை சமேத வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குடமுழுக்கு பணியை நாகையை சேர்ந்த ஒப்பந்ததாரர் மதியழகன் செய்து வருகிறார். 


 பணிக்கான பணத்தை தர, ஒப்பந்ததாரர் மதியழகனிடம், தஞ்சை மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரான ஜோதிலட்சுமி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அந்த பணத்தை அவரது புரோக்கராக செயல்படும் கிரிஜா வாயிலாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 


லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின் படி மதியழகன் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, அறநிலையத்துறை அலுவலகத்தில் ஜோதிலட்சுமி, கிரிஜா ஆகியோரிடம் லஞ்சமாக கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை, டிஎஸ்பி அன்பரசன் தலைமையிலான போலீசார், இருவரையும் கைது செய்தனர். 


மேலும், இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். கிரிஜா என்பவர், இணை கமிஷனரின் தோழி. அவருக்கு புரோக்கராக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


கள்ளக்குறிச்சி POCSO வழக்கு : ஆசிரியர் பணி நீக்கம்



கள்ளக்குறிச்சி POCSO வழக்கு : ஆசிரியர் பணி நீக்கம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர் சுரேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



ஆசிரியர் பணி நீக்கம் 


கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் சுரேஷ் பணி நீக்கம்.


போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர் சுரேஷை பணி நீக்கம் செய்து பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவு. 


வட்டாரக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது



Trichy District, Vaiyampatti Block Education Officer arrested by Anti-Corruption Department


திருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது


லஞ்சம் : வையம்பட்டி வட்டார கல்வி அலுவலரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி


ஆசிரியையிடம் லஞ்சம் பெற்ற வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது


விடுபட்ட நாட்களுக்கு ஊதியம் பெற சான்றிதழ் அளிப்பதற்கு ரூ.1500 லஞ்சம் கேட்டதாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு;


திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்த நிலையில் பணி மாறுதலில் பள்ளி ஆசிரியை விமலா வேறு ஒரு பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் பணி மாறுதலாகி சென்று விட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியைக்கு தான் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் நான்கு நாட்கள் பணி புரிந்தமைக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது.


மேற்படி பள்ளி ஆசிரியை விமலா அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெறும் பொருட்டு நான்கு நாட்கள் ஊதியம் கொடுபடாததற்கு சான்று கேட்டு வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்துள்ளார்.


மேற்படி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதாபேபி, கொடுபடா சான்று வழங்க ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியை விமலா இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட பொறி வைப்பு நடவடிக்கையின்போது திருச்சி நகர வட்டார கல்வி அலுவலகத்தில், அலுவலர் லதா பேபி, பள்ளி ஆசிரியை விமலா என்பவரிடம் இருந்து லஞ்சமாக ரூ.1500-யை கேட்டு பெற்று கையில் வைத்திருந்த போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் பிடிபட்டார். இது தொடர்பாக திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம், திருச்சி மாவட்ட கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



>>> லஞ்ச ஒழிப்புத் துறையின் பத்திரிகை செய்தி 



Amazon Brand - Solimo Stainless Steel Cubix Water Bottles Set of 3, 1L Each | Rust-Resistant, Shatter-Proof, Spill-Proof | Food Grade Steel | Office, School, Travel | Dishwasher Safe (Silver)


https://amzn.to/4aWzF0K




குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த பெண் கைது



 விழிப்புணர்வு பதிவு :

குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த பீகாரைச் சேர்ந்த பெண் கைது  


ஓசூர் அருகே பெண் தொழிலாளிகள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த பீகாரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நீலு குமாரி குப்தா (23) ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை, அவரின் நண்பரான சதீஷ் குமார் என்பவருக்கும் பகிர்ந்துள்ளதால், அவரையும் கைது செய்ய போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.


ரகசிய கேமரா கண்டறியும் முறை


ரகசிய கேமராவைக் கண்டறிய, முதலில் அறை இருட்டாக்கப்பட்டு, உங்கள் ஃபோனின் கேமராவைக் கொண்டு ஒளிரும் புள்ளிகளைக் கண்டறியலாம், ஏனெனில் கேமராக்கள் ஒளியைப் பிரதிபலிக்கும். மேலும், ஃபோன் அழைப்பு மூலம் அறையில் உள்ள இரைச்சல் அல்லது க்ளிக் சத்தங்களை கவனியுங்கள் அல்லது ` Wi-Fi ஸ்கேனிங் ஆப் மூலம் நெட்வொர்க்கில் சந்தேகத்திற்கிடமான சாதனங்களைக் கண்டறியலாம். சிறப்பு ரகசிய கேமரா கண்டறியும் கருவிகளும் உள்ளன. 


நாமே கண்டறியும் முறைகள்


ஒளியை பயன்படுத்தி கண்டறிதல்:

அறையை முழுவதுமாக இருட்டாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் ஃபோனின் கேமராவை (பிளாஷ் இல்லாமல்) பயன்படுத்துங்கள்.

அறையை மெதுவாக சுற்றிப் பார்க்கவும். மறைக்கப்பட்ட கேமரா லென்ஸ் சிறிய ஒளிரும் புள்ளியாகத் தெரியும்.


சத்தத்தை பயன்படுத்தி கண்டறிதல்:

ஏதாவது அறையில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அருகில் ` «ஃபோனில் இருந்து அழைப்பு செய்து பாருங்கள்.

கேமரா இருந்தால், ` «இரைச்சல் அல்லது க்ளிக் சத்தம் வரலாம்.


நெட்வொர்க்கை ஸ்கேன் செய்தல்:

பெரும்பாலான ரகசிய கேமராக்கள் வைஃபை வழியாக இணைக்கப்படுகின்றன.

உங்கள் ` «மொபைல் ஆப் மூலம் வைஃபை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து சாதனங்களையும் ஸ்கேன் செய்யுங்கள்.

சந்தேகத்திற்கிடமான சாதனங்களைக் கண்டறிந்து அவற்றை முடக்க முயற்சிக்கவும். 


பிற முறைகள்

ரகசிய கேமரா கண்டறிதல் கருவி:

மேலே உள்ள முறைகள் தோல்வியுற்றால், ` «ரகசிய கேமரா கண்டறிதல் கருவியை வாங்கலாம்.

இந்தக் கருவிகள், கேமராவின் லென்ஸ் மற்றும் அதிர்வெண்களைக் கண்டறியும்.


மொபைல் ஆப்:

சில மொபைல் ஆப்-கள் ரகசிய கேமராக்களைக் கண்டறிய உதவும். 


கவனிக்க வேண்டியவை

அறையில் உள்ள துளைகள் அல்லது பொருட்களுக்கு இடையே சந்தேகத்திற்கிடமான அமைப்புகளைக் கண்டறிந்தால், கவனமாக சரிபார்க்கவும்.

சில நேரங்களில், ரகசிய கேமராக்கள் லென்ஸ் மூலம் ஒளியைப் பிரதிபலிக்காது.

சில ரகசிய கேமராக்கள் பல்வேறு அதிர்வெண்களைப் பயன்படுத்தலாம், எனவே ஒரு கருவி அல்லது ஆப் அனைத்து கேமராக்களையும் கண்டறியாமல் போகலாம். 



X RON Combination Spanner Wrench Set, Combination Spanner Set 6mm To 22 mm, 12-Piece, Chrome Vanadium Steel, with Rolling Pouch,Red Color (With Bag)






Actual Price: 1200

Offer Price : 599

Benefit : Rs. 601


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4qJrj21



கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது

 கரூர் துயர நிகழ்வு தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது


கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


கரூர் சோகம் : வதந்தி பரப்பிய மூவர் கைது, 25 சமூக ஊடகக் கணக்குகள் மீது எஃப்ஐஆர்


கரூர் சோகம் தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதோடு, 25 சமூக வலைதளக் கணக்குகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கரூரில் நடைபெற்ற விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கிய நிலையில், 41 பேர் வரை உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தகவலறிந்து உடனடியாக கரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார். துணை முதல்வர் உதயநிதி துபாயில் இருந்து பாதியிலேயே வந்து கரூர் சூழல்களை கவனித்தார். அதேபோல அமைச்சர்கள் கரூரில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.


அதே சமயம் விஜய் உடனடியாக கரூரிலிருந்து திருச்சி சென்று, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்தே அவரிடம் இருந்து இரங்கல் செய்தி வந்தது. இந்த சூழலில் நடிகர் விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சதி நடந்திருப்பதாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.


இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த நிலையில் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.


இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக கரூர் சோகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறை இறங்கியுள்ளது. அதன்படி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக நிர்வாகி சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை வதந்தி பரப்பியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தவறான தொடுதல் : உடற்கல்வி ஆசிரியர் POCSO சட்டத்தின் கீழ் கைது

 

 தவறான தொடுதல் புகார் : உடற்கல்வி ஆசிரியர் POCSO சட்டத்தின் கீழ் கைது 


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்த ஆதி என்ற சிவபாலன் (வயது 48) என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன், உடற்கல்வி பாடவேளையின்போது 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.


இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் தவறான தொடுதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

 

 

கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


பாலியல் தொல்லை கொடுத்​த​தாக அரசு உதவி​பெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்​டார். திருச்சி மேல​கல்​கண்​டார் கோட்டை மாருதி நகரைச் சேர்ந்​தவர் எஸ்​.​வில்லி​யம் பால்​ராஜ்(52). இவர், புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் உள்ள அரசு உதவி​பெறும் பள்ளி​யில் முது​நிலை கணித ஆசிரிய​ராகப் பணிபுரிந்து வந்​தார்.


இந்​நிலை​யில், அங்கு பயிலும் ஒரு மாணவிக்கு கடந்த ஓராண்​டாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வல​கத்​துக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர் வசந்​தகு​மார் முதல்​கட்ட விசா​ரணைக்​குப் பிறகு, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.


இது தொடர்​பாக ஆசிரியர் வில்​லி​யம் பால்ராஜ் மீது போக்சோ உள்​ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர். பின்​னர், புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றத்தில் ஆஜர்படுத்​தி, சிறை​யில்​ அடைத்தனர்​.



பணியில் சேர்ந்த 4 மாதங்களில், ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO

 பணியில் சேர்ந்த 4 மாதங்களில்,  ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO 


TNPSC Group IV மூலம் பணியில் சேர்ந்த 4 மாதங்களில், பட்டாவில் பெயர் மாற்றம் தொடர்பான சேவையை பெற ₹6,000 கையூட்டு பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் (இருக்கையில் அமர்ந்திருப்பவர்) கைது.


பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.6,000 லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வாக்கூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


வாக்கூர் மேலத்தெருவை சேர்ந்த தேர்விஜயன், தரசூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரும், உதவியாளர் ரமேஷும் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தேர்விஜயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தேர் விஜயன் (வயது 50). இவருக்கும், இவரது அண்ணன் அருள்பிரகாசத்திற்கும், மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவர் தானமாக தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்தை வழங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தேர் விஜயன், விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் பட்டா மாற்றம் தொடர்பாக வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் (28), பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்து விடுமாறு, அங்கிருந்த கிராம உதவியாளர் ரமேஷ் (49), தேர்விஜயனிடம் கூறினார்.


ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தேர் விஜயன், கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை சதிஷ்குமாரிடம் கொடுப்பதற்காக தேர் விஜயன் நேற்று வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த சதிஷ்குமார், லஞ்ச பணம் ரூ.6 ஆயிரத்தை கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், பணியில் சேர்ந்து 4 மாதங்கள் மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Service rendered prior to regularization must also be counted for pension benefits – Supreme Court

  பணிவரன்முறைக்கு முந்தைய கால பணியும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிடப்பட வேண்டும் - உச்ச நீதிமன்றம் Service rendered prior to regularisation m...