கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயிரிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிரிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுழலில் சிக்கிய 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்பு



 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது, சுழலில் சிக்கிய 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்பு 


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பள்ளி மாணவி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அவிநிஷா, தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு உறவினர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்த மாணவி, மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்தது.



இதனால் அந்த மாணவி நிலைதடுமாறி ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார்.


அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்று முடியாமல் போனதால், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை தீவிரமாக தேடத் தொடங்கினர்.


ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதல்நாள் மாணவி  மீட்கப்படவில்லை. 


இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது, சுழலில் சிக்கி தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமி, 10 கி.மீ தொலைவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 2வது நாளாக நடந்த தேடுதலில் உடலை தீயணைப்பு படையினர் கண்டெடுத்தனர்.


Deaths inside cars – How to prevent them?



கார்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புகள் - தடுப்பது எப்படி?


சமீப காலமாக பூட்டிய காருக்குள் 

நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 


சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும்

 துக்கம்


இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து 

காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. 


தற்போதையை காலத்தில் 

மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவரும் 

இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் 


பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வந்தால் ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து 


என்பதை பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன். 


பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக் ஆகி 

உள்ளேயே அடைபட்டு போய் அதிகமாக மரணிக்கின்றனர். 


அரிதாக பெரியவர்களும் குறிப்பாக அதீத போதையில் இருப்பவர்களும் மரணமடைகிறார்கள். 


இது எதனால் நிகழ்கிறது என்று பார்ப்போம். 


ஒரு சராசரி மனிதனுக்கு 

தினசரி 300 லிட்டர் ஆக்சிஜன் அவன் சுவாசிக்கத் தேவை. 


அதாவது ஒரு மணிநேரத்துக்கு 12.6 லிட்டர் ஆக்சிஜன் எனும் உயிர்வளி கட்டாயத் தேவையாகும். 


இப்போது முற்றிலும் பூட்டப்பட்ட ஜன்னல்கள்  மூடப்பட்ட காருக்குள் 

நான்கு குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் கற்பனை செய்வோம்.. 


பூட்டிய காருக்குள் சுமார் 3000 முதல் 4000 லிட்டர் காற்று அடைபட்டிருக்கும்.  

வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்கோ 

உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கோ இயலாது. 


காற்றில் 21% ஆக்சிஜன் கலந்துள்ளது. 

அப்படியென்றால் காருக்குள் இருக்கும்   சுமார் 3500 லிட்டர் அடைபட்ட காற்றில் ,

735 லிட்டர் ஆக்சிஜன் இருக்கும். 


ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 

0.25 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் என்றால் நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜன் என 

ஒரு மணிநேரத்திற்கு அறுபது லிட்டர் வீதம் 

அடுத்த பனிரெண்டரை மணிநேரம் அவர்கள் நால்வரும்  சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளே இருக்கிறது. 


பிறகு ஏன் பூட்டப்பட்ட கார்களுக்குள் சென்ற குழந்தைகள் இரண்டு மூன்று மணிநேரங்களுக்குள் மூர்ச்சையாகி மரணமடைகின்றனர்? 


இதற்குக் காரணம் 

நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது  

ஆக்சிஜனை வைத்துக் கொண்டு 

 சுவாசத்தை வெளிவிடும் போது 

கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றில் வெளியேற்றுகிறோம். 


முறையாக ஜன்னல்கள் திறந்திருக்கும் காரில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியே சென்று, புதிய ஆக்சிஜன் உள்ள காற்று உள்ளே வந்து விடும். 


ஆனால் அடைக்கப்பட்ட காருக்குள் 

கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வெளியிடும் மூச்சுக் காற்றின் கார்பன் டை ஆக்சைடு அளவுகள்  கூடிக் கொண்டே செல்லும். 


இது தான் உயிரைக் கொல்லும் முக்கிய ஆபத்து. 


ஒரு இடத்தில் நிலவும் காற்றில், கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 1000 பிபிஎம் (PPM) என்பதற்கு கீழ் இருப்பது உகந்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். 


சென்ஸ் ஏர் எனப்படும் காருக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு சென்சார் தயாரிக்கும் நிறுவனம் இது குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளது. 


கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட காருக்குள் நான்கு மனிதர்கள் ஏசி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் போது 


1½ நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு - 1000 பிபிஎம் தொட்டு விடுகிறது

5 நிமிடங்களில் - 2500 பிபிஎம் 


(2000 பிபிஎம் தாண்டினாலே 

மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தூக்கம் வருவது போல் இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)


22 நிமிடங்களில் - 6000 பிபிஎம் 


இத்தனைக்கும் ஏசியை  வெளிப்புறக் காற்று உள்ளே புகும் மோடில் வைத்துப் பயணிக்கும் போதே இத்தகைய நிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


இதுவே கதவுகள் பூட்டப்பட்டு ஜன்னல்கள் மூடிய எஞ்சின் ஓடாத காருக்குள் நான்கு பேர் இருக்கும் போது 15 நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 40000 பிபிஎம் தொட்டிருக்கின்றன. 


மற்றொரு ஆய்வில் 

இருவர் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் காரில் ஏசி போட்டு பயணிக்கும் போது 

பிபிஎம் 1400 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 

பிறகு இந்த அளவுகள் 1000 க்கு கீழ் குறைவதற்கு அடுத்த நாள் காலை வரை அதாவது பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளது. 


இப்போது கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 

கூடக் கூட மனித உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம் 


2000-2500 பிபிஎம் வரை

-  சோர்வு 

- கவனச்சிதறல் 

- வேக்காடாக உணர்தல் 


2500-5000 பிபிஎம் 

- தலைவலி

- தலை சுற்றல் 

- உறக்கம் ஏற்படும் நிலை 


5000- 40,000 பிபிஎம் 

- மூச்சுத் திணறல் 

- மூர்ச்சை நிலை

- அதீத கவனக் குறைபாடு 


40,000 க்கு மேல்

- தீவிர மூச்சுத் திணறல் 

- கோமா 

- திடீர் மரணம் ஏற்படுதல் 


இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் 

காருக்குள்  அடைபடும் போது காற்றில் இருக்கும் ஆக்சிஜன் நமக்கு பல மணிநேரங்களுப் போதுமானதாக இருந்தாலும் கூட 

நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் - மிகவும் வேகமாக உள்ளே அதன் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே செல்லும். 


இதனால் நாம் தேவைக்கும் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கத் துவங்குவோம். அதனால் 

நமது உடலில் ஒரே நேரத்தில் 

ஆக்சிஜன் குறைபாடும் ( ஹைப்பாக்சியா) 

கூடவே ஹைப்பர் கேப்னியா ( கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும்) சூழ்நிலையும் தோன்றும் 


இதனால் உடல் அமிலத்தன்மைக்குச் செல்லும். 

பல உறுப்புகளும் செயலிழக்கும்.  

மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 

மூர்ச்சை நிலைக்குச் சென்று 

சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. 


இதற்கடுத்தபடியாக 

நிற்கும் காரில் ஏசி போட்டுக் கொண்டு 

அனைத்து ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு நீண்ட நேரம்  உறங்குவது சரியா? 


தவறு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட.. 


அதாவது கார் ஓடும் போதும் கூட 

ஏசியை காற்று உள் சுழற்சி மட்டும் ஆகும் மோடில் வைத்திருந்தால் 

வெளியே இருந்து புதிய காற்று உள்ளே வராது. 


மகிழுந்தை வெளிப்புறத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது, 

வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் மோடில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லை. 


 அதுவே கார்களை நிறுத்தும் கீழறைகள் (BASEMENT)  அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட அறை ஆகியவற்றில் காரை நிறுத்தி இஞ்சின் ஆன் செய்து உள்ளே உறங்குவது ஆபத்தானது. 


காரணம் - காருக்குள் செல்லும் காற்றானது, 

அந்தக் காரின் இஞ்சின் வெளியிடும் 

கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த காற்றாக இருக்கும். 

தொடர்ந்து இந்த கலப்படமான காற்று காருக்குள் வரும் போது, இயல்பாகவே சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிவிடும்.  

இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். 

அதிலும் குடி போதையில் இருக்கும் போது இதை கவனிக்கும் வாய்ப்பு குறைவு. 

இதனால் மரணம் நிகழும். 


இதைத் தவிர்க்க, 

காருக்குள் தூங்க வேண்டும் என்றால் 

பாதுகாப்பான திறந்த வெளியில் 

ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்து விட்டு இஞ்சினை ஆன் செய்யாமல் உறங்குவது சிறந்தது. 


இன்னும் கார் சம்பந்தமான ஏசி இயக்கத்தில் பாதுகாப்புக்காக சில டிப்ஸ்கள் இதோ


ஏசி மோடில் இரண்டு வகை உண்டு


- நாம் சுவாசிக்கும் காற்று உள்ளேயே சுழற்சியில் இருக்கும் மோட் 

- வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே வரும் மோட். 


காருக்குள் இருவருக்கு  மேல் 

நால்வர் மற்றும் அதற்கு மேல் நபர்கள் பயணிக்கும் போது 


வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே புகும் ஏசி மோடில் பயணிப்பது நல்லது. இது உங்கள் காருக்குள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும். 


நீண்ட நெடிய பயணங்கள் செல்லும் போது அவ்வப்போது கட்டாய ப்ரேக் எடுத்து 

சில நிமிடங்கள் அனைவரும் இறங்கி வெளிக்காற்றைப் பெறுவது கட்டாயமாகிறது 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் கார் நிற்க நேருமாயின், ஏசியை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களைத் திறந்து கொண்டு நிற்பது நல்லது. காரணம் - நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் வாகனங்களின் புகை அதிகமாக இருக்கும். குறிப்பாக நமக்கு முன் நிற்கும் கார்/ பேருந்தின் எக்ஸ் ஹார்ட் டில்லியில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு/ கார்பன் மோனாக்சைடு அதிகம் உள்ள காற்றை நமது காருக்குள் ஏசி உள்ளிழுக்கும். இது நமக்கு ஊறு விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் காற்று உள் சுழற்சி மட்டும் ஆகுமாறு மோட் செட் செய்து கொள்ளவும். 


கட்டாயம் மூடிய காரில் ஏசி போட்டு உறங்கக் கூடாது. அதுவும் மது அருந்தி விட்டு உறங்கவே கூடாது.


பொதுவாக கார்களை நாம் லாக் செய்யும் போது ஜன்னல்களில்  ஒன்றோ இரண்டிலோ குறைந்தபட்சம் ஒரு செண்ட்டிமீட்டர்  இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டால் 

தற்செயலாக விபரீதமாக  குழந்தைகள் உள்ளே சென்று விளையாடி கார் லாக் ஆனால் கூட 

அந்த ஒரு செண்டிமீட்டர் இடைவெளியானது உயிர்களைக் காப்பாற்றக் கூடும். 


நம் குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்த்து வருவோம்.

 என்றும் 

குழந்தைகள் காணவில்லை எனில் முதலில் சுற்றி இருக்கும் கார்களில் சென்று தேடுவதை வழக்கமாகக் கொள்வோம்.


காரணம் தற்காலக் குழந்தைகள்

கார்களின் சாவிகளை தானே எடுத்துக் கொண்டு அவற்றை சிறிய அழுத்தில் திறந்து உள்ளே சென்று விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அவர்களிடம் கார் சாவி கிடைக்காமல் பார்த்துக் கொள்வதையும் உறுதி செய்யலாம். 


கார் - ஏசி - கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜன் - கார்பன் மோனாக்சைடு  என்று நாம் கற்றுக் கொண்ட இந்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம் 


இன்னுயிர்களைக் காப்போம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு



அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு 



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




👆🏻 அதிர்ச்சியளிக்கும் காட்சிகள். இளகிய மனம் கொண்டவர்கள் காண வேண்டாம் 



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 11 பேர் பலி 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 30-11-2025 மாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில், இரண்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். 


முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த மேலும் ஏழு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். 


இறந்த 11 பேரில், நான்கு பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், நான்கு உடல்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், மூன்று உடல்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 


விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் அவர்களின் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 


108 அவசர சேவையிலிருந்து 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன, காயமடைந்தவர்கள் சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விவரங்களைப் பெற்றார். மீட்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


விபத்து நடந்த இடத்திலும் மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி சம்பவ இடத்தையும் மருத்துவமனைகளையும் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். 


இதற்கிடையில், விபத்து தொடர்பான தகவல்களை வழங்க 04575-246233 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


Head-on collision between government buses near Tirupattur in Sivagangai district: 11 killed


In a tragic road accident that occurred early this morning near Tiruppathur in Sivagangai district, 11 people lost their lives after two State Transport Corporation buses collided head-on.


According to initial reports, four people died on the spot. Subsequently, seven more victims who had sustained serious injuries succumbed while undergoing treatment in hospitals.


Of the 11 deceased, the bodies of four women have been sent to the Sivagangai Government Hospital for post-mortem examination, four bodies to the Karaikudi Government Hospital, and three bodies to the Tirupattur Government Hospital.


Five persons who sustained critical injuries in the accident are currently undergoing intensive treatment at the Sivagangai Government Hospital. Doctors are closely monitoring their condition.


 More than 10 ambulances from the 108 emergency service were pressed into service, and the injured were rushed to government hospitals in Sivagangai, Karaikudi, and Tiruppathur.


Sivagangai District Collector visited the Tirupattur Government Hospital in person, met the injured, consoled them, and obtained details from doctors regarding the treatment being provided. He also directed officials to expedite rescue and medical operations.


District administration and police officials are jointly carrying out intensive rescue and relief measures at both the accident site and the hospitals. Sivagangai Superintendent of Police Siva Prasad inspected the accident spot, while Karaikudi MLA Mangudi visited both the site and hospitals to review the situation.


Meanwhile, an emergency helpline number 04575-246233 has been announced to provide information related to the accident. Relatives of the victims have been advised to contact this number for further details, according to the Sivagangai District Police.


 


>>> Best SmartWatches குறித்த தகவல்கள்... 


இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர், மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழப்பு



இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர், மின்சாரக் கம்பியில் சிக்கி  உயிரிழப்பு


இளகிய மனம் கொண்டவர்கள் புகைப்படத்தை பார்ப்பதை தவிர்த்து விடவும்


அதி வேகமாக செல்லும் பைக் வாங்கி தரும் பெற்றோர்களே இதை பார்த்துவிட்டு வாங்கி கொடுங்கள்.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று எதிரே வந்த காரின் மீது மோதியதில் அந்தரத்தில் பறந்த வாலிபர், மின்சாரக் கம்பியில் சிக்கி தொங்கியபடி உயிரிழப்பு.





 


>>> Best SmartWatches குறித்த தகவல்கள்... 


தவெக மாவட்ட செயலாளரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 

தமிழக வெற்றிக் கழக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாமக்கல்லில், தவெக தலைவர் விஜய், செப். 27-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.



இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில், ”தான் எந்த குற்றமும் செய்யவில்லை, அரசியல் காரணங்களுக்காக வழக்கில் தன்னை சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கில், ”காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.


இந்த மனு, நீதிபதி என். செந்தில்குமார் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்தோஷ், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி மனுதாரர் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் ரூ. 5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்தார்.


இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ. முருகவேல் எதிர்ப்பு தெரிவித்தார்.


இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரைக் கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என சரமாரியாக கேள்வி எழுப்பி, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் : CBI விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் : CBI விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு நீதிபதிகள் கண்டனம் 




கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.


காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் தவெக மாவட்டச் செயலாளர், பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் சில த.வெ.க தலைமை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கரூர் நெரிசல் குறித்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டி த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இந்நிலையில் கரூர் விஜய் பிரசார கூட்டநெரிசல் மரணம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் மீதும் இன்று (அக்டோபர் 3) உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை தொடங்கி இருக்கிறது.


இதில் கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து அந்த மனுவை முடித்து வைத்திருக்கின்றனர்.


இழப்பீடு கோரிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.


விஜய் மற்றும் அரசுத்தரப்பு 2 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருக்கின்றனர்.


இது ஒரு துயர சம்பவம், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்திருக்கிறது.


என்.ஆனந்த், நிர்மல்குமார் மீதான முன் ஜாமீன் மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மதியத்துக்கு மேல் விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கு அனுமதி வழங்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கு அனுமதி வழங்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


வழிகாட்டு நெறி முறை வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்காது - அரசு தரப்பு





எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.



 சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு  


எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு.


சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.


காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.



கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது

 கரூர் துயர நிகழ்வு தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது


கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


கரூர் சோகம் : வதந்தி பரப்பிய மூவர் கைது, 25 சமூக ஊடகக் கணக்குகள் மீது எஃப்ஐஆர்


கரூர் சோகம் தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதோடு, 25 சமூக வலைதளக் கணக்குகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கரூரில் நடைபெற்ற விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கிய நிலையில், 41 பேர் வரை உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தகவலறிந்து உடனடியாக கரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார். துணை முதல்வர் உதயநிதி துபாயில் இருந்து பாதியிலேயே வந்து கரூர் சூழல்களை கவனித்தார். அதேபோல அமைச்சர்கள் கரூரில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.


அதே சமயம் விஜய் உடனடியாக கரூரிலிருந்து திருச்சி சென்று, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்தே அவரிடம் இருந்து இரங்கல் செய்தி வந்தது. இந்த சூழலில் நடிகர் விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சதி நடந்திருப்பதாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.


இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த நிலையில் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.


இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக கரூர் சோகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறை இறங்கியுள்ளது. அதன்படி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக நிர்வாகி சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை வதந்தி பரப்பியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


கரூர் துயர நிகழ்வு : ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தொடங்கியது




கரூர் துயர நிகழ்வு : ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தொடங்கியது


கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று நடத்திய பிரசாரத்தில் 40 பேர் பலியானார்கள். பலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. 


விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். 


அப்போது காவல்துறையினரிடம் சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார். மேலும் கள நிலவரம் குறித்து அவரிடம் காவலர்கள் எடுத்துரைத்தனர். இதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார்.


அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். அப்போது பலர் கதறி அழுதனர்.


கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் 40 உயிரிழப்புகள் : யார் யார் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?



கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் 40 உயிரிழப்புகள் : யார் யார் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை உயிரிழப்புகள் : த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் (& Others) மீது வழக்கு பாய்ந்தது


கரூர் நகர காவல் நிலையம்-  u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act


A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்

A2. புஸ்ஸி ஆனந்த்

A3. நிர்மல் குமார்

& others.


* BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.


* BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.


* BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை


* BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.


* TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்


ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...




நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை SRM கல்விக் குழுமம் ஏற்கும் : ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர்

நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை SRM கல்விக் குழுமம் ஏற்கும் :  ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர்


கரூரில் நேற்று நடந்த துர்திஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்


உயிரிழந்தோரின் குடும்பத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி செலவையும் எஸ்ஆர்எம் கல்வி குழுமம் ஏற்கும்


அவர்கள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அவர்களின் கல்வி கட்டணம் செலுத்தப்படும்: ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர்



விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழப்பு - விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமான பதிவு


"களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்"


விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழப்பு - விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமான பதிவு



விஜய்க்கு எதற்கு அரசியல்? ஷா நவாஸ் காட்டம் 

நெருக்கடிகள், சவால்கள், துயரங்களை எதிர்கொள்வதே அரசியல் 

அந்தத் துணிவு சிறிதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல் ?

துயரம் நடந்து விட்ட பிறகும் கூட தன் தொண்டர்களை மீட்கவோ, பார்க்கவோ களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒழிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் Road show என்ற concept ஐ தடை செய்யுங்கள்

 


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல் கட்சியினரின் Road show என்ற concept ஐ தடை செய்யுங்கள்


# Ban Road Shows


வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு.கு.அரவிந்தன், இப்பதிவை அரசியல் நோக்கத்துடன் யாரும் அணுக வேண்டாம் 🙏🏻 சராசரி மக்கள் நலன் பார்வையில் இப்பதிவை படித்தால் போதும் 👍🏻


முன்பு எல்லாம் அரசியல் தலைவர்கள், கட்சி பரப்புரைகளையோ, கூட்டத்தையோ, மாநாடுகளையோ.. ஒவ்வொரு ஊரிலும் திடல் என்று ஒன்று இருக்கும், மைதானம் என்று ஒன்று இருக்கும், கார்னர் என்று ஒன்று இருக்கும்.. அவ்வாறான ஒரு பெரிய இடத்தில் தான் அவைகளை நடத்துவார்கள் 👍🏻 அதாவது தஞ்சையில் எடுத்தீர்களேயானால் திலர்கள் திடல் என்ற இடத்தில் மட்டும் தான் முன்பெல்லாம் அவ்வாறு நடக்கும்.. மதுரையில் எடுத்தீர்களேயானால் தமுக்கம் மைதானம் என்று இருக்கும்.. திருச்சியில் எடுத்தீர்களேயானால் ஜி கார்னர் என்று இருக்கும்.. அங்கேதான் கூட்டங்கள் நடக்கும்..


இப்பதிவை படிப்பவர்களில், பொதுவாக ரோடு என்றால் எதற்காக உரியது என்று யாரேனும் ஒரு புத்திசாலி விளக்கம் தாருங்களேன்??

ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும் 🙄🙄 


அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. 🙄🙄 சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..  


ஆம்புலன்ஸ் போகதானே ரோடே தவிர, கூட்டங்கள் நடத்த இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கே கூட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்று நடக்கிறப்போ, ஏன் ஆம்புலன்ஸ் இங்கு வருகிறது என்று புத்திசாலித்தனமான கேள்விகள் வேறு.. இப்போது கூட்ட நெரிசல் அதிகமாகி உயிர் சேதங்கள் ஏற்படும் பொழுது உங்கள் தலைவர் மைக்கிலேயே.. எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! என்று கதறினாரே இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஏன் ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே  தேவைப்படுகிறது 🙄🙄


பெண்கள் இங்கே வாருங்கள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வாருங்கள், ஒருவரை மீது ஒருவர் ஏறி செல்லுங்கள், வெளியூர்களிலிருந்து இங்கே நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள் என்று உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா??போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்?? நான் தளபதி வெறியன் அப்படி என்று சொல்லிக் கொண்டு உங்களை வரச் சொல்லி யார்தான் அழைத்தார்கள் 🙄


இப்பொழுது இங்கே அரசியல் களத்தில் நடந்த இந்தத் துயர உயிரிழப்புகளுக்கு காரணம் அவன் தான், இவன் தான், நான் இல்லை அவனில்லை என்று "Fingers Pointing Game " ஆரம்பித்துவிட்டது.. ஆனால் இந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் உயிர் இழந்தவர்களே.. முட்டாள்தனமாக ஒருவரை பார்க்கச் சென்று உயிரை விட்டவர்களே.. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதவரை நாம் எவரையும் குற்றம் சாட்டி விட முடியாது🙏🏻 


உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இந்த இறப்புக்களுக்கு பிறகாவது.. தானாக முன்வந்து நீதிமன்றத்தை கூட்டி.. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் Road show என்ற concept இருக்கவே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட வேண்டும்.. பொது மக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இந்த road show களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் 🙏🏻 இறந்த இந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🏻


... Dr. கு.. அரவிந்தன்....


நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு : அக்கறையில்லாத தலைமைதான் காரணமா?



நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு : அக்கறையில்லாத தலைமைதான் காரணமா? (முகநூல் பதிவு)


களத்திலிருந்த நிருபர்கள் கொதித்துப் பேசுகின்றனர்.  


நிகழ்வின் அத்தனை நெறிமுறைகளும் மிக கேவலமாக பின்பற்றப் பட்டிருக்கின்றன, இது நெரிசல் பலி அல்ல, படுகொலைகள் என்று ஆற்றாமையுடன் அவர்கள் வெடித்துப் பேசுவது காட்டப்பட்ட அலட்சியத்தைத்தான் !


காவல் துறை அனுமதித்த உரிய நேரத்திற்கு விஜய் வந்து பேசியிருந்தால் இவ்வளவு நெரிசலுக்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர்.


இன்னொரு நிருபர் (நியுஸ் தமிழ் 24 × 7) கதறி அழுகிறார்.  தன் கைகளால் பல குழந்தைகளின் உயிரற்ற உடல்களை ஆம்புலன்சில் ஏற்றியதாகச் சொன்னார்.  அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.  நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் நெரிசலில் சரிந்து கிடந்ததாகச் சொல்கிறார்.  அவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.  அத்தனைபேரும் விஜய் பேச்சைக் கேட்பதில்தான் ஆர்வம் காட்டினர் என்று குரல் கம்மப் பேசினார்.  


நீங்க சொல்றதுக்கும் பலி எண்ணிக்கைக்கும் தொடர்பே இல்லையே என்றார் அவரிடம் பேசிய நெல்சன்.  அப்போது 11 பேர் பலி என்றுதான் பிரேக்கிங் நியூஸ் வந்திருந்தது.  அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோதே அது 25 என்றானது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது !


கல்வி நல்ல வேலையைத் தந்தது, பணமீட்டியது, வாழ்வின் அனைத்து ருசிகளையும் விரைவாக ருசிக்கச் செய்தது.  அவ்வளவுதான்.  பகுத்தறிவை தரவில்லை.  ஒரு தலைமுறையின் பெரும்பகுதிக்கு பகுத்தறிவு என்றால் என்னவென்றே தெரியவில்லை.  


குழந்தைகளுடைய எந்த ஆசையையும் உடனடியாக நிறைவேற்றுவதுதான் தன் தலையாய கடமை என்று பகுத்தறிவற்ற அந்த மூளை சிந்திக்கிறது.  அதுதான் எதற்கும் துணிகிறது !


இப்படி நடக்கலாமென நாம் முதல் மாநாட்டின் போதிருந்தே சொல்லி வருகிறோம்.  தன் குழந்தைகளை அத்தகைய கூட்டத்திற்கு அனுப்பும் பெற்றோர்களை தொடர்ந்து எச்சரித்தும் வந்தோம்.  அவர்களாலும் என்ன செய்ய முடியும் ?


முழு முட்டாள் ரசிகர்கள் ஆன இவர்களை புயல் காற்று.  மேகவெடிப்பு மழை, பெரு நிலச்சரிவு.  சுனாமி.  யாராலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.  காலம் மட்டுமே திருத்தும் ..


#கரூர்கூட்டநெரிசல்பலி


கரூர் துயர நிகழ்வில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி விவரம்



கரூர் நடிகர் விஜய் பரப்புரை துயர நிகழ்வில் உயிரிழந்தவர்கள்  குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி விவரம்


கரூரில் உயிரிழந்தவர்கள்  குடும்பத்திற்கு தலா 35,50,000 நிதியுதவி


* தமிழ்நாடு அரசு - 10 லட்சம்

* மத்திய அரசு - 2 லட்சம்

* தவெக - 20 லட்சம்

* காங்கிரஸ் - 2,50,000

* கரூர் மாவட்ட பாஜக - 1 லட்சம்


கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்


 விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை : மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி பேட்டி 



* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது 


* 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம் 


* 3வதாக அனுமதி அளிக்கப்பட்ட வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் ஏற்கனவே அதிமுக பிரச்சாரம் செய்த இடம் என்பதால் பரிந்துரைத்தோம் 


* போலீஸ் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுதான் வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் தவெகவினர் அனுமதி பெற்றனர் 


* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கல்வீச்சு ஏதும் நடைபெறவில்லை 


* நேற்று, விஜய் வந்தபோது 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 



* அதற்கு முந்தைய நாள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது 137 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 


* கூட்டம் அதிகம் உள்ளதால் 50 மீட்டர் முன்னதாகவே வாகனத்தை நிறுத்தமாறு காவல்துறை அறிவுறுத்தலுக்கு விஜய் தரப்பு மறுப்பு, 


* குறிப்பிட்ட இடத்தில்தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என விஜய் திட்டவட்டம் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் 


* தவெகவினர் அமைத்திருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்துவிட்டது 


* விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் அவர்களை கீழே இறக்கவதற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது 


* விஜய் பேசும்போதும் மின்சாரம் தடை செய்யப்படவில்லை - மின்துறை விளக்கம்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்


*📽️ கரூரில் 40 பேர் இறந்த இடத்தை சுற்றி இருக்கும் கடைகளில் சிசிடிவி ஆதாரங்கள் சேகரிப்பு


*🎥 கடைகளின் சிசிடிவி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்


*📽️ விஜய் பரப்புரை செய்த பகுதியில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல்


*📽️ வேலுச்சாமிபுரத்தில் பதிவான சிசிடிவி ஆதாரங்களை போலீசார் மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக தகவல்


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


கரூரில் நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.


கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.


நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.


என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். 


நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.


அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.



கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பள்ளி குழந்தைகளை பார்த்த பிறகு கதறி அழுத பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பள்ளி குழந்தைகளை பார்த்த பிறகு கண்ணீர் விட்டு கதறி அழுத பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Service rendered prior to regularization must also be counted for pension benefits – Supreme Court

  பணிவரன்முறைக்கு முந்தைய கால பணியும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிடப்பட வேண்டும் - உச்ச நீதிமன்றம் Service rendered prior to regularisation m...