கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

VAO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VAO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீன் குழம்பு லஞ்சம் | VAO பணியிடை நீக்கம்

 


மீன் குழம்பு லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடை நீக்கம் Suspension 


கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சிட்டா வழங்க விவசாயியிடம் மீன் குழம்பு பார்சல் வாங்கி வரும்படி கூறிய புகாரில் தேவர்மலை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் பணியிடை நீக்கம்



சிட்டா வழங்க லஞ்சமாக பொரித்த மீன் கேட்ட விஏஓ பணியிடை நீக்கம்


கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்.


கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே தேவா்மலை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம்  கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ். இவா், வங்கியில் விவசாய கடன் பெறுவதற்காக நிலத்துக்கு சிட்டா, அடங்கல் கேட்டு தேவா்மலை கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.


இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம், தேவராஜ் கைப்பேசியில் சிட்டா குறித்து கேட்டுள்ளாா். அப்போது காா்த்திக், தேவராஜிடம் பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அங்கிருந்து பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு வாங்கி வருமாறு கூறியுள்ளாா்.


இதையறிந்த தேவராஜ் மகன், விஏஓ காா்த்திக்கை கைப்பேசியில் அழைத்து, உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தரவில்லையா என லஞ்சம் குறித்து கேட்டுள்ளாா். இதனால் அதிா்ந்து போன காா்த்திக், உங்க அப்பாவை அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளாா். இந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வெள்ளிக்கிழமை வைரலாக பரவியது.


இந்நிலையில், குளித்தலை சாா்-ஆட்சியா் சேஷத்ரிமயும் தீபிசானு, கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.


இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சாா்- ஆட்சியா் உத்தரவிட்டாா். 


பணியில் சேர்ந்த 4 மாதங்களில், ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO

 பணியில் சேர்ந்த 4 மாதங்களில்,  ₹6,000 கையூட்டு பெற்று கைதான VAO 


TNPSC Group IV மூலம் பணியில் சேர்ந்த 4 மாதங்களில், பட்டாவில் பெயர் மாற்றம் தொடர்பான சேவையை பெற ₹6,000 கையூட்டு பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் (இருக்கையில் அமர்ந்திருப்பவர்) கைது.


பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.6,000 லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வாக்கூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


வாக்கூர் மேலத்தெருவை சேர்ந்த தேர்விஜயன், தரசூர் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரும், உதவியாளர் ரமேஷும் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த தேர்விஜயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தேர் விஜயன் (வயது 50). இவருக்கும், இவரது அண்ணன் அருள்பிரகாசத்திற்கும், மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவர் தானமாக தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்தை வழங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தேர் விஜயன், விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் பட்டா மாற்றம் தொடர்பாக வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் (28), பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்து விடுமாறு, அங்கிருந்த கிராம உதவியாளர் ரமேஷ் (49), தேர்விஜயனிடம் கூறினார்.


ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தேர் விஜயன், கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை சதிஷ்குமாரிடம் கொடுப்பதற்காக தேர் விஜயன் நேற்று வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த சதிஷ்குமார், லஞ்ச பணம் ரூ.6 ஆயிரத்தை கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், பணியில் சேர்ந்து 4 மாதங்கள் மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.


VILLAGE ASSISTANT NOTES - STUDY MATERIALS - கிராம உதவியாளர் தேர்வுக்கு உதவும் பாடக்குறிப்புகள் - 279 பக்கங்கள் - கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள், பணி விதிகள், கிராம கணக்குகள் - நிலம் - நிலத் தீர்வை - நிலவரி, அரசுக்கு சேர வேண்டிய நிலுவைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், பொது சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இதரப் பணிகள் (Duties and Responsibilities of Village Administrative Officers, Work rules, Village accounts - Land - Land settlement - Land Tax, Dues to Government, Disaster Management and Relief works, Maintenance of law and order, Public Health, Social Security Schemes & Other Works)...


STUDY MATERIALS - VILLAGE ASSISTANT NOTES - STUDY MATERIALS 2023 - கிராம உதவியாளர் தேர்வுக்கு உதவும் பாடக்குறிப்புகள் - 279 பக்கங்கள்...


>>> கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள், பணி விதிகள், கிராம கணக்குகள் - நிலம் - நிலத் தீர்வை - நிலவரி, அரசுக்கு சேர வேண்டிய நிலுவைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், பொது சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இதரப் பணிகள் (Duties and Responsibilities of Village Administrative Officers, Work rules, Village accounts - Land - Land settlement - Land Tax, Dues to Government, Disaster Management and Relief works, Maintenance of law and order, Public Health, Social Security Schemes & Other Works)...



வருவாய் நிர்வாக ஆணையரகம், துணை ஆட்சியர்களுக்கு பிரத்யேக வலைதளம், கிராம நிருவாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க புதிய வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - செய்தி வெளியீடு எண்: 878, நாள்: 13-10-2021 (The Chief Minister has launched a new Dedicated Website for Directorate of Revenue Administration, Deputy Collectors, website to provide district transfer to Village Administrative Officers - Press Release No: 878, Date: 13-10-2021)...

 


வருவாய் நிர்வாக ஆணையரகம், துணை ஆட்சியர்களுக்கு பிரத்யேக வலைதளம், கிராம நிருவாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க புதிய வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - செய்தி வெளியீடு எண்: 878, நாள்: 13-10-2021 (The Chief Minister has launched a new Dedicated Website for Directorate of Revenue Administration, Deputy Collectors, website to provide district transfer to Village Administrative Officers - Press Release No: 878, Date: 13-10-2021)...


>>> செய்தி வெளியீடு எண்: 878, நாள்: 13-10-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்