கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குறுதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்குறுதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

DMK Election Manifesto 2026

 



சட்டப்பேரவைத் தேர்தல் 2026 : தி.மு.க. தேர்தல் அறிக்கை


DMK Election Manifesto : Tamilnadu Legislative Assembly Election 2026


தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதிகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



📌 காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும் 


📌 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்


📌 மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக அதிகரிக்கப்படும்


📌 விவசாயிகளுக்கு  நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்


📌 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்


📌 மருத்துவ காப்பீடு ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு


📌 மருத்துவ காப்பீடு தொகை ரூ.10 லட்சமாக   உயர்த்தப்படும்


📌 புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்ட உதவித்தொகை ரூ.1500-ஆக உயர்த்தப்படும்


📌 நெல் குவிண்டாலுக்கு ரூ.3500-ஆக உயர்த்தப்படும்


📌 பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5-ஆக உயர்த்தப்படும்


தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்


📌5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிகணினிகள் வழங்கப்படும்


📌நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1500 மாத உதவித் தொகையுடன் பயிற்சி


📌அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்கா 

 

📌ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்பு 


📌தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை


📌தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்ச கோடியாக உயர்த்தப்படும்


📌5,000 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்


📌1,000 கிராம கோவில்கள் மறுசீரமைக்கப்படும்


📌சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்


📌கிராம சாலைகள் ரூ.10,000 கோடியில் சீர் செய்யப்படும்


📌மாநகராட்சி, நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள்


📌திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்


📌5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்


📌தொழிற்சாலைகளுக்கு செல்லும் மகளிருக்கு உதவ 1000 குழந்தைகள் காப்பகங்கள் 


📌BC, MBC பிரிவினர் தொழில் கடன் பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்


📌மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை வசதிகள்


📌தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்


📌ஊரகப்பகுதிகளில் 10,000 புத்தொழில்கள் தொடங்கப்படும்


📌மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்படும்


📌அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் டிஜிட்டல் கற்றல் மையங்கள்


தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்


📌முதியோர் உதவித்தொகை ரூ.2000-ஆக அதிகரிக்கப்படும்


📌மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2500-ஆக உயர்த்தப்படும்


📌மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.12,000-ஆக உயர்த்தப்படும்


📌சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்


📌மத்திய - மாநில உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை - முதலமைச்சர்


📌சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் வரை வங்கிக்கடன்


📌பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேருக்கு ரூ.25,000 வரை உயர்த்தப்படும்


📌அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகள் இருமடங்காக்கப்படும்


📌8ஆவது ஊதியக் குழு அறிக்கையை செயல்படுத்த குழு அமைக்கப்படும்


📌1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் கால தாமதம் இன்றி நிரப்பப்படும்




பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி



பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி


* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்


*▪️. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,


*▪️. ஒவ்வொரு குடும்பத்திற்கும் |மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்,


*▪️. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,


*▪️. மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்,


*▪️ ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது இந்தியா கூட்டணி.


* நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.



Philips HL7756/01 750 Watt Mixer Grinder, 3 Stainless Steel Multipurpose Jars with 3 Speed Control and Pulse function (Black)




Actual Price: Rs. 4795

Offer Price : Rs. 3599

Benefit : Rs. 1196


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47tqBNL


Demand White Paper on Fulfilled Election Promises - CPS Abolition Movement Urges

 


நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்


Demand White Paper on Fulfilled Election Promises - CPS Abolish Movement Urges


அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்


A white report is needed on how many of the promises made to teachers & government employees have been fulfilled - CPS Abolition Movement Urges




திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ்  கூறியதாவது:


தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.


நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.


2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.


வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.


Fulfillment of 389 / 505 Promises - Chief Minister's Announcement

 



389 / 505 வாக்குறுதிகள் நிறைவேற்றம் - முதலமைச்சர் அறிவிப்பு 


'505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 


சிவகங்கையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.


பின்னர் அவர் விழா மேடையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு. சிவகங்கையில் புதிய நகராட்சி கட்டிடம்; மகளிர் கல்லூரி அமைக்கப்படுகிறது. அனைத்து அரசு துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 89 கோடியில் புதிய கட்டிடம் உள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு 30 கோடியில் புதிய கட்டிடம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் குடும்பத்திலும் தந்தையாக, அண்ணனாக, மகனாக நான் இருக்கிறேன்.


திமுக தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 505. அந்த 505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மிச்சம் இருப்பது 116. மிச்சம் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் இரண்டு மூன்று திட்டங்களை நிறைவேற்றும் வகையில் தான் பாக்கி இருக்கிறது. நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம். இதை தெரிந்தும் தெரியாத மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். இன்னொரு கட்சித் தலைவர் அறிக்கையை காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது இபிஎஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இபிஎஸ் புலம்பிக் கொண்டிருக்கிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமியால் நிரூபிக்க முடியுமா?'' என்றார்.


"Remaining promises will be fulfilled soon" - Chief Minister Mr. M.K.Stalin

"எஞ்சிய வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம்" - முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 



"Remaining promises will be fulfilled soon" - Chief Minister Mr. M.K.Stalin



இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் - பிரியங்கா வாக்குறுதி - நாளிதழ் செய்தி (If Congress comes to power in Himachal Pradesh, we will re-implement the Old Pension Scheme - Priyanka Promise - Daily News)...

 இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் - பிரியங்கா வாக்குறுதி - நாளிதழ் செய்தி (If Congress comes to power in Himachal Pradesh, we will re-implement the Old Pension Scheme - Priyanka Promise - Daily News)...





வாக்குறுதிகள் அதிகம்: ஆசிரியா்களின் ஆதரவு யாருக்கு?

 ஆசிரியா்களின் வாக்குகளைக் கவரும் வகையில், அவா்களுக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பெருமளவு அளித்துள்ளன.



தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளா்கள் ஏதாவது ஒரு கட்சியைச் சோ்ந்தவா்களாகவோ அல்லது அந்தக் கட்சியின் அபிமானிகளாகவோ இருப்பாா்கள். தோ்தலில் அவா்கள் தொடா்புடைய கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பாா்கள் என பொதுவான கருத்து உண்டு. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 65 சதவீதம் வாக்குகள்தான் அரசியல் கட்சியினரின் வாக்குகள். எஞ்சியுள்ள 35 சதவீதம் வாக்குகள் கள நிலவரத்தைப் பொருத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.




அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த களச் சூழலையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவா்கள்தான் ஆசிரியா்கள். பாமர மக்கள் முதல் பணக்காரா்கள் வரை அனைவரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவா்களில் அரசியல்வாதிகளுக்கு அடுத்ததாக இருப்பவா்கள் ஆசிரியா்கள். இன்றும் கிராமப்புறங்களில் ஆசிரியா்களின் சொல்லுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை இருக்கிறது.




இத்தகைய காரணங்களால்தான் ஒவ்வொரு தோ்தலின்போதும் ஆசிரியா்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதற்காக ஊதியம், சலுகைகள் சாா்ந்த அறிவிப்புகளை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தவறாமல் வெளியிட்டு வருகின்றன. அது இந்தத் தோ்தலிலும் நடந்திருக்கிறது.




20 லட்சம் வாக்குகள்: 


தமிழகத்தில் உள்ள 59 ஆயிரம் அரசு, தனியாா் பள்ளிகளில் தற்போது 5.7 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். அவா்களது குடும்பத்தினா், கல்வியியல் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வெழுதி காத்திருப்போா் ஆகியோரையும் சோ்த்தால் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அவா்கள் வசம் வைத்திருக்கிறாா்கள் எனலாம். இந்த வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன.




என்னென்ன வாக்குறுதிகள்?: 

அரசுப் பள்ளிகளில் ஒப்பந்தத், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா், தனியாா் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும். தனியாா் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தையும் அரசு நிா்ணயிக்கும். அரசு, தனியாா் பள்ளிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்தப்படும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும் ஆகிய அம்சங்கள் அதிமுக, பாமக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் தோ்தலில் ஆசிரியா்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரத்து செய்தாா்.




மற்றொரு புறம், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆசிரியா்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும், ஆசிரியா் தகுதித் தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியா் தோ்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுள்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும், ஊக்க ஊதியம் வழங்கப்படும், பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.




அதேபோன்று காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் ஆசிரியா்கள் நலன் சாா்ந்த வாக்குறுதிகளை அளித்துள்ளன. இவற்றில் தனியாா் பள்ளிகளின் கட்டணத்தை அரசே செலுத்தும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகியவை எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இது கட்சிகளின் நிா்வாகத் திறனைப் பொருத்து மாறுபடலாம்.




தோ்தல் நெருங்கி வரும் சூழலில் ஆட்சி மாற்றத்தில் முக்கியத்துவம் வகிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.




150-க்கும் மேற்பட்ட சங்கங்கள்: 

தமிழகத்தில் அனைத்து ஆசிரியா்களுமே ஏதாவது ஓா் ஆசிரியா் அமைப்பில் இடம்பெற்றிருக்கின்றனா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 50 சதவீத அமைப்புகள் திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என கட்சி சாா்ந்தும், எஞ்சிய 50 சதவீத அமைப்புகள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலையாகவும் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவரிடமும் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும், எதிா்க்கட்சியினரும் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கேட்டு வருகின்றனா். அப்போது, தோ்தல் அறிக்கையில் இல்லாத புதிய வாக்குறுதிகளும்கூட அளிக்கப்படுகின்றன.




சிதறாத வாக்கு வங்கி: 

கடந்த தோ்தல்களில் குறிப்பிட்ட சமுதாயங்களைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள், தொழில் துறையினா் வாக்குகள் ஒரே கட்சிக்குச் செல்லாமல் பரவலாகவே கிடைத்திருக்கின்றன. ஆசிரியா்கள் மற்றும் அந்தத் துறையைச் சாா்ந்தவா்களின் வாக்குகள் எப்போதுமே அதிமுக அல்லது திமுக என இவற்றில் ஏதாவது ஒரு கட்சிக்கு மட்டுமே 70 சதவீதம் முதல் 80 சதவீதம் அளவுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் இந்த இரண்டு கட்சிகளுமே பயனடைந்துள்ளன. ஏதாவது ஒரு கட்சி தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறையும் அதே கட்சியை ஆசிரியா்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. மாறாக வேறு கட்சிக்குதான் வாக்களிக்கின்றனா்.



தமிழகத்தில் 1.30 கோடி மாணவா்களின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் ஆசிரியா் சமுதாயம், மறைந்த முதல்வா் ஜெயலலிதா, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோா் இல்லாத முதல் தோ்தலைச் சந்திக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியும், கடும் போட்டியைச் சந்திக்கின்றன. இந்த முறை மாணவா்களின் எதிா்காலம் மட்டுமல்ல; இரு பெரும் தலைவா்களின் எதிா்காலமும் ஆசிரியா்களின் கைகளில்தான் இருக்கிறது.


நன்றி: தினமணி




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்