இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2021-22ஆம் ஆண்டு வரை விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48848/ கே/ இ2/ 2023, நாள்: 16-09-2023 (Special Incentive to students to avoid dropout - Director of School Education seeking details of dropout students from year 2011-12 to 2021-22 Proceedings No: 48848/ K/ E2/ 2023, Date: 16-09-2023)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2021-22ஆம் ஆண்டு வரை விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48848/ கே/ இ2/ 2023, நாள்: 16-09-2023 (Special Incentive to students to avoid dropout - Director of School Education seeking details of dropout students from year 2011-12 to 2021-22 Proceedings No: 48848/ K/ E2/ 2023, Date: 16-09-2023)...
பள்ளி செல்லாக் குழந்தைகள், வகுப்பு மாற்ற செயல்பாடுகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2869/ சி7/ சிறப்புப் பயிற்சி/ ஒபக/ 2022, நாள்: 30-03-2023 (State Project Director and Director of Elementary Education Joint Proceedings to issue guidelines regarding Non-School Going/ Dropout Children, Class Change Activities and Elementary Education Register Update No: 2869/ C7/ Special Training/ SS/ 2022, Dated: 30-03-2023)...
பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (State Project Director Proceedings - 41 pages of Guidelines and Action Plan on behalf of Out of School Children / Re-enrollment of Dropout Children)...
இடைநிற்றல் மாணவன் என்பதற்கான வரையறை - தொடர்ச்சியாக 30 பள்ளி வேலை நாட்கள் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் அம்மாணவன் இடைநிற்றல் மாணவனாக கருதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை (G.O.Ms.No.: 10, Dated: 11-01-2017 - Definition of Out of School Children / Drop Out - A student should be considered a Dropout Student if he / she does not attend school for 30 consecutive school days without any information)...
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2022-22ஆம் ஆண்டில் 6-18வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத் திறன் மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கணக்கெடுப்பு - கண்டறியப்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 17-02-2022 (Samagra Shiksha - Survey of Out-of-School / Dropout Children (Including Differently Abled and Children of Migrant Workers) aged 6-18 in the year 2022-22 - Re-enrollment of identified children - Letter from the State Project Director, Date: 17-02-2022)...
கரூர் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2021-22 - EER பதிவேடு பராமரித்தல் மற்றும் பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் (OSC) மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் (Differently Abled Children) கண்டறிதல் - கள ஆய்வு மேற்கொள்ளுதல் - மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.170/பசெகு/ஒபக/2021-22, நாள்: 05.08.2021...
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - கரூர் மாவட்டம்
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகள்
பிறப்பிப்பவர் : திருமதி. கே.பி மகேஸ்வரி,
எம். ஏ., பி.எட்.,
ந.க.எண்.170/பசெகு/ஒபக/2021-22, நாள்: 05.08.2021
பொருள் : கரூர் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2021-22 - EER பதிவேடு பராமரித்தல் மற்றும் பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிதல் - கள ஆய்வு மேற்கொள்ளுதல் - சார்பு.
பார்வை: மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை - 6, அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்:6834/ஆ 1/பசெகு/ஒபக/2021 நாள்: 29.07.21.
>>> மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகள்...
பார்வையில் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர், அவர்களின் கடிதத்தில், ஆரம்பக்கல்வி பதிவேடு (EER) புதுப்பித்தல் சார்ந்த தெளிவுரைகளும், 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் பணியினை 10.08.2021 முதல் 31.08.2021 வரை மேற்கொள்வதற்கான தெளிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பார்வைக்கடிதத்தின்படி,
1. EER பதிவேடுகள் பராமரித்தல்:
EER பதிவேடுகள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களும் உறுதி செய்யவேண்டும். சென்ற ஆண்டு வரை, இப்பதிவேடு 6 - 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ( 8 ம் வகுப்பு வரை) தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வந்தது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, 2021-22 ம் ஆண்டு முதல் 19 வயது வரையுள்ள மாணாக்கர்களுக்கும் பராமரிக்க வேண்டும்.
குடியிருப்பு வாரியாக ஒவ்வொரு மாணாக்கரும் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை கற்பதை EER பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். இதற்கான தரவுகளை குடியிருப்பு பகுதிகள் மற்றும் அருகாமையிலுள்ள உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து பெற்று ஆரம்பக்கல்வி பதிவேட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். ஆரம்பக்கல்வி பதிவேட்டில் பதிவு மேற்கொள்ளுதல் தொடர்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ வேண்டும்.
ஆய்வு அலுவலரான வட்டாரக்கல்வி அலுவலர் பள்ளியினை ஆய்வு செய்யும்போது, ஆரம்ப கல்வி பதிவேடு (EER) புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதி செய்து அப்பதிவேட்டில் மேலொப்பமிட வேண்டும்.
EER விவரங்களை, பள்ளி வாரியாக குறுவளமைய அளவில் தொகுத்து, வட்டார வளமையத்தில் தொகுப்பினை வைத்திருத்தல் வேண்டும். அத்தொகுப்பிலும் வட்டாரக்கல்வி அலுவலரின் கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்.
EER பதிவேடுகள் மூலம் கல்வியை தொடராத மாணாக்கர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்விகற்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு:
10.08.21 முதல் 31.08.2021 வரை 6 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இப்பணியில், அனைத்து ஒன்றியங்களிலும் வீடு வீடாக சென்று மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும்.
அதன் முதற்கட்டமாக ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை உள்ள மாணாக்கர்களில் இதுநாள்வரை பாடப்புத்தகங்களை பெற பள்ளிக்கு வராத மாணாக்கர்களின் பட்டியல் சேகரிக்க வேண்டும். (ஜூன் 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை. அம்மாணவர்களை பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பின் போது கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின்/ குடும்பங்களின் குழந்தைகளில் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் உள்ள குழந்தைகளை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இக்கணக்கெடுப்பில் அனைத்து தொடக்க / நடுநிலை! உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஈடுபடவேண்டும்.
சம்மந்தப்பட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர்பயிற்றுநர்கள் கணக்கெடுப்பு நடைபெறும் பகுதி, நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்களை (Tentative List) வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு தெரிவித்து அவர்களுடன் இணைந்து கணக்கெடுப்பு பணியினை சிறப்பாகவும், எந்தவித புகாருக்கு இடமளிக்காவண்ணமும் நடத்திட வேண்டும்.
அனைத்து தொடக்க / நடுநிலை! உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆகியோர் மேற்குறிப்பிட்ட அனைத்து தெளிவுரைகளையும் சிறப்பாக பின்பற்றி EER பதிவேடுகள் பராமரித்தல் பணியினையும் மற்றும் பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியினையும் சிறப்பாக நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: COVID-19 தொடர்பாக அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.
கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்
ஒருங்கிணைந்த கல்வி,
கரூர்.
பெறுநர்:
அனைத்து தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்
அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ)
நகல்:
மாவட்டக்கல்வி அலுவலர்கள், கரூர் மற்றும் குளித்தலை.
>>> மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகள்...
பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பும் தாக்கமும்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-2...
மத்திய அரசு வெளியிட்ட 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) 2019-20 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 15 லட்சம் பள்ளிகளில் 26.4 கோடி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். இதில் இந்திய அளவில் மாணவ சேர்க்கைக்கான மொத்தப் பதிவு விகித குறியீடு (Gross Enrolment Ratio) தொடக்கப் பள்ளி அளவில் 102.7% என்றும்; நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை 89.7% என்றும் உள்ளது. இதுவே தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தொடக்கப் பள்ளிகளில் 98.9% என்றும், நடுநிலைப் பள்ளிகளில் 96.5% என்றும் உள்ளது.
மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கும், மொத்த பதிவு விகிதத்துக்கும் நெருங்கிய தொடர்பொன்று உள்ளது. அதாவது, மொத்த பதிவு விகிதமென்பது (GER) பள்ளிப் படிப்பில் இருந்து ஒருநிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்களின் ஒட்டுமொத்த விகிதத்தை குறிக்கும். இது குறையும்போது மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கையில் குறைவுகள் ஏற்படும். அந்த வகையில் இது இரண்டுக்கும் உண்டான இடைவெளியை வைத்து, அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையானது எந்தளவுக்கு குறைகிறது என்பதை நாம் அறியலாம். எந்தளவுக்கு இந்த விகிதம் அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு குழந்தைகள் மத்தியில் நாம் கல்வியறிவை அதிகரிக்கிறோம் என அர்த்தம்.
இந்த GER-ல், தமிழகத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் தொடக்கப் பள்ளியில் சேரும் 98.6 விகித மாணவர்கள் - 99.3 விகித மாணவிகள் தங்களின் அடுத்த நிலையான நடுநிலை கல்விக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 66.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 80.6 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களின் அடுத்தகட்ட உயர் கல்விக்கு செல்கின்றனர். அதாவது, மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் சிலர், தங்களின் உயர்க்கல்வி படிப்புகளுக்கு செல்வது தமிழகத்தில் குறைவாக குறைகிறது. இதனால் 12-ம் வகுப்புக்கு பிறகான படிப்பே கேள்விக்குறியாகிறது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன்மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10 ம் வகுப்போடு தங்களின் பள்ளிக்கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 ஆக உள்ளது.
இதை இந்திய அளவில் பார்த்தால், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளின் இடைநிற்றல் விகிதமானது 16 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இது 2.6 சதவிகிதமும்; 1 முதல் 5 வரையிலான ஆரம்பப் பள்ளிகளில் 1.5 சதவிகிதமும் உள்ளது. அதாவது, 10-ம் வகுப்புக்குப் பின் பல மாணவர்கள் 11, 12 வகுப்புக்கு செல்வதில்லை; அல்லது பலர் 10-ம் வகுப்பை முடிப்பதேயில்லை.
இதேபோல் தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 1.4 சதவிகிதமாகவும், மாணவிகளில் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவிகிதமாகவும் உள்ளது. இதுவே உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகளை விட மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்துள்ளது. மாணவிகளின் இடைநிற்றல் 5.6% ஆகவும், மாணவர்களின் இடைநிற்றல் 13.4% ஆகவும் இருந்துள்ளனர்.
இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 3.3 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிகையில் குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இடைநிற்றல் விகிதமானது 14.4 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், பீகாரில் 21.4 சதவிகிதம் இடைநிற்றல் விகிதம் உள்ளது. இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக பள்ளிகளும் அதிக மாணவர் சேர்க்கையும் உள்ளதென்பது இங்கே கவனிக்கத்தக்கது. வேதனை என்னவென்றால், அங்கும் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ மாணவியரும் அதிகம்.
அருணாச்சலப் பிரதேசம், அசாம், போன்ற மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் 30%-க்கும் அதிகமாக உள்ளன. குஜராத், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவின் விகிதத்தை விட அதிகமான இடைநிற்றல் விகிதத்தை பெற்றுள்ளன. இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவில் இடைநிற்றல் காணப்படும் மாநிலம் பஞ்சாப். பஞ்சாபின் இடைநிற்றல் விகிதம் 1.5% மட்டுமே.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிகையும், இடைநிற்றல் விகிதமும் மேலும் அதிகரித்து வருவதாக கல்வியலாளர்கள் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இடைநிற்றல் விகிதத்தை எடுத்துக்கொண்டால், மாணவர்களை விட மாணவிகளின் இடைநிற்றல் விகிதமானது 2% குறைவாக உள்ளது.
இடைநிற்றலுக்கான மற்றுமொரு காரணமாக, உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைவும் அமைகிறது. அதாவது, இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் 81.1 சதவிகித மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 80.1% மாணவர்களும், 82.3% மாணவிகளும் அடங்குவர். தமிழகத்தில் 90.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 94.4% பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களைப் பொறுத்தவரை, நடுநிலைப் பள்ளிகளில் 99.6% பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 86.7% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அசாம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உயர்நிலைப் பள்ளிகளில், மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.
இப்படியாக ஒரு வகுப்பில் தேர்வில் தோல்வி பெறும்போது, அவர்கள் இடையிலேயே பள்ளிப்படிப்பை மொத்தமாக முடித்துக்கொள்கின்றனர். இதுபோன்ற சூழலை தடுக்கவே தமிழகத்தில் 8ம் ஆண்டு வரை கட்டாய தேர்ச்சி உள்ளதென்பது நினைவுகூறத்தக்கது.
இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பஞ்சாப் (97.9), இரண்டாவது இடத்தில் கேரளா (92.0), நான்காவது இடத்தில் மணிப்பூர் (90.1) உள்ளது. புதுச்சேரி 89.9 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இக்காரணத்தினால், இங்கெல்லாம் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ, மாணவியர் பிற மாநிலங்களைவிட கொஞ்சம் குறைவாக உள்ளது.
இந்தியாவில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது மொத்தமாக 2.8 சதவீதமாக உள்ளது. இதில், 2.9 சதவிகிதம் பெண்களும், 2.7 சதவிகிதம் ஆண்களும் அடங்குவர். இந்திய மாநிலங்களில், குறிப்பாக, டெல்லி, நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது அதிகமாகவே உள்ளது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதம் 0 சதவிகிதமாக உள்ளது.
இருப்பினும் பல மாநிலங்களில் குறிப்பாக (தேர்ச்சி பெறாதோர் 0% என்றிருக்கும் தமிழ்நாட்டு உட்பட) நடப்பாண்டில் தேர்ச்சி அடைந்தாலும், அடுத்த நிலை கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில், 14.15 சதவிகிதம் பேர் உயர்நிலைப் படிப்பிற்குப் பின், மேல்நிலைக் கல்விக்கு செல்வதில்லை என தெரியவந்துள்ளது. இதை இந்திய அளவில் பார்க்கும்போது, தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்கு 92.80%, நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு 91.4% பேர் சென்றாலும், உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றவர்களின் எண்ணிகையானது 71.60 சதவிகிதமாக உள்ளது. இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.
இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம், கல்விக் கட்டணம், மற்ற வசதிகளை எதிர்ப்பார்த்து பள்ளிகளை மாற்றம் செய்துவருபர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதாவது, எட்டாம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 9 மற்றும் 10 வகுப்பு ஒரு பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பள்ளியும் என மாற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளிகளில் தக்க வைப்பு விகிதமானது குறைந்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்தவர்கள் 87% பேர் அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். ஆனால், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 40.2 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வியை தொடர்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர் மட்டும்தான் அதே பள்ளியில் 10-ம் வகுப்பை முடிக்கிறார்கள். அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில், 100 பேர் சேர்ந்தால் அதில் 68 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு வரை கல்வியை தொடர்வதாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 94.8% பேர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வந்தாலும், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 68.1% பேர் மட்டுமே அதே பள்ளியை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் சண்டிகர், கேரளா ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே 100% தக்கவைப்பு விகிதமானது காணப்படுகிறது. இதனால் சிக்கல் ஏதும் உருவாவதில்லை என்பதால், இது கவலைக்கொள்ள வேண்டாத தரவாகவே இருக்கிறது.
இங்கு நாம் கவலை கொள்ள வேண்டியது, இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவர்களைப் பற்றிதான். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய, பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இடைநிற்றலுக்கு உள்ளாக்காமல், அரசுப் பள்ளியில் சேர்க்கத் தொடங்க வேண்டும் என்கின்றனர் கல்வியலாளர்கள். தமிழகத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு பெருமளவில் இருக்கிறதென்பதே இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
அந்தவகையில் சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில், பலர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. முறையான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வியையும் கொடுத்து அரசுப் பள்ளிகள் இனிவரும் காலத்தில் மாணவர்களை தக்க வைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பட்சத்தில் இடைநிற்றல் விகிதமென்பது பெருமளவில் குறையும். இல்லாதபட்சத்தில், இடைநிற்றல் அதிகரிக்கலாம். இந்திய அளவிலும் அரசு பள்ளி சார்ந்த விழிப்புணர்வும், இடைநிற்றலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வும் அரசு சார்பில் மக்கள் மத்தியில் அளிக்கப்பட வேண்டியது அவசியப்படுகிறது.
குழந்தைத் திருமணங்கள், குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பை தடுக்க, மாணவ, மாணவியரின் இடைநிற்றல் விகிதத்தை சரிசெய்தாலே போதும்.
இந்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தின் GER குறியீடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேர்ச்சிபெறாதோர் விகிதம், இடைநிற்றல் விகிதம், தக்கவைப்பு வீதம் போன்றவற்றை தெரிந்து கொண்டோம். அடுத்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, குடிநீருக்கான முக்கிய ஆதாரங்கள், ஆண்கள் - பெண்கள் கழிவறை வசதி, கைகழுவும் வசதி, மருத்துவ பரிசோதனை நடத்திய பள்ளிகள், சிறப்பு குழந்தைகளுக்கான படிகட்டுகளில் கைபிடிக்கும் கம்புகள் (handrails) மற்றும் வளைவுகளை (ramps) கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க திட்டம்...
பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க கிராம அளவில் குழு அமைக்க திட்டம்...
இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...
பள்ளிக் கல்வி - 2020-21ம் கல்வி ஆண்டு - இடைநிற்றலை (Drop out) முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (Special Incentive) - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே/ இ2/ 2020, நாள்: 17-02-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...