கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Noon Meals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Noon Meals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Obtain Consent Form from the parents regarding the requirement of mid-day meal and uniform for the students, DSE Proceedings, Dated : 09-10-2024...


 மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் சீருடை தேவை குறித்து பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை பெற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 09-10-2024...



Obtain Consent Form from the parents regarding the requirement of mid-day meal and uniform for the students, Proceedings of the Director of School Education, Dated : 09-10-2024...








சத்துணவு பெற்றோர் ஒப்புதல் படிவம் - Noon Meal Consent Form...



>>> ஒப்புதல் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 வெளியீடு...

 

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 வெளியீடு...


Ordinance G.O. (Ms) No: 55, Dated: 30-08-2024 Issued for the creation of new posts for the implementation of the Nutrition Scheme for the newly created 6 districts of Chengalpattu, Ranippettai, Mayiladuthurai, Tirupattur, Tenkasi and Kallakurichi...



>>> அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர் விவரங்களை சேகரிக்க உத்தரவு - கல்வி சாராத பணிகள் கொடுக்கப்படுகின்றன என ஆசிரியர்கள் அதிருப்தி...

 

 அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர் விவரங்களை சேகரிக்க உத்தரவு - கல்வி சாராத பணிகள் கொடுக்கப்படுகின்றன என ஆசிரியர்கள் அதிருப்தி...




அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக...


 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக...


அனைவருக்கும் வணக்கம் 🙏,

இன்று சென்னை, ஊ.வ.இயக்குநர் அவர்களால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி,

ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் முதன்மையாக அந்தஅந்த பள்ளியின் சொந்த நிதியிலிருந்து பழுது நீக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்களை அணுகி புதிய கட்டடங்கள் கோரி பெறலாம்... 


அல்லது


நமக்கு நாமே திட்டத்தில் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பகுதியினை செலுத்தி நிர்வாக அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவுரைகள் இன்று வழங்கப்பட்டது. 


 மதிப்பீட்டு தொகை...


2023-24 SoRன்படி ( அலகு தொகை) ரூ. இலட்சத்தில்...


100 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.7.43


200 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.29


300 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.90


400 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.9.40


400 க்கும் மேல் உள்ள மாணவர்கள் - ரூ.9.82


        இதனை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும், இவ்வலுவலத்திலிருந்து  முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.


👆மேற்கண்ட செய்தி மாவட்ட ஆட்சியரின் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (சத்துணவு) அவர்களிடமிருந்து வந்துள்ளது.


சத்துணவு குறித்து தினசரி அறிக்கை - SMS அனுப்புதல் சார்ந்து DSE செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 (Daily report on Noon Meal Scheme – DSE Proceedings regarding on sending SMS Rc.No: 57479/ E/ E1/ 2023, Date: 09-11-2023)...



சத்துணவு குறித்து தினசரி அறிக்கை  - SMS அனுப்புதல் சார்ந்து DSE செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 (Daily report on Noon Meal Scheme – DSE Proceedings regarding on sending SMS Rc.No: 57479/ E/ E1/ 2023, Date: 09-11-2023)...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சத்துணவு தினசரி அறிக்கை - SMS செய்தியினை காலை 11 மணிக்குள் அனுப்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு . இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.


 சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி ( SMS ) மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


ஒரே பதவியில் 10 / 20 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு திட்ட/ அங்கன்வாடி அமைப்பாளர்கள் / சமையலர்கள் / சமையல் உதவியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது - தணிக்கை தடை எழுப்பியது - அறிக்கை கோருதல் தொடர்பாக சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Special pay increment granted to Nutrition Scheme/ Anganwadi Organisers/ Cooks/ Cooking Assistants who have completed 10 / 20 years in the same post - Audit raised - Letter from Commissioner of Social Welfare regarding seeking report, Dated: 30-06-2023)...



>>> ஒரே பதவியில் 10 / 20 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு திட்ட/ அங்கன்வாடி அமைப்பாளர்கள் / சமையலர்கள் / சமையல் உதவியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது - தணிக்கை தடை எழுப்பியது - அறிக்கை கோருதல் தொடர்பாக சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Special pay increment granted to Nutrition Scheme/ Anganwadi Organisers/ Cooks/ Cooking Assistants who have completed 10 / 20 years in the same post - Audit raised - Letter from Commissioner of Social Welfare regarding seeking report, Dated: 30-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

5 ஆண்டுகள் பணிபுரிந்த சமையல் உதவியாளர்களுக்கு மையத்திலிருந்து 10கி.மீ. சுற்றளவிற்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சமையலராகப் பதவி உயர்வு - சமூக நல ஆணையரின் கடிதம் ந.க. எண்: 6206/ ச.உ.தி.1(2) / 2022, நாள்: 30-06-2023 (Promotion to cook assistants with 5 years experience as cook subject to their residence within 10kms radius from center - Social Welfare Commissioner's Letter Rc. No: 6206/ N.M.S.1(2) / 2022, Dated: 30-06-2023)...


>>> 5 ஆண்டுகள் பணிபுரிந்த சமையல் உதவியாளர்களுக்கு மையத்திலிருந்து 10கி.மீ.  சுற்றளவிற்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சமையலராகப் பதவி உயர்வு - சமூக நல ஆணையரின் கடிதம் ந.க. எண்: 6206/ ச.உ.தி.1(2) / 2022,  நாள்: 30-06-2023 (Promotion to cook assistants with 5 years experience as cook subject to their residence within 10kms radius from center - Social Welfare Commissioner's Letter Rc. No: 6206/ N.M.S.1(2) / 2022, Dated: 30-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகள் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள சத்துணவு மையங்களை ஒருங்கிணைப்பு தொடர்பாக அறிக்கை அளிக்க சமூக நலத் துறை உத்தரவு (Department of Social Welfare has directed to submit a report regarding merging of feeding centers in two schools operating in the same campus and feeding centers within 3 kms)...

 ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகள் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள சத்துணவு மையங்களை ஒருங்கிணைப்பு தொடர்பாக அறிக்கை அளிக்க சமூக நலத் துறை உத்தரவு (Department of Social Welfare has directed to submit a report regarding merging of feeding centers in two schools operating in the same campus and feeding centers within 3 kms)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to enter the details of the students benefiting under the Noon-meals Nutrition Program on a daily basis on the TN EMIS site) ந.க.எண்: 68277/ இ/ இ1/ 2021, நாள்: 02-05-2022...



>>> சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to enter the details of the students benefiting under the Noon-meals Nutrition Program on a daily basis on the TN EMIS site) ந.க.எண்: 68277/ இ/ இ1/ 2021, நாள்: 02-05-2022...

மதிய உணவு திட்டத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை SMS அனுப்புவதற்கான நடைமுறை (PROCEDURE FOR SENDING SMS FOR NOON MEAL PROGRAM )...



>>> மதிய உணவு திட்டத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை SMS அனுப்புவதற்கான நடைமுறை (PROCEDURE FOR SENDING SMS FOR NOON MEAL PROGRAM )...


தொடக்கப்பள்ளியில்,

1-5 வகுப்புகளில் 32 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டார்கள் எனில்,


MDM A32 B00 C00

(MDMspaceA32spaceB00spaceC00)

என்று Type செய்து 155250 என்ற எண்ணிற்கு

குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்‌..


நடுநிலைப்பள்ளியெனில்‌,

1-5 வகுப்புகளில் 20 மாணவர்களும்,

6-8 வகுப்புகளில் 36 மாணவர்களும் மதிய உணவு சாப்பிட்டார்கள் எனில்,


MDM A20 B36 C00

(MDMspaceA20spaceB36spaceC00)

என்று Type செய்து 155250 என்ற எண்ணிற்கு

குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்‌..


நாள்தோறும்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌.

குறுஞ்செய்தி இலவசம்‌.


USER MANUAL - FOR SENDING SMS BASED NOON-MEALS TRACKING SYSTEM 

PROCEDURE FOR SENDING SMS FOR NOON MEAL PROGRAM 


For SMS based NMP monitoring system, Format for sending SMS will be sent to your mobile as 


MDM A B C

Where 

A is Primary (from 1 to 5) 

B is Upper Primary, (6 to 8) 

C is Upper Primary, (9, 10) 


After filling the values Next to A,B & C the same may be Forwarded to 155250 


For example: 

Send SMS

MDM A54 B22 C32 to 155250 


(If the message is not received in Correct Format, You will receive feedback message)

தமிழ்நாடு அரசின் சத்துணவில் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம்...

 


50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

மேலும் பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட குழந்தை தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளன. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றலை கணிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிக்கிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி மற்றும் முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மதிய உணவு கிடைக்காததால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் பள்ளிகளில் தீவிரமாக கண்காணிப்பை நடத்த வேண்டும். வேலை செய்யும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மாணவா் வீடுகளில் சத்துணவு: உயா்நீதிமன்றம் உத்தரவு...



 பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு வழங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுமுடக்கம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க உத்தரவிட கோரி, ஒரு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பொதுமுடக்கத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். பலா் வேலையை இழந்துள்ளனா். கிராமங்களில் பல குடும்பங்கள் வருவாய் இழந்துள்ளன. எனவே, இந்த மோசமான காலகட்டத்தில், மாணவா்களுக்கு சத்துணவை வீட்டுக்கே சென்று அரசு வழங்க வேண்டும். இதில் சிரமம் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த சேவையை அரசு மேற்கொள்ளலாம். எனவே, இதுதொடா்பாக ஒரு திட்டத்தை உருவாக்கி, அதுகுறித்த அறிக்கையை வரும் ஜூலை 7-ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

G.O.86 - அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு...

 G.O.86 - அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு...


 சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, உலர் உணவு தானியங்கள் மற்றும் முட்டை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், சத்துணவு மையங்கள் செயல்படவில்லை.சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தை களின் உடல் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு உலர் உணவு தானியங்கள், அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.


அந்த வகையில், மே மாதம் சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு உலர் உணவு தானியங்கள், முட்டை வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துஉள்ளது.


அதன்படி ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு; ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு மற்றும் தலா 10 முட்டைகள் வழங்கப்பட உள்ளது.சமூக நலத்துறை கமிஷனர், உலர் தானியங்களை கொள்முதல் செய்து வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Social Welfare and Nutritious Meal Programme Department National Programme of Mid Day Meal in Schools (NP-MDMS) – Provision of dry ration to the Primary and Upper Primary beneficiaries under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme during the month of May 2021 Orders – Issued..


Social Welfare and Nutritious Meal Programme (SW 4-1) Department


G.O(D).No.86, Dated: 03.06.2021...


ORDER

As per the guidelines of Government of India in the letter first read above, in the G.O. second read above orders have been issued to provide rice and dhal as dry ration to the beneficiaries studying from first standard to eighth standard under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme in all days of vacation period of May 2020 due to closure of schools in view of Covid-19 as detailed below:






>>> Click here to Download G.O.(D)No.86, dated 03-06-2021(Dry Ration).pdf


பள்ளி வேலை நாட்களில் சத்துணவு வழங்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை(நிலை) எண்:56 நாள்:22.01.2021வெளியீடு...

 


2005ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டம்- பள்ளி வேலை நாட்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட பயனாளிகளுக்கு சத்துணவு வழங்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை(நிலை) எண்:56, நாள்:22-01-2021வெளியீடு... 

>>> அரசாணை(நிலை) எண்: 56, நாள்:22.01.2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...