கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அவசர உதவி எண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவசர உதவி எண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NEET – Helpline Numbers

 


நீட் தேர்வு - உதவி எண்கள் அறிவிப்பு.


நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்று கூறியுள்ள NTA, மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய உதவி எண்களில் பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை - தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் அறிவிப்பு



Tension in Gulf countries - Tamil Nadu government announces helpline numbers


தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் அறிவிப்பு


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.  


மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது


தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.


போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.


மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 

011-24193300 (Land line)

92895 16712 (Mobile Number with Whatsapp)


அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:

இந்தியாவிற்குள் – 1800 309 3793

வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)

தொடர்புக்கு – +91 80 6900 9901


–  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்

 

கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள,  தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்


# DOT 04324 256306

# Whatsapp 7010806322




Father sells 2 children to duck farm for Rs. 80,000 - Authorities rescue boys




 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 சிறுவர்களை வாத்து பண்ணையில் விற்ற தந்தை - சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த தகவலை அடுத்து சிறுவர்களை மீட்ட அதிகாரிகள்


Father sells 2 children to duck farm for Rs. 80,000 - Authorities rescue boys


மன்னார்குடி அருகே வாத்துப் பண்ணையில் சிறுவர்கள் வேலை செய்து வருவதாக, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு வந்த புகாரை அடுத்து, மன்னார்க்குடி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த இரண்டு சிறுவர்களை மீட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக வாத்துப் பண்ணை உரிமையாளரான ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் மீது, கொத்தடிமை தடைச் சட்ட பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, 80 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குழந்தைகளை விற்ற தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.போலீசார் விசாரணையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் இயங்கி வரும் வாத்துப் பண்ணையில் இரண்டு சிறுவர்கள் வேலை பார்த்து வருவதாக 1098 என்கிற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன் மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் மன்னார்குடி உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.


இந்த விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், மன்னார்குடி அருகே ராமாபுரம் பகுதியில் சொந்தமான வாத்துப் பண்ணை வைத்துள்ளார். இந்த நிலையில், இப்பண்ணையில் வேலை செய்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்பவர், தனது 13 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களை ரூ.80 ஆயிரத்துற்கு விஜயகுமாரிடம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து, இரண்டு சிறுவர்களையும் மன்னார்க்குடி காவல் நிலைய போலீசார் மீட்டனர். தொடர்ந்து, வாத்துப் பண்ணை உரிமையாளரான ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் மீது, கொத்தடிமை தடைச் சட்ட பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், 80 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குழந்தைகளை விற்ற தந்தை மணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சிறுவர்களை மீட்ட போலீசார் அவர்களுக்கு உடை மற்றும் உணவளித்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் தங்க தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து, பெற்றோர்களிடம் சிறுவர்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Wild animal rescue - Contact number Tamilnadu



 சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு தொடர்பு எண் அறிவிப்பு


Notification of contact number for assistance related to wild animal rescue in Chennai and surrounding areas


Press Release

Chennai Wildlife Division

In this monsoon season, for any wildlife rescue related assistance in and around Chennai, public may reach, Chennai Wildlife Division, Head Quarters Range, in the following helpline no 044-22200335.

The Wildlife Warden

Chennai Wildlife Division

30.11.2024

Chennai




Heavy rain - Emergency center numbers

 


கனமழை - அவசரகால மைய எண்கள் அறிவிப்பு


Heavy rain - Emergency center helpline numbers 


மாநில அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 


Whatsapp 94458 69848



மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்:


நாகப்பட்டினம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 


Whatsapp 84386 69800


மயிலாடுதுறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588


திருவாரூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 


Whatsapp 94885 47941


கடலூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 


Whatsapp 94899 30520


பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.



நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...

 நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...


📱வாட்ஸ்அப் எண்: 81485 39914


✖️ட்விட்டர் (X): @tn_rescuerelief மற்றும் @tnsdma


💻பேஸ்புக்: @tnsdma








தேசிய அளவிலான உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் - மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்...

 தேசிய அளவிலான முக்கிய உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.



கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியீடு...

 சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவித்து அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அவசர கால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன.


மேலும், 9498181236, 9498181239 ஆகிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டு பெருநகர காவல்துறையின் உதவியை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  >>> தரவிறக்கம் செய்...