கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17(e)ன் கீழ், ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டதை ரத்து செய்து மீண்டும் அதே இடத்தில் பணியிடம் வழங்கி ஆணை (The order suspending the teacher Under Section 17 (e), has been revoked and re-issued post at the same place) - திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 22-09-2021...

 


17(e)ன் கீழ், ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டதை ரத்து செய்து மீண்டும் அதே இடத்தில் பணியிடம் வழங்கி ஆணை (The order suspending the teacher Under Section 17 (e), has been revoked and re-issued post at the same place) - திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 22-09-2021...


>>> திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 22-09-2021...

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...


💥மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


💥தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.


💥மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதி - முதலமைச்சர் ஸ்டாலின்...


💥மாணவர்கள் நலன் கருதி பொது +2 தேர்வு ரத்து ...


💥மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்விதுறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து முடிவு செய்யப்படும்.


💥 உயர்கல்விக்கான சேர்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்.




>>> தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு அரசு பேராசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து – உயர் கல்வித்துறை உத்தரவு...

 தற்போது அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மீது தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேராசிரியர்கள் தற்காலிக பணி நீக்க காலங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.



இது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்டோரின் பணி பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 5198/ சி2/ 2019, நாள்: 01-04-2021...


தேர்தல் எதிரொலி - 10ம் வகுப்பு தேர்வு ரத்தாகிறதா?

 


 கொரோனா தொற்று மற்றும் தேர்தல் போன்ற காரணங்களை முன்வைத்து பத்தாம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்யலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. 


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா குறைந்ததையடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. 


அதன்படி, ஜனவரி மாதம் முதல் மேற்கண்ட இரண்டு வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதை தொடர்ந்து, தற்போது 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்கள் மேனிலை கல்வியை முடித்த பிறகு, உயர்கல்விக்கு செல்லவேண்டும். அதிலும் குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. 


அதனால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே மாதம் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்து அட்டவணையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதனால் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை முடித்து, புதிய அரசு அமைவது என அனைத்து பணிகளும் மே மாதம் தான் நடக்கும். 


அதனால் பத்தாம் வகுப்பு தேர்வு மே மாதம் நடத்த முடியாமல்கூட போகலாம். அதற்கு பிறகு தேர்வு நடத்தினால், அடுத்த கல்வியாண்டு தள்ளிப் போகும் நிலை ஏற்படும். அதனால், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


கொரோனா காலத்தின் போது தேர்வை ரத்து செய்தது போல இந்த ஆண்டும் தேர்வை ரத்து செய்துவிடலாம் என்று பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். அந்த கருத்தின் அடிப்படையில் பத்தாம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்துவிடலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து -அரசு அறிவிப்பு...



அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்:

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.

ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் 
அனைத்தையும் அரசு கைவிடுகிறது - முதலமைச்சர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 
ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் வைத்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...