களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை
Earned Leave Surrender Applying Procedure in Kalanjiyam App
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை
Earned Leave Surrender Applying Procedure in Kalanjiyam App
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Personal Pay in EL Surrender - CM Cell Reply
PP யை சரண்டர் விடுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசாணை எண்ணுடன் CM Cell Reply
ஈட்டிய விடுப்பு EL ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமும் (PP) சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சரின் சிறப்பு பிரிவின் ஆணை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
யார் யார் எப்பொழுது ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்
* தற்போதைய அரசாணையின் படி இறுதியாக, (27.04.2020-க்கு முன் பணியேற்று) ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணமாக்கிக் கொண்டோர், பழைய தேதியின் அடிப்படையில் இனி தொடர்ந்து ஆண்டிற்கு 15 நாள்கள் என பணமாக்கிக் கொள்ளலாம்.
* அதன்படி ஜனவரி முதல் - செப்டம்பர் வரை ஒப்படைப்பு தேதி வருவோர் 2026ஆம் ஆண்டு முதல் சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
* அக்டோபர் முதல் - டிசம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் நடப்பு ஆண்டு முதலே ஏற்கனவே ஒவ்வொருவரும் ஒப்படைப்பு செய்த மாத தேதி வாரியாக சார்ந்த மாதங்களில் ஒப்படைப்பு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
* எனவே அக்டோபர் மாதத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வோர் அக்டோபர் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் தங்களுடைய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தை அலுவலகத்தில் வழங்கவும்
* *களஞ்சியம் செயலியில் பதிவு செய்யவும்
களஞ்சியம் Appல் Earned Leave Surrender Apply செய்யும் வழிமுறை
களஞ்சியம் செயலி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வது எப்படி?
EL Surrender Apply steps in Kalanjiyam app
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை பொதுத் தகவல் அலுவலர்/ அரசு சார்புச் செயலாளர் அவர்களின் விளக்கக் கடிதம், நாள் : 15-09-2025
RTI letter from the Public Information Officer/Deputy Secretary to the Government, Human Resource Management Department, regarding the Surrender of Earned Leave, Date: 15-09-2025
EL Surrender Clarification RTI Reply
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005
மனித வள மேலாண்மைத் (அவி.3) துறை.
தலைமைச் செயலகம்.
சென்னை 600 009.
தொலைபேசி: 044 2566 5252
மின்னஞ்சல்: usfr2.hrm@tn.gov.in
கடித எண்.11588824/அவி-3(2)/2025-1,நாள் 15.09.2025
அனுப்புநர்
திரு.அ.ரெ.ராஜன், பி.எஸ்.சி., பி.எட்., எம்.ஏ.
பொதுத் தகவல் அலுவலர்/
அரசு சார்புச் செயலாளர் (அவி-2).
பெறுநர்
ஐயா.
பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 - சில தகவல்கள் கோரியது பதில் வழங்குவது தொடர்பாக.
பார்வை: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் பெறப்பட்ட தங்களின் மனு நாள் 28.08.2025.
(இத்துறையில் பெறப்பட்ட நாள் 03.09.2025).
பார்வையில் கண்டுள்ள மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அம்மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவல்கள், கேள்விகள் / தெளிவுரைகளாக உள்ளதால், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் உள்ள பிரிவு 2(f) இன் படி அதற்கு பதிலோ/ விளக்கங்களோ/ தெளிவுரைகளோ வழங்க வழிவகையில்லை. இருப்பினும் அரசாணை (நிலை) எண்.35, மனித வள மேலாண்மைத் (அ.வி.III) துறை, நாள் 30.06.2025 இல் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை முன்னர் ஒப்புவிப்பு செய்த நாளினை அடிப்படையாகக் கொண்டும், தற்போது சரண் செய்து பணப்பலன்களை பெறுவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வரசாணையில் 27.04.2020 முதல் 30.09.2025 வரை புதிதாகப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் எவ்வாறு ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணப்பலன் பெறுவது குறித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்காண் இரண்டு நிகழ்வுகளுக்கும் உட்படாமல், இதுவரை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யாத அரசுப் பணியாளர்கள் 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை அவரவர் விருப்பப்பட்ட நாளில் ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம் என்பதனைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
அ.ரெ.ராஜன்
(அ.ரெ.ராஜன்) 17.09.2025
பொதுத் தகவல் அலுவலர்/
அரசு சார்புச் செயலாளர் (அவி-2).
15.09-25
Earned Leave Surrender Application - Covering Letter + New Format
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்
EL Surrender New Application Format
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு EL Surrender - அக்டோபர் மாதத்தில் செய்பவர்கள் KALANJIYAM APP-ல் Request செய்த பிறகு Request எண்ணை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தில் குறிப்பிடவும்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை - காணொளி...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Earned Leave Surrender Procedure in Kalanjiyam App - Demo Video
EL Surrender
களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை - காணொளி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - திண்டுக்கல் மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம், நாள் : 26-09-2025
Surrender Leave Salary - Letter from Dindigul District Treasury Officer, Date: 26-09-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்குதல் - பொதுத் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் - நிதித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு
EL Surrender Clarification
Surrender and cashing in of Earned Leave - Applicable to public sector employees as well - Order of the Principal Secretary, Finance Department
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பினை 15 நாட்கள் வரை ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025
The procedure of surrendering the earned leave of government officials and teachers suspended due to the spread of Corona for up to 15 days and receiving cash benefits will be re-implemented - Tamil Nadu Government's Budget Statement 2025
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
மருத்துவ விடுப்பு எடுத்த நாட்களுக்கேற்ப குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நாட்களை மீண்டும் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் - கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் விளக்கம் - செயல்முறைகள் கடிதம், நாள் : 04-01-2024 - Re-Crediting of Earn Leave reduced as per days taken on medical leave to earned leave account - Kanyakumari District Chief Education Officer Explanation - Proceedings letter, dated : 04-01-2024...
ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் (Earned Leave (EL) - Full details)...
🍁 தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL-ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (365-10=355) மீதம் உள்ள 355 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும். அதை ஓய்வுபெறும் போது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
🍁 மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் (தற்போது 365 நாட்கள் (ஒரு வருடம்)), மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
🍁 ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும். அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)
🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் Sanction செய்யும் தேதியோ,
ECS ஆகும் தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.
🍁EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240 நாட்கள்) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.
🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.
01-01-2020 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சதவீதத்தில், ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கொடை கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான மத்திய அரசின் செயல்முறைகள் (Office Memorandum of Ministry of Finance, Government of India, No.1(5)/E.V./2020, Dated: 07-09-2021, Important Order for those who retired between 01/01/2020 to 30/06/2021 - Calculation Gratuity and Cash payment in lieu of Leave - Regarding)...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for one more year till 31-03-2021 - G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021...
ORDER : In the Government Order third read above , due to the fiscal stress arising from the COVID - 19 pandemic , orders were issued for suspension of the facility of the periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years to all the Government Employees and Teachers , initially for a period of one year , from the date of issue of order. In the said Government Order , it has also been ordered that this order shall also be applicable to all Constitutional / Statutory bodies including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc. , Further in the Government Order fourth read above , necessary amendments to rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 , have been issued , in this regard.
In view of the second wave of Corona and the need to conserve resources to fight the pandemic , the suspension of periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years , as provided under Rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 is extended for one more year , till 31.03.2022 , to all the Government Employees and Teachers.
The order shall also be applicable to all Constitutional / Statutory bodies , including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc.,
>>> Click here to Download G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021...
Fundamental Rules - Tamil Nadu Leave Rules, 1933 - Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for One more Year till 31.03.2022 - Orders - Issued.
Clear Copy.
>>> Click here to Download G.O.Ms.No.: 48, Dated: 13-05-2021...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்