கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாசிப்பு பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பு பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Vaasippu Iyakkam - Quiz Questions & Answers

 


வாசிப்பு இயக்கம் - வினாடி வினா வினாக்கள் & விடைகள் 


Vaasippu Iyakkam - Quiz Questions & Answers 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



வினா எண் : 16 முதல் உள்ளவை பயிற்சி குறித்த தனியரது கருத்துகள் ஆகும். ஆகவே தங்களது கருததுகளை விடையாக அளிக்கலாம்.


வாசிப்பு இயக்கம் பற்றி 14.10.2024 முதல் ஆசிரியர்களுக்கு TNTP மூலம் இணைய வழி பயிற்சி - EMIS தளத்தின் வழியே Baseline Assessment...

 வாசிப்பு இயக்கம் பற்றி ஆசிரியர்களுக்கு TNTP மூலம் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து இணைய வழி பயிற்சி EMIS தளத்தின் வழியே 14.10.2024 அன்று முதல் காணொலி மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


 Vaasippu Iyakkam - Online training for teachers through TNTP from 14.10.2024 - Baseline Assessment through EMIS Website...


 #tnschools #tnesd @anbil_mahesh @tndipr


TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.




Instagram Account 

https://www.instagram.com/p/DA_E3DuSvFr/?igsh=NTZoc2hxNnBnbXQx


Vaasippu Iyakkam – Training to ​​4 - 9th class handling teachers through TNTP website - SCERT Director Proceedings



 வாசிப்பு இயக்கம் - 4 முதல் 9 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் TNTP மூலம் பயிற்சி மேற்கொள்ள SCERT இயக்குநர் உத்தரவு, செயல்முறைகள், நாள் : 10-10-2024...




Vaasippu Iyakkam – ​​SCERT Director Proceedings - 4 - 9th class handling teachers to undergo training through TNTP website 







நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு வாசிப்பு இயக்க இணைய வழி பயிற்சி 14.10.2024 முதல் நடைபெறும் . SCERT இயக்குநர் செயல்முறைகள் 👆



      TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.



How to Update Vaasippu Iyakkam Book list


வாசிப்பு இயக்கம் புத்தகப் பட்டியலை புதுப்பிக்கும் முறை...


How to Update Vaasippu Iyakkam Book list...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



💥💥💥💥💥💥💥💥


வாசிப்பு இயக்கம் புத்தகப் பதிவு


TNSED Schools app

--> School ID

---> Library

--> Vaasippu Iyakkam Book List

இதுவரை பள்ளிக்கு வந்த புத்தகங்களின் பெயருக்கு நேரே எண்ணிக்கை பதிவிட்டு Submit செய்யவும்.


இப்பணியினை விரைந்து முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மேற்கூறிய பணியை முடித்த பிறகு,

TNSED Schools app 

---> Teacher individual ID 

--> Vaasippu Iyakkam

காணொளியில் உள்ளது படி ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது நிலையை உள்ளீடு செய்யவும்.


👆🏻 ஒவ்வொரு Termக்கும் ஒரு முறை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்...


அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: 3ஆம் கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைக்க திட்டம்...

 


அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: 3ஆம் கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைக்க திட்டம்...


அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 3-வது கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைத்து வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் ரூ.10 கோடியில் 53 புத்தகங்கள், 90 லட்சத்து 45,018 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை ஒரு கோடியே 31 லட்சத்து 68,048 பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு விநியோகம் செயப்பட்டுள்ளன.


இதைத் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்துக்கு புதிதாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியுள்ள மாணவர்களை நெறிப்படுத்த நூல் வாசிப்பு உதவும். அதனால் வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 124 புத்தகங்கள் 2 கட்டங்களாக அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.


அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அளிக்கப்பட உள்ளன. இதற்கான புத்தக தயாரிப்பு பணிமனைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அந்த பணிகள் முடிந்தபின்னர் சுமார் 2.2 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு தரப்படும். நடப்பு கல்வியாண்டிலேயே இந்த செயல்பாடுகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்'' என்றனர்.


Vaasippu Iyakkam – ​​List of Books for Phase I and Phase II…


 வாசிப்பு இயக்கம் - முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட புத்தகங்களின் பட்டியல்...


Vaasippu Iyakkam - Reading Movement – ​​List of Books for Phase I and Phase II…



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD & DSE இணைச் செயல்முறைகள்...



தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் இணைச் செயல்முறைகள்...


அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் Vaasippu Iyakkam செயல்படுத்துதல் -  வழிகாட்டு நெறிமுறைகள் - SPD & DSE இணைச் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை 2024 - 2025 ஆம் ஆண்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து


*பிரிவு வாரியாக வழங்கப்பட வேண்டிய புத்தக தொகுப்பு விவரம்*


*👉👉 நுழை நீல நிறம்*

வகுப்பு 1 முதல் 10 வரை


 *👉👉 நட மஞ்சள் நிறம்*

வகுப்பு 3 முதல் 10 வரை 


*👉👉 ஓடு சிவப்பு நிறம்*

வகுப்பு 5 முதல் 12 வரை 


*👉👉 பற பச்சை நிறம்*

வகுப்பு 6 முதல் 12 வரை 


*👉👉 பாடல்கள்*

வகுப்பு 1 முதல் 10 வரை



>>> வாசிப்பு இயக்கக் கையேடு 2024 - 2025...


வாசிப்பு இயக்கக் கையேடு 2024 - 2025...



பள்ளிக் கல்வித் துறை - வாசிப்பு இயக்கக் கையேடு 2024 - 2025 Module...


Vasippu Iyakkam Handbook...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் -  வழிகாட்டு நெறிமுறைகள் - SPD & DSE இணைச் செயல்முறைகள்...


மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...



  மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...


எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு

*************************************


வணக்கம்!


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான திட்டமான மாபெரும் வாசிப்பு இயக்கத்தில் தங்களின் படைப்புகளைத் தந்து பங்கேற்பினை நல்க அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தற்போது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற வகைகளில் ஒரு கதை, ஒரு புத்தகம், 16 பக்கம் என முதல் கட்டமாக 53 கதைப் புத்தகங்கள்  சிறார் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு,  அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.   


அடுத்தகட்டமாக 197 நூல்கள்  உருவாக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


வாசிப்பு இயக்கத்திற்காக கீழ்க்கண்ட கருப்பொருளைக் கொண்டு தங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.


* குழந்தைகள் எளிதில் வாசிக்கும் வகையில் எளிய மொழி நடை.


* சின்னச் சின்ன வாக்கியங்கள்.


* குழந்தைகள் பரவலாக பயன்படுத்தும் சொற்கள், நகைச்சுவை, வேடிக்கைக் கதைகள் வரவேற்கப்படுகின்றன. 


• மாற்றுத் திறனாளிகள், திருநர், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கிய கதைகள் 


* பெண்ணுரிமை,  மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், அறிவியல் புனைவுகள், எளிய மனிதர்களின் வாழ்வியல், குழந்தைகளின் மனநலம் போன்றவற்றை கருப்பொருளாகக்  கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.


 தேர்வு  செய்யப்படும் கதைகள்   வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப படைப்புக் குழு செழுமைப்படுத்தும்.


கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ அரசால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. 


மேலும் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.


வழிகாட்டு நெறிமுறைகள் :


1. தயவுசெய்து தங்களது கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு எழுதி அனுப்பவும்.


2. படைப்புகளை தமிழிலேயே அனுப்பவும்.


3. தங்களால் எழுதப்பட்ட தங்களது சொந்தப் படைப்புகளை  மட்டும் அனுப்பவும்.


4. தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


5. தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிடவும்.


6. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு  விவரத்தைக் குறிப்பிடவும்.


தங்களுடைய கதைகள் வாசிப்பின் நிலைகளான... 


"நுழை" எனில் 200 முதல் 250  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"நட" எனில் 250 முதல் 300  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"ஓடு" எனில் 300 முதல்  400   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"பற" எனில் 400 முதல் 500   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கான ஓவியம், வடிவமைப்பு, செழுமைப்படுத்துதல் பற்றி தங்களிடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.


தேர்வு செய்யப்படவுள்ள  நூல்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்  குழந்தைகளுக்கும் வகுப்பறையிலும் நூலகங்களிலும் வழங்க இருப்பதால் கதைகளுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. 


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


17/09/2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக ssatnvit@gmail.com  என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது குறித்து மேலும் விவரங்களுக்கு  8248259501 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.


மிக்க நன்றி!

,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வாசிப்பு இயக்கம்,

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு.


#TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #vaasippuiyakkam | #வாசிப்புஇயக்கம் | #பள்ளிக்கல்வித்துறை


Anbil Mahesh Poyyamozhi






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 English Reading Practice Book for Students - Topic wise)...



>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 English Reading Practice Book for Students - Topic wise)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 Tamil Reading Practice Book for Students - Topic wise)...

 

>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - வகுப்பு - 1, 2, 3 மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி புத்தகம் - பாடத்தலைப்பு வாரியாக (Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 Tamil Reading Practice Book for Students - Topic wise)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை - மாணவர்களிடையே நூலக பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் - தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல் (Department of School Education - Great Reading Drive to promote library use and reading habit among students - Inaugural Ceremony - Agenda)...



>>> பள்ளிக்கல்வித்துறை - மாணவர்களிடையே நூலக பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் - தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல் (Department of School Education - Great Reading Drive to promote library use and reading habit among students - Inaugural Ceremony - Agenda)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இல்லம் தேடி கல்வி - ரீடிங் மாரத்தான் - Read Along செயலியில் பதிவு செய்ய வேண்டிய வட்டாரத்திற்கான குறியீடுகள் - மாவட்ட வாரியாக (Illam Thedi Kalvi Scheme - Reading Marathon - Block Codes for Registration in the Read Along App - District wise)...



 >>> இல்லம் தேடி கல்வி - ரீடிங் மாரத்தான் - Read Along செயலியில் பதிவு செய்ய வேண்டிய வட்டாரத்திற்கான குறியீடுகள் - மாவட்ட வாரியாக (Illam Thedi Kalvi Scheme - Reading Marathon - Block Codes for Registration in the Read Along App - District wise)...



>>> இல்லம் தேடிக் கல்வி - ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? (படிநிலை வாரியான விளக்கம்)...


இல்லம் தேடிக் கல்வி - ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? - படிநிலை வாரியான விளக்கம் (Illam Thedi Kalvi Scheme - What to do to participate in the Reading Marathon to Improve Reading Ability to be held from June 1st to June 12th? Step-by-step explanation)...



>>> இல்லம் தேடிக் கல்வி - ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? - படிநிலை வாரியான விளக்கம் (Illam Thedi Kalvi Scheme - What to do to participate in the Reading Marathon to Improve Reading Ability to be held from June 1st to June 12th? Step-by-step explanation)...



>>>  இல்லம் தேடி கல்வி - Reading Marathon - Read Along Appல் பதிவு செய்ய வேண்டிய அனைத்து வட்டாரத்திற்கான குறியீடுகள் (மாவட்ட வாரியாக)...


ITK - இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ரீடிங் மாரத்தான் - ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை வாசிப்பு பயிற்சி (Reading Marathon in Illam Thedi Kalvi Scheme - Reading Practice from June 1 to June 12)...

 ITK - இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ரீடிங் மாரத்தான் - ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை வாசிப்பு பயிற்சி (Reading Marathon in Illam Thedi Kalvi Scheme - Reading Practice from June 1 to June 12)...








>>> இல்லம் தேடிக் கல்வி - ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? (படிநிலை வாரியான விளக்கம்)...



>>>  இல்லம் தேடி கல்வி - Reading Marathon - Read Along Appல் பதிவு செய்ய வேண்டிய அனைத்து வட்டாரத்திற்கான குறியீடுகள் (மாவட்ட வாரியாக)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...