கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



 RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 2342 , நாள் : 02-10-2025


மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு


ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025–26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு 


Government of Tamil Nadu Announces Commencement of RTE Admissions for 2025–26 Following Release of Funds by Government of India - Press Release 


The Government of Tamil Nadu announces the commencement of admissions under the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, for the academic year 2025–26 - Tamil Version & English Version 


 Press Release No: 2342 , Dated: 02-10-2025 & 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2025-26 ஆம் கல்வியாண்டிற்கான RTE 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்  கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு


* தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


* W.P. No. 18427 of 2025-V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.


* இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.


2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்


1. சேர்க்கை ஒதுக்கீடு


அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில்

* (LKG/1 std) 25% 

* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.


2. சேர்க்கை முறை


* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.


3. முன்னுரிமை பிரிவுகள்


* ஆதரவற்றோர்

* எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

* மாற்றுப் பாலினத்தவர்

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

* மாற்றுத் திறனாளிகள்

* ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.


4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்


* RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.


5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு


* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.


* புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்


* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்

  💰 பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்! உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் கணக்கு 10+ ஆண...