கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Hospitals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Government Hospitals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம்



Government doctors should not engage in private practice – Supreme Court


அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம் கருத்து


தனியாகத் தொழில் செய்யும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.


அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் மிகவும் நல்லது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள், தடை இருந்தபோதிலும் தனியார் மருத்துவப் பயிற்சியில் ஈடுபடுவதாகவும், அரசு மருத்துவமனைக்கு வெளியே ஒரு மாற்று மருத்துவச் சேவையை நடத்துவதாகவும் எழுந்த புகார்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஆணையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 


நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத்தில் ஈடுபடுவது தீவிரமான பிரச்சினை என்று கருத்து தெரிவித்துள்ளது.


வழக்கின் முக்கிய விவரங்கள்:

நீதிமன்றத்தின் கருத்து: 

அரசு மருத்துவமனையின் அவல நிலைக்கு நிதிப் பற்றாக்குறை காரணமல்ல, மாறாக அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளை நடத்துவதுதான் காரணம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.


முறையீடு வாபஸ்: 

மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் அறுவைசிகிச்சை துறை இணைப் பேராசிரியரான டாக்டர் சந்தோஷ் குமார் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


இறுதி முடிவு: 

விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து, மனுதாரர் தனது மனுவை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுக் கொண்டார்.


தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு



 சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


Human Rights Commission orders Tamil Nadu government to dismiss government doctor and pay Rs. 50 lakh as compensation for transferring patient to private hospital


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி ஆதாயம் பெற்ற வழக்கில், மருத்துவர் பிரபாகரனை பணி நீக்கம் செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.


உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ஜெயா என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு. 


இதில் ரூ.40 லட்சத்தை மருத்துவர் பிரபாகர் வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கில் கோவில்பட்டி அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், உயிரிழந்த நோயாளிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனது தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்த அரசு மருத்துவர் பிரபாகரன் மீது மனித உரிமைகள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி. இவரது மனைவி ஜெயா 2018ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பணியாற்றிய அரசு டாக்டர் பிரபாகரன், ஜெயாவை தனது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார்.


இதையடுத்து, அவரது கணவர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து இராணுவ வீரர் எஸ். கருப்பசாமி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததற்காக மருத்துவர் பிரபாகரன் ரூ.2 லட்சம் கேட்டதாகவும், தான் ரூ.20 ஆயிரம் கொடுத்ததாகவும், மீதி பணம் கொடுக்காததால் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தனது மனைவியை பார்க்கவும் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். 


மேலும், தனது மனைவிக்கு ஆரம்பத்தில் 30% தீக்காயம் இருந்த நிலையில், மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் 60% ஆகி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் மீது மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.


 விசாரணையில், மருத்துவர் பிரபாகரன் அரசு மருத்துவமனை விதிமுறைகளை மீறி செயல்பட்டது உறுதியானது. குறிப்பாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை தனது சொந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் கண்டறிந்தது.


இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட ஆணையம், இன்று (மே 19) வெளியிட்ட உத்தரவில், பின்வரும் தீர்ப்பை அறிவித்துள்ளது:


ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையில், டாக்டர் பிரபாகரன் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி மற்றும் குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.


டாக்டர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; அவரை மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர்மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என இந்த தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவர்களின் பொறுப்புணர்வையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தியுள்ளது மனித உரிமை ஆணையம்.


மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்...


 மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்...


தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்க வேண்டும். 


மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்த வேண்டும்.


மருத்துவமனைகளில் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டி அமைக்க வேண்டும்.


மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். 


பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் முடிவு.


இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையை சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.


மருத்துவ பணியாளர்களை தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்க வேண்டும்.


மேற்கு வங்க மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தியது தமிழ்நாடு மருத்துவத்துறை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...