கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவு திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலை உணவு திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காலை உணவுத் திட்ட பொங்கலில் பல்லி - 17 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி



 காலை உணவுத் திட்ட பொங்கலில் பல்லி - 17 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி


பூவிருந்தவல்லியில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி - 17 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி


பூந்தமல்லி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததால், அதனைச் சாப்பிட்ட 17 மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இடம்: பூந்தமல்லி / பூவிருந்தவல்லி பகுதி, சென்னை அருகில்.


பாதிப்பு: உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்.


நடவடிக்கை: மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்படவிருந்த உணவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது



 



Night Driving Glasses with Cleaning Kit, Yellow Polarized Lens, UV400, Anti-Glare Glasses for Riding Bike and Car


https://link.amazon/B04LIn2Y9



பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் PKBFS - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு



பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் PKBFS - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


6 முதல் 8 வரையிலான மாணாக்கர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - திருத்திய நிலையான வழிகாட்டுதல்கள் தொடர்பாக


Perunthalaivar Kamarajar Breakfast Scheme (PKBFS) – Standard Operating Procedures and Guidelines Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Perunthalaivar Kamarajar Breakfast Scheme | G.O. (Ms) No. 20 , Dated : 15-07-2026

 


அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயரிடப்படுதல் - அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் - அரசாணை வெளியீடு


G.O. (Ms) No. 20 , Dated : 15-07-2026 - Naming the Chief Minister's Breakfast Scheme as the "Perunthalaivar Kamarajar Breakfast Scheme" - Extension of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme to students studying in Classes 6 to 8 in all government and government-aided schools - Government Order issued



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயரிடப்படுதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந.4-1) துறை


அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057 ஸ்ரீ பராபவ, ஆனி 31


படிக்கப்பட்டவை


1. அரசாணை (நிலை) எண்.43, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.07.2022.


2. அரசாணை (நிலை) எண்.01. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 13.01.2023.


3. அரசாணை (நிலை) எண்.33, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 07.06.2023.


4. அரசாணை (நிலை) எண்.60. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-4-1) துறை, நாள் 11.09.2023.


5. அரசாணை (நிலை) எண்.17, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 11.03.2024


6. அரசாணை (நிலை) எண்.71. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.06.2025.


7. அரசாணை (நிலை) எண்.96, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 08.10.2025.


8. தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.229, நாள் 15.06.2026.


9. சமூக நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண். 3060546/சஉதி-2 (1)/2026, நாள் 03.07.2026.


ஆணை:-


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்குவதற்காக முதற்கட்டமாக முதலமைச்சரின் உணவுத் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிடப்பட்டது. காலை


2. பின்னர், மேலே இரண்டு முதல் ஆறு வரை படிக்கப்பட்ட அரசாணைகளின்படி, தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் (மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 19,34,230 மாணவ மாணவியருக்கு பயனளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், 15.06.2026 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் LOITGOOT GU மாணவியருக்கு. தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று முதல் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


4. இதனைத் தொடர்ந்து, மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல இயக்குநர். இத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15.14,274 மாணவ/மாணவியர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியையும், இதற்கான தொடரும் செலவினத்திற்காக ரூ.240.01 கோடியும் தொடரா செலவினத்திற்காக ரூ.28.71 கோடியும் ஆக மொத்தம் ரூ.268.72 கோடிக்கான நிதி அனுமதியையும் கோரியுள்ளார்.


5. மேலே பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-


i. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுகிறது.


ii . தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் (இணைப்பு-1-ல் உள்ளவாறு) 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. 


iii. இத்திட்டம் இணைப்பு-II-இல் உள்ள ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுகிறது.


iv. மாணவ/மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/மாணவியருக்கு. ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில். ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00.000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.


v. 2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13.57.25.000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் ரூ.217,63,09,395/க்கான (ரூபாய் இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.



முழுமையான அரசாணை


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


CMBFS - DEE instructions to all School HMs



 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள் 


CMBFS - DEE instructions to all School HMs


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை.6


முன்னிலை : முனைவர் பூ.ஆ.நரேஷ்


ந.க.எண் . 012531/கே2/2026, நாள்: 13.07.2026


பொருள்:


தொடக்கக் கல்வி - முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காலை உணவு வழங்கப்படாதது தொடர்பாக பத்திரிக்கை செய்தி வரப்பெற்றது - அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குவது - சார்பாக,


பார்வை:


சமூக நல இயக்குநரின் கடிதம், ந.க.எண்.2981885/சஉதி2(1)/2026, நாள் : 25.06.2026


பார்வையில் காணும் சமூக நல இயக்குநரின் கடிதத்தில் தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19.06.2026 அன்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால், அதற்கு மாற்றாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது எனவும்,


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் சத்தான காலை உணவை உட்கொண்டு வகுப்பினை ஆரோக்கியமாகத் தொடங்குவதையும், ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் கவனச் சிதறலைத் தவிர்த்து சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திட்டத்தின் செயல்பாட்டில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம், உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு தங்கள் துறையின் கீழ் செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அளவு எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம், உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு, அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநருக்காக



பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


CMBFS | Daily Meal Menu | Schedule



முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் | தினசரி உணவு வழங்கும் பட்டியல் | அட்டவணை


Chief Minister's BreakFast Scheme | Daily Meal Menu | Schedule



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


CMBFS திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்கள் - மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு

 


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை நியமித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு


District Collector orders appointment of officers to each school to inspect the Chief Minister's BreakFast Scheme


CMBFS காலை உணவு Visit



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI




பள்ளியில் காலை உணவு / மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு


பள்ளியில் காலை உணவு / மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு


தற்போது 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் அரசு (ஊராட்சி ஒன்றிய) / உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் மற்றும்  1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு உண்ணும் மாணவர்களின்  விவரங்கள் தொடர்புடைய வகுப்பு ஆசிரியர்களின்  Individual ID மூலம் TNSED SCHOOLS APP-ல் உள்ளிட வேண்டும்



>>>  TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025...



சத்துணவு உண்ணும் மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் படிவம் - Noon Meal Consent Form...



>>> ஒப்புதல் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் CMBFS - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள்



முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் CMBFS - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - பள்ளிகளின் பட்டியல் - DEE இயக்குநரின் செயல்முறைகள் 


முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் Chief Minister's BreakFast Scheme - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - CMBFS FOR 1416 AIDED SCHOOLS LIST IN URBAN AREA - ANNEXURE I



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



boAt Energyshroom PB400 Pro 20000mAh | Pocket Size, Compact Power Bank w/USB Type-C Input (2-Way Port), 3X Output Ports, Compatible with Tablets, Smartphones, Earbuds, Smartwatch(Steel Blue) 




Actual Price: Rs. 4999

Offer Price : Rs. 1699

Benefit : Rs. 3300


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4hDwb4S


Chief Minister's 'Breakfast' program improves memory in over 90% children


 முதலமைச்சரின் காலை உணவு' திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு


Chief Minister's 'Breakfast' program improves memory in over 90% children


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியீடு


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, முதல்வர் செயல்படுத்தியுள்ள “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம், முதல்வரின சீரிய திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

காலை உணவுத் திட்டம் முதன்முதலில் – மதுரை மாநகரில் ஆதிமூலம் நகராட்சிப் பள்ளியில் 2022ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய நாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளைச் பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளை மண்ணில் இத்திட்டம் அனைத்து 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளான 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. அதன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழுந்தைகள் கூடுதலாகப் பயன்பெற்றனர்.


அந்நாள் முதல் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் நாள்தோறும் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வந்தனர். மாநிலத் திட்டக் குழுவின் மூலம் காலை உணவுத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலுமாக 5,410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளன.


தாய்மார்கள் தங்கள் வீட்டில் காலை உணவைத் தவிர்த்து வந்த தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவை விரும்பி உண்பதால் தங்களுடைய கவலை அகன்றதாகத் தெரிவித்துள்ளனர். 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Instructions for updating details of students benefiting from Chief Minister's Breakfast Scheme in TNSED SCHOOLS app



முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை TNSED SCHOOLS செயலியில் UPDATE செய்வதற்கான வழிமுறைகள்


Instructions for updating details of students benefiting from Chief Minister's Breakfast Scheme in TNSED SCHOOLS app



Breakfast scheme updation process



>>> PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




       LOGIN WITH INDIVIDUAL ID

                 

                 ⬇️

         SCHEMES


                 ⬇️


         SELECT CLASS


                  ⬇️


        SELECT YES OR NO

 

                  ⬇️


                 SAVE

 



நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை...


 நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - ஊராட்சித் தலைவர் கோரிக்கை - நாளிதழ் செய்தி...




3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...


 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது...


3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் -  மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...



அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமத்துவபுரம் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நேற்று காலை வழக்கம்போல, சேமியா உப்புமா சமைத்து வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள், சமையலரிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி...

 லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அரசின் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - பள்ளி குழந்தைகள் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி...


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் இன்று காலை சிற்றுண்டி வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலை சிற்றுண்டியை 49 மாணவ மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை உணவு அருந்தி உள்ளனர். இதில் ஒரு மாணவருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதனை பள்ளி ஆசிரியரிடம் மாணவர் கூறியுள்ளார் இதனை அடுத்து அடுத்தடுத்து 19 மாணவர்கள் தமக்கும் வயிறு வலிப்பதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியை, வயிற்று வலி என கூறிய 19 மாணவ, மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனைவரும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த மருத்துவ மற்றும் ஊரக இணை இயக்குநர் இணை இயக்குனர் லட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவ மாணவிகளின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்பொழுது லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகள், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், மேலும் காலை உணவு அருந்திய 20 மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என இணை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் லால்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ் மோகன் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.




முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் விவரம் (Chief Minister's Breakfast Scheme (CMBFS) - Pay Details for Breakfast Preparation Staff)...


 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் விவரம் (SHG Women - Honorarium Fixed on Slabs & Students Strength Slab - Chief Minister's Breakfast Scheme (CMBFS) - Pay Details for Breakfast Preparation Staff)...


>>> Click Here to Download Pay Details for Breakfast Preparation Staff (SHG Women) - Honorarium Fixed on Slabs & Students Strength Slab...



boAt Energyshroom PB400 Pro 20000mAh | Pocket Size, Compact Power Bank w/USB Type-C Input (2-Way Port), 3X Output Ports, Compatible with Tablets, Smartphones, Earbuds, Smartwatch(Steel Blue) 




Actual Price: Rs. 4999

Offer Price : Rs. 1699

Benefit : Rs. 3300


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4hDwb4S






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைக்கக் கூடாது என அங்குள்ள பெற்றோர் சிலர் எதிர்ப்பு - "பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது" ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை (Some of the parents protested that Scheduled Caste Woman should not cook in the breakfast scheme at Velanchettiuyur Panchayat Union Primary School near Aravakurichi, Karur District - "There should be no discrimination in schools", the district collector advised after the inspection)...

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைக்கக் கூடாது என அங்குள்ள பெற்றோர் சிலர் எதிர்ப்பு - "பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது" ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை (Some of the parents protested that Scheduled Caste Woman should not cook in the breakfast scheme at Velanchettiuyur Panchayat Union Primary School near Aravakurichi, Karur District - "There should be no discrimination in schools", the district collector advised after the inspection)...



தமிழ்நாடு முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவுத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 25 - ம் தேதி தொடங்கி வைத்தார். அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பள்ளியில் சமையல் செய்ய, மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார்.



இந்த பெண் பட்டியலின சமூகத்தை சேந்தவர் என்பதால், 'பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்' என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில தினங்களாகவே இந்த பிரச்சனை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம், சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் புகார் அளித்துள்ளனர்.


அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பெண் சமைத்த உணவை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சாப்பிட்டு பார்த்த பின்னர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடமும், 'பட்டியலினப் பெண் சமைத்தால், எங்கள் குழந்தை சாப்பிட முடியாது' என ஒருவர் கூறியுள்ளார்.



இதையடுத்து கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், 'அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். 



இந்நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 25.08.2023 அன்று துவங்கப்பட்டது. இப்பள்ளியில், 30 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மகளிர் சுய உதவி குழு உறுப்பினரால் காலை உணவு சமைக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிற பிரிவினரைச் சேர்ந்த பதினைந்து குழந்தைகள் காலை உணவை புறக்கணித்து வந்ததால், இது தொடர்பாக 29.08.2023 அன்று திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் அவர்களால் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து, 'பள்ளியில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து குழந்தைகளும் உணவு உண்ண வேண்டும்' என்று தெரிவித்ததை தொடர்ந்து, 30.08.2023 அன்று இதர பிரிவிலிருந்து இரண்டு குழந்தைகள் மட்டுமே காலை உணவை உட்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, 05.09.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர், பள்ளிக்கு திடீர் ஆய்வு செய்து உணவின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.



மேலும். காலை உணவை உண்ணாத 15 குழந்தைகளின் 10 பெற்றோர்களை விசாரணை செய்தபோது, பாலசுப்பிரமணியன் என்பவர் அருந்ததியர் பிரிவு பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு உண்ணாது என்றும் வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததையொட்டி, அவர்மீது மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் தனது குழந்தையும் காலை உணவை உண்ண சம்மதிக்கிறேன் என மன்னிப்பு கோரியதின் அடிப்படையில், அவர்மீது வழக்கு தொடுக்கப்படாமல் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேலும், மீதமுள்ள அனைத்து பெற்றோரும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, "பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்று அனைவருக்கும் அறிவுரையையும், எச்சரிக்கையையும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : விகடன்




காலை உணவுத் திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் (TamilNadu Chief Minister Mr. M. K. Stalin strongly condemned the news published by Dinamalar newspaper about the Breakfast Scheme)...

காலை உணவுத் திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் (TamilNadu Chief Minister Mr. M. K. Stalin strongly condemned the news published by Dinamalar newspaper about the Breakfast Scheme)...


 உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம். 


'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.


நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! 


#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!


- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.




கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.

கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்

- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்...






காலை உணவுத் திட்டத்தைத் (CMBFS) தொடங்கி வைத்து திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு (A note written by the Chief Minister at Thirukkuvalai School on launching the breakfast Scheme)...

 


>>> காலை உணவுத் திட்டத்தைத் (CMBFS) தொடங்கி வைத்து திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு (A note written by the Chief Minister at Thirukkuvalai School on launching the breakfast Scheme)...



boAt Energyshroom PB400 Pro 20000mAh | Pocket Size, Compact Power Bank w/USB Type-C Input (2-Way Port), 3X Output Ports, Compatible with Tablets, Smartphones, Earbuds, Smartwatch(Steel Blue) 




Actual Price: Rs. 4999

Offer Price : Rs. 1699

Benefit : Rs. 3300


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4hDwb4S





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - நிலையான வழிகாட்டி செயல்முறை (Chief Minister's BreakFast Scheme - Standard Guidelines Proceedings)...



>>> முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - நிலையான வழிகாட்டி செயல்முறை (Chief Minister's BreakFast Scheme - Standard Guidelines Proceedings)...



boAt Energyshroom PB400 Pro 20000mAh | Pocket Size, Compact Power Bank w/USB Type-C Input (2-Way Port), 3X Output Ports, Compatible with Tablets, Smartphones, Earbuds, Smartwatch(Steel Blue) 




Actual Price: Rs. 4999

Offer Price : Rs. 1699

Benefit : Rs. 3300


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4hDwb4S






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் - வகுப்பு : 1 முதல் 5 வரை - நேரம்: காலை 8.15 மணி முதல் 8.50மணி வரை (Breakfast Scheme for Government School Students - Meals served day wise - Class : 1 to 5 - Time : 8.15 am to 8.50 am)...


>>> அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் - வகுப்பு : 1 முதல் 5 வரை - நேரம்: காலை 8.15 மணி முதல் 8.50மணி வரை (Breakfast Scheme for Government School Students - Meals served week wise - Class : 1 to 5 - Time : 8.15 am to 8.50 am)...



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)


Actual Price: Rs. 2490

Offer Price : Rs. 999

Benefit : Rs. 1491


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...