கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உயிரை காக்க... தருவீர் குருதி: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்

 தானங்களிலேயே சிறந்தது ரத்த தானம். உடலுறுப்புகளை இறந்த பிறகு தான் தானம் செய்ய முடியும். உயிருடன் இருக்கும் போதே தானம் செய்ய முடிந்தது ரத்தத்தை மட்டுமே. என்னதான் நவீன கண்டுபிடிப்புகள் உருவாகினாலும், ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை. தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ஜூன் 14ம் தேதி, உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "ரத்த தானம் செய்யும் ஒவ்வொருவரும் ஹீரோ' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

ரத்தம் தேவைப்படும் போது நோயாளியின் உறவினர், நண்பர்களிடமிருந்து தான் பெறப்படுகிறது. சில நாடுகளில் ரத்ததானம் செய்வோர் பணம் பெறுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் சுயமாக ரத்ததானம் செய்வோரின் ரத்தமே பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ரத்தத்தை வகைப்படுத்தும் ( ஏ, பி, ஓ) முறையை கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற "கார்ல் லேண்ட்ஸ்டெய்னரை' சிறப்பிக்கும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குறைவு: ஆபரேஷன், விபத்து, பிரசவம் போன்ற சூழ்நிலைகளில் ரத்தம் தேவைப்படுகிறது. உலகில் ஆண்டுதோறும் 9 கோடியே 20 லட்சம் பேர் ரத்த தானம் வழங்குகின்றனர். 70 நாடுகளில், தேவைப்படும் அளவுக்கு குறைவாக ரத்தம் இருப்பு உள்ளது எனவும், ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

யார் தரலாம்: எய்ட்ஸ், கேன்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய் இல்லாத யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். ரத்த கொடுப்பவரின் வயது 18லிருந்து 60க்குள்ளும், எடை 45 கிலோவுக்கு மேலும் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும், உடலின் வெப்ப நிலையும் சரியான அளவில் இருப்பது அவசியம். நமது உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது. இதில் 350 மி.லி., மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படுகிறது. 2 நாட்களுக்குள் இழந்த ரத்தத்தை உடல் மீட்டுவிடுகிறது. 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவுக்கு வந்து விடுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். 
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...