கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொதுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Things to be followed by the students writing the public exam




 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை


Things to be followed by the students writing the public examination


பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் புலனக் குழுக்களில் பகிர....


12th Std - 11th - 10th Std 

👉


👉 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்:


Examக்கு எடுத்து செல்ல வேண்டியவை


1) Hall Ticket ( 2 copies)

2) Blue Pen -2

( Ball Point / Ink / Gel )

3) Long Size Scale / Pencil / Sharpener /  ink & pencil Eraser / 

For Maths: Geometry Box & Pro-circle


*தேர்வு நடைபெறும் நேரம்

: காலை 10 மணி முதல் - மதியம் 1:15 மணி வரை ( 10:00 - 1:15 )


Rules:

1) தேர்வு எழுதும் பள்ளிக்கு சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு (அதாவது 9:30 மணிக்குள்) முன்பே சென்றுவிடவேண்டும்.


2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.


3) Blue  பேனாவில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும். வேறு எந்தப் பேனாவிலும் தேர்வு எழுதக் கூடாது. Sketch / Colour pencil பயன்படுத்தக்கூடாது.


4) Blue & Black pen இரண்டிலும் கலந்து கலந்து Answer எழுதக் கூடாது. 


5) Uniformல் தான் Examக்கு போக வேண்டும்.


6) தேர்வு அறைக்குள் Electronic devices, Cell Phone, Kerchief, Scientific Watch, Calculator, Purse, Towel, Bag, Empty Box, Water bottle ஆகியவற்றை வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல கூடாது.


7). சாதாரண Watchஐ அணியலாம். மேலு‌ம் Chappal, Shoe, Belt வகுப்பறைக்குள் அணிந்து செல்லக் கூடாது.


8) 10 மணிக்குமேல் தேர்வுக்கு சென்றால் தேர்வு எழுத முடியாது. 9:30 மணிக்குள் செல்ல வேண்டும். 


விடை எழுத வேண்டிய முறைகள்:

1) Answer Sheetன் முன்பக்கம் உள்ள உங்களுடைய 

Exam Roll No / Name / 

Date of Birth / Subject Name / Medium / Date / Photo ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


2) விடையை எழுதுவதற்கு முன் பாடத்தின் பெயரை மேலே தெளிவாக எழுத வேண்டும்.


3) 100 Markக்கும் விடைகளை எழுத வேண்டும். Pass ஆனால் போதும் என்று வெறும் 40, 50 Markக்கு மட்டும் விடை எழுதி விட்டு மீதமுள்ளதை விட்டு விடக்கூடாது. 100/100ம் விடைகளை எழுத வேண்டும்.


4) சரியான Answer தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் தாங்கள் படித்த விடைகளை எழுதலாம்.


5) எழுதிய விடையையே மீண்டும் மீண்டும் எழுதக்கூடாது.


6) தாங்கள் விடைகளை எழுதி, ஒருவேளை அது தவறாக இருந்து அதனை அடித்து விட்டால், உடனடியாக அதனை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் "இது என்னால் அடிக்கப்பட்டது" என்று விடைத்தாளில் அடித்த வினாவின் பக்கத்தில் எழுத வேண்டும்.


7) எதனையும் அடித்தோ, திருத்தியோ, கிறுக்கியோ, Whitener உபயோகப்படுத்தியோ எழுதக்கூடாது.


8) குறைந்தது 15 to 20 பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். வெறும் 4 பக்கங்கள் 5 பக்கங்கள் என விடை எழுதினால் Pass ஆக முடியாது. 


9) குறிப்பாக விடையை எழுதாமல் Gap விடக்கூடாது.


10) Question Numberஐ கவனமாக எழுத வேண்டும். Question Numberஐ எழுதாமல் விட்டால் Answerஐத் திருத்த மாட்டார்கள்.


11) Question Paperல் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் விடை எழுத வேண்டும். எதனையும் விட்டுவிடக்கூடாது.


12) அனைத்துப் பகுதிகளுக்கும் விடை அளித்தால் மட்டுமே Passஆக முடியும்.


13) தேர்வு எழுதி முடித்தவுடன் Question Number & Page Number அனைத்தும் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.


14) Page Numberஐ கவனமாக Answer Sheetன் முன்பக்கம் எழுத வேண்டும்.


16) எந்த சந்தேகம் இருந்தாலும் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.


17) Question Paperல் எதற்கும் விடையை எழுதவோ, குறிக்கவோ கூடாது.


18) தேர்வின்போது Rough Work, Maths sum calculation போடுவதற்கு விடைத்தாளின் கீழ்ப்பகுதியை மட்டுமே  பயன்படுத்த வேண்டும். Sideல் Calculation எழுதக்கூடாது.


19) Answer Sheetல் Answer எழுதும்போது உள்பக்கம் எந்த இடத்திலும் உங்களுடைய Name & Exam Numberஐ எழுதக்கூடாது.


20) தேர்வு அறையில் தங்களுக்குக் கொடுக்கும் Attendance Sheetல் மாணவர்கள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும்.


21) விடைத்தாளின் முன்பக்கம் உள்ள Present என்னுமிடத்தில் (√) Tick குறி போட  வேண்டும்.


22) Choose the correct answer சரியான விடை எழுதும் போது கண்டிப்பாக option ( a/ b/ c/ d)  (அ/ஆ/இ/ஈ) ( i, ii, iii, iv ) answer எழுத வேண்டும். a b c d என்னும் option போடாமல் விடை எழுதினால் அது தவறு ஆகும்.


23) எந்த விடையும் கலந்து கலந்து எழுதாமல் இருப்பது நல்லது. அதாவது தெரிந்த விடைகளை முன்னரும், தெரியாத விடைகளை யோசித்துப் பின்னரும் எழுதாமல் இருப்பது நல்லது.

Order மாறாமல்  வரிசை மாறாமல் ஒரே சீராக எழுத முயற்சிக்கவும்.


24) எந்த விடையும் incomplete ஆக எழுதக் கூடாது. முழுமையாக விடை எழுத வேண்டும்.


General Advice: 👇👇👇👇

Bit அடிப்பது /பிறரைப் பார்த்து எழுதுவது / 

பிறர் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது போன்று தேர்வில் நேர்மை இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. தேர்வை நேர்மையாக எழுத வேண்டும். 

👇👇👇👇


தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவும்.


*அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!*

👍👍👍


All the Best


👍🏽👍🏽👍🏽

💯💯💯💯🙏


Chief Minister M.K.Stalin's congratulatory message For 11th and 12th Std students



11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி


Chief Minister M.K.Stalin's congratulatory message For students appearing for Class 11th and 12th Public Examination


🔹🔸11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து


✍️  "நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளை தரும். எனக்கு உங்கள் உழைப்பில் முழு நம்பிக்கை உள்ளது.


நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்"


 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!



Best diet for students at public exam times



பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கான உணவுகள்


Best diet for students at public exam times


பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளின் கவனத்திற்கு


பிளஸ்-2 தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்வு தருகின்ற மன அழுத்தத்தால் மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆகவே, தேர்வு நேரத்தில், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளவேண்டியது முக்கியம். அதுபற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். 


இவர், பொது தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரும் ஆலோசனைகள்... 


 *காலை உணவு...* 


‘‘மூளை சீராக இயங்க அதிக ஆக்சிஜனும், சீரான ரத்த ஓட்டமும் அவசியம். எல்லா சத்துகளும் கொண்ட சமச்சீரான உணவு மட்டுமே மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது. தேர்வு நேரத்தில் காலையும், மதியமும் நன்றாக சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் நல்லது. தோசை, பூரி, நூடுல்ஸ் போன்றவற்றை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், தினை பொங்கல், சேவை நூடுல்ஸ் போன்றவைகளை காலை உணவாக சாப்பிடலாம். 


 *மன அழுத்தம் நீங்க...* 


அரிசி சாதம், தக்காளி சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம் மதிய உணவுக்கு நல்லது. புளியோதரை, லெமன் சாதம் போன்ற புளிப்புள்ள சாத வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் இரவில் வயிறு நிறைய சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கச்செல்லும் போது பால் சாப்பிடலாம். பாலில் உள்ள ‘டிரிப்டோபென்' எனும் அமினோ அமிலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கும் அற்புத மருந்து. அதுமட்டுமல்ல, மூளையில் நினைவாற்றலுக்கு உதவும் நரம்பு செல்களை உறுதியாக வைத்திருப்பதும் இதுதான். 


*மோர் அவசியம்...* 


மதிய உணவில் தினமும் ஒரு பருப்பு, ஒரு கீரை, ஒரு காய்கறி, தயிருக்கு மாற்றாக நீர் மோர் இருக்க வேண்டும். கேரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகள் தேர்வு நேரத்தில் ஏற்றவை. மூளையை இயக்குகின்ற சத்து இவற்றிலிருந்து கிடைக்கும். வைட்டமின் ஏ நிறைந்த முருங்கைக் கீரை கண்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் அதிக நேரம் படிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும். தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிகமாக அமிலம் சுரந்து அல்சர், அஜீரணம் போன்றவை தலை காட்டும். மோர், அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்துவதோடு, ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தும். 


*மாலை நேர ஸ்நாக்ஸ்* 


 மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறி சாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். பாதாம் பருப்பில் உள்ள ‘செலினியம்' நினைவாற்றலுக்கு மிக நல்லது. ஊறவைத்த பாதாமை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிப்பது படித்தது மறக்காமல் இருக்க உதவும். 


*பழம் நல்லது...* 


 தேர்வு நேரங்களில் நோய்வராமல் பாதுகாக்க வேண்டுமானால் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவுகிறது. வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தக்காளி, பப்பாளி ஆகியவை உடனடியாக புத்துணர்வைத் தருபவை’’- இவ்வாறு தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ரேணுகா தேவி அதுதொடர்பான தகவல்களை வழங்கி, புத்துணர்வை ஊட்டினார். 


*முத்திரை...* 


 மறந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருவதில் யோக முத்திரைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் தேர்வறையில் படித்த பாடங்கள் மறந்துபோனால், சின் முத்திரையை செய்து பாருங்கள். மோதிர விரலும், கட்டை விரலும் தொடும்படி மற்ற விரல்களை நேராக நீட்டுங்கள். இப்படி செய்யும்போது, படித்த விஷயங்கள் நினைவுக்கு வரும். திரும்பவும் கூறுகிறேன்.... படித்த விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். 


*இரவு கண்விழித்து படிக்கும்போது...* 


மாணவர்கள் தூக்கம் வராமல் இருக்க காபி, டீ அருந்துவது வழக்கம். ஆனால் இவையும் மந்தத்தன்மையை உண்டாக்கும். இவற்றுக்கு பதிலாக, இரவில் சூடான பால், லெமன் டீ, காலையில் எலுமிச்சை பழச்சாறு அல்லது காய்கறி சூப், கீரை சூப் சாப்பிடலாம். தண்ணீர் நிறைய பருகுவது, படிக்கும் போது ஏற்படுகின்ற தலைவலியைக் குறைக்கும். படிக்கின்ற நேரத்தில் சிப்ஸ், சீவல் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டாம். தேர்வு முடியும் வரை கொழுப்பு மிகுந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடியாத பட்சத்தில் மீன், முட்டை சாப்பிடலாம். அதுவும் இரவில் நிச்சயம் வேண்டாம். கொழுப்பு உணவு மூளையை மழுங்கடித்து தூக்கத்தை வரவழைக்கும். 

  

*தேர்வுக்கு செல்வதற்கு முன்...* 


 பரீட்சைக்கு செல்லும் முன்பு, சப்போட்டா, அத்தி இது போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும் என்பதால் தேர்வுக்கு செல்லும் முன்பு இவற்றை சாப்பிடலாம். பசி தாங்கும். 


 *துரித உணவுகள்..* 


 குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லெட், நூடுல்ஸ், பாஸ்ட் புட் போன்றவை ரொம்ப பிடிக்கும். ஆனால் தேர்வு முடியும் வரை அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, பாதாம், வால்நட், பேரீட்சை இவை மூன்றையும் நன்றாக அரைத்து, லட்டு போல உருவாக்கி உண்ண கொடுக்கலாம். இது படிக்கும்போதும், தேர்விற்கு செல்லும்போதும் சிறப்பான ஸ்நாக்ஸாக இருக்கும்.


12th Standard Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for disorderly Activities

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் - அலைபேசிக்கு தடை - ஒழுங்கீனச் செயல்பாடுகளுக்குத் தண்டனை - செய்தி வெளியீடு எண்: 476, நாள் : 01-03-2025


 Class 12 Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for Misbehave Activities - Press Release No: 476, Dated : 01-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (03.03.2025) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது.


நடப்பாண்டு + 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத உள்ளனர்.


3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்கலாம் - பள்ளிக்கல்வித்துறை.


+2 பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்  3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை



10th, 11th, 12th Standard Public Examination - Help line Numbers Announced

 


10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - உதவி எண்கள் அறிவிப்பு


10th, 11th, 12th Standard Public Examination - Help line Numbers Notification


பொதுத் தேர்வு குறித்து புகார்கள் / கருத்துக்கள் / ஐயங்களைத் தெரிவிக்க தொடர்பு எண்கள் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு



10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் - பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்.


94983 83075

94983 83076


பொதுத் தேர்வு குறித்து புகார்கள் / கருத்துக்கள் / ஐயங்களைத் தெரிவிக்க தொடர்பு எண்கள் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு








10th Std Public Exam - Answer Sheet Stitching - Instructions to HMs - DGE Letter


மார்ச் / ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்,  / தலைமையாசிரியர்கள் - விடைத்தாளுடன் முகப்புத்தாள் தைத்தல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்


MARCH- APRIL 2025 SSLC EXAM - TOP SHEET - ANSWER SHEET instruction for chief superintendent - Head Master


March / April-2025 10th Class Public Examination - Examination Center Principal Superintendents, / Headmasters - Stitching of Covering Sheet with Answer Sheet - Instructions Regarding - Letter from Director of Government Examinations



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


March / April 2025 - Public Examinations - 10, +1 / +2 Private Candidates Can Apply - Press Release

 


மார்ச் / ஏப்ரல் 2025 - பொதுத் தேர்வுகள் - பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் - செய்திக் குறிப்பு



MARCH / APRIL 2025 - PUBLIC EXAMINATIONS - CLASS 10TH, HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR INVITATION OF APPLICATIONS FROM INDIVIDUAL CANDIDATES - PRESS NOTE



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025 - Class 10, 11, 12 - Public Examination Time Table Released

 

2024-2025 - 10, 11, 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு


2024-2025 - Class 10, 11, 12 - Public Examination Time Table Released...


10, 11 & 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...


2024-25 Public Examinations Time Table S.S.L.C / Higher Secondary First year & Second Year...



>>> பொதுத்தேர்வு கால அட்டவணைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்   மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி  வரை நடைபெறும்  PublicExams...


*10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.



* 12 ஆம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.



* 11ஆம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.



* 10ஆம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.



10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை



* தமிழ்- 28.03.2025


* ஆங்கிலம்- 02.04.2025


* கணிதம்- 07.04.2025


* அறிவியல்- 11.04.2025


* சமூக அறிவியல்- 15.04.2025


* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025



11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை


மொழிப்பாடம்- 05.03.2025


ஆங்கிலம்- 10.03.2025


கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025


உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025


இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025


கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 24.03.2025


வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025



12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை


மொழிப்பாடம்- 03.03.2025


ஆங்கிலம்- 06.03.2025


கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 11.03.2025


கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025


உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025


வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025


இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025



*தேர்வு முடிவுகள் எப்பொழுது?


* 10ஆம் வகுப்பு- மே 19ம் தேதி,2025


* 11ஆம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025


* 12ஆம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025



*செய்முறைத் தேர்வுகள்


* 12ஆம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.


* 11ஆம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.


* 10ஆம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.


2024-2025 - Public Examination Time Table for 10, 11 and 12th Standard will be released on 14-10-2024

 

 

2024-2025ஆம் கல்வியாண்டு -  10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடும் நாள் - அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் அறிவிப்பு...


2024-2025ஆம் கல்வியாண்டு -  10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை நாளை மறுநாள் 14-10-2024 அன்று வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள்...


Academic Year 2024-2025 - Public Examination Time Table for Class 10, 11 and 12 will be released on 14-10-2024 - Announcement by Minister Anbil Mahesh...






2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு (Class 10th, 11th, 12th Public Examination Dates 2023-2024 - Time Table Released)...


2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு (Class 10th, 11th, 12th Public Examination Dates 2023-2024 - Time Table Released)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (தெளிவானது)...



• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது!


• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது!


• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

➖➖➖➖➖➖➖➖

தமிழ்-26.03.2024


ஆங்கிலம்-28.03.24


கணிதம்-01.04.2024


அறிவியல்-04.04.24


சமூக அறிவியல்_08.04.24



12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

➖➖➖➖➖➖➖

01.03.2024- மொழிப்பாடம்


05.03.2024-ஆங்கிலம்


08.03.2024-கணினி அறிவியல், உயிரி - அறிவியல், புள்ளியியல்


11.03.2024-வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்


15.03.2024-இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்


19.03.2024-கணிதம், விலங்கியல், நுண் உயிரியல்


10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்...

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.

11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது.

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது ?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 10

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 14

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 6





2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning - Directorate of Government Examinations Press Note)...


2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை  வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning  - Directorate of Government Examinations Press Note)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு...


தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை & அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு (8th Standard Public Examination for Individual Candidates – August 2023 - Time Table & Press Release of Government Examinations Directorate)...


>>> தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை & அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு (8th Standard Public Examination for Individual Candidates – August 2023 - Time Table & Press Release of Government Examinations Directorate)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024ஆம் கல்வியாண்டில் 12, 11 & 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு (12th, 11th & 10th Standard Public Examination Commencement Dates for Academic Year 2023-2024)...

2023-2024ஆம் கல்வியாண்டில் 12, 11 & 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு (12th, 11th & 10th Standard Public Examination Commencement Dates for Academic Year 2023-2024)...


 2023-2024ஆம் கல்வியாண்டில் மார்ச்-18 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், மார்ச்-19 ஆம் தேதி 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், ஏப்ரல்-8 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்கி நடைபெறும்...

- அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவிப்பு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மேல்நிலை முதலாம் /இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் - நேர வாரியாக - முதன் முறையாக தேர்வு பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (Higher Secondary 1st / 2nd Year Public Examinations - Duties for Hall Invigilators - Time Wise - This will be very useful for first time exam duty teachers)...

 

>>> மேல்நிலை முதலாம் /இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் - நேர வாரியாக - முதன் முறையாக தேர்வு பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (Higher Secondary 1st / 2nd Year Public Examinations - Duties for Hall Invigilators - Time Wise - This will be very useful for first time exam duty teachers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு (Directorate of Government Examinations Press Release Regarding Higher Secondary Public Examinations – 2023 – Publication of List of Penalties for Candidates Indulging in Clutter Activities)...


>>> மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு (Directorate of Government Examinations Press Release Regarding Higher Secondary Public Examinations – 2023 – Publication of List of Penalties for Candidates Indulging in Clutter Activities)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை...

.

தேர்வு காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படிக்க கொடுக்கப்படும்.


மாணவரின் விவரங்கள் சரிபார்ப்பு காலை 10:10 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளப்படும். தேர்வு காலை 10:15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும்.


தேர்வு நாள் வழிமுறைகள்


கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.


உங்கள் அனுமதி அட்டை (ஹால் டிக்கெட்) மற்றும் பள்ளி அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லவும்.


மாணவர்கள் அந்தந்த பள்ளி சீருடையில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.


தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.


வாரியத்தால் குறிப்பிடப்பட்ட உங்கள் சொந்த பேனா மற்றும் பிற எழுதுபொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.


விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.


மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.


தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் (Individual Private Candidates Writing Public Examination Applying in Tatkal Mode - Letter from Director of Government Examinations)...


>>> பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் (Individual Private Candidates Writing Public Examination Applying in Tatkal Mode - Letter from Director of Government Examinations)...



>>> செய்திக்குறிப்பு (Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




2022-2023ஆம் கல்வி ஆண்டு - 10ஆம் வகுப்பு, +1, +2 பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Academic Year 2022-2023 - Instructions for Private Candidates appearing for Class 10th, +1, +2 Public Examinations - Directorate of Government Examinations)...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Academic Year 2022-2023 - Instructions for Private Candidates appearing for Class 10th (SSLC) Public Examinations - Directorate of Government Examinations)...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - +1 பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Academic Year 2022-2023 - Instructions for Private Candidates appearing for Class +1 Public Examinations - Directorate of Government Examinations)...





2022-2023ஆம் கல்வி ஆண்டு - பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பம் - செய்திக் குறிப்பு வெளியீடு (Application for Private Candidates Writing Public Examinations - Press Release Released)...


>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பம் - செய்திக் குறிப்பு வெளியீடு (Application for Private Candidates Writing Public Examinations - Press Release Released)...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - 10ஆம் வகுப்பு, +1, +2 பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SDATன் கீழ் செயல்பட்டு வரும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி ...